ஆதியாகமம் 3

Genesis 3

வீழ்ச்சி

இறைவனாகிய யெகோவா உண்டாக்கியிருந்த காட்டு மிருகங்கள் எல்லாவற்றையும்விட, பாம்பு அதிக தந்திரமுள்ளதாய் இருந்தது. பாம்பு அப்பெண்ணிடம், “தோட்டத்தில் உள்ள எந்த ஒரு மரத்திலிருந்தும் சாப்பிடவேண்டாம் என்று இறைவன் உங்களுக்குச் சொன்னாரோ?” எனக் கேட்டது. 2 கொரி 11:32 கொரி 11:14வெளி 12:9வெளி 20:2மத் 4:3ஆதி 3:13-15மத் 10:16மத் 4:6

அதற்கு அந்தப் பெண் பாம்பிடம், “தோட்டத்திலுள்ள மரங்களின் பழங்களை நாங்கள் சாப்பிடலாம்; சங் 58:4 ஆனால் இறைவன், ‘நீங்கள் தோட்டத்தின் நடுவிலுள்ள மரத்திலிருந்து பழத்தை சாப்பிடக்கூடாது, அதைத் தொடவும் கூடாது, மீறினால் சாவீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்” என்றாள். ஆதி 2:16-172 கொரி 6:17யாத் 19:12-13ஆதி 20:6யோபு 1:111 நாளாக 16:22கொலோ 2:21யோபு 19:21

அதற்குப் பாம்பு அந்தப் பெண்ணிடம், “நிச்சயமாக நீங்கள் சாகவே மாட்டீர்கள்” என்று சொன்னது. யோவா 8:442 கொரி 11:31 தீமோ 2:142 கொரி 2:11ஆதி 3:132இராஜா 1:162இராஜா 1:42இராஜா 1:6 “ஏனெனில் அந்த மரத்திலிருந்து சாப்பிடும் நாளிலே, உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் இறைவனைப் போலாகி, நன்மையையும் தீமையையும் அறிவீர்கள் என்பது இறைவனுக்குத் தெரியும்” என்றது. எசேக் 28:22 தெச 2:42 கொரி 11:13-152 கொரி 4:4ஆதி 2:172 கொரி 11:3அப் 12:22-23அப் 26:18

அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதாயும், பார்வைக்கு அழகானதாயும் இருந்ததுடன், அது அறிவைப் பெறுவதற்கு விரும்பத்தக்கதாயும் இருக்கக் கண்டாள்; அவள் அதின் பழத்தைப் பறித்துச் சாப்பிட்டாள். பின்பு அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் சாப்பிடக் கொடுத்தாள், அவனும் அதைச் சாப்பிட்டான். 1 யோவா 2:16யாக் 1:14-151 தீமோ 2:142 சாமு 11:2யோசு 7:21ரோம 5:12-19ஆதி 6:2எசேக் 24:16 பிறகு அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டு, முன்னர் அறிந்திராத விஷயங்களை அறிந்துகொண்டார்கள்; அப்பொழுது தாங்கள் இருவரும் நிர்வாணிகளாய் இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். எனவே அவர்கள் அத்தியிலைகளைத் தைத்துத் தங்களை மூடிக்கொண்டார்கள். ஆதி 2:25ஏசா 59:6ஆதி 3:5யோபு 9:29-31ஆதி 3:10-11ஏசா 28:202இராஜா 6:20உபா 28:34

அன்று மாலை தென்றல் காற்று வீசிய வேளையில், இறைவனாகிய யெகோவா தோட்டத்தில் உலாவிக் கொண்டிருக்கும் சத்தத்தை மனிதனும் அவன் மனைவியும் கேட்டார்கள்; உடனே அவர்கள் தோட்டத்தின் மரங்களுக்கு இடையில் இறைவனாகிய யெகோவாவிடமிருந்து ஒளிந்துகொண்டார்கள். எரே 23:24எபி 4:13நீதி 15:3யோபு 34:21-22சங் 139:1-12ஆதி 3:10யோனா 1:9-10ரோம 2:15 ஆனாலும் இறைவனாகிய யெகோவா மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார். ஆதி 4:9ஆதி 16:8ஆதி 11:5ஆதி 18:20-21யோசு 7:17-19வெளி 20:12-13

அதற்கு அவன், “நான் தோட்டத்தில் உமது சத்தத்தைக் கேட்டேன்; நான் நிர்வாணியாய் இருந்தபடியால் பயந்து, ஒளிந்துகொண்டேன்” என்றான். ஆதி 2:25சங் 119:120ஏசா 57:11ஏசா 47:31 யோவா 3:20யாத் 3:6யோபு 23:15ஏசா 33:14

அதற்கு யெகோவா, “நீ நிர்வாணி என்று உனக்குச் சொன்னது யார்? சாப்பிட வேண்டாமென்று நான் உனக்குக் கட்டளையிட்ட மரத்திலிருந்து நீ சாப்பிட்டாயோ?” என்று கேட்டார். ரோம 3:20ஆதி 4:10சங் 50:21

அதற்கு மனிதன், “என்னுடன் இங்கு இருப்பதற்கு நீர் எனக்குத் தந்த பெண்ணே, அந்த மரத்தின் பழத்தை எனக்குக் கொடுத்தாள்; நான் சாப்பிட்டேன்” என்றான். நீதி 28:13யாக் 1:13-15யோபு 31:33ரோம 10:31 சாமு 15:20-24ஆதி 2:18லூக் 10:29நீதி 19:3

பின்பு இறைவனாகிய யெகோவா அந்த பெண்ணிடம், “நீ செய்திருக்கும் இந்தக் காரியம் என்ன?” என்று கேட்டார். 2 கொரி 11:31 தீமோ 2:14ஆதி 3:4-6ஆதி 4:10-12யோவா 18:352 சாமு 12:9-122 சாமு 3:24ஆதி 44:15

அதற்கு அந்தப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, அதனால்தான் நான் சாப்பிட்டேன்” என்று சொன்னாள்.

அதனால் இறைவனாகிய யெகோவா பாம்பிடம் சொன்னதாவது: “நீ இவ்வாறு செய்திருக்கிறபடியால், மீகா 7:17ஏசா 65:25சங் 72:9ஏசா 29:4உபா 28:15-20ஆதி 9:6லேவி 20:25யாத் 21:28-32

“வளர்ப்பு மிருகங்கள், காட்டு மிருகங்கள்

எல்லாவற்றைப் பார்க்கிலும் அதிகமாய் சபிக்கப்பட்டிருப்பாய்!

நீ வயிற்றினால் ஊர்ந்து திரிவாய்;

உன் உயிருள்ள நாளெல்லாம்

புழுதியைத் தின்பாய்.

உனக்கும் பெண்ணுக்கும் இடையிலும், ரோம 16:201 யோவா 3:8வெளி 12:17ஏசா 7:14எபி 2:14-15கலா 4:4யோவா 8:44மத் 1:23

உன்னுடைய சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் இடையிலும்

நான் பகையை உண்டாக்குவேன்;

அவர் உன் தலையை நசுக்குவார்,

நீ அவரது குதிங்காலை நசுக்குவாய்.”

அதன்பின்பு அவர் பெண்ணிடம் சொன்னதாவது: தீத் 2:5கொலோ 3:181 கொரி 11:31 கொரி 14:341 தீமோ 2:15எபே 5:22-241 தீமோ 2:11-121 கொரி 7:4

“உன் குழந்தைபேற்றின் வேதனையை அதிகமாய்க் கூட்டுவேன்;

வேதனையோடு நீ குழந்தைகளைப் பெறுவாய்;

உன் ஆசை உன் கணவன் மேலேயே இருக்கும்,

அவன் உன்னை ஆண்டு நடத்துவான்.”

அவர் ஆதாமிடம் சொன்னதாவது: “ ‘நீ சாப்பிடவேண்டாம்,’ என நான் உனக்குக் கட்டளையிட்ட மரத்திலிருந்து நீ உன் மனைவியின் சொல்லைக் கேட்டுச் சாப்பிட்டபடியினால், ரோம 8:20-22ஆதி 5:29ஏசா 24:5-6பிரச 2:22-23யோவா 16:33யோபு 14:1எரே 7:23-24பிரச 5:17

“உன் நிமித்தம் பூமி சபிக்கப்பட்டிருக்கும்;

உன் வாழ்நாளெல்லாம்

நீ வருந்தி உழைத்தே பூமியின் பலனைச் சாப்பிடுவாய்.

பூமி முற்களையும் முற்புதர்களையும் உனக்கு விளைவிக்கும், ஏசா 7:23யோபு 5:5மத் 13:7சங் 104:14-15எபி 6:8ஏசா 32:13ஏசா 5:6எரே 4:3

வயலின் பயிர்களையே நீ சாப்பிடுவாய்.

நீ புழுதியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், பிரச 12:7யோபு 34:15சங் 104:29ஆதி 2:7சங் 90:3எபே 4:28பிரச 3:201 கொரி 15:21-22

நீ புழுதிக்குத் திரும்பும்வரை,

நெற்றி வியர்வை சிந்தியே

உன் உணவைச் சாப்பிடுவாய்;

நீ புழுதியிலிருந்து உண்டாக்கப்பட்டதால்

புழுதிக்கே திரும்புவாய்.”

ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் 1 என்று பெயரிட்டான், ஏனெனில் பூமியில் வாழ்வோருக்கெல்லாம் தாயாவாள். மத் 1:23ஆதி 2:23ஆதி 2:20ஆதி 5:29ஆதி 16:111 சாமு 1:20அப் 17:26யாத் 2:10

இறைவனாகிய யெகோவா தோலினால் உடைகளைச் செய்து, ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் உடுத்தினார். ஏசா 61:102 கொரி 5:212 கொரி 5:2-3ஆதி 3:7ரோம 3:22 அதன்பின் இறைவனாகிய யெகோவா, “மனிதன் இப்பொழுது நன்மையையும் தீமையையும் அறிந்து, நம்மில் ஒருவரைப்போல் ஆகிவிட்டான். அவன் தன் கையை நீட்டி, வாழ்வளிக்கும் மரத்திலிருந்து பறித்துச் சாப்பிட்டு, என்றென்றைக்கும் உயிர்வாழ இடமளிக்கக் கூடாது” என்றார். வெளி 2:7வெளி 22:14நீதி 3:18ஆதி 11:6-7வெளி 22:2ஆதி 2:9யோவா 6:48-58ஆதி 1:26 எனவே இறைவனாகிய யெகோவா, நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட அவனை நிலத்தையே பண்படுத்திப் பயிர்செய்யும்படி, ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே துரத்தினார். ஆதி 4:2ஆதி 3:19ஆதி 4:12பிரச 5:9ஆதி 2:5ஆதி 9:20 அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டபின், ஏதேன் தோட்டத்தின் கிழக்குப் பக்கமாக கேருபீன்களையும், சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வாழ்வளிக்கும் மரத்திற்குப் போகும் வழியைக் காவல் காக்கும்படி வைத்தார். எபி 1:7சங் 104:4யாத் 25:18-221 நாளாக 21:16-17எபி 10:18-22யோவா 14:6எசேக் 10:2-22ஆதி 2:8-9