ஆதியாகமம் 49

Genesis 49

யாக்கோபு ஆசீர்வதித்தல்

பின்பு யாக்கோபு தன் மகன்களைக் கூப்பிட்டு அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் எல்லோரும் என்னைச் சுற்றி நில்லுங்கள், இனிவரப்போகும் நாட்களில் நடக்கப்போவதை நான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன். எரே 23:20எண் 24:14தானி 10:14உபா 4:30ஆமோ 3:7உபா 31:12உபா 33:1-29எபி 1:2

“யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; சங் 34:11நீதி 1:8-9நீதி 23:22நீதி 23:26நீதி 4:1-4நீதி 5:1நீதி 6:20நீதி 7:1

உங்கள் தகப்பன் இஸ்ரயேல் சொல்வதைக் கேளுங்கள்.

“ரூபன், நீ என் முதற்பேறானவன், உபா 21:17சங் 78:51ஆதி 29:32சங் 105:361 நாளாக 2:11 நாளாக 5:11 நாளாக 5:3ஆதி 48:18

நீ வலிமையும் என் பெலனின் முதல் அடையாளமுமானவன்,

நீ மதிப்பில் சிறந்தவன், நீ வல்லமையிலும் சிறந்தவன்.

தண்ணீரைப்போல் தளம்புகிறவனே, நீ இனிமேல் மேன்மை அடையமாட்டாய்; ஆதி 35:221 நாளாக 5:1உபா 27:20உபா 33:61 கொரி 5:1யாக் 1:6-8உபா 5:21ஆதி 46:8

ஏனெனில், நீ உன்னுடைய தகப்பனின் படுக்கைக்குப்போய்,

என் கட்டிலைத் தீட்டுப்படுத்தினாய்.

“சிமியோனும், லேவியும் சகோதரர்கள். ஆதி 34:25-31ஆதி 29:33-34ஆதி 46:10-11நீதி 18:9

அவர்களின் வாள்கள் வன்முறையின் ஆயுதங்கள்.

நான் அவர்களுடைய ஆலோசனைக்கு உடன்படாமலும், ஆதி 34:30சங் 26:9சங் 16:92 கொரி 6:14ஆதி 34:25-26எரே 15:17எரே 4:19லூக் 12:19

அவர்களுடைய கூட்டத்தில் சேராமலும் இருப்பேனாக.

ஏனெனில், அவர்கள் தங்கள் கோபத்தினால் மனிதரைக் கொன்றார்கள்,

தாங்கள் விரும்பியவாறு எருதுகளை முடமாக்கினார்கள்.

அவர்களுடைய பயங்கரமான கோபமும், 1 நாளாக 4:24-311 நாளாக 6:65யோசு 19:1-91 நாளாக 4:39-402 சாமு 13:152 சாமு 13:22-28யோசு 21:1-45நீதி 26:24-25

கொடூரமான மூர்க்கமும் சபிக்கப்படுவதாக;

நான் அவர்களை யாக்கோபிலே பிரியச்செய்து,

இஸ்ரயேலிலே சிதறப்பண்ணுவேன்.

“யூதா, உன் சகோதரர் உன்னைப் புகழ்வார்கள்; 1 நாளாக 5:2ஆதி 27:29எபி 7:14உபா 33:7ஆதி 29:35யோசு 10:24சங் 18:40-431 நாளாக 12:1-40

உன் பகைவர்களின் கழுத்தின்மேல் உன்னுடைய கை இருக்கும்;

உன் தகப்பனின் மகன்கள் உன்முன் பணிவார்கள்.

யூதா, நீ ஒரு சிங்கக்குட்டி; எண் 24:9எண் 23:24வெளி 5:5மீகா 5:8ஓசி 5:14எசேக் 19:51 கொரி 15:24ஓசி 5:4

என் மகனே, நீ இரைதின்று திரும்புகிறாய்.

அவன் சிங்கத்தைப்போலும் பெண் சிங்கத்தைப்போலும் மடங்கிப் படுக்கிறான்;

அவனை எழுப்பத் துணிபவன் யார்?

செங்கோலுக்குரியவர் வரும்வரை எண் 24:17லூக் 1:32-33ஏசா 9:6சங் 60:7ஏசா 33:22எரே 23:5-6ஏசா 42:1எபி 7:14

செங்கோல் யூதாவைவிட்டு நீங்காது,

ஆளுநரின் கோல் அவனுடைய பாதங்களைவிட்டு விலகாது;

நாடுகளின் கீழ்ப்படிதல் அவருக்கே உரியது.

அவன் தன் கழுதையை திராட்சைச் செடியிலும், ஏசா 63:1-3யோவே 3:18வெளி 7:141 இராஜா 4:201 இராஜா 4:25மீகா 4:4வெளி 19:182இராஜா 18:32

தன் கழுதைக் குட்டியைச் சிறந்த திராட்சைக் கொடியிலும் கட்டுவான்;

அவன் தன் உடைகளைத் திராட்சை இரசத்திலும்,

அங்கிகளைத் திராட்சைப்பழச் சாற்றிலும் கழுவுவான்.

அவனுடைய கண்கள் திராட்சை இரசத்தைவிட கருமையும், நீதி 23:29

பற்கள் பாலைவிட வெண்மையுமாய் இருக்கும்.

“செபுலோன் கடற்கரையில் குடியிருந்து, உபா 33:18-19ஆதி 30:20யோசு 19:10-16

கப்பல் துறைமுகமாய் இருப்பான்;

அவனுடைய எல்லை சீதோன்வரை பரந்திருக்கும்.

“இசக்கார் இரண்டு பொதிகளுக்கிடையே படுத்திருக்கும் 1 நாளாக 12:32ஆதி 30:18உபா 33:18யோசு 19:17-23நியாயாதி 10:1நியாயாதி 5:15-16

பலமுள்ள கழுதை.

அவன் தன் இளைப்பாறும் இடம் எவ்வளவு நல்லதென்றும், 2 சாமு 7:1எசேக் 29:18நியாயாதி 3:11யோசு 14:15மத் 23:4சங் 81:6

தனது நாடு எத்தகைய மகிழ்ச்சிக்குரியது என்றும் கண்டு,

சுமைக்குத் தன் தோளை சாய்ப்பான்;

கட்டாய வேலைக்கும் இணங்குவான்.

“தாண் இஸ்ரயேலின் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாயிருந்து, உபா 33:22ஆதி 30:6நியாயாதி 13:2நியாயாதி 13:24-25நியாயாதி 15:20நியாயாதி 18:1-2நியாயாதி 18:26-27எண் 10:25

தன் மக்களுக்கு நீதி வழங்குவான்.

தாண், குதிரைமீது போகிறவன் 1 நாளாக 12:35நியாயாதி 18:22-31நியாயாதி 14:1-15நியாயாதி 16:22-30

இடறிவிழும்படி பாதையோரம் கிடந்து,

குதிரைகளின் குதிங்காலைக் கடிக்கிற பாம்பைப்போலவும்,

வழியிலே கிடக்கும் விரியன் பாம்பைப்போலவும் இருப்பான்.

“யெகோவாவே, நான் உம்முடைய மீட்புக்காகக் காத்திருக்கிறேன். ஏசா 25:9சங் 119:166சங் 119:174மீகா 7:7சங் 130:51 தெச 1:10புலம் 3:25லூக் 2:25

“காத் கொள்ளைக் கூட்டத்தாரால் தாக்கப்படுவான், 1 நாளாக 5:11-22உபா 33:20-21ஆதி 30:111 நாளாக 3:18-221 நாளாக 5:26ஆதி 46:16நியாயாதி 10:1-11யோசு 13:8

ஆனாலும் இறுதியில் அவன் அவர்களைத் தாக்குவான்.

“ஆசேருடைய உணவு கொழுமையானதாய் இருக்கும்; உபா 33:24-25ஆதி 30:13ஆதி 46:17யோசு 19:24-31

அரசனுக்குத் தகுந்த சுவையான உணவை அவன் கொடுப்பான்.

“நப்தலி 1 அழகான குட்டிகளை ஈனும் உபா 33:23ஆதி 30:8ஆதி 46:24நியாயாதி 4:10நியாயாதி 4:6நியாயாதி 5:18யோசு 19:32-39மத் 4:15-16

விடுதலை பெற்ற பெண்மான்.

“யோசேப்பு கனிதரும் செடி; ஆதி 41:52சங் 1:1-3சங் 128:3ஆதி 30:22-24ஆதி 46:27யோசு 16:1-10யோசு 17:14-17உபா 33:13-17

அவன் நீரூற்றருகில் கனிதரும் திராட்சைக்கொடி.

அவனுடைய கிளைகள், மதில்களில் ஓங்கி வளரும்.

வில்வீரர் அவனைக் கொடூரமாகத் தாக்கினார்கள்; ஆதி 37:24சங் 118:13ஆதி 37:28ஆதி 37:4சங் 64:3அப் 14:22ஆதி 37:18ஆதி 39:7-20

பகைமையுடன் அவன்மேல் எய்தார்கள்.

ஆனால், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; சங் 132:2ஏசா 28:16சங் 132:5யோபு 29:20சங் 80:12 தீமோ 4:17சங் 18:301 பேது 2:4-8

அவனுடைய பெலமுள்ள புயங்கள் சுறுசுறுப்பாயிருந்தன;

யாக்கோபின் வல்லவரின் கரத்தினாலும்,

மேய்ப்பராலும், இஸ்ரயேலுடைய கற்பாறையாலும்,

உனக்கு உதவிசெய்யும் உன் தகப்பனின் இறைவனாலும் இப்படியாகும். ஆதி 28:13ஆதி 35:11பிலி 4:19உபா 28:2-12உபா 33:13-17உபா 8:17ஆதி 43:231 தீமோ 4:8

அவர் மேலேயுள்ள வானங்களின் ஆசீர்வாதங்களினாலும்,

கீழேயுள்ள ஆழங்களின் ஆசீர்வாதங்களினாலும்,

மார்பகங்களின், கருப்பையின் ஆசீர்வாதங்களினாலும்

உன்னை ஆசீர்வதிக்கும் எல்லாம் வல்லவராய் இருக்கிறார்.

உன் தகப்பனின் ஆசீர்வாதங்கள் உபா 33:15-16ஆப 3:6எசேக் 37:25-26ஆதி 27:27-29ஆதி 27:39-40ஆதி 28:3-4ஆதி 37:28ஏசா 54:10

நித்திய மலைகளின் ஆசீர்வாதங்களைப் பார்க்கிலும்,

பழைமை வாய்ந்த குன்றுகளின் செழிப்பைப் பார்க்கிலும் பெரிதானவை.

இவைகளெல்லாம் யோசேப்பின் தலையின்மேலும்,

தன் சகோதரருக்குள் பிரபுவாய் இருக்கிறவனின் நெற்றியிலும் தங்குவதாக.

“பென்யமீன் ஒரு பீறுகிற ஓநாய்; நியாயாதி 20:21நியாயாதி 20:25எசேக் 22:27ஆதி 35:18ஆதி 46:21எண் 23:241 சாமு 11:4-111 சாமு 14:1-15

காலையில் தன் இரையைப் பேராவலுடன் பட்சிப்பான்.

மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்.”

இஸ்ரயேலின் பன்னிரு கோத்திரங்களும் இவர்களே, அவர்களுடைய தகப்பன் அவனவனுக்குத் தகுந்த ஆசீர்வாதங்களைச் சொல்லி, அவர்களை ஆசீர்வதிக்கும்போது சொன்னவை இவையே. எஸ்த 8:11எசேக் 39:8-10வெளி 7:41 இராஜா 18:31அப் 26:7எஸ்த 8:7எஸ்த 8:9எஸ்த 9:1-10

யாக்கோபின் மரணம்

பின்பு அவன் அவர்களுக்கு அறிவுறுத்திச் சொன்னதாவது: “நான் என் முன்னோர்களுடன் சேர்த்துக்கொள்ளப்படப் போகிறேன். ஏத்தியனான எப்ரோனிடமிருந்து வாங்கிய நிலத்திலே, என் தந்தையர்களை அடக்கம்பண்ணிய குகையிலேயே என்னையும் அடக்கம்பண்ணுங்கள். ஆதி 47:30ஆதி 50:13ஆதி 15:152 சாமு 19:37ஆதி 25:8-17ஆதி 35:29ரோம 12:6-21எபி 12:23 அந்தக் குகை கானானிலுள்ள மம்ரேக்கு அருகில் மக்பேலா என்னும் வயல்வெளியில் இருக்கிறது; ஆபிரகாம் அதை ஏத்தியனான எப்ரோனிடமிருந்து வயலையும் சேர்த்து கல்லறை நிலமாக வாங்கினார். ஆதி 23:16-18ஆதி 23:20ஆதி 23:8-9 அங்கேயே ஆபிரகாமும் அவர் மனைவி சாராளும், ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்; என் மனைவி லேயாளையும் நான் அங்கேயே அடக்கம்பண்ணினேன். ஆதி 25:9ஆதி 35:29அப் 7:16ஆதி 23:16-20ஆதி 23:3ஆதி 47:30ஆதி 50:13 அந்த நிலமும் குகையும் ஏத்தியரிடமிருந்து வாங்கப்பட்டவை” என்றான். ஆதி 23:17-20

யாக்கோபு தன் மகன்களுக்கு அறிவுரை கூறிமுடித்ததும், அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் தூக்கிவைத்து, இறுதி மூச்சை விட்டான். இவ்வாறு அவன் தனது முன்னோருடன் சேர்க்கப்பட்டான். ஆதி 49:29ஆதி 25:8ஆதி 35:29அப் 7:15பிரச 12:7ஆதி 15:5ஆதி 25:17ஆதி 49:1