கிறிஸ்து ஒரேமுறை பலியானார்
மோசேயின் சட்டம் வரப்போகின்ற நன்மைகளின் ஒரு நிழல் மாத்திரமே, அதன் நிஜமல்ல. இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும், திரும்பத்திரும்ப தொடர்ச்சியாகச் செலுத்தப்பட்ட பலிகளின் மூலமாய், வழிபாட்டிற்கு வருகிறவர்களை ஒருபோதும் முழுமை பெறச்செய்ய, மோசேயின் சட்டத்தால் இயலாதிருக்கிறது. கொலோ 2:17எபி 8:5எபி 9:11எபி 9:23எபி 7:18-19எபி 9:25எபி 10:11-18எபி 9:8-9 அவ்வாறு முடியுமாயிருந்தால், பலிகள் செலுத்துவதும் நின்றிருக்கும் அல்லவா? ஏனெனில் இறைவனை ஆராதிக்கிற மக்கள், ஒரே முறையாகத் தங்களுடைய பாவங்களிலிருந்து உண்மையாகவே சுத்திகரிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய பாவத்தைக்குறித்துத் தொடர்ந்து குற்ற உணர்வுடையவர்களாய் இருந்திருக்கமாட்டார்களே! ஏசா 43:25மீகா 7:19சங் 103:12ஏசா 44:22எபி 10:17எபி 9:13-14 ஆனால் அந்த பலிகள் ஒவ்வொரு வருடமும், பாவங்களை நினைப்பூட்டுவதாகவே இருந்தன. எபி 9:7யாத் 30:10லேவி 16:34லேவி 16:6-11லேவி 23:27-281 இராஜா 17:18லேவி 16:21-22லேவி 16:29-30 ஏனெனில் காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தினால், பாவங்களை ஒருபோதும் நீக்கிப்போட முடியாது. எபி 10:11ஏசா 1:11-15மீகா 6:6-8ரோம 11:271 யோவா 3:5எபி 10:8மாற் 12:33ஆமோ 5:21-22
இதன் காரணமாகவே கிறிஸ்து உலகத்திற்குள் வந்தபோது, அவர் சொன்னதாவது: சங் 40:6-8ஏசா 1:11ஏசா 7:141 பேது 2:24மத் 1:20-23எபி 10:7கலா 4:4எபி 1:6
“பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை.
ஆனால் ஒரு உடலை நீர் எனக்கென ஆயத்தம் செய்தீர்;
தகன காணிக்கைகளிலும், எபி 10:4மல்கி 1:10மத் 3:17எபே 5:2லேவி 1:1-6பிலி 4:18சங் 147:11
பாவநிவாரண காணிக்கைகளிலும் நீர் பிரியப்படவில்லை.
புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடி, சங் 40:7-8யோவா 4:34யோவா 6:38யோவா 5:30எபி 10:9-10எரே 36:2ஆதி 3:15நீதி 8:31
‘இதோ நான் இருக்கிறேன்;
இறைவனே, அடியேன் உமது விருப்பத்தைச் செய்ய வந்திருக்கிறேன் என்றேன்.’ ” 1
முன்பு கிறிஸ்து, “பலிகளையும், காணிக்கைகளையும், தகன காணிக்கைகளையும், பாவநிவாரணக் காணிக்கைகளையும் நீர் விரும்பவுமில்லை, அவற்றில் நீர் பிரியப்படவுமில்லை” என்றார். ஆனால் மோசேயின் சட்டத்தின்படி அவை செலுத்தப்பட்டன. எபி 10:5மாற் 12:33 பின்பு அவர், “இதோ, நான் இருக்கிறேன், அடியேன் உமது விருப்பத்தைச் செய்ய வந்திருக்கிறேன்” என்றார். இதனால் அவர் முதலாவதை நீக்கிவிட்டு, இரண்டாவதை ஏற்படுத்தி நிலைநிறுத்துகிறார். எபி 7:18-19எபி 12:27-28எபி 10:7எபி 9:11-14எபி 8:7-13 இவ்விதமாக, இயேசுகிறிஸ்து ஒரேதரம் எல்லா காலத்திற்குமாக தமது உடலை பலியாகச் செலுத்தியதின் மூலம் இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்றினதினால் நம்மை பரிசுத்தமாக்கியிருக்கிறார். எபி 10:14எபி 10:121 கொரி 6:11எபி 7:27யோவா 17:19எபி 13:12எபி 9:121 கொரி 1:30
ஒவ்வொரு ஆசாரியனும் நாள்தோறும் இறைசமுகத்தில் நின்று, தனது பணிகளைச் செய்கிறான். ஒருபோதும் பாவங்களைப் போக்க முடியாத பலிகளைத் திரும்பத்திரும்ப செலுத்துகிறான். எபி 10:4எபி 5:1எண் 28:3சங் 50:8-13எபி 10:1எபி 7:27ஏசா 1:11தானி 11:31 ஆனால் கிறிஸ்துவாகிய இந்த ஆசாரியன், பாவங்களுக்கான ஒரே பலியை எல்லாக் காலத்திற்குமாக செலுத்தி, பின் இறைவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்தார். எபி 1:3கொலோ 3:1ரோம 8:34எபி 8:1அப் 2:33-34எபி 9:12 அந்தவேளைமுதல், கிறிஸ்து தமது பகைவர்கள் தமது பாதபீடமாக்கப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். எபி 1:13சங் 110:1லூக் 20:431 கொரி 15:25மாற் 12:36அப் 2:35மத் 22:44தானி 2:44 ஏனெனில் கிறிஸ்து ஒரே பலியினாலே, பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். எபி 9:14எபி 7:25எபி 10:1எபி 2:11எபி 13:12ரோம 15:16அப் 20:32எபே 5:26
பரிசுத்த ஆவியானவரும் இதைக்குறித்து நமக்கு சாட்சி கொடுக்கிறார். அவர் முதலில் சொல்கிறதாவது: எபி 3:72 பேது 1:21வெளி 2:11வெளி 3:6அப் 28:25யோவா 15:261 பேது 1:11-122 சாமு 23:2
“அந்த நாட்களுக்குப்பின்பு, எரே 31:33-34எபி 8:8-12ரோம 11:27
நான் அவர்களுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே:
நான் எனது சட்டங்களை அவர்களுடைய இருதயங்களில் வைப்பேன்.
அவற்றை அவர்களுடைய மனங்களில் நான் எழுதுவேன் 2
என்று கர்த்தர் சொல்கிறார்.”
பின்னும் அவர் சொல்லுகிறதாவது: எபி 8:12எரே 31:34
“நான் அவர்களுடைய பாவங்களையும் சட்டமீறுதல்களையும்
ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.” 3
எனவே, எங்கே பாவங்கள் மன்னிக்கப்பட்டதோ, அங்கே பாவங்களை நீக்குவதற்கான எவ்வித பலியும் இனிமேல் தேவையில்லை. எபி 10:2எபி 10:14
விடாமுயற்சிக்கு அழைப்பு
ஆகையால் பிரியமானவர்களே, இயேசுவினுடைய இரத்தத்தின் மூலமாய் மகா பரிசுத்த இடத்திற்குள் செல்வதற்கு தைரியம் நமக்கு உண்டு. எபே 2:18எபி 9:12எபி 4:16எபே 3:12ரோம 5:2எபி 12:281 யோவா 4:17ரோம 8:15 அவர் திரைச்சீலையின் மூலமாக ஒரு புதிதாக வாழும் வழியை நமக்குத் திறந்திருக்கிறார். அதுவே அவருடைய மாம்சம். யோவா 14:6யோவா 10:9எபி 9:3எபி 6:19எபி 9:8யோவா 10:7லேவி 16:2மத் 27:51 இப்பொழுது இறைவனுடைய வீட்டிற்குப் பொறுப்பாக நமது பிரதான ஆசாரியர் இருக்கிறபடியால், எபி 2:17எபி 4:14-16எபி 6:20எபி 8:1எபே 2:19-22எபி 3:1எபி 7:26எபி 3:3-6 நாம் குற்றமனசாட்சி நீக்கப்பட்ட, சுத்த இருதயத்துடனும், சுத்தமான தண்ணீரினால் கழுவப்பட்ட உடலுடனும், பரிபூரண விசுவாசமுள்ள உண்மையான உள்ளத்துடனும், இறைவனை அணுகி சேருவோமாக. எசேக் 36:25யோவா 3:5எபே 5:261 பேது 3:211 கொரி 6:11எபி 4:16எபி 7:192 கொரி 7:1 நமக்கு வாக்குத்தத்தம் கொடுத்தவர் வாக்குமாறாதவராய் இருப்பதனால், நாம் அறிக்கையிடுகிற நம்பிக்கையை வழுவாது உறுதியாய்ப் பற்றிக்கொள்வோம். 1 தெச 5:241 கொரி 1:92 தெச 3:3எபி 6:18தீத் 1:2எபி 3:61 கொரி 10:13வெளி 3:11 அத்துடன் நாம் அன்பாயிருப்பதிலும் நற்செயல்களைச் செய்வதிலும் எப்படி ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தலாம் என்பதைப்பற்றி சிந்திப்போம். 1 தெச 5:111 யோவா 3:18எபி 13:1கலா 5:13கொலோ 3:16தீத் 3:81 தெச 3:12-131 தீமோ 6:18 சிலர் சபையாக ஒன்றுகூடி வருவதை விட்டுவிடுகிறதுபோல, நாமும் செய்யாமல் கர்த்தருடைய நாள் நெருங்கி வருவதைக் காண்கிறதினால் நாம் ஒருவரையொருவர் இன்னும் அதிகமாய் ஊக்குவிப்போம். அப் 2:421 தெச 5:11மத் 18:20எபி 3:13எபி 10:241 கொரி 5:41 தெச 4:18அப் 20:7
நாம் சத்தியத்தை அறியும் அறிவைப் பெற்ற பின்னும், வேண்டுமென்றே பாவம் செய்துகொண்டு இருப்போமானால், இனிமேலும் பாவங்களை நீக்குவதற்கான பலி வேறொன்றும் இருக்காது. 2 பேது 2:20-22எபி 6:4-6யோவா 9:41லூக் 12:47மத் 12:43-45எண் 15:28-311 யோவா 5:16யாக் 4:17 ஆனால் பயப்படத்தக்கதான நியாயத்தீர்ப்பையும், இறைவனின் பகைவர்களைச் சுட்டெரிக்கின்றதான பற்றியெரியும் நெருப்பையுமே எதிர்நோக்க வேண்டும். ஏசா 26:11எபி 2:3செப்ப 1:18எபி 12:25எபி 9:27மத் 13:50நாகூ 1:2எரே 4:4 மோசேயின் சட்டத்தைப் புறக்கணித்த எவரும், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் சாட்சியத்தினாலே இரக்கம் காட்டப்படாமல் மரித்தார்கள். எபி 2:2உபா 19:15உபா 17:2-132 கொரி 13:1உபா 19:13யோவா 8:17மத் 18:16எண் 15:30-31 அப்படியானால் இறைவனின் மகனை காலின்கீழ் மிதித்தவன், தன்னைப் பரிசுத்தமாக்கிய புதிய உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமாக எண்ணியவன், கிருபையைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரை அவமானப்படுத்தியவன் இன்னும் எவ்வளவு கடுமையாகத் தண்டிக்கப்படுவான் என்று யோசித்துப் பாருங்கள். எபே 4:30எபி 6:6ஏசா 63:101 கொரி 11:27லூக் 12:10அப் 7:51எபி 2:3மத் 12:31-32 ஏனெனில், “பழிவாங்குதல் எனக்குரியது; நானே ஏற்றபடி பதில் செய்வேன்” 4 என்றும், “கர்த்தர் தமது மக்களை நியாயந்தீர்ப்பார்” 5 என்றும் சொல்லியிருக்கிறவரை நமக்குத் தெரியும். உபா 32:35-36ரோம 12:19நாகூ 1:2சங் 50:42 கொரி 5:10சங் 135:14சங் 96:13ஏசா 61:2 ஜீவனுள்ள இறைவனின் கைகளில் விழுவது பயங்கரமானதே. மத் 10:28லூக் 12:5எபி 12:29ஏசா 33:14சங் 76:7சங் 90:11மத் 16:16எபி 10:27
வெளிச்சத்தை நீங்கள் பெற்ற ஆரம்ப நாட்களில் நீங்கள் பல வேதனைகளின் மத்தியில், பெரும் போராட்டத்தில் நிலைத்து நின்ற உங்கள் நிலையை ஞாபகப்படுத்திப் பாருங்கள். எபி 6:42 தீமோ 2:3-132 தீமோ 4:7-8கலா 3:3-4எபி 12:42 யோவா 1:8அப் 8:1-3பிலி 1:29-30 சில சமயங்களில் நீங்கள் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டீர்கள். இன்னும் வேறுசில சமயங்களில், இவ்விதம் துன்புறுத்தப்பட்டவர்களுடன் தோள்கொடுத்து நின்றீர்கள். 1 கொரி 4:9பிலி 4:142 கொரி 12:10எபி 11:36ஏசா 51:7பிலி 1:7சங் 74:221 தெச 2:14 சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் காண்பித்தீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோது, அவற்றைவிடச் மேன்மையானதும், என்றும் நிலைத்திருக்கிறதுமான உரிமைச்சொத்து உங்களுக்கு இருக்கிறது என்பதை அறிந்திருந்ததினால் அதை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டீர்கள். 1 பேது 1:42 தீமோ 1:16மத் 6:19-20கொலோ 1:5எபே 6:20யாக் 1:2லூக் 12:33மத் 5:11-12 ஆகையால் உங்களுக்கிருக்கும் அந்த மனவுறுதியை நீங்கள் இழந்துவிடாதீர்கள். அது உங்களுக்கு ஒரு பெரிதான வெகுமதியைக் கொண்டுவரும். 1 கொரி 15:58கலா 6:8-10எபி 3:6லூக் 14:14எபி 11:26எபி 4:14மத் 5:12எபி 3:14
நீங்கள் விடாமுயற்சியுடையவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுதே நீங்கள் இறைவனுடைய சித்தத்தைச் செய்து முடித்தபின், அவர் வாக்குக்கொடுத்ததைப் பெற்றுக்கொள்வீர்கள். எபி 12:1சங் 37:7யாக் 5:7-111 கொரி 13:7லூக் 21:19எபி 6:15ரோம 2:7வெளி 14:12 ஏனெனில், யாக் 5:7-9ஆப 2:3-4லூக் 18:8ஏசா 26:20ஏசா 60:22வெளி 22:202 பேது 3:8மத் 11:3
“வருகிறவர் கொஞ்சக் காலத்திலே,
வந்துவிடுவார்.
அவர் தாமதிக்கமாட்டார். 6
ஆனால், கலா 3:11ஆப 2:4ரோம 1:17சங் 85:8எபி 6:4-6எசேக் 3:20ஏசா 42:1மத் 13:21
“எனது நீதிமான்கள் 7 விசுவாசத்தினாலே பிழைப்பார்கள்.
அவர்களில் ஒருவனாவது பின்வாங்கிப்போனால்,
நான் அவனில் பிரியமாயிருக்கமாட்டேன்” 8
என்ற உற்சாகமூட்டும் வேதவசனங்களை நாம் அறிவோம்.
நாமோ விசுவாசத்திலிருந்து பின்வாங்கி, அழிந்துபோகிறவர்களோடு அல்ல. விசுவாசித்து, இரட்சிக்கப்படுகிறவர்களோடே சேர்ந்தவர்களாயிருக்கிறோம். 1 யோவா 5:51 பேது 1:52 தெச 2:12-14மாற் 16:161 யோவா 5:161 சாமு 15:112 பேது 3:71 தெச 5:9