பாபிலோனுக்கு எதிரான இறைவாக்கு
ஆமோஸின் மகன் ஏசாயா பாபிலோனைப்பற்றிக் கண்ட தரிசனத்தில் கூறப்பட்ட இறைவாக்கு: ஏசா 47:1-15எரே 50:1ஏசா 1:1தானி 5:28தானி 5:6வெளி 17:1-18ஏசா 13:19ஏசா 14:28
வறண்ட மலையுச்சியில் கொடியேற்றுங்கள், ஏசா 5:26எரே 51:58எரே 50:2ஏசா 45:1-3எரே 51:25ஏசா 10:32ஏசா 18:3ஏசா 11:12
போர்வீரர்களை கூப்பிடுங்கள்;
உயர்குடி மக்களின் வாசல்களுக்குள் போகும்படி
அவர்களை அழையுங்கள்.
எனது பரிசுத்தவான்களுக்கு கட்டளையிட்டிருக்கிறேன்; யோவே 3:11எரே 51:20-24வெளி 17:12-18எஸ்றா 1:1-11எஸ்றா 6:1-22எஸ்றா 7:12-26ஏசா 23:11ஏசா 44:27-28
எனது கோபத்தை நிறைவேற்ற என் போர்வீரர்களை அழைத்திருக்கிறேன்;
அவர்கள் என் வெற்றியில் களிகூறுகிறவர்கள்.
கேளுங்கள், மலைகளின்மேல் ஒரு சத்தம் கேட்கிறது! யோவே 3:14எசேக் 38:3-23யோவே 2:1-11யோவே 2:25வெளி 19:11-21ஏசா 10:5-6ஏசா 22:1-9ஏசா 45:1-2
அது பெருந்திரளான மக்களின் இரைச்சல் போலிருக்கிறது.
கேளுங்கள், ராஜ்யங்களின் மத்தியில் பெருமுழக்கம் கேட்கிறது!
அது பல நாடுகள் ஒன்றுசேர்வது போன்ற ஆரவாரமாயிருக்கிறது.
சேனைகளின் யெகோவா
போருக்கு ஒரு படையைத் திரட்டுகிறார்.
தூர நாடுகளிலிருந்து அவர்கள் வருகிறார்கள்; எரே 50:9எரே 51:20-46மத் 24:31ஏசா 13:17ஏசா 24:1ஏசா 5:26எரே 50:3எரே 51:11
தொடுவானங்களின் எல்லைகளிலிருந்து வருகிறார்கள்.
முழு நாட்டையும் அழித்தொழிக்க
யெகோவா தமது கோபத்தின் ஆயுதங்களுடன் வருகிறார்.
அழுது புலம்புங்கள், யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் நாள் சமீபமாகிவிட்டது; யோவே 1:15ஆமோ 5:181 தெச 5:2-3எசேக் 30:2-3ஏசா 13:9செப்ப 1:7ஏசா 2:12ஏசா 34:8
அந்த நாள் எல்லாம் வல்லவரிடமிருந்து பேரழிவைப்போல் வரும்.
இதனால் கைகளெல்லாம் தளர்ந்து போகும்; எசேக் 21:7எசேக் 7:17ஏசா 19:1நாகூ 1:6நாகூ 2:10யாத் 15:15ஏசா 10:3-4ஏசா 37:27
எல்லா மனிதரின் இருதயமும் உருகிப்போகும்.
அவர்களைத் திகில் பற்றிக்கொள்ளும், 1 தெச 5:3ஏசா 26:17நாகூ 2:10ஏசா 21:3-4தானி 5:5-6எரே 30:6எரே 4:31எரே 50:43
வலியும் வேதனையும் அவர்களைப் பிடித்துக்கொள்ளும்;
பிரசவ வேதனைப்படும் பெண்ணைப்போல் அவர்கள் துடிப்பார்கள்.
அவர்கள் வெட்கத்தினால் முகம் சிவக்க
ஒருவரையொருவர் வியப்புடன் பார்ப்பார்கள்.
பாருங்கள், யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் நாள் வருகிறது; மல்கி 4:1நாகூ 1:6ஏசா 13:15-18ஏசா 13:6ஏசா 47:10-15எரே 50:40-42எரே 51:35-58எரே 6:22-23
அது கொடுமையின் நாள், நாட்டைப் பாழாக்குவதற்கும்,
அங்குள்ள பாவிகளை தண்டிப்பதற்கும்,
கோபத்துடனும் கடுங்கோபத்துடனும் அது வருகிறது.
வானத்து நட்சத்திரங்களும், யோவே 2:31மத் 24:29எசேக் 32:7-8மாற் 13:24ஏசா 24:23ஏசா 5:30யோவே 2:10யோவே 3:15
நட்சத்திரக் கூட்டங்களும் தங்கள் ஒளியைக் கொடாதிருக்கும்.
சூரியன் உதிக்கும்போது இருண்டுபோகும்;
சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும்.
நான் உலகத்தை அதன் தீமைக்காகவும், ஏசா 2:11ஏசா 5:15தானி 5:22-23எரே 50:29-32ஏசா 11:4ஏசா 14:12-16ஏசா 14:21ஏசா 2:17
கொடியவரை அவர்களுடைய பாவங்களுக்காகவும் தண்டிப்பேன்.
துன்மார்க்கரின் அகந்தைக்கும் நான் முடிவு செய்வேன்;
இரக்கமற்றவர்களின் பெருமையைத் தாழ்த்துவேன்.
சிறந்த தங்கத்தைப் பார்க்கிலும், ஏசா 4:1ஏசா 24:6யோபு 28:16சங் 137:9ஏசா 13:15-18
ஓப்பீர் நாட்டின் தங்கத்தைப் பார்க்கிலும் நான் மனிதரை அபூர்வமாக்குவேன்.
ஆகையால் நான் வானங்களை நடுங்கப்பண்ணுவேன்; எபி 12:26-27யோவே 3:16மத் 24:29ஆகா 2:6-7நாகூ 1:4-62 பேது 3:10ஆகா 2:21-22ஏசா 34:4
பூமி தன் நிலையிலிருந்து அசையும்.
எல்லாம் வல்ல யெகோவாவின் கோபம் பற்றியெரியும் நாளில்,
அவருடைய கோபத்தில் இது நடக்கும்.
அப்பொழுது வேட்டையாடப்படும் மானைப்போலவும், 1 இராஜா 22:17எரே 50:161 இராஜா 22:36எரே 51:9ஏசா 17:13ஏசா 47:15வெளி 18:9-10
மேய்ப்பனில்லாத செம்மறியாட்டைப் போலவும்,
ஒவ்வொருவனும் தன் சொந்த மக்களிடம் திரும்புவான்;
ஒவ்வொருவனும் தன் சொந்த நாட்டுக்குத் தப்பியோடுவான்.
கைதியாக்கப்பட்டவன் குத்தப்படுவான்; ஏசா 14:19-22ஏசா 47:9-14எரே 50:25எரே 50:27எரே 50:35-42எரே 51:3-4
அகப்பட்டவன் வாளினால் சாவான்.
அவர்களுடைய குழந்தைகள் அவர்கள் கண்களின்முன் ஓசி 10:14நாகூ 3:10ஏசா 13:18சங் 137:8-9புலம் 5:11சகரி 14:2
மோதியடிக்கப்பட்டு, துண்டுகளாக்கப்படுவார்கள்;
அவர்களுடைய வீடுகள் கொள்ளையிடப்படும்,
அவர்களுடைய மனைவிகள் அவமானப்படுவார்கள்.
பாருங்கள், மேதியரை நான் அவர்களுக்கு எதிராக எழுப்புவேன்; தானி 5:28-31எரே 51:11ஏசா 41:25எரே 50:9எரே 51:27-28ஏசா 13:3-5ஏசா 21:2நீதி 6:34-35
அவர்கள் வெள்ளியை மதியாதவர்கள்,
தங்கத்தில் மகிழ்ச்சி கொள்ளாதவர்கள்.
அவர்களின் வில்லுகள் வாலிபரைத் தாக்கி வீழ்த்தும்; 2இராஜா 8:122 நாளாக 36:17எசேக் 9:10எசேக் 9:5-6ஓசி 13:16ஏசா 13:16நாகூ 2:1நாகூ 3:10
அவர்கள் குழந்தைகளுக்கு இரக்கம் காட்டமாட்டார்கள்,
சிறுபிள்ளைகள்மேல் கருணை காட்டவுமாட்டார்கள்.
பாபிலோன், சோதோம் கொமோராவைப்போல் தானி 4:30ஆமோ 4:11உபா 29:23ஆதி 19:24எரே 49:18எரே 50:40எரே 51:41செப்ப 2:9
இறைவனால் கவிழ்க்கப்படும்.
இதுவே அரசுகளின் மேன்மையாகவும்,
கல்தேயரின் பெருமையின் சிறப்பாகவும் இருந்தது.
வரும் தலைமுறைகளில் ஒருவரும் இனியொருபோதும் அங்கு குடியேறவோ, ஏசா 14:23எரே 51:432 நாளாக 17:11ஏசா 34:10-15எரே 50:13எரே 50:21எரே 50:3எரே 50:39
வசிக்கவோ மாட்டார்கள்.
அரேபியன் எவனும் அங்கு தனது கூடாரத்தைப் போடமாட்டான்.
மேய்ப்பன் தன் மந்தைகளை அங்கு இளைப்பாற விடவுமாட்டான்.
ஆனால் அங்கு பாலைவன மிருகங்கள் தங்கும்; வெளி 18:2ஏசா 34:11-15
அவர்களுடைய வீடுகள் நரிகளால் நிரம்பும்.
ஆந்தைகள் அங்கே குடியிருக்கும்;
காட்டாடுகளும் அங்கே துள்ளி விளையாடும்.
அரண்செய்யப்பட்ட இடங்களில் ஓநாய்களும், ஏசா 25:2ஏசா 35:7எரே 51:332 பேது 2:32 பேது 3:9-10உபா 32:35எசேக் 7:7-10ஆப 2:3
அதன் அலங்காரமான அரண்மனைகளில் நரிகளும் ஊளையிடும்.
பாபிலோனுக்குரிய வேளை வந்துவிட்டது.
அதன் நாட்கள் நீடிக்காது.