ஏசாயா 34

Isaiah 34

நாடுகளுக்கு விரோதமான நியாயத்தீர்ப்பு

நாடுகளே, நீங்கள் அருகில் வந்து கேளுங்கள்; 1 கொரி 10:26ஏசா 1:2ஏசா 41:1ஏசா 43:9உபா 32:1ஏசா 33:13எரே 22:29மீகா 6:1-2

மக்கள் கூட்டங்களே, நீங்கள் கவனியுங்கள்.

பூமியும் அதிலுள்ள யாவும் கேட்கட்டும்,

உலகமும் அதிலிருந்து வரும் அனைத்தும் கேட்கட்டும்.

யெகோவா எல்லா நாடுகளோடும் கோபமாயிருக்கிறார்; எரே 25:15-29செப்ப 3:8ஆமோ 1:1-2ஏசா 13:5ஏசா 30:25ஏசா 30:27-30யோவே 3:9-14சகரி 14:12-16

அவருடைய கோபம் அவர்களுடைய எல்லா இராணுவத்தின்மேலும் இருக்கிறது.

அவர் அவர்களை முற்றிலும் அழிப்பார்;

அவர் அவர்களைக் கொலைக்கு ஒப்புக்கொடுப்பார்.

அவர்களில் கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்படுவார்கள், யோவே 2:20எசேக் 39:4ஏசா 34:72இராஜா 9:35-37ஆமோ 4:10எசேக் 14:19எசேக் 32:5-6எசேக் 35:6

இறந்தவர்களின் உடல்கள் துர்நாற்றம் வீசும்;

மலைகள் அவர்களுடைய இரத்தத்தினால் ஊறியிருக்கும்.

வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் இல்லாமற்போகும்; வெளி 6:13-14மத் 24:29எசேக் 32:7-8யோவே 3:152 பேது 3:7-12மாற் 13:24-25சங் 102:25-26எரே 4:23-24

ஆகாயம் ஒரு சுருளைப்போல் சுருட்டப்படும்.

வானசேனை அனைத்தும்

திராட்சைக் கொடியிலிருந்து வாடிய இலைகள் உதிர்வதுபோலவும்,

சூம்பிப்போன காய்கள் அத்திமரத்திலிருந்து விழுவதுபோலவும் விழும்.

எனது வாள் தன் நிறைவை வானங்களில் குடித்திருக்கிறது; எரே 46:10ஆமோ 1:11-12ஏசா 63:1மல்கி 1:4எசேக் 25:12-14எரே 49:7-22உபா 29:18-21உபா 32:14

இதோ, நான் முழுவதும் அழித்துப்போட்ட ஏதோம் மக்களை

நியாயந்தீர்ப்பதற்காக அது கீழே வருகிறது.

யெகோவாவின் வாள் இரத்தத்தில் தோய்ந்திருக்கிறது, ஏசா 63:1எரே 49:13உபா 32:14எசேக் 21:4-5எசேக் 39:17-20ஏசா 34:5ஏசா 63:3எரே 50:27

அது கொழுப்பினால் மூடப்பட்டிருக்கிறது.

அது செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தாலும்,

செம்மறியாட்டுக் கடாக்களின் சிறுநீரகக் கொழுப்பினாலும் மூடப்பட்டிருக்கிறது.

ஏனெனில் யெகோவா போஸ்றா பட்டணத்தில் ஒரு பலியையும்,

ஏதோமில் ஒரு வதையையும் நியமித்திருக்கிறார்.

காளைக் கன்றுகளும், எண் 23:22சங் 68:30எரே 50:27உபா 33:17எரே 46:21எரே 50:11யோபு 39:9-10எண் 24:8

பெரும் எருதுகளுமாக காட்டெருதுகள் அவைகளுடன் விழும்.

அவர்களுடைய நாடு இரத்தத்தில் தோய்ந்திருக்கும்,

புழுதியும் கொழுப்பில் ஊறியிருக்கும்.

ஏனெனில் யெகோவா பழிவாங்கும் நாளொன்றை வைத்திருக்கிறார்; ஏசா 63:4ஏசா 61:2ஏசா 35:4எரே 46:10சங் 94:1உபா 32:35ஏசா 26:21ஏசா 49:26

சீயோனின் வழக்கில் நீதி வழங்குவதற்காக ஒரு வருடத்தை வைத்திருக்கிறார்.

ஏதோமின் நீரோடைகள் நிலக்கீலாக மாறும், உபா 29:23சங் 11:6ஆதி 19:28யோபு 18:15யூதா 1:7லூக் 17:29வெளி 19:20வெளி 21:8

நிலத்தின் புழுதி எரியும் கந்தகமாகவும்,

அதன் நிலம் எரியும் கீலாகவும் மாறும்.

அது இரவிலும் பகலிலும் தணிக்க முடியாதபடி இருக்கும்; வெளி 19:3ஏசா 13:20ஏசா 66:24மல்கி 1:3-4எசேக் 29:11ஏசா 1:31வெளி 14:10-11வெளி 18:18

அதன் புகை என்றென்றும் புகைந்துகொண்டே இருக்கும்.

தலைமுறை தலைமுறையாக அது பாழடைந்து கிடக்கும்,

மீண்டும் அதன் ஊடாக யாரும் போகமாட்டார்கள்.

பாலைவன ஆந்தையும் அலறும் ஆந்தையும் 2இராஜா 21:13புலம் 2:8செப்ப 2:14வெளி 18:22 சாமு 8:2ஏசா 14:23ஏசா 13:20-22ஏசா 24:10

அதைத் தங்கள் உடைமை ஆக்கிக்கொள்ளும்;

பெரிய ஆந்தையும், காகமும் தமது கூடுகளை அங்கு அமைக்கும்.

இறைவன் ஏதோமுக்கு மேலாக குழப்பத்தின் அளவுகோலையும்,

அழிவின் தூக்கு நூலையும் நீட்டிப் பிடிப்பார்.

உயர்குடி மக்களுக்கு அரசு எனச் சொல்லிக்கொள்ள அங்கு ஒன்றுமே இராது; ஏசா 3:6-81 கொரி 13:21 கொரி 8:42 கொரி 12:11பிரச 10:16-17ஏசா 41:11-12ஏசா 41:24எரே 27:20

இளவரசர்கள் அனைவரும் இல்லாமல் போவார்கள்.

அதனுடைய அரண்செய்யப்பட்ட பட்டணங்களின்மேல் முட்செடிகள் படரும்; எரே 10:22எரே 9:11மல்கி 1:3சங் 44:19ஓசி 9:6ஏசா 13:21-22ஏசா 32:13-14ஏசா 35:7

காஞ்சொறிகளும் கள்ளிச்செடிகளும் அதன் கோட்டைகளில் படரும்.

அது நரிகளுக்குத் தங்குமிடமும்

ஆந்தைகளுக்கு குடியிருப்புமாகும்.

பாலைவன பிராணிகளும், கழுதைப்புலிகளுடன் ஒன்றுசேரும்; ஏசா 13:21-22

காட்டாடுகளும் ஒன்றையொன்று பார்த்துக் கத்தும்.

இரவுப் பிராணிகளும் அங்கு இளைப்பாறி

தங்களுக்குத் தங்கும் இடங்களைத் தேடும்.

ஆந்தைகள் அங்கே கூடுகட்டி, உபா 14:13

முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து,

அவைகளைத் தமது சிறகுகளின் நிழலில் பாதுகாக்கும்;

வல்லூறுகளும் தத்தம் துணையுடன்

அங்கே வந்துசேரும்.

யெகோவாவின் புத்தகச்சுருளை தேடி வாசியுங்கள்: சங் 33:9யோசு 1:8மத் 5:18ஏசா 30:8சங் 33:6நீதி 23:12யோவா 10:35லூக் 21:33

இவற்றில் ஒன்றாவது தவறிப்போகாது,

ஒன்றாவது தனக்குத் துணையில்லாமல் இராது;

யெகோவாவின் வாயே இந்தக் கட்டளையைக் கொடுத்தது,

அவரின் ஆவியானவர் இவற்றை ஒன்றுசேர்ப்பார்.

அவற்றிற்குரிய பாகங்களை அவரே பங்கிடுகிறார்; ஏசா 34:10அப் 17:26ஏசா 13:20-22ஏசா 17:14எரே 13:25யோசு 18:8சங் 78:55அப் 13:19

அவருடைய கரமே அவற்றை அளவுகளின்படி பகிர்ந்து கொடுக்கின்றன.

அவை என்றென்றைக்கும் அதைத் தங்கள் சொந்தமாக்கி,

தலைமுறை தலைமுறையாக அங்கே குடியிருக்கும்.