சீயோனின் மகிமை
“எழும்பிப் பிரகாசி, ஏனெனில் உன் ஒளி வந்துவிட்டது, எபே 5:14எபே 5:8யோவா 8:12ஏசா 52:1-2ஏசா 60:19-20ஏசா 58:8யோவா 12:46மத் 5:16
யெகோவாவின் மகிமை உன்மேல் உதிக்கிறது.
இதோ, பூமியை இருள் மூடியிருக்கிறது, கொலோ 1:131 பேது 2:9அப் 17:30-312 கொரி 4:4-6அப் 26:18எபே 4:17-20ஆகா 2:7-9ரோம 1:21-32
காரிருள் மக்கள் கூட்டங்களைச் சூழ்ந்திருக்கிறது.
ஆனால் யெகோவா உன்மேல் உதிக்கிறார்,
அவரின் மகிமை உன்மேல் தோன்றுகிறது.
பிறநாடுகள் உன் வெளிச்சத்திற்கும், ஏசா 49:23அப் 13:47வெளி 21:24ஏசா 2:2-5மீகா 4:1-2சங் 117:1-2ஏசா 45:14சங் 68:29
அரசர்கள் உன்மேல் வரும் விடியற்காலையின் பிரகாசத்திற்கும் வருவார்கள்.
“உன் கண்களை உயர்த்தி சுற்றிலும் பார்; ஏசா 42:6ஏசா 49:18ஏசா 49:20-22கலா 3:28-29ஏசா 43:6அப் 13:44ஏசா 66:11-12மத் 8:11
யாவரும் ஒன்றுகூடி உன்னிடம் வருகிறார்கள்;
உன் மகன்கள் தொலைவிலிருந்து வருகிறார்கள்,
உன் மகள்கள் தோளில் சுமந்துகொண்டு வரப்படுகிறார்கள்.
அப்பொழுது நீ பார்த்து முகமலர்ச்சி அடைவாய்; ஏசா 61:6ஏசா 23:18அப் 10:45சங் 98:7-91 சாமு 2:1அப் 11:17ஓசி 1:10-11ஓசி 3:5
உன் இருதயம் மகிழ்ந்து பூரிப்படையும்;
கடல்களின் திரவியம் உனக்குக் கொண்டுவரப்படும்;
நாடுகளின் செல்வமும் உன்னிடம் சேரும்.
ஒட்டகக் கூட்டம் நாட்டை நிரப்பும், மத் 2:11சங் 72:10சங் 72:151 பேது 2:9ஆதி 25:3-4நியாயாதி 6:51 பேது 2:5வெளி 5:9-10
மீதியா, ஏப்பாத் நாடுகளின் இளம் ஒட்டகங்கள் உன்னிடம் வரும்.
சேபாவிலிருந்து வரும் அனைவரும்
தங்கமும் நறுமண தூபமும் கொண்டுவந்து,
யெகோவாவின் புகழை அறிவிக்க வருவார்கள்.
கேதாரின் மந்தைகள் எல்லாம் உன்னிடம் சேர்க்கப்படும், ஏசா 56:7ஆதி 25:13எபி 13:15-16ஆகா 2:7-9யோபு 42:8ரோம 12:1ரோம 15:16ஏசா 42:11
நெபாயோத்தின் கடாக்கள் உனக்குப் பணிபுரியும்;
அவை என் பலிபீடத்தில் பலிகளாக ஏற்றுக்கொள்ளப்படும்,
நான் என் மகிமையான ஆலயத்தை அலங்கரிப்பேன்.
“மேகங்களைப் போலவும், வெளி 7:9லூக் 13:29எபி 12:1ஏசா 49:21ஏசா 60:4ஆதி 8:8-11ஏசா 45:22
தம் கூட்டுக்குப் பறந்தோடும் புறாக்களைப்போலவும் பறக்கும் இவர்கள் யார்?
தீவுகள் எனக்குக் காத்திருக்கின்றன; ஏசா 55:5ஏசா 2:16ஏசா 11:11ஏசா 51:5கலா 4:26ஏசா 42:10ஏசா 42:4ஏசா 49:1
தர்ஷீசின் கப்பல்கள் முன்னணியில் வருகின்றன.
தொலைவிலுள்ள உங்கள் மகன்களை
அவர்களுடைய வெள்ளியோடும் தங்கத்தோடும் கொண்டுவருகின்றன.
இஸ்ரயேலின் பரிசுத்தரும் உன் இறைவனுமாகிய யெகோவாவை
கனம் பண்ணுவதற்காக இவை வருகின்றன.
ஏனெனில் அவர் உன்னைச் சிறப்பால் அலங்கரித்திருக்கிறார்.
“அந்நியர் உன் மதில்களை மீண்டும் கட்டியெழுப்புவார்கள், ஏசா 61:5ஏசா 49:23வெளி 21:26ஏசா 14:1-2ஏசா 60:3வெளி 21:24சகரி 6:15ஏசா 12:1
அவர்களுடைய அரசர்கள் உனக்குப் பணிசெய்வார்கள்.
என் கோபத்தினால் நான் உன்னை அடித்தபோதிலும்,
தயவுடன் நான் உனக்குக் கருணை காட்டுவேன்.
உங்கள் வாசல்கள் எப்பொழுதும் திறந்தே இருக்கும், வெளி 21:25-26ஏசா 60:5ஏசா 60:18ஏசா 62:10சங் 149:8நெகே 13:19
பகலோ இரவோ, அவை ஒருபோதும் மூடப்படுவதில்லை;
நாடுகளின் செல்வத்தை மனிதர் கொண்டுவருகையில்,
அவைகளோடு அரசர்களை வெற்றிப் பவனியுடன் நடத்தி வருவதற்காகவே
இவ்வாறு திறந்திருக்கும்.
உனக்குப் பணி செய்யாத நாடோ அல்லது அரசோ அழிந்துபோகும்; ஏசா 54:15சகரி 14:12-19தானி 2:44-45ஏசா 14:2ஏசா 41:11சங் 2:12தானி 2:35லூக் 19:27
அது முற்றிலும் பாழாகிவிடும்.
“எனது பரிசுத்த இடத்தை அலங்கரிப்பதற்கு ஏசா 35:21 நாளாக 28:2சங் 132:7சங் 96:6எஸ்றா 7:27ஓசி 14:6-7ஏசா 41:19-20ஏசா 55:13
லெபனோனின் மகிமையாகிய தேவதாரு,
சவுக்கு, புன்னை மரங்கள் ஒன்றுசேர்ந்து உன்னிடம் வந்துசேரும்;
நான் எனது பாதபடியை மகிமைப்படுத்துவேன்.
உன்னை ஒடுக்கியோரின் பிள்ளைகள் தலைகுனிந்தபடி உனக்குமுன் வருவார்கள்; வெளி 3:9ஏசா 49:23எபி 12:22ஏசா 45:14ஏசா 1:26ஏசா 14:1-2ஏசா 62:12வெளி 3:12
உன்னை இகழ்ந்த யாவரும் உன் பாதத்தண்டையில் தலைகுனிந்து நிற்பார்கள்.
அவர்கள் உன்னை யெகோவாவின் பட்டணம் என்றும்,
இஸ்ரயேலின் பரிசுத்தரின் சீயோன் என்றும் அழைப்பார்கள்.
“ஒருவரும் உன் வழியே நடவாமல் ஏசா 61:7எரே 30:17ஏசா 49:14-23ஏசா 35:10எரே 33:11ஏசா 4:2ஏசா 54:6-14ஏசா 6:12
நீ வெறுக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்தபோதும்,
எல்லாத் தலைமுறைக்கும் நான் உன்னை
நித்திய பெருமையாயும் மகிழ்ச்சியாயும் ஆக்குவேன்.
நீ நாடுகளின் பாலைக் குடித்து, ஏசா 49:23ஏசா 66:11-12ஏசா 66:14ஏசா 61:6ஏசா 43:3-4எசேக் 34:30ஏசா 59:20
அரச குடும்பத்தவர்களின் மார்பகங்களில் பாலைக் குடிப்பாய்.
அப்பொழுது நீ யெகோவாவாகிய நானே உன் இரட்சகர், உன் மீட்பர்,
யாக்கோபின் வல்லவர் என்பதை அறிந்துகொள்வாய்.
வெண்கலத்திற்குப் பதிலாக தங்கத்தையும், எபி 11:40ஏசா 30:26ஏசா 1:26சகரி 12:81 இராஜா 10:21-272 பேது 3:13ஏசா 32:1-2
இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும் நான் உன்னிடம் கொண்டுவருவேன்.
மரத்துக்குப் பதிலாக வெண்கலத்தையும்,
கற்களுக்குப் பதிலாக இரும்பையும் உன்னிடம் கொண்டுவருவேன்.
சமாதானத்தை உங்கள் ஆட்சித் தலைவனாகவும்
நீதியை உங்கள் ஆளுநனாகவும் நான் ஆக்குவேன்.
உன் நாட்டில் இனியொருபோதும் வன்முறைகளின் சத்தம் கேட்கப்படமாட்டாது; ஏசா 26:1ஏசா 11:9சகரி 9:8சங் 72:3-7ஏசா 2:4மீகா 4:3வெளி 19:1-6
உன் எல்லைகளுக்குள் அழிவும் பாழாக்குதலும் ஏற்படமாட்டாது.
ஆனால் நீ உன் மதில்களை இரட்சிப்பு என்றும்,
உன் வாசல்களைத் துதி என்றும் அழைப்பாய்.
இனிமேல் பகலில் சூரியன் உனக்கு வெளிச்சமாய் இருக்கமாட்டாது; வெளி 21:23வெளி 22:5சகரி 2:5சங் 36:9சங் 3:3சங் 62:7லூக் 2:32சங் 4:2
அல்லது சந்திரனின் வெளிச்சம் உன்மேல் பிரகாசிக்கமாட்டாது.
ஏனெனில் யெகோவாவே உன்னுடைய நித்திய ஒளியாக இருப்பார்;
உன் இறைவனே உன் மகிமையாயிருப்பார்.
உன் சூரியன் ஒருபோதும் மறைவதுமில்லை, வெளி 21:4சங் 84:11ஏசா 35:10சங் 27:1மல்கி 4:2ஏசா 30:26ஏசா 25:8வெளி 7:15-17
உன் சந்திரன் இனிமேல் தேய்வதுமில்லை.
யெகோவாவே உன் நித்திய ஒளியாய் இருப்பார்,
உன் துக்க நாட்களும் முடிவடையும்.
அப்பொழுது உன் மக்கள் யாவரும் நீதியானவர்களாய் இருந்து, மத் 15:13சங் 37:22சங் 37:11ஏசா 29:23ஏசா 61:3யோவா 15:2சங் 92:13எபே 2:10
நாட்டை என்றென்றைக்கும் உரிமையாக்கிக்கொள்வார்கள்;
அவர்களே எனது மகிமை வெளிப்படும்படியாக
என் கரங்களின் வேலையாகவும்
நான் நட்ட முளையாகவும் இருக்கிறார்கள்.
உங்களில் சிறியவர் ஆயிரம் பேர்களாவர், ஆப 2:3எபி 10:36லூக் 18:7மத் 13:31-322 பேது 3:8ஏசா 66:8ஏசா 5:19தானி 2:44
அற்பரும் வலிய நாடாவர்.
நானே யெகோவா;
அதன் காலத்தில் அதை நானே தீவிரமாகச் செய்வேன்.”