எரேமியா 48

Jeremiah 48

மோவாபைப் பற்றிய செய்தி

மோவாபைப் பற்றியது: எரே 48:22-23எண் 32:3எண் 32:37-38ஆமோ 2:1-2எசேக் 25:8-11ஏசா 15:1-9எரே 25:212 நாளாக 20:10

இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே:

“நேபோ நாட்டுக்கு ஐயோ கேடு! அது பாழாக்கப்படும்.

கீரியாத்தாயீம் அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டு கைப்பற்றப்படும்.

அதன் பலத்த அரண் அவமதிக்கப்பட்டு தகர்க்கப்படும்.

மோவாப் இனி ஒருபோதும் புகழப்படமாட்டாது; ஏசா 16:14எரே 31:36எண் 32:37எஸ்த 3:8-14ஏசா 15:1ஏசா 15:5ஏசா 16:8-9ஏசா 25:10

அதனுடைய அழிவுக்காக, எஸ்போனில் உள்ள மனிதர் சதித்திட்டம் போடுவார்கள்:

‘வாருங்கள் நாம் அந்த நாட்டிற்கு ஒரு முடிவை உண்டாக்குவோம்.’

மத்மேனே பட்டணமே, நீயும் அழிக்கப்படுவாய்;

வாள் உன்னைப் பின்தொடரும்.

ஒரொனாயீமிலிருந்து உண்டாகும் கதறுதலைக் கேளுங்கள். ஏசா 15:5எரே 48:34எரே 48:5ஏசா 15:2ஏசா 15:8ஏசா 16:7-11ஏசா 22:4எரே 4:20-21

அது அழிவினாலும், பேரழிவினாலும் உண்டாகும் கதறுதல்.

மோவாப் நொறுக்கப்படும். எஸ்த 8:11எண் 21:27-30சங் 137:9

அதிலுள்ள சிறுவர்கள் கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது.

லூகித்துக்கு ஏறிப்போகும் வழியில் ஏசா 15:5

மனங்கசந்து அழுதுகொண்டே போகிறார்கள்.

ஒரொனாயீமுக்கு இறங்கிப் போகும் வீதியில்

அழிவின் நிமித்தம் அழுகுரல் கேட்கப்படுகிறது.

தப்பி ஓடுங்கள்; உங்கள் உயிர் தப்ப ஓடுங்கள். எரே 17:6எரே 51:6யோபு 30:3-7ஆதி 19:17எபி 6:18லூக் 17:31-33லூக் 3:7மத் 24:16-18

வனாந்திரத்திலுள்ள புதரைப்போலாகுங்கள்.

மோவாபே நீ உன் சொந்தத் திறமையிலும், எண் 21:29எரே 49:3எரே 9:23சங் 52:71 இராஜா 11:331 தீமோ 6:17ஓசி 10:13ஏசா 46:1-2

செல்வத்திலும் நம்பிக்கை வைத்திருப்பதினால், நீயும் சிறைப்பிடிக்கப்படுவாய்.

உன் தெய்வமான கேமோஷ் அதன் பூசாரிகளுடனும்,

அலுவலர்களுடனும் நாடுகடத்தப்படும்.

ஒவ்வொரு பட்டணத்திற்கும் அழிக்கிறவன் வருவான். எரே 6:26எசேக் 25:9எரே 15:8எரே 25:9எரே 48:18எரே 48:20-25எரே 51:56யோசு 13:17

ஒரு பட்டணமும் தப்பிப்போகாது.

பள்ளத்தாக்குப் பாழாக்கப்படும்,

சமனான பூமியும் அழிக்கப்படும்.

ஏனெனில் யெகோவா இதைச் சொல்லியிருக்கிறார்.

மோவாபின்மேல் உப்பை தூவுங்கள். ஏசா 16:2எரே 48:28சங் 11:1எரே 46:19சங் 55:6வெளி 12:14செப்ப 2:9

அவள் முழுவதுமாக அழிக்கப்படுவாள்.

அதன் பட்டணங்கள் பாழாக்கப்படும்.

குடியிருப்பதற்கு யாருமின்றி வெறுமையாய் கைவிடப்படும்.

“யெகோவாவின் வேலையை மனமில்லாமல் செய்கிறவன்மேல் சாபம் உண்டாகட்டும். 1 இராஜா 20:421 சாமு 15:31 சாமு 15:9நியாயாதி 5:232இராஜா 13:19எண் 31:14-18எரே 50:251 சாமு 15:13-35

இரத்தம் சிந்தாமல் தனது வாளை வைத்திருக்கிறவன்மேல் சாபம் உண்டாகட்டும்.

“மோவாப் தன் வாலிப காலத்திலிருந்து ஆறுதலாய் இருக்கிறாள். செப்ப 1:12எரே 48:29சகரி 1:15எசேக் 16:49-50நாகூ 2:2ஏசா 16:6ஏசா 24:3சங் 123:4

ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு ஊற்றப்படாமல்,

மண்டி கலக்காமல் இருக்கும் திராட்சரசத்தைப்போல் இருக்கிறாள்.

அவள் நாடுகடத்தப்பட்டுப் போகவில்லை.

ஆகையால் அவளது சுவை அப்படியே இருந்தது.

அவளுடைய வாசனையும் மாறுபடவில்லை.

ஆனால், நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். நாகூ 2:2எசேக் 25:9-10ஏசா 30:14எரே 48:38ஏசா 16:2எரே 14:3எரே 19:10எரே 25:34

“அப்பொழுது ஜாடிகளிலிருந்து ஊற்றும் மனிதர்களை அனுப்புவேன்.

அவர்கள் அவளை வெளியே ஊற்றுவார்கள்.

அவளது ஜாடிகள் வெறுமையாக்கப்படும்.

அவளுடைய பாத்திரங்களும் உடைத்துப் போடப்படும்.

அப்பொழுது இஸ்ரயேல் பெத்தேலில் நம்பிக்கை வைத்து, ஏசா 45:16ஓசி 8:5-6நியாயாதி 11:24எரே 48:391 இராஜா 11:71 இராஜா 12:28-291 இராஜா 18:26-291 இராஜா 18:40

வெட்கப்பட்டதுபோல,

மோவாப் நாடும் கேமோஷ் தெய்வத்தைக் குறித்து வெட்கமடையும்.

“ ‘நாங்கள் போர்வீரர்; போரில் வலிமைமிக்க வீரர்கள்’ சங் 33:16ஏசா 10:13ஏசா 10:16பிரச 9:11எசேக் 30:6ஏசா 16:6ஏசா 36:4-5எரே 49:16

என்று நீங்கள் எப்படி கூறலாம்?

மோவாப் அழிக்கப்பட்டு, அவளுடைய பட்டணங்கள் தாக்கப்படும். எரே 46:18எரே 50:27எரே 51:57ஏசா 40:30-31மல்கி 1:14தானி 4:37ஏசா 34:2-8யாக் 5:4

அங்குள்ள திறமைமிக்க வாலிபர் கொலைசெய்யப்படுவார்கள்” என்று,

சேனைகளின் யெகோவா என்னும் பெயருடைய அரசர் அறிவிக்கிறார்.

“மோவாபின் வீழ்ச்சி மிக அருகிலுள்ளது. ஏசா 13:222 பேது 2:3உபா 32:35எசேக் 12:23எசேக் 12:28ஏசா 16:13-14எரே 1:12

அவளுடைய அழிவு விரைவாய் வரும்.

அவளைச்சுற்றி வசிப்பவர்களும், ஏசா 9:4எசேக் 19:11-14ஏசா 10:5ஏசா 14:4-5ஏசா 16:8எரே 48:31-33எரே 48:39எரே 9:17-20

அவளின் புகழை அறிந்தவர்களுமான நீங்கள் அவளுக்காக அழுது புலம்புங்கள்.

‘வலிமைமிக்க செங்கோல் எப்படி முறிந்தது,

மகிமையான கோலும் எப்படி முறிந்தது’ என்று சொல்லி அழுங்கள்.

“தீபோன் மகளின் குடிகளே! ஏசா 47:1எண் 21:30ஏசா 15:2எரே 48:22யோசு 13:17யாத் 17:3எசேக் 19:13ஆதி 21:16

நீங்கள் உங்கள் மேன்மையிலிருந்து கீழிறங்கி

வறண்ட நிலத்தில் உட்காருங்கள்.

ஏனெனில் மோவாபை அழிப்பவன்

உங்களுக்கெதிராய் வந்து உங்கள் அரணுள்ள

பட்டணங்களை அழித்துப் போடுவான்.

அரோயேரில் குடியிருப்பவர்களே! உபா 2:361 சாமு 4:161 சாமு 4:13-141 நாளாக 5:82 சாமு 1:3-42 சாமு 18:24-322 சாமு 24:5எண் 32:34

தெருவோரமாய் நின்று கவனித்துப் பாருங்கள்;

ஓடுகிற மனிதனிடமும்,

தப்பி ஓடுகிற பெண்ணிடமும், ‘நடந்தது என்ன?’ என்று கேளுங்கள்.

மோவாப் தகர்க்கப்பட்டபடியால், ஏசா 16:2உபா 2:36ஏசா 15:1-5ஏசா 15:8ஏசா 16:7-11நியாயாதி 11:18எரே 48:1-5யோசு 13:9

அது அவமதிக்கப்பட்டிருக்கிறது.

ஓலமிட்டு அழுங்கள்.

மோவாப் அழிக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.

சமனான பூமிக்கு நியாயத்தீர்ப்பு வந்திருக்கிறது. யோசு 13:18ஏசா 15:4எரே 48:8எண் 21:23எசேக் 25:9யோசு 21:36-37செப்ப 2:9

ஓலோன், யாத்சா, மேபாகாத் பட்டணங்களுக்கும்,

தீபோன், நேபோ, பெத்திப்லாத்தாயீம் பட்டணங்களுக்கும், எரே 48:18எண் 33:46எசேக் 6:14எரே 48:1எண் 32:34

கீரியாத்தாயீம், பெத்காமூல், பெத்மெயோன் பட்டணங்களுக்கும், யோசு 13:17எரே 48:1ஆதி 14:5யோசு 13:19எண் 32:38

கீரியோத், போஸ்றா, மற்றும் தூரத்திலும் சமீபத்திலும் உள்ள ஆமோ 2:2எரே 48:41உபா 4:43யோசு 21:36செப்ப 2:8-10

மோவாபின் பட்டணங்கள் எல்லாவற்றுக்கும் நியாயத்தீர்ப்பு வந்துள்ளது.

மோவாபின் பலம் எடுக்கப்பட்டது. சங் 75:10சங் 10:15யோபு 22:9சகரி 1:19-21தானி 7:8தானி 8:21தானி 8:7-9எசேக் 30:21-25

அவளுடைய புயம் முறிக்கப்பட்டது”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

“மோவாப் யெகோவாவை எதிர்த்தெழும்பினாள். ஏசா 19:14ஏசா 29:9எரே 48:42எரே 51:39தானி 5:23யாத் 5:2எரே 48:39எரே 51:7

ஆகையால் அவளை வெறிக்கப் பண்ணுங்கள்.

அவள் தன் வாந்தியிலேயே புரண்டு,

மற்றவர்களுக்கு அவள் ஒரு கேலிப்பொருளுமாகட்டும்.

மோவாபே! இஸ்ரயேல் உனது கேலிப்பொருளாக இருக்கவில்லையோ? எரே 2:26மீகா 7:8-10எசேக் 25:8புலம் 2:15-17செப்ப 2:8எசேக் 26:2-3எசேக் 35:15எசேக் 36:2

நீ அவளைப் பற்றிப் பேசும்போதெல்லாம்

இகழ்ச்சியுடன் உன் தலையை அசைக்கிறாயே;

அவள் என்ன கள்ளர்களோடுகூட பிடிக்கப்பட்டவளோ!

மோவாபின் குடிகளே! நியாயாதி 6:2சங் 55:6-7உன்னத 2:14ஏசா 2:19எரே 48:9எரே 49:161 சாமு 13:6ஒபதி 1:3-4

நீங்கள் பட்டணங்களைவிட்டு மலைகளிலுள்ள

பாறைகளின் மத்தியில் போய் குடியிருங்கள்.

குகை வாசலில் கூடுகட்டும் புறாவைப் போலிருங்கள்.

“மோவாபுடைய பெருமையைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம். ஏசா 16:6ஏசா 2:11-12சங் 138:6தானி 4:37யாக் 4:6யோபு 40:10-12லூக் 14:11நீதி 18:12

அவளுடைய ஆணவத்தையும்,

இறுமாப்பையும், பெருமையையும், அகங்காரத்தையும்,

இருதய அகந்தையையும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அவளுடைய திமிரை நான் அறிவேன். இது பயனற்றது” என்று யெகோவா அறிவிக்கிறார். எரே 50:36ஏசா 16:6ஏசா 37:28-29யோபு 9:12-13நீதி 21:30சங் 33:10

“அவள் அவளுடைய தற்புகழ் பேச்சினால் எதையுமே சாதிக்கப்போவதில்லை.

ஆகவே நான் மோவாபைக் குறித்துப் புலம்புவேன். 2இராஜா 3:25ஏசா 15:5எரே 48:36ஏசா 16:7-11

மோவாப் நாடு முழுவதற்காகவும் நான் கதறுவேன்.

கிர் ஹெரெஸ் மனிதருக்காகவும் ஏங்கி அழுவேன்.

சிப்மா நாட்டிலுள்ள திராட்சைக் கொடிகளே! ஏசா 16:8-9எண் 21:32யோசு 13:19எரே 40:10எரே 48:15எரே 48:18எரே 48:8யோசு 21:39

யாசேர் அழுவதைப்போல்

நான் உங்களுக்காக அழுவேன்.

உங்கள் கிளைகள் கடல்வரை பரவி யாசேர் வரையும் எட்டியுள்ளன.

உன்னுடைய பழுத்த பழங்கள் மீதும்,

திராட்சைப்பழ அறுப்பின் மீதும் அழிக்கிறவன் வந்துவிட்டான்.

மோவாப் நாட்டின் வயல்களிலிருந்தும், ஆகா 2:16ஏசா 5:10ஏசா 16:9-10ஏசா 24:7-12ஏசா 32:9-14ஏசா 7:23ஏசா 9:3எரே 25:9-10

பழத்தோட்டங்களிலிருந்தும்,

மகிழ்ச்சியும் களிப்பும் நீங்கிப்போயின.

ஆலைகளிலிருந்து திராட்சரசம் வழிந்தோடுவதையும், நான் நிறுத்திவிட்டேன்.

மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு அவைகளை மிதிப்பார் யாருமில்லை.

சத்தங்கள் அங்கு இருந்தாலும், அவை மகிழ்ச்சியின் சத்தங்கள் அல்ல.

“அவர்களுடைய அழுகையின் சத்தம் எஸ்போனிலிருந்து எலெயாலே வரைக்கும், ஏசா 15:4-6எண் 32:3உபா 34:3ஆதி 13:10எரே 48:2-3எரே 48:5எண் 32:36-37

யாகாஸ் வரைக்கும் கேட்கிறது. அச்சத்தம் சோவாரிலிருந்து ஒரொனாயீம் வரைக்கும்,

எக்லத் ஷெலிஷியாவரைக்கும் மேலெழும்புகிறது.

ஏனெனில் நிம்ரீம் நீரோடைகளும் வற்றிப்போயின.

மோவாபில் உயர்ந்த இடங்களில் பலிகளைச் செலுத்தி, ஏசா 15:2ஏசா 16:12எரே 11:13எரே 48:7எண் 22:40-41எண் 28:14எண் 28:28-30

தங்கள் தெய்வங்களுக்குத் தூபங்காட்டுகிறவர்களுக்கு

ஒரு முடிவை உண்டாக்குவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

“ஆகவே என் இருதயம் மோவாபிற்காக புல்லாங்குழலைப்போல் புலம்புகிறது. ஏசா 15:7ஏசா 16:11ஏசா 15:5பிரச 5:13-14ஏசா 63:15யாக் 5:2-3எரே 17:11எரே 4:19

கிர் ஹெரெஸ் மனிதருக்காக அது ஒரு புல்லாங்குழலைப்போல் புலம்புகிறது.

ஏனெனில் அவர்கள் சேமித்த செல்வம் போய்விட்டது.

தலைகளெல்லாம் மொட்டையடிக்கப்பட்டிருக்கின்றன. ஆதி 37:34ஏசா 15:2-3எரே 41:5எரே 47:5ஏசா 20:2எரே 16:61 இராஜா 18:281 இராஜா 21:27

தாடிகளெல்லாம் வெட்டப்பட்டிருக்கின்றன.

கைகளெல்லாம் குத்திக் கீறப்பட்டிருக்கின்றன.

இடுப்புகளெல்லாம் துக்கவுடையால் மூடப்பட்டிருக்கின்றன.

மோவாபிலுள்ள எல்லா வீட்டுக் கூரைகளின்மேலும், எரே 22:28ஏசா 22:1எரே 25:342 தீமோ 2:20-21ஓசி 8:8ஏசா 15:3ஏசா 30:14சங் 2:9

பொதுச் சதுக்கங்களிலும்

துக்கங்கொண்டாடுதலே அல்லாமல் வேறொன்றுமில்லை.

ஏனெனில் நான் மோவாபை ஒருவரும் விரும்பாத ஜாடியைப்போல்

உடைத்துப் போட்டேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

“மோவாப் எவ்வளவாய் சிதறடிக்கப்பட்டிருக்கிறாள்! எசேக் 26:16-18ஏசா 20:4-6எரே 48:17எரே 48:26-27புலம் 1:1புலம் 2:1புலம் 4:1வெளி 18:15-16

மக்கள் எவ்வளவாய் புலம்புகிறார்கள்!

மோவாப் எவ்வளவாய் வெட்கத்தினால் தலைகுனிந்து நிற்கிறாள்!

மோவாப் ஒரு கேலிப்பொருளானாள்;

அவள் தன்னைச் சுற்றியுள்ள யாவருக்கும் திகிலூட்டும் பொருளானாள்.”

யெகோவா கூறுவது இதுவே: ஏசா 8:8உபா 28:49எரே 49:22எசேக் 17:3ஓசி 8:1தானி 7:4ஆப 1:8எரே 4:13

“இதோ, நோக்கிப்பாருங்கள். ஒரு கழுகு,

தன் சிறகுகளை மோவாபின் மேலாக விரித்து அதைத் தாக்கும்படி கீழே வருகிறது.

கீரியோத் கைப்பற்றப்பட்டு ஏசா 13:8ஏசா 21:3எரே 30:6எரே 49:22எரே 6:24மீகா 4:9-101 தெச 5:3ஏசா 26:17-18

அதன் பலத்த அரண்களும் பிடிக்கப்படும்.

அந்நாளில் மோவாபின் போர் வீரர்களின் இருதயங்கள்

பிரசவிக்கிற ஒரு பெண்ணின் இருதயத்தைப் போலிருக்கும்.

மோவாப் யெகோவாவை எதிர்த்தபடியினால், எரே 48:2ஏசா 37:23ஏசா 7:8எரே 30:11எரே 48:26-302 தெச 2:4தானி 11:36எஸ்த 3:8-13

அவள் ஒரு நாடாக இராதபடி அழிக்கப்படுவாள்.

மோவாபின் மக்களே! ஏசா 24:17-18புலம் 3:47உபா 32:23-25சங் 11:6

பயங்கரமும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்காகக் காத்திருக்கின்றன”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

“பயங்கரத்துக்குத் தப்பி ஓடுகிறவன், 1 இராஜா 19:17எரே 11:23ஆமோ 5:19எரே 46:211 இராஜா 20:30ஆமோ 2:14-15ஆமோ 9:1-4ஓசி 9:7

படுகுழிக்குள் விழுவான்.

குழியிலிருந்து வெளியே ஏறிவருகிறவன்,

கண்ணியில் அகப்படுவான்.

ஏனெனில் மோவாபுக்குரிய தண்டனையின் வருடத்தை நான்

அதன்மீது கொண்டுவருவேன்” என்று

யெகோவா அறிவிக்கிறார்.

“தப்பியோடுகிறவர்கள் எஸ்போனின் நிழலில் எண் 24:17எண் 21:28ஆமோ 2:2மத் 21:42எண் 21:21எண் 21:26சகரி 10:4

செய்வதறியாது தவிக்கிறார்கள்.

ஏனெனில் எஸ்போனிலிருந்து நெருப்பும்,

சீகோனின் நடுவிலிருந்து ஒரு ஜுவாலையும் புறப்பட்டிருக்கிறது.

அது மோவாபின் நெற்றிகளையும்

பெருமையாய் பேசுகிறவர்களின் மண்டையோடுகளையும் எரிக்கிறது.

மோவாபே, உனக்கு ஐயோ கேடு! எண் 21:291 இராஜா 11:7நியாயாதி 11:24எரே 48:13எரே 48:72இராஜா 23:13

கேமோஷ் 1 தெய்வத்தின் மக்கள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்;

உன் மகன்கள் நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள்,

உன் மகள்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

“இருந்தும் பின்வரும் நாட்களில் எரே 49:39எரே 49:6தானி 10:14தானி 2:28உபா 31:29உபா 4:30எசேக் 16:53-55ஓசி 3:5

நான் மோவாபின் செல்வங்களைத் திரும்பவும் கொடுப்பேன்”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

மோவாபின் நியாயத்தீர்ப்பு இத்துடன் முடிகிறது.