ஏசாயா 16

Isaiah 16

நாட்டின் ஆளுநனுக்குச் 2இராஜா 3:4ஏசா 10:322இராஜா 14:72 சாமு 8:2எஸ்றா 7:17ஏசா 42:11மீகா 4:8

செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை,

நீங்கள் சேலா நாட்டிலிருந்து பாலைவனம் வழியாக

சீயோன் மகளின் மலைக்கு அனுப்புங்கள்.

கூட்டிலிருந்து கலைக்கப்பட்டு, நீதி 27:8நியாயாதி 11:18உபா 2:36உபா 3:12உபா 3:8ஏசா 13:14எரே 48:20யோசு 13:16

செட்டையடிக்கும் பறவைகளைப்போல்

மோவாபிய பெண்கள்,

அர்னோன் ஆற்றின் துறைகளில் இருக்கிறார்கள்.

“நீங்கள் ஆலோசனைபண்ணி, 1 இராஜா 18:4ஏசா 32:2தானி 4:27எசேக் 45:9-12எபி 13:2ஏசா 1:17ஏசா 25:4ஏசா 56:8

ஒரு தீர்மானம் எடுங்கள்.

நடுப்பகலில் உங்கள் நிழலை இரவு போலாக்குங்கள்.

தப்பியோடி வருபவருக்கு

மறைவிடம் கொடுங்கள்.

ஜனங்களைக் காட்டிக் கொடாதிருங்கள்.

மோவாபிலிருந்து துரத்திவிடப்பட்ட என் மக்கள் உங்களுடன் இருக்கட்டும். ஏசா 14:4ஏசா 51:13ஏசா 9:4மல்கி 4:3உபா 23:15-16உபா 24:14ஏசா 15:6ஏசா 25:10

அவர்களை அழிப்பவர்களிடமிருந்து தப்பும்படி அவர்களுக்குப் புகலிடமாயிருங்கள்.”

ஒடுக்குகிறவர்களுக்கு ஒரு முடிவுவரும்,

அழிவும் ஓய்ந்துவிடும்;

துன்புறுத்துபவன் நாட்டிலிருந்து இல்லாமல் போவான்.

அன்பில் ஒரு அரியணை நிலைநாட்டப்படும். தானி 7:14மீகா 4:7ஏசா 9:6-7தானி 7:27ஏசா 32:1-2லூக் 1:31-33சகரி 9:92 பேது 3:11-12

தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த

உண்மையுள்ள ஒருவர் அதில் அமர்ந்திருப்பார்.

அவர் நியாயத்தீர்ப்புச் செய்ய நீதியை நாடுவார்;

தாமதியாமல் நியாயம் செய்வார்.

மோவாபியரின் மேட்டிமையைக் குறித்து கேள்விப்பட்டோம். ஆமோ 2:1எரே 48:29-30ஒபதி 1:3-4எரே 48:26எரே 48:42செப்ப 2:8-10ஏசா 2:11ஏசா 28:15

அவர்கள் ஆணவம் பெரிதே!

அகந்தையும், பெருமையும், இறுமாப்பும் உடையவர்கள்;

அவர்களுடைய தற்புகழ்ச்சிகள் எல்லாம் வெறுமையானவையே.

ஆகவே மோவாபியர் புலம்புகிறார்கள், 2இராஜா 3:251 நாளாக 16:3எரே 48:20ஏசா 15:1-5ஏசா 16:11ஏசா 8:19

அவர்கள் மோவாபுக்காக ஒன்றுசேர்ந்து புலம்புகிறார்கள்.

கீர்ஹேரேஸேத்தின் திராட்சை அடைகளுக்காகத்

துக்கத்துடன் அழுது புலம்புகிறார்கள்.

எஸ்போன் வயல்களும் சிப்மாவின் ஏசா 15:4எண் 32:382 சாமு 1:21ஏசா 10:7ஏசா 16:9ஏசா 24:7எரே 27:6-7எரே 48:32

திராட்சைக் கொடிகளும் வாடுகின்றன.

நாடுகளின் ஆளுநர்கள் தெரிந்தெடுக்கப்பட்ட

திராட்சைக் கொடிகளை மிதித்துப் போட்டார்கள்.

இவை ஒருகாலத்தில் யாசேர்வரை நீண்டு

பாலைவனத்தை நோக்கிப் பரந்திருந்தன.

அவைகளின் துளிர்கள் வெளியே படர்ந்து

கடல்வரை சென்றிருந்தன.

சிப்மாவின் திராட்சைக் கொடிகளுக்காக யாசேர் அழுவதுபோல் எரே 40:12ஏசா 15:4-5எரே 40:10ஏசா 9:3நியாயாதி 9:27எரே 48:32-34

நானும் அழுகிறேன்.

எஸ்போனே, எலெயாலேயே,

நான் உன்னை என் கண்ணீரால் நனைக்கிறேன்!

உனது பழங்கள் விளைந்து முதிரும் காலத்திலும்,

உனது அறுவடையின் காலத்திலும் இருக்கும் மகிழ்ச்சியின் சத்தம் அடங்கிற்று.

பழத்தோட்டங்களிலிருந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்பட்டு விட்டன; எரே 48:33ஆமோ 5:11ஆமோ 5:17நியாயாதி 9:27ஆப 3:17-18ஏசா 24:7-9ஏசா 32:10யோபு 24:11

திராட்சைத் தோட்டங்களில் ஒருவரும் பாடுவதுமில்லை, சத்தமிடுவதுமில்லை;

ஆலைகளில் இரசத்துக்காக பழங்களை மிதிப்பவர்களுமில்லை,

ஏனெனில் நானே பழம் பிழிவோரின் பூரிப்பை ஓயப்பண்ணினேன்.

மோவாபுக்காக என் இருதயமும், ஏசா 15:5ஓசி 11:8ஏசா 63:15எரே 48:36பிலி 2:1எரே 31:20எரே 4:19

கிர் ஹெரெஸிற்காக என் உள்ளமும் யாழின் தொனியைப்போல் புலம்புகின்றன.

மோவாப் தனது மேடையிலுள்ள தெய்வங்களிடம் சென்று ஏசா 15:21 இராஜா 18:29எரே 48:35எரே 48:46எரே 48:7எண் 22:39எண் 23:14எண் 23:28

களைப்புற்றும்,

கோயிலுக்குப்போய் மன்றாடியும்

அவளுக்கு ஒரு பயனும் இல்லை.

மோவாபைப் பற்றி யெகோவா முன்பே சொல்லியிருந்த வார்த்தை இதுவே. ஏசா 44:8 இப்பொழுதோ யெகோவா சொல்கிறதாவது: “வேலைசெய்ய ஒப்பந்தம் செய்த கூலியாள் தன் நாட்களைக் கணக்கிடுவது போல, மூன்று வருடங்களுக்குள் மோவாபியரின் சிறப்பும், அங்குள்ள பெருந்தொகையான மக்களும் அவமதிக்கப்படுவார்கள். அதில் தப்பியிருப்போர் மிகச் சிலராயும் பெலவீனராயும் இருப்பார்கள்.” ஏசா 21:16ஏசா 23:9எரே 48:42எரே 48:46-47உபா 15:8எஸ்த 5:11ஆதி 31:1ஏசா 15:5