ஏசாயா 24

Isaiah 24

பூமியின் அழிவு

இதோ, யெகோவா பூமியை அழித்து ஏசா 2:19நாகூ 2:10ஏசா 24:20ஏசா 42:152இராஜா 21:13எசேக் 12:20எசேக் 35:14ஏசா 6:11-12

சீர்குலைக்கப்போகிறார்.

அதன் மேற்பரப்பைப் பாழாக்கி,

குடிகளைச் சிதறடிப்பார்.

மக்களைப்போலவே ஆசாரியனுக்கும், ஓசி 4:9எசேக் 7:12-13புலம் 5:12-142 நாளாக 36:14-172 நாளாக 36:20தானி 9:5-8உபா 23:19-20எபே 6:8-9

வேலைக்காரனைப் போலவே தலைவனுக்கும்,

வேலைக்காரியைப் போலவே தலைவிக்கும்,

வாங்குபவனைப் போலவே விற்பவனுக்கும்,

இரவல் வாங்குபவனைப் போலவே இரவல் கொடுப்பவனுக்கும்,

கடனாளியைப்போலவே கடன் கொடுப்பவனுக்குமாக

எல்லோருக்கும் ஒரேவிதமாகவே நடக்கும்.

பூமி முழுவதும் அழிக்கப்பட்டு ஏசா 24:1ஏசா 6:112 நாளாக 36:21உபா 29:23உபா 29:28எசேக் 36:4ஏசா 21:17ஏசா 22:25

முழுமையாகக் கொள்ளையடிக்கப்படும்.

யெகோவாவே இந்த வார்த்தையைப் பேசியிருக்கிறார்.

பூமி வறண்டு வாடுகிறது, ஓசி 4:3ஏசா 2:11-12ஏசா 3:26ஏசா 33:9ஏசா 28:1ஏசா 64:6எரே 12:4எரே 4:28

உலகம் நலிந்து வாடுகிறது;

பூமியில் உயர்த்தப்பட்டவர்கள் தளர்ந்து போகிறார்கள்.

பூமி அதன் மக்களால் கறைப்படுத்தப்பட்டிருக்கிறது; எபி 13:20ரோம 8:20-21தானி 7:25எபி 9:12 நாளாக 33:92இராஜா 17:7-232இராஜா 22:13-172இராஜா 23:26-27

அவர்கள் சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை.

அவர்கள் அதன் ஒழுங்குவிதிகளைச் சீர்குலைத்து,

நித்திய உடன்படிக்கையையும் மீறினார்கள்.

ஆகவே சாபம் பூமியைச் சூழ்ந்து பற்றிப் பிடித்திருக்கிறது. மல்கி 4:1மத் 7:14சகரி 5:3-4எசேக் 5:3லேவி 26:22மல்கி 4:6ரோம 9:272 பேது 3:10

பூமியின் மக்களே தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும்.

ஆதலால் பூமியின் குடிகள் எரிக்கப்பட்டுப் போனார்கள்.

மிகச் சிலரே மீந்திருக்கிறார்கள்.

புதுத் திராட்சை இரசம் வற்றுகிறது, திராட்சைக்கொடி தளர்கிறது; ஏசா 16:10ஏசா 16:8யோவே 1:10-12ஓசி 9:1-2ஏசா 32:9-13

மகிழ்ச்சியாயிருக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.

மேளத்தின் ஆனந்த ஒலி ஓய்ந்தது, ஓசி 2:11எசேக் 26:13எரே 7:34வெளி 18:22எரே 16:9எரே 25:10ஏசா 23:15-16ஏசா 5:12

களிகூர்ந்தவர்களின் சத்தமும் நின்றுவிட்டது;

யாழின் இன்னிசை அடங்கிற்று.

இனிமேல் அவர்கள் திராட்சை இரசத்தைப் பாட்டுடன் குடிப்பதில்லை, பிரச 9:7ஏசா 5:22ஆமோ 6:5-7ஆமோ 8:10ஆமோ 8:3எபே 5:18-19ஏசா 5:11-12ஏசா 5:20

மதுபானம் அதைக் குடிப்பவருக்குக் கசப்பாய் இருக்கும்.

அழிக்கப்பட்ட பட்டணம் பாழாய்க் கிடக்கிறது; வெளி 18:2வெளி 17:5-62இராஜா 25:42இராஜா 25:9-10ஆதி 11:9ஏசா 23:1ஏசா 24:12ஏசா 25:2

வீடுகளின் நுழைவாசல்கள் ஒவ்வொன்றும் அடைபட்டுக் கிடக்கும்.

அவர்கள் வீதிகளில் திராட்சை இரசத்திற்காக அழுகிறார்கள்; ஓசி 7:14ஆமோ 5:16-20ஏசா 16:10ஏசா 24:7-9ஏசா 32:13ஏசா 8:22ஏசா 9:19எரே 48:33

இன்பமெல்லாம் துன்பமாக மாறுகின்றன;

சந்தோஷம் அனைத்தும் பூமியினின்று அகற்றப்படுகின்றன.

பட்டணம் பாழாக விடப்பட்டிருக்கிறது, ஏசா 32:14எரே 9:11புலம் 1:1புலம் 1:4புலம் 2:9புலம் 5:18மீகா 1:12மீகா 1:9

அதன் வாசல் கதவுகள் துண்டுகளாக நொறுக்கப்பட்டிருக்கின்றன.

அப்பொழுது ஒலிவமரம் உலுக்கப்பட்டு, ஏசா 1:9எசேக் 11:16-20எசேக் 14:22-23எசேக் 6:8-11எசேக் 7:16எசேக் 9:4-6ஏசா 10:20-22ஏசா 17:5-6

பழம் பறித்தபின் சில பழங்கள் மீந்திருப்பது போலவும்,

திராட்சை அறுவடையின்பின் கிளைகளில்

சில பழங்கள் மீந்திருப்பது போலுமே

பூமியின்மேலும், நாடுகளின் இடையேயும்

மீந்திருப்போர் மட்டுமே விடப்பட்டிருப்பர்.

அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்தி, மகிழ்ச்சியுடன் சத்தமிடுகிறார்கள்; ஏசா 12:1-6ஏசா 25:1ஏசா 26:1ஏசா 27:2ஏசா 35:10ஏசா 35:2ஏசா 40:9ஏசா 44:23

அவர்கள் மேற்கிலிருந்து யெகோவாவின் மாட்சிமையைப் பாராட்டுகிறார்கள்.

ஆகவே கிழக்கிலே யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; மல்கி 1:11ஏசா 42:10ஏசா 42:4ஏசா 49:1ஏசா 51:5ஏசா 60:91 பேது 1:71 பேது 3:15

கடலின் தீவுகளில் இஸ்ரயேலின்

இறைவனாகிய யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து உயர்த்துங்கள்.

“நீதியுள்ளவருக்கே மகிமை” ஏசா 21:2ஏசா 33:1எரே 3:20எரே 5:11அப் 13:47யாத் 15:11ஆப 1:3ஓசி 5:7

என்று பாடுவதை பூமியின் கடைசிகளிலிருந்து நாம் கேட்கிறோம்.

ஆனால் நானோ, “நான் அழிகிறேன், நான் அழிகிறேன்

ஐயோ எனக்குக் கேடு!

துரோகிகள் துரோகம் பண்ணுகிறார்கள்!

துரோகிகள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்” என்றேன்.

பூமியின் குடிகளே, எரே 48:43-441 இராஜா 19:17ஆமோ 5:19எசேக் 14:21எரே 8:3லேவி 26:21-22

பயங்கரமும், படுகுழியும், கண்ணியுமே உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

பயங்கரத்தின் சத்தம் கேட்டு ஓடுபவன் ஆதி 7:11சங் 18:7ஆமோ 5:19யோபு 20:24யோசு 10:10-11சங் 18:15சங் 46:2-31 இராஜா 20:29-30

படுகுழிக்குள் விழுவான்.

குழியிலிருந்து வெளியேறுபவன்

கண்ணியில் அகப்படுவான்.

வானத்தின் மதகுகள் திறக்கப்பட்டிருக்கின்றன,

பூமியின் அஸ்திபாரங்கள் அசைகின்றன.

பூமி உடைந்து போயிருக்கிறது, ஏசா 34:4-10உபா 11:6ஏசா 24:1-5எரே 4:23-28நாகூ 1:5வெளி 20:11ஆப 3:6மத் 24:3

பூமி பிளக்கப்பட்டுப் போயிருக்கிறது,

பூமி அதிர்ந்து நடுங்குகிறது.

பூமி போதை கொண்டவன்போல் தள்ளாடுகிறது, ஏசா 19:14தானி 11:19ஏசா 29:9ஆமோ 8:14ஓசி 4:1-5வெளி 18:21புலம் 1:14சகரி 5:5-8

அது காற்றில் அடிபடும் கூடாரத்தைப்போல் அசைகிறது;

மீறுதலின் பாவம் அதன்மேல் அவ்வளவாய் இருப்பதால்,

ஒருபோதும் திரும்ப எழும்பாது விழுகிறது.

அந்த நாளிலே, மேலே வானத்தில் இருக்கும் வல்லமைகளையும், சங் 76:12சகரி 14:12-19ஏசா 34:2-17ஏசா 10:12சங் 149:6-9எசேக் 38:1-23ஏசா 10:25-27ஏசா 14:1-2

கீழே பூமியில் இருக்கும்

அரசர்களையும் யெகோவா தண்டிப்பார்.

இருண்ட அறைக்குள் கட்டப்பட்டுள்ள கைதிகளைப்போல், சகரி 9:11ஏசா 42:22எரே 38:6-13எசேக் 38:8ஏசா 10:4ஏசா 2:19ஏசா 24:17யோசு 10:16-17

அவர்கள் ஒன்றுசேர்க்கப்படுவார்கள்.

அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு

அநேக நாட்களுக்குப்பின் தண்டிக்கப்படுவார்கள்.

சந்திரன் நாணமடையும், ஏசா 60:19ஏசா 13:10வெளி 21:23வெளி 22:5எபி 12:22ஏசா 12:6ஏசா 30:26மீகா 4:7

சூரியன் வெட்கமடையும்;

ஏனெனில், சேனைகளின் யெகோவா

சீயோன் மலையிலும் எருசலேமிலும்

அதன் முதியோர் முன்னிலையில் மகிமையோடு ஆளுகை செய்வார்.