எரேமியா 4

Jeremiah 4

இஸ்ரயேலே, “நீ திரும்பிவர யோவே 2:12எரே 3:22எசேக் 43:9ஆதி 35:2எரே 25:5எரே 3:1எரே 3:121 சாமு 7:3

விரும்பினால் என்னிடம் திரும்பி வா” என்று யெகோவா அறிவிக்கிறார்.

“நீ என் பார்வையிலிருந்து உன் அருவருப்பான விக்கிரகங்களை அகற்றி,

இனி ஒருபோதும் வழிவிலகாதிருந்து,

உண்மையும், நீதியும், நேர்மையுமான வழியில் நடந்து ஏசா 65:16ஆதி 22:18எரே 9:241 கொரி 1:312 கொரி 10:17உபா 10:20கலா 3:8ஏசா 45:25

‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’

என்று நீ ஆணையிடுவாயானால், எல்லா நாட்டினரும் அவரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

அவரில் அவர்கள் மகிழ்ச்சிகொள்வார்கள்” என்கிறார்.

யூதாவின் மனிதருக்கும், எருசலேமின் மனிதருக்கும் யெகோவா கூறுவது இதுவே: ஓசி 10:12லூக் 8:14லூக் 8:7கலா 6:7-8மத் 13:7மாற் 4:18-19மத் 13:22மாற் 4:7

“உழப்படாத உங்கள் நிலத்தைப் பண்படுத்துங்கள்.

முட்களுக்குள்ளே விதைக்காதிருங்கள்.

யூதாவின் மனிதரே, எருசலேமின் மக்களே, உபா 10:16கொலோ 2:11உபா 30:6ரோம 2:28-29எரே 9:26எரே 21:12ஆமோ 5:6எசேக் 20:33

யெகோவாவுக்கென்று உங்களை விருத்தசேதனம் 1 பண்ணுங்கள்,

உங்கள் இருதயங்களை விருத்தசேதனம் பண்ணுங்கள்.

இல்லையெனில் நீங்கள் செய்திருக்கிற தீமையினால்,

என்னுடைய கோபம் வெளிப்பட்டு,

அணைப்பாரில்லாத நெருப்பைப்போல் எரியும்.

வடக்கிலிருந்து வரும் பேரழிவு

“யூதாவில் அறிவித்து, எருசலேமில் பிரசித்தப்படுத்திச் சொல்லுங்கள்: எரே 8:14எரே 6:1யோசு 10:20ஓசி 8:1ஆமோ 3:6ஆமோ 3:8எசேக் 33:2-6எரே 11:2

‘நாடு முழுவதும் எக்காளம் ஊதுங்கள்!’

சத்தமிட்டு:

‘ஒன்றுகூடுங்கள்!

பாதுகாப்பான பட்டணங்களுக்கு ஓடுவோம்!’ என்று சொல்லுங்கள்.

சீயோனுக்குப் போவதற்குக் கொடியேற்றுங்கள்! எரே 1:13-15எரே 50:2எரே 51:27எரே 4:21எரே 51:12எரே 6:1எரே 6:22ஏசா 62:10

பாதுகாப்புக்காக தாமதியாது ஓடுங்கள்!

ஏனென்றால் நான் வடக்கிலிருந்து பேராபத்தையும்,

மிகப்பெரிய அழிவையும் கொண்டுவருகிறேன்.”

ஒரு சிங்கம் தன் குகையிலிருந்து வெளியே வந்திருக்கிறது. எசேக் 26:7-10ஏசா 1:7ஏசா 6:11எரே 2:15எரே 5:6தானி 7:4எரே 25:9எரே 50:17

நாடுகளை அழிக்கிறவன் புறப்பட்டு விட்டான்.

உன்னுடைய நாட்டைப் பாழாக்குவதற்காக,

தனது இருப்பிடத்தைவிட்டுப் புறப்பட்டு விட்டான்.

உன்னுடைய பட்டணங்கள்

குடியிருப்பவர்கள் இன்றி பாழாய்க்கிடக்கும்.

எனவே துக்கவுடை உடுத்துங்கள். ஏசா 22:12எரே 6:26ஏசா 10:4ஏசா 32:11ஏசா 5:25ஆமோ 8:10எசேக் 21:12எசேக் 30:2

அழுது புலம்புங்கள்.

ஏனெனில் யெகோவாவின் பயங்கர கோபம்

எங்களைவிட்டு இன்னும் திரும்பாமல் இருக்கிறதே.

அந்த நாளில், “அரசனும், அதிகாரிகளும் எசேக் 13:9-16ஏசா 22:3-5ஏசா 29:9-101 சாமு 25:37-382இராஜா 25:4அப் 13:41ஏசா 19:11-12ஏசா 19:16

மனம் சோர்ந்துபோவார்கள்.

ஆசாரியர்கள் திகிலடைவார்கள்.

இறைவாக்கினர் அதிர்ச்சியடைவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே! வாள் எங்கள் தொண்டையில் வைக்கப்பட்டிருக்கும்போது, ‘உங்களுக்குச் சமாதானம் இருக்கும்’ என்று கூறி, இந்த மக்களையும், எருசலேமையும் நீர் எவ்வளவாய் ஏமாற்றிவிட்டீர்” என்று கூறினேன். 2 தெச 2:9-12எரே 5:12ஏசா 37:35எரே 14:13-141 இராஜா 22:20-23யாத் 9:14எசேக் 11:13எசேக் 14:9-10

அந்த வேளையில் இந்த மக்களுக்கும், எருசலேமுக்கும் சொல்லப்படுவதாவது, “பாலைவனத்திலுள்ள வறண்ட மேடுகளிலிருந்து ஒரு எரிக்கும் காற்று என் மக்களை நோக்கி வீசுகிறது. ஆனால் அது தூற்றுவதற்கோ அல்லது சுத்தப்படுத்துவதற்கோ ஏற்றதல்ல. எசேக் 17:10ஓசி 13:15எசேக் 19:12ஓசி 13:3ஏசா 22:4ஏசா 27:8ஏசா 41:16ஏசா 64:6 அதையும்விட, மிகவும் பலமான ஒரு காற்றாக அது என்னிடமிருந்து வருகிறது. இப்பொழுது நான் அவர்களுக்கு விரோதமாக என் தீர்ப்பை அறிவிக்கிறேன்.” எரே 1:16எசேக் 5:8எசேக் 6:11-13எசேக் 7:8-9

பார்! அவன் மேகங்களைப்போல் முன்னேறி வருகிறான். ஏசா 19:1ஏசா 66:15ஆப 1:8ஏசா 5:28புலம் 4:19உபா 28:49ஏசா 13:5நாகூ 1:3

சுழல் காற்றைப்போன்ற இரதங்களுடனும்,

கழுகுகளைப் பார்க்கிலும் வேகமான குதிரைகளுடனும் அவன் வருகிறான்.

எங்களுக்கு ஐயோ கேடு! நாங்கள் அழிந்தோம்!

எருசலேமே, உன் இருதயத்திலிருந்து தீமையைக் கழுவி இரட்சிப்பை பெற்றுக்கொள். யாக் 4:8ஏசா 55:7அப் 8:22லூக் 11:39ரோம 1:211 கொரி 3:20ஏசா 1:16-19எரே 13:27

தீமையான சிந்தனைகளை எவ்வளவு காலத்திற்குத் தேக்கி வைப்பாய்?

தாண் பட்டணத்திலிருந்து ஒரு குரல் அறிவிக்கிறது. எரே 8:16நியாயாதி 18:29நியாயாதி 20:1எரே 6:1யோசு 17:15யோசு 20:7

எப்பிராயீமின் குன்றுகளிலிருந்து அழிவு வரும் என்று அது பிரசித்தப்படுத்துகிறது.

“நாடுகளுக்கு அதைச் சொல்லுங்கள். எசேக் 21:22எரே 5:15ஏசா 39:3உபா 28:49-52ஏசா 34:1எரே 16:6எரே 2:15எரே 31:10

எருசலேமுக்கு அதைப் பிரசித்தப்படுத்துங்கள்.

‘யூதாவின் பட்டணங்களுக்கு எதிராக போர் முழக்கத்தை எழுப்பிக்கொண்டு,

முற்றுகையிடும் இராணுவம் ஒன்று தூரமான ஒரு நாட்டிலிருந்து வருகிறது.

எருசலேம் எனக்கெதிராகக் கலகம் உண்டாக்கியபடியினால், எரே 5:232இராஜா 25:1-4தானி 9:7-19எசேக் 2:3-7ஏசா 1:20-23ஏசா 1:8ஏசா 30:9எரே 6:2-3

ஒரு வயலைக் காவல்காத்து நிற்பதுபோல அந்த இராணுவவீரர்

எருசலேமைச் சூழ்ந்துகொள்கிறார்கள்,’ ” என்று யெகோவா சொல்கிறார்.

“உன்னுடைய நடத்தையும் செயல்களுமே எரே 2:19சங் 107:17ஏசா 50:1எரே 2:17நீதி 1:31எரே 6:19எரே 26:19எரே 5:19

உன்மீது இவைகளைக் கொண்டுவந்திருக்கின்றன.

இதுதான் உன்னுடைய தண்டனை.

அது எவ்வளவு கசப்பானது!

அது இருதயத்தை எவ்வளவாய் குத்துகிறது!”

ஆ, நான் வேதனைப்படுகிறேன், நான் வேதனைப்படுகிறேன்! ஆப 3:16ஏசா 16:11ஏசா 22:4ஏசா 21:3எரே 9:1எரே 9:10தானி 7:15தானி 8:27

என் வலியில் துடிக்கிறேன்.

என் இருதயம் தாங்கமுடியாத துயரமடைகிறது,

என் இருதயம் எனக்குள் படபடக்கிறது,

என்னால் அமைதியாயிருக்க முடியாது.

ஏனெனில் நான் எக்காள சத்தத்தைக் கேட்டேன்;

போர் முழக்கத்தையும் கேட்டேன்.

பேரழிவின் மேல் பேரழிவு தொடர்கிறது; சங் 42:72 தெச 1:9எசேக் 7:25-26யோவே 1:15மத் 10:28யாத் 33:5எசேக் 14:21ஏசா 13:6

நாடு முழுவதுமே அழிந்து கிடக்கிறது.

நொடிப்பொழுதில் என் கூடாரங்கள் அழிந்தன.

கணப்பொழுதில் என் புகலிடம் அழிந்தது.

நான் எவ்வளவு காலத்திற்கு போர்க் கொடியைப் பார்த்துக்கொண்டும், 2 நாளாக 35:252 நாளாக 36:102 நாளாக 36:172 நாளாக 36:32 நாளாக 36:6-7எரே 4:5-6எரே 6:1எரே 4:19

போரின் எக்காள தொனியைக் கேட்டுக்கொண்டும் இருக்கவேண்டும்?

“என் மக்கள் மூடர்கள், 1 கொரி 14:20ரோம 16:19எரே 5:21ஓசி 4:6ரோம 3:11ரோம 1:22ஓசி 5:4யோவா 16:3

அவர்கள் என்னை அறியவில்லை.

அவர்கள் உணர்வற்ற பிள்ளைகள்;

அவர்களுக்கு விளங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லை.

அவர்கள் தீமை செய்வதில் திறமைசாலிகள்;

எப்படி நன்மை செய்வது என்று அவர்கள் அறியமாட்டார்கள்.”

நான் உலகத்தை உற்றுப் பார்த்தேன். மத் 24:29மாற் 13:24-25ஏசா 13:10யோவே 3:15-16ஆதி 1:2லூக் 21:25-26எசேக் 32:7-8ஆமோ 8:9

அது உருவமற்று வெறுமையாயிருந்தது.

வானங்களைப் பார்த்தேன்.

அவைகளின் வெளிச்சம் போய்விட்டது.

மலைகளை உற்றுப் பார்த்தேன். எசேக் 38:20ஏசா 5:25எரே 10:10நாகூ 1:5-61 இராஜா 19:11நியாயாதி 5:4-5மீகா 1:4சங் 114:4-7

அவை நடுங்கிக் கொண்டிருந்தன;

எல்லாக் குன்றுகளும் அசைந்துகொண்டிருந்தன.

நான் உற்றுப் பார்த்தேன். அங்கு மக்கள் இருக்கவில்லை. செப்ப 1:2-3எரே 12:4ஓசி 4:3எரே 9:10

ஆகாயத்துப் பறவைகளெல்லாம் பறந்துவிட்டன.

நான் உற்றுப் பார்த்தேன். செழிப்பான நாடு பாலைவனமாகிக் கிடந்தது. சங் 107:34உபா 29:23-28ஏசா 5:9-10ஏசா 7:20-25எரே 12:4எரே 14:2-6மீகா 3:12சங் 76:7

யெகோவாவுக்கு முன்பாக அவருடைய கடுங்கோபத்தினால்

அதன் பட்டணங்கள் யாவும் பாழாகிக்கிடந்தன.

யெகோவா சொல்வது இதுவே: எரே 46:28எரே 5:10எரே 5:18எரே 30:11எசேக் 11:13லேவி 26:44ரோம 11:1-7ரோம 9:27-29

“நாடு முழுவதும் பாழாய்ப்போகும்.

ஆயினும் நான் அதை முற்றிலும் அழிக்கமாட்டேன்.

ஆகையால் பூமி துக்கங்கொள்ளும். எண் 23:19ஓசி 4:3ஏசா 50:3எரே 12:4ஏசா 5:30யோவே 2:30-311 சாமு 15:29எபே 1:11

மேலேயுள்ள வானங்கள் இருளடையும்.

ஏனெனில் நான் சொல்லிவிட்டேன், நான் மனம் மாறமாட்டேன்;

நான் தீர்மானித்து விட்டேன், அதைச் செய்யாமல் விடவுமாட்டேன்.”

குதிரைவீரருடைய, வில் வீரருடைய சத்தம் கேட்டு ஏசா 2:19-21எரே 4:71 சாமு 13:62 நாளாக 33:112இராஜா 25:4-7ஆமோ 9:1ஏசா 30:17எரே 39:4-6

ஒவ்வொரு பட்டணத்திலுள்ளவர்களும் தப்பி ஓடுகிறார்கள்.

சிலர் காடுகளுக்குள் ஓடுகிறார்கள்;

சிலர் பாறைகளுக்கிடையே ஏறுகிறார்கள்.

எல்லாப் பட்டணங்களும் கைவிடப்பட்ட நிலையிலுள்ளன;

ஒருவரும் அங்கு வசிக்கவில்லை.

பாழாய்ப் போனவளே! நீ என்ன செய்கிறாய்? 2இராஜா 9:30புலம் 1:19புலம் 1:2எசேக் 16:36-41எசேக் 23:9-10ஏசா 10:3எசேக் 23:22-24எசேக் 28:13

இரத்தாம்பர உடையை அணிந்து

தங்க ஆபரணங்களால் உன்னை அலங்கரிப்பது ஏன்?

நீ உன் கண்களுக்கு மையிடுவது ஏன்?

நீ வீணாகவே அலங்கரிக்கிறாய்;

உன் காதலர் உன்னை வெறுத்து

உன் உயிரை வாங்கத் தேடுகிறார்கள்.

பிரசவ வேதனைப்படும் ஒரு பெண்ணின் அழுகுரலைப் போலவும், ஏசா 1:15புலம் 1:17எரே 13:211 கொரி 9:161 தெச 5:3எசேக் 23:46-47எசேக் 9:5-6ஆதி 27:46

தன் முதற்பிள்ளையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண்ணின் வேதனைக் குரலைப் போலவும்

ஒரு அழுகுரலைக் கேட்கிறேன்.

இளைத்து மூச்சு வாங்குகிற சீயோன் மகளின் அழுகுரலே அது.

அவள் தன் கைகளை நீட்டி, “ஐயோ நான் மயக்கமடைகிறேன்;

என் உயிர் கொலைகாரரிடம் கொடுக்கப்பட்டு விட்டது” என்கிறாள்.