சோப்பார்
அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னதாவது: யோபு 2:11யோபு 20:1
“இந்த வார்த்தைகளுக்கு யாராவது பதில்சொல்ல வேண்டாமா? யாக் 1:19யோபு 18:2நீதி 10:19அப் 17:18யோபு 16:3யோபு 8:2சங் 140:11
அதிகப் பேச்சினால் ஒருவன் நீதிமானாக முடியுமா?
உன் வீண்பேச்சு மனிதர்களின் வாயை அடக்குமோ? யோபு 17:22 தெச 3:14எரே 15:17யோபு 12:4யோபு 13:4யோபு 13:9யோபு 15:2-3யோபு 21:3
நீ கேலி செய்யும்போது யாரும் உன்னைக் கண்டிக்கமாட்டார்களோ?
நீ இறைவனிடம், ‘என்னுடைய நம்பிக்கைகள் மாசற்றவை; யோபு 10:7யோபு 6:101 பேது 3:15யோபு 14:4யோபு 34:5-6யோபு 35:2யோபு 6:29-30யோபு 7:20
நான் உமது பார்வையில் தூய்மையானவன்’ என்று சொல்கிறாய்.
இறைவன் உன்னோடு பேசினால் நலமாயிருக்கும், யோபு 38:1-2யோபு 23:3-7யோபு 31:35யோபு 33:6-18யோபு 40:1-5யோபு 40:8யோபு 42:7
அவர் உனக்கு விரோதமாக,
ஞானத்தின் மறைபொருட்களை உனக்கு வெளிப்படுத்தினால் நல்லது; எஸ்றா 9:13புலம் 3:22தானி 2:28எபே 3:5மத் 13:35யோபு 15:8தானி 2:47உபா 29:29
ஏனெனில் மெய்ஞானம் இருபக்கங்களைக் கொண்டது.
இறைவன் உனது பாவங்களில் சிலவற்றைக்கூட மறந்துவிட்டார் என்பதை அறிந்துகொள்.
“இறைவனின் மறைபொருட்களின் ஆழத்தை உன்னால் அறியமுடியுமோ? ரோம 11:33பிரச 3:11சங் 145:3ஏசா 40:28எபே 3:8யோபு 37:23யோபு 5:9சங் 77:19
எல்லாம் வல்லவரின் எல்லைகளை ஆராய உன்னால் முடியுமோ?
அவை வானங்களைவிட உயரமானவை, உன்னால் என்ன செய்யமுடியும்? யோபு 22:12ஏசா 55:9சங் 139:6-8ஆமோ 9:2யோபு 26:6யோபு 35:5சங் 148:132 நாளாக 6:18
அவை பாதாளத்தின் ஆழங்களிலும் ஆழமானவை, உன்னால் எதை அறியமுடியும்?
அவைகளின் அளவு பூமியைவிட நீளமானவை; சங் 139:9-10யோபு 28:24-25சங் 65:5-8
கடலைவிட அகலமானவை.
“அவரே வந்து உன்னைச் சிறையிலடைத்து, நீதிமன்றத்தைக் கூட்டினால், யோபு 12:14யோபு 9:12-13வெளி 3:7தானி 4:35ஏசா 41:27உபா 32:30யோபு 34:29யோபு 38:8
யாரால் அவரை எதிர்த்து நிற்கமுடியும்?
ஏமாற்றுகிற மனிதரை நிச்சயமாய் அவர் அறிவார்; எபி 4:13சங் 10:14வெளி 2:23யோவா 2:24-25பிரச 5:8ஆப 1:13ஓசி 7:2எரே 17:9-10
தீமையைக் காணும்போது அவர் கவனியாமல் இருப்பாரோ?
ஒரு காட்டுக் கழுதைக்குட்டி எப்படி மனிதனாகப் பிறக்க முடியாதோ, யாக் 2:20யோபு 39:5-8பிரச 3:18யாக் 3:13-17எரே 2:24சங் 73:221 கொரி 3:18-20எபே 2:3
அப்படியே பகுத்தறிவில்லாத ஒருவனும் ஞானமுள்ளவனாகமாட்டான்.
“அப்படியிருந்தும் உன் உள்ளத்தில் அவரிடம் சங் 143:6சங் 88:91 சாமு 7:3சங் 78:8யோபு 8:5-6லூக் 12:472 நாளாக 12:14யோபு 22:21-22
பயபக்தியாயிருந்து உன் கைகளை அவரிடத்திற்கு நீட்டி,
உன் கையிலுள்ள பாவத்தை விலக்கிவிட்டு, யோபு 22:23யாக் 4:8யோபு 4:7எசேக் 18:30-31ஏசா 1:15யோபு 22:5யோபு 34:32சங் 101:2
உன் வீட்டில் தீமை குடிகொள்ளாமல் தடைசெய்தால்,
நீ உன் முகத்தை வெட்கமின்றி உயர்த்தி, யோபு 22:261 யோவா 2:281 யோவா 3:19-221 தீமோ 2:82 கொரி 1:12ஆதி 4:5-6யோபு 10:15நீதி 14:26
பயமின்றி உறுதியாய் நிற்பாய்.
நீ உன் தொல்லையை மறந்துவிடுவாய், ஏசா 65:16பிரச 5:20ஏசா 54:4ஏசா 54:9யோவா 16:21ஆதி 41:51ஏசா 12:1-2வெளி 7:14-17
கடந்துபோன தண்ணீரைப்போல அது உன் ஞாபகத்தில் இருக்கும்.
அப்பொழுது வாழ்க்கை நண்பகலைவிட வெளிச்சமாயிருக்கும், ஏசா 58:8-10சங் 37:6நீதி 4:18சகரி 14:6-7ஓசி 6:3மீகா 7:8-9சங் 112:41 நாளாக 29:10
இருள் காலையைப்போல மாறும்.
நம்பிக்கை இருப்பதினால் உறுதிகொள்வீர், நீதி 3:24-26சங் 3:5சங் 43:5சங் 4:8லேவி 26:5-6ரோம 5:3-5யோபு 7:6நீதி 14:32
சுற்றிலும் பார்த்து, பாதுகாப்பாக இளைப்பாறுவாய்.
யாரும் உன்னைப் பயமுறுத்தாமல் நீ படுத்திருப்பாய்; ஏசா 60:14ஏசா 45:14லேவி 26:6சங் 45:12யோபு 42:8-9நீதி 19:6வெளி 3:9ஆதி 26:26-31
அநேகர் உன் தயவை தேடிவருவார்கள்.
ஆனால் கொடியவர்களின் கண்கள் மங்கிப்போகும், உபா 28:65யோபு 17:5யோபு 31:16ஆமோ 2:14ஆமோ 5:19-20ஆமோ 9:1-3எபி 2:3யோபு 18:14
அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டார்கள்;
அவர்களின் நம்பிக்கை மரணமே.”