“எல்லாம் வல்லவர் நியாயந்தீர்க்கும் காலத்தை மறைத்திருப்பது ஏன்? அப் 1:7பிரச 3:172 பேது 3:7-8பிரச 8:6-7மத் 24:38சங் 36:10சங் 73:16-191 தீமோ 4:1
அவரை அறிந்தவர்கள் அந்நாட்களுக்காக வீணாய்க் காத்திருப்பதும் ஏன்?
மனிதர் எல்லைக் கற்களைத் தள்ளிவைக்கிறார்கள்; உபா 19:14உபா 27:17நீதி 23:10நீதி 22:28ஓசி 5:10யோபு 1:15யோபு 1:17யோபு 5:5
அவர்கள் திருடிய மந்தைகளையே அவர்கள் மேய்க்கிறார்கள்.
அநாதைகளின் கழுதைகளை அவர்கள் துரத்திவிடுகிறார்கள்; உபா 24:61 சாமு 12:3உபா 24:10-13உபா 24:17-21யோபு 22:6-9யோபு 31:16-17
விதவைகளின் எருதை ஈட்டுப் பொருளாக வாங்குகிறார்கள்.
அவர்கள் தேவையுள்ளவர்களை வழியிலிருந்து தள்ளிவிடுகிறார்கள்; நீதி 28:28யோபு 24:14ஆமோ 2:7எசேக் 22:29ஆமோ 8:4-6எசேக் 18:12எசேக் 18:18ஏசா 10:2
அவர்களுடைய வன்முறையால் நாட்டிலுள்ள ஏழைகளை ஒழியப்பண்ணுகிறார்கள்.
காட்டுக் கழுதை பாலைவனத்தில் அலைவதுபோல், யோபு 39:5-7யோபு 5:5மீகா 2:1சங் 104:23அப் 23:12ஆதி 16:12ஆதி 27:40ஓசி 7:6
ஏழைகள் உணவு தேடி அலைகிறார்கள்;
அவர்கள் பிள்ளைகளுக்குப் பாழ்நிலம் உணவளிக்கின்றது.
வயல்வெளிகளில் அவர்கள் தங்கள் உணவைச் சேர்க்கிறார்கள்; மீகா 6:15உபா 28:33உபா 28:51நியாயாதி 6:3-6
கொடியவர்களின் திராட்சைத் தோட்டத்தில் விடப்பட்டதை பொறுக்குகிறார்கள்.
அவர்கள் போர்த்துக்கொள்ள உடையில்லாமல் இரவை கழிக்கிறார்கள்; யாத் 22:26-27யோபு 22:6உபா 24:11-13அப் 9:31ஆதி 31:40ஏசா 58:7யோபு 24:10யோபு 31:19-20
குளிரில் மூடிக்கொள்வதற்கு அவர்களிடம் ஒன்றுமே இல்லை.
மலைகளிலிருந்து வரும் மழையினால் அவர்கள் நனைகிறார்கள்; புலம் 4:5எபி 11:38உன்னத 5:2
தங்குவதற்கு இடமின்றி பாறைகளில் மறைகிறார்கள்.
தந்தையற்ற பிள்ளை தாயின் மார்பிலிருந்து பிடுங்கப்படுகிறது; நெகே 5:52இராஜா 4:1
ஏழையின் குழந்தை கடனுக்காகக் கைப்பற்றப்படுகிறது.
ஏழைகள் உடையின்றி நடந்து, ஆமோ 2:7-8ஆமோ 5:11-12உபா 24:19
அரிக்கட்டுகளைச் சுமந்து, பசியாகவே இருக்கிறார்கள்.
அவர்கள் தாகத்தால் செக்கு ஆட்டி, ஒலிவ எண்ணெயை எடுக்கிறார்கள்; யாக் 5:4எரே 22:13உபா 25:4
ஆலைகளில் திராட்சை இரசம் பிழிகிறார்கள்.
சாகிறவர்களின் அழுகை பட்டணத்திலிருந்து எழும்புகிறது, பிரச 4:1பிரச 8:11-12மல்கி 2:17மல்கி 3:15சங் 50:21ரோம 2:4-52 பேது 3:15யாத் 1:13-14
காயப்பட்டவர்கள் உதவிவேண்டி கதறி அழுகிறார்கள்,
ஆனாலும் இறைவன் அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை.
“கொடியவர்கள் ஒளியை எதிர்த்துக் கலகம் செய்கிறார்கள்; யோவா 3:19-20நீதி 4:19யூதா 1:62 தெச 2:10-121 யோவா 2:192 பேது 2:20-22யோவா 9:39-41யாக் 4:17
அவர்கள் ஒளியின் வழிகளை அறியாமலும்,
அதின் பாதைகளில் நிலைத்திராமலும் இருக்கிறார்கள்.
பொழுது விடிகிறபோது கொலையாளி எழுந்து, 1 தெச 5:2மீகா 2:1-2சங் 10:8-10வெளி 3:32 சாமு 11:14-17எபே 5:7-11லூக் 12:39
ஏழையையும் தேவை மிகுந்தவர்களையும் கொன்று,
இரவில் திருடனைப்போல் திரிகிறான்.
விபசாரம் செய்கிறவனின் கண்கள் மாலை மங்கும்வரை காத்திருக்கின்றன; சங் 10:11நீதி 7:9-10எசேக் 8:12எசேக் 9:9நீதி 6:32-35சங் 94:72 சாமு 11:4-132 சாமு 12:12
அவன், ‘என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள்’ என எண்ணி,
தன் முகத்தையும் மறைத்துக்கொள்கிறான்.
பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை யோவா 3:20எபே 5:11-13யாத் 22:2-3எசேக் 12:12எசேக் 12:5-7யோபு 24:13யோபு 38:12-13மத் 24:43
இரவில் கன்னமிடுகிறார்கள்;
வெளிச்சத்தில் எதையும் செய்ய அவர்கள் விரும்புவதில்லை.
அவர்கள் எல்லோருக்கும் கடும் இருளே காலை நேரமாயிருக்கிறது; யோபு 3:52 கொரி 5:10-11எரே 2:26சங் 73:18-19வெளி 6:16-17
இருளின் பயங்கரங்களுடன் அவர்கள் நட்பு வைக்கிறார்கள்.
“அவர்கள் தண்ணீரின் மேலுள்ள நுரையாயிருக்கிறார்கள்; உபா 28:16-20ஏசா 23:10யோபு 22:16யோபு 9:26மல்கி 2:2நீதி 3:33சங் 58:7சங் 69:22
நாட்டில் அவர்களின் பங்கு சபிக்கப்பட்டிருப்பதினால்,
அவர்களுடைய திராட்சைத் தோட்டத்திற்கு ஒருவரும் போவதில்லை.
வெப்பமும் வறட்சியும் உருகிய உறைபனியை பறித்துக்கொள்வதுபோல, சங் 49:14யோபு 21:13லூக் 16:22நீதி 14:32பிரச 9:4-6லூக் 12:20சங் 68:2யோபு 21:23
பாதாளமும் பாவிகளை பறித்துக்கொள்ளும்.
அவர்களைப் பெற்றெடுத்த கர்ப்பம் அவர்களை மறந்துவிடும், நீதி 10:7தானி 4:14யோபு 18:16-17பிரச 8:10ஏசா 26:14யோபு 14:7-10யோபு 17:14யோபு 19:26
புழுக்கள் அவர்களை விருந்தாக உண்ணும்.
தீய மனிதர் இனி ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை,
மரத்தைப்போல் அவர்கள் முறிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் பிள்ளையில்லாத மலடியின் சொத்தைப் பட்சிக்கிறார்கள், 1 சாமு 1:6-7யோபு 22:9யோபு 29:13யோபு 24:3யோபு 31:16-18
விதவைக்கும் இரக்கம் காட்டுவதில்லை.
இறைவன் தன் வல்லமையினால் வலிமையானோரை வீழ்த்துகிறார்; தானி 6:4-9எஸ்த 3:8-10யோவா 19:12-16வெளி 16:13-14வெளி 17:2
அவர்கள் நிலைபெற்றிருந்தாலும், வாழ்வின் நிச்சயம் அவர்களுக்கு இல்லை.
இறைவன் அவர்களைப் பாதுகாப்புணர்வுடன் இருக்கவிட்ட போதிலும், நீதி 15:31 தெச 5:3வெளி 2:23ஆமோ 8:7ஆமோ 9:2பிரச 5:8பிரச 8:11ஆப 1:13
அவருடைய கண்களோ அவர்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றன.
சிறிது காலத்திற்கு உயர்த்தப்படுகிறார்கள், பின்பு இல்லாமல் போகிறார்கள். சங் 37:10யாக் 1:11யாக் 5:1-3சங் 37:35-36சங் 92:7ஏசா 17:5-6யோபு 14:21யோபு 20:5
அவர்கள் தாழ்த்தப்பட்டு, மற்றவர்களைப் போல சேர்க்கப்படுகிறார்கள்;
தானியக்கதிர்கள் வெட்டப்படுவதுபோல் வெட்டப்படுகிறார்கள்.
“இது இப்படியில்லாவிட்டால், நான் பொய்யன் என நிரூபித்து, யோபு 9:24யோபு 11:2-3யோபு 27:4யோபு 6:28யோபு 15:2
என் வார்த்தைகளை வீண் என்று யார் சொல்லமுடியும்?”