யோபு 36

Job 36

தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:

“சற்று என்னிடம் பொறுமையாயிரும், யோபு 21:32 கொரி 5:20யோபு 13:7-8எசேக் 2:7எபி 13:22எரே 15:19யோபு 33:31-33யோபு 33:6

இறைவன் சார்பாய் நான் சொல்ல வேண்டியவற்றை நான் உமக்குக் காண்பிப்பேன்.

நான் அதிக தூரத்திலிருந்து என் அறிவைப் பெறுகிறேன்; யாக் 3:17யாக் 1:17தானி 9:14தானி 9:7உபா 32:4யோபு 32:8யோபு 8:3சங் 11:7

என்னைப் படைத்தவருக்கே நீதி உரியது என்றும் நிரூபிப்பேன்.

என் வார்த்தைகள் பொய்யானவையல்ல என்று உறுதியாய்க் கூறுகிறேன்; யோபு 37:16நீதி 8:7-81 கொரி 14:202 தீமோ 3:16-17சங் 49:32 கொரி 2:17அப் 24:22கொலோ 4:12

பூரண அறிவுள்ள நான் உம்மோடு பேசுகிறேன்.

“இறைவன் வல்லமையுள்ளவர், ஆகிலும் அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; சங் 22:24சங் 138:6எரே 10:12யோபு 37:23சங் 147:5எரே 32:19யோபு 12:13-16யோபு 26:12-14

வல்லமையுள்ள அவர் தமது நோக்கத்தில் உறுதியுள்ளவர்.

அவர் கொடியவர்களை உயிர்வாழ விடுவதில்லை; 2 பேது 2:9சங் 140:12சங் 72:12-14யாத் 22:22-24யோபு 21:7-9யோபு 5:15சங் 72:4ஏசா 11:4

துன்பப்படுகிறவர்களுக்கோ அவர்களுடைய உரிமைகளை வழங்குகிறார்.

அவர் நேர்மையானவர்கள் மேலிருந்து தன் கண்களை அகற்றுவதில்லை; சங் 34:15சங் 33:181 சாமு 2:8சங் 113:7-82 தெச 3:31 பேது 3:12எஸ்த 10:3யோபு 42:12

அவர் அவர்களை அரசர்களோடு அரியணையில் அமர்த்தி,

அவர்களை என்றைக்கும் மேன்மைப்படுத்துகிறார்.

ஆனால் மனிதர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, நீதி 5:22சங் 107:10யோபு 13:27யோபு 19:6யோபு 33:18-19புலம் 3:9சங் 116:3சங் 18:5

வேதனையின் கயிற்றினால் இறுக்கப்பட்டிருக்கும்போது,

அவர்கள் செய்தவற்றை இறைவன் அவர்களுக்குக் கூறுவார். 1 கொரி 11:32யோபு 15:25சங் 119:711 தீமோ 1:152 நாளாக 33:11-13உபா 4:21-22எசேக் 18:28-31ஏசா 59:12

அதாவது அவர்கள் அகந்தையாய் பாவம் செய்ததை அவர் சொல்வார்.

அவர் அவர்கள் சீர்திருந்துதலுக்குச் செவிகொடுத்து, ஏசா 55:6-7யோபு 36:15மத் 3:82இராஜா 17:13ஏசா 1:16-20ஏசா 48:17ஏசா 50:5யோபு 33:16-23

தங்கள் தீமையிலிருந்து மனந்திரும்ப கட்டளையிடுகிறார்.

அவர்கள் கீழ்ப்படிந்து அவருக்குப் பணிசெய்தால், எரே 7:23ஏசா 1:19எரே 26:13உபா 4:30எபி 11:8யாக் 5:5யோபு 22:23யோபு 22:21

அவர்கள் தங்கள் மீதியான நாட்களைச் செல்வத்திலும்,

மீதியான வருஷங்களை மனநிறைவிலும் கழிப்பார்கள்.

அடங்கி அவருக்குப் பணிசெய்யாவிட்டால், யோபு 4:21ஏசா 3:11ரோம 2:8-9உபா 18:15-22உபா 29:15-20ஏசா 1:20யோவா 8:21-24யோபு 15:22

வாளினால் அழிந்து,

அறிவில்லாமலே சாவார்கள்.

“உள்ளத்தில் இறைவனற்றவர்கள் கோபத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்; ரோம 2:5யோபு 27:8-10யோபு 36:82 நாளாக 28:132 நாளாக 28:22யோபு 15:4யோபு 35:9-10மத் 22:12-13

அவர் அவர்களுக்கு விலங்கிடும்போதும் அவர்கள் உதவிக்காக அழுவதில்லை.

அவர்கள் கோவில்களிலிருக்கும் ஆண் விபசாரக்காரர் மத்தியில் உபா 23:17யோபு 15:32யோபு 22:16சங் 55:23ஆதி 19:24-25ஆதி 19:5ஆதி 38:7-10யோபு 21:23-25

தங்கள் இளமையிலேயே சாவார்கள்.

ஆனாலும் துன்பப்படுகிறவர்களை அவர் துன்பத்திலிருந்து விடுவித்து, யோபு 36:102 நாளாக 12:8

அவர்களுடைய வேதனையில் அவர் அவர்களோடு பேசுகிறார்.

“யோபுவே, இறைவன் உன்னைக் கட்டுப்பாடற்ற விசாலமான இடத்திற்கு கொண்டுவரவும், சங் 23:5சங் 118:5சங் 18:19சங் 31:8சங் 63:5ஏசா 25:6சங் 36:8சங் 40:1-3

சுவையான உணவுகள் நிறைந்த பந்தியில் அமர்த்தவும்,

வேதனையின் பிடியிலிருந்து உன்னை விடுவிக்கவும் முயற்சிக்கிறார்.

கொடியவர்கள்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறக் காத்திருக்கிறீர்; வெளி 18:4ரோம 1:32யோபு 16:5யோபு 22:11யோபு 34:36யோபு 34:8

நியாயத்தீர்ப்பும் நீதியுமே உம்மை ஆதரிக்கும்.

செல்வங்களினால் ஒருவரும் உம்மைக் கவராதபடி எச்சரிக்கையாயிரும்; எபே 5:6யோபு 33:24ரோம 1:18சங் 110:5சங் 49:7-8ரோம 2:51 தீமோ 2:6ஏசா 14:6

பெரிதான இலஞ்சம் உம்மை வழிவிலகிச் செல்ல இடங்கொடாதே.

உமது செல்வங்களும் வல்லமையான எல்லா முயற்சிகளும் நீதி 11:4நீதி 11:21ஏசா 2:20ஏசா 37:36யாக் 5:3யோபு 9:13நீதி 10:2சங் 33:16-17

நீர் துன்பத்தில் அகப்படாதபடி உம்மைத் தாங்குமோ?

மக்களைத் தங்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்வதற்காக 2இராஜா 19:35யாத் 12:29யோபு 34:20யோபு 34:251 தெச 5:2-3அப் 1:25தானி 5:30பிரச 11:3

நீர் இரவை வாஞ்சிக்காதிரும்.

தீமைசெய்யத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்; எபி 11:25சங் 66:181 பேது 3:17மத் 16:24அப் 5:40-41தானி 3:16-18தானி 6:10எசேக் 14:4

ஏனெனில், நீர் துன்பத்தைவிட தீமையை தெரிந்துகொண்டீர்.

“இறைவன் தமது வல்லமையில் உயர்த்தப்பட்டிருக்கிறார். 1 சாமு 2:7-8லூக் 1:52ரோம 13:1ஏசா 48:17எரே 27:5-8தானி 4:25தானி 4:32தானி 5:18

அவரைப்போல் போதிக்கிறவர் யார்?

இறைவனுக்கு அவருடைய வழியைக் குறித்துக் கொடுத்தது யார்? 1 கொரி 2:16ஏசா 40:13-14யோபு 8:3எபே 1:11யோபு 34:10யோபு 34:13-33ரோம 11:34ரோம 2:5

அல்லது ‘நீர் அக்கிரமம் செய்தீர்’ என்று சொல்லியது யார்?

மனிதர்கள் புகழ்ந்து பாடும் பாடல்களால் வெளி 15:3லூக் 1:46சங் 111:2-4சங் 145:10-12சங் 72:18தானி 4:3தானி 4:37உபா 4:19

அவருடைய செயலை மேன்மைப்படுத்த நினைவுகூரும்.

அவர் செய்வதை எல்லா மனிதரும் காண்கிறார்கள்;

அதைத் தூரத்திலிருந்து உற்றுப் பார்க்கிறார்கள்;

நமது விளங்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட இறைவன்! சங் 90:2சங் 145:3யோபு 11:7-91 கொரி 13:121 இராஜா 8:27யோபு 37:23யோபு 37:5யோபு 26:14

அவருடைய வருடங்களும் எண்ணிட முடியாதவை.

“அவர் நீர்த்துளிகளை மேலே இழுத்து, சங் 147:8யோபு 38:25-28யோபு 5:9சங் 148:8சங் 65:9-13ஆதி 2:5-6ஏசா 5:6எரே 14:22

அவற்றை ஆறுகளில் மழையாகப் பெய்யச் செய்கிறார்.

மேகங்கள் மழையைப் பொழிகின்றன, நீதி 3:20ஆதி 7:11-12யோபு 37:11-13

அது மனிதர்மேல் தாரையாய்ப் பொழிகிறது.

அவர் மேகங்களை எப்படி பரவுகிறார் என்றும், யோபு 37:16யோபு 37:2-51 இராஜா 18:44-45ஆப 3:10யோபு 26:14யோபு 38:37யோபு 38:9நாகூ 1:3

எப்படி முழங்குகிறார் என்றும் யாரால் விளங்கிக்கொள்ள முடியும்?

அவர் தமது மின்னலைத் தம்மைச் சுற்றிலும் சிதறப்பண்ணி, யாத் 14:22யாத் 14:28யாத் 15:4-5ஆதி 1:9யோபு 38:25யோபு 38:34-35யோபு 38:8-11சங் 104:5-9

கடலின் ஆழங்களை எப்படி மூடுகிறார் என்று பாரும்.

இவ்விதமாகவே அவர் மக்களை ஆளுகைசெய்து, சங் 136:25அப் 14:17யோபு 37:13சங் 104:13-15யோபு 38:26-27சங் 104:27-28சங் 65:9-131 சாமு 12:18

ஏராளமான உணவையும் கொடுக்கிறார்.

அவர் தம் கரங்களை மின்னலினால் நிரப்பி, யோபு 37:15சங் 135:7சங் 147:8-9சங் 148:8சங் 18:11அப் 27:20யாத் 10:21-23யோபு 26:9

குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும்படி அதற்குக் கட்டளையிடுகிறார்.

அவருடைய இடிமுழக்கம் வரப்போகும் புயலை அறிவிக்கிறது; 2 சாமு 22:14யோபு 36:29யோபு 37:21 இராஜா 18:41-45எரே 14:4-6யோவே 2:22யோவே 1:18

அதின் வருகையை மந்தைகள்கூடத் தெரிவிக்கும்.