இயேசுவை சிலுவையில் அறைவதற்கான தீர்ப்பு
பின்பு பிலாத்து இயேசுவைக் கொண்டுபோய் சவுக்கால் அடிக்கக் கட்டளையிட்டான். ஏசா 53:5ஏசா 50:6மத் 20:19லூக் 18:33லூக் 23:16லூக் 23:23மத் 23:34மத் 27:26-31 படைவீரர்கள் முட்களினால் ஒரு கிரீடத்தை செய்து, அதை அவர் தலையில் வைத்தார்கள். அவர்கள் அவருக்கு ஒரு கருஞ்சிவப்புநிற மேலுடையை உடுத்தி, மாற் 15:16-20ஏசா 53:3லூக் 23:11மத் 27:27-31சங் 22:6ஏசா 49:7யோவா 19:5 “யூதரின் அரசனே வாழ்க!” என்று சொல்லி அவருடைய முகத்தில் அறைந்தார்கள். மத் 27:29லூக் 1:28மத் 26:49யோவா 18:33யோவா 19:19-22யோவா 18:22
மீண்டும் ஒருமுறை பிலாத்து வெளியே வந்து யூதரிடம், “பாருங்கள், அவனுக்கு விரோதமாகக் குற்றம் சாட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீங்கள் அறியும்படி, நான் அவனை வெளியே உங்களிடம் கொண்டுவருகிறேன்” என்றான். யோவா 18:38யோவா 19:6லூக் 23:41 பேது 2:22லூக் 23:471 யோவா 3:51 பேது 1:191 பேது 3:18 இயேசு முட்களால் செய்யப்பட்ட கிரீடத்தைத் தரித்துக்கொண்டும், கருஞ்சிவப்புநிற மேலுடையை உடுத்திக்கொண்டும் வெளியே வந்தபோது, பிலாத்து அவர்களிடம், “இதோ அந்த மனிதன்!” என்றான். யோவா 19:2எபி 12:2ஏசா 7:14யோவா 1:29ஏசா 40:9ஏசா 43:1புலம் 1:12
தலைமை ஆசாரியர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் அவரைக் கண்டபோது, “சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். யோவா 18:31யோவா 19:4அப் 13:27-29அப் 2:23அப் 3:13-15அப் 7:52லூக் 23:4மத் 27:22
அப்பொழுது பிலாத்து அவர்களிடம், “இவனை நீங்களே கொண்டுபோய் சிலுவையில் அறையுங்கள். ஆனால் நானோ இவனுக்கெதிராய் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் ஒன்றையும் காணவில்லை” என்றான்.
அதற்கு யூதத்தலைவர்கள், “எங்களுக்கு ஒரு சட்டம் இருக்கிறது. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னை இறைவனின் மகன் என்று சொல்கிறான்” என்றார்கள். லேவி 24:16யோவா 5:18மத் 26:63-66ரோம 1:4மத் 27:42-43மாற் 14:61-64மாற் 15:39யோவா 10:30-33
பிலாத்து இதைக் கேட்டபோது, இன்னும் அதிகமாக பயந்தான். யோவா 19:13அப் 14:11-19 அவன் மீண்டும் அரண்மனைக்குள் போய் இயேசுவிடம், “நீ எங்கிருந்து வந்தவன்?” என்று கேட்டான். ஆனால் இயேசுவோ பதில் ஏதும் சொல்லவில்லை. யோவா 18:33அப் 8:32-33ஏசா 53:7நியாயாதி 13:6யோவா 8:14யோவா 9:29-30மத் 26:63மத் 27:12-14 அதற்கு பிலாத்து, “நீ என்னுடன் பேசமறுக்கிறாயோ? உன்னை விடுவிக்கவும், உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்று நீ அறியாதிருக்கிறாயோ?” என்றான். தானி 3:14-15தானி 5:19யோவா 18:39
அதற்கு இயேசு, “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, என்மேல் உமக்கு எந்த அதிகாரமும் இராது. ஆனால், என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிக பாவமுண்டு” என்றார். ரோம 13:1யோவா 3:27அப் 2:23தானி 4:17அப் 3:13யோவா 7:30தானி 4:25யாக் 1:17
அப்பொழுதிலிருந்தே, பிலாத்து இயேசுவை விடுதலை செய்வதற்கு முயன்றான். ஆனால் யூதர்களோ, “நீர் இந்த மனிதனை விடுதலை செய்தால், நீர் ரோமப் பேரரசன் சீசருக்கு நண்பனல்ல. தன்னை ஒரு அரசன் என்று சொல்கிறவன், ரோமப் பேரரசனுக்கு எதிராய் எழும்புகிறான்” என்று சத்தமிட்டார்கள். அப் 17:6-7யோவா 18:33-36லூக் 23:2-5மாற் 6:16-26அப் 24:24-27
பிலாத்து இதைக் கேட்டபோது, அவன் இயேசுவை வெளியே கொண்டுவந்து, தனது நீதிபதியின் இருக்கையில் உட்கார்ந்தான். அது கற்களால் செய்யப்பட்ட ஒரு தளமேடையில் இருந்தது. அந்த மேடை எபிரெய மொழியிலே கபத்தா என அழைக்கப்பட்டது. மத் 27:19சங் 82:5-7அப் 4:19ஆமோ 4:7பிரச 5:8ஏசா 51:12-13ஏசா 57:11யோவா 19:8 அன்று அது பஸ்கா என்ற பண்டிகை வாரத்தின் ஆயத்த நாளாயிருந்தது. நேரமோ பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது. மத் 27:62யோவா 19:5யோவா 19:42மாற் 15:25யோவா 19:19-22யோவா 19:3யோவா 19:31-32லூக் 23:54
பிலாத்து யூதர்களிடம், “இதோ உங்கள் அரசன்” என்றான்.
ஆனால் அவர்களோ, “இவனை அகற்றும்! இவனை அகற்றும்! இவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். லூக் 23:18அப் 21:36அப் 22:22ஆதி 49:10யோவா 19:6எசேக் 21:26-27யோவா 18:31
“உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைய வேண்டுமென்றா சொல்கிறீர்கள்?” என்று பிலாத்து கேட்டான்.
அதற்கு தலைமை ஆசாரியர்கள், “ரோமப் பேரரசன் சீசரைத் தவிர வேறு அரசன் எங்களுக்கு இல்லை” என்றார்கள்.
கடைசியாக, பிலாத்து இயேசுவை சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான். லூக் 23:24-25மத் 27:26-31மாற் 15:15-20
இயேசு சிலுவையில் அறையப்படுதல்
எனவே படைவீரர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். இயேசு தம்முடைய சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு, மண்டையோடு என்ற இடத்திற்குச் சென்றார். அந்த இடம் எபிரெய மொழியில், கொல்கொதா என அழைக்கப்பட்டது. லூக் 23:33லூக் 14:27லூக் 23:26அப் 7:58எபி 13:11-13மாற் 15:321 இராஜா 21:13லேவி 16:21-22 அங்கே அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அவருடனேகூட வேறு இருவரை, அவருடைய இரு பக்கங்களிலும் அறைந்தார்கள். இயேசுவோ அவர்களுக்கு நடுவில் அறையப்பட்டார். ஏசா 53:12கலா 3:13யோவா 18:32மத் 27:35-38மத் 27:44மாற் 15:24-27சங் 22:16எபி 12:2
பிலாத்து ஒரு அறிவிப்புப் பலகையைச் செய்து, அதைச் சிலுவையில் மாட்டினான். அதிலே, இப்படி எழுதப்பட்டிருந்தது: மத் 27:37லூக் 23:38மாற் 15:26யோவா 19:14அப் 26:9அப் 3:6யோவா 1:45-46யோவா 1:49
நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, யூதரின் அரசன்.
யூதரில் அநேகர் இந்த அறிவிப்பை வாசித்தார்கள். ஏனெனில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகே இருந்தது. அந்த அறிவிப்பு எபிரெய, லத்தீன், கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. அப் 21:37அப் 21:40அப் 22:2அப் 26:14யோவா 19:13யோவா 5:2வெளி 16:16எபி 13:12 யூதரின் தலைமை ஆசாரியர்கள் பிலாத்துவிடம் போய், “யூதரின் அரசன் என்று எழுதவேண்டாம். இவன் தன்னை யூதரின் அரசன் என்று சொல்லிக்கொண்டான் என்று எழுதும்” என்றார்கள். யோவா 19:14யோவா 19:19
அதற்கு பிலாத்து, “நான் எழுதியது எழுதியதே” என்றான். சங் 76:10எஸ்த 4:16ஆதி 43:14யோவா 19:12நீதி 8:29சங் 65:7
படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்த பின்பு, அவர்கள் அவருடைய உடைகளை எடுத்து, ஒவ்வொரு வீரனுக்கும் ஒவ்வொரு பங்காக, அதை நான்காகத் தங்களுக்குள்ளே பிரித்தெடுத்தார்கள். ஆனால் அவருடைய உள் உடை தைக்கப்படாமல் மேலிருந்து கீழ்வரை நெய்யப்பட்டதாயிருந்தது. லூக் 23:34மாற் 15:24மத் 27:35யாத் 39:22-23
எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “நாம் இதைக் கிழிக்கக் கூடாது. இது யாருக்குக் கிடைக்கும் என்று பார்ப்பதற்குச் சீட்டுப் போடுவோம்” என்றார்கள். சங் 22:18யோவா 19:36-37யோவா 19:28அப் 13:27யோவா 10:35யோவா 12:38-39ஏசா 10:7
“அவர்கள் என் உடைகளைத் தங்களுக்குள் பிரித்தெடுத்துக் கொண்டார்கள்,
எனது உடைக்காக சீட்டுப்போட்டார்கள்.” 1
என்ற வேதவசனம் நிறைவேறும்படி இது நடந்தது. இதையே அந்த படைவீரர்கள் செய்தார்கள்.
இயேசுவின் சிலுவை அருகே அவருடைய தாயும், தாயின் சகோதரியும், கிலேயோப்பாவின் மனைவி மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றார்கள். லூக் 23:49மத் 27:55-56யோவா 20:1மாற் 15:40-41யோவா 20:11-18லூக் 2:35லூக் 24:18லூக் 8:2 தமது தாயும், தான் நேசித்த சீடனும் அருகே நிற்பதை இயேசு கண்டபோது, அங்கே அவர் தமது தாயிடம், “அம்மா, இதோ, உன் மகன்” என்றார். யோவா 21:24யோவா 13:23யோவா 2:4யோவா 20:2யோவா 21:7யோவா 21:20 அந்தச் சீடனிடம், “இதோ உன் தாய்” என்றார். அந்த நேரத்திலிருந்து இந்தச் சீடன் மரியாளைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டான். மத் 12:48-501 தீமோ 5:2-4யோவா 16:321 யோவா 3:18-19யோவா 1:11ஆதி 45:8ஆதி 47:12மத் 25:40
இயேசுவின் மரணம்
பின்பு, எல்லாம் முழுமையாக முடிந்துவிட்டதென்று இயேசு அறிந்து, வேதவசனம் நிறைவேறும்படி அவர், “நான் தாகமாய் இருக்கிறேன்” என்றார். சங் 69:21சங் 22:15யோவா 19:30லூக் 22:37லூக் 18:31யோவா 19:24யோவா 18:4யோவா 13:1 அங்கே ஒரு சாடியில் புளித்த திராட்சை இரசம் இருந்தது. எனவே அவர்கள் ஒரு கடற்காளானை அதிலே தோய்த்து, ஒரு ஈசோப்புச் செடியின் தண்டிலே வைத்துக் கட்டி, இயேசுவின் உதடுகளில் படும்படி அதை உயர்த்தினார்கள். எண் 19:18லூக் 23:36மாற் 15:36யாத் 12:22மத் 27:48சங் 51:7மத் 27:341 இராஜா 4:33 இயேசு அந்த பானத்தை ஏற்றுக்கொண்ட பின்பு, “முடிந்தது” என்று சொன்னார். இதைச் சொன்னதும் தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார். யோவா 17:4பிலி 2:8கொலோ 2:14-17எபி 12:2யோவா 10:11தானி 9:24ஏசா 53:10லூக் 23:46
அது பஸ்கா என்ற பண்டிகைக்கான ஆயத்த நாளாயிருந்தது. அதற்கு மறுநாள் ஒரு பெரிய ஓய்வுநாள். அந்த நாளிலே உடல்கள் சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பாததனால், சிலுவையில் தொங்கியவர்களின் கால்களை முறித்து அவர்களைக் கீழே இறக்கும்படி அவர்கள் பிலாத்துவிடம் கேட்டார்கள். யோவா 19:14யோவா 19:42மாற் 15:42யோசு 8:29உபா 21:22-23யாத் 12:16யோவா 19:1யோசு 10:26-27 எனவே படைவீரர் வந்து, இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட முதலாவது மனிதனின் கால்களை முறித்தார்கள். பின்பு மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். யோவா 19:18லூக் 23:39-43 ஆனால் அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே மரித்திருப்பதைக் கண்டார்கள். அதனால் அவர்கள் அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால் அந்த படைவீரரில் ஒருவன் இயேசுவின் விலாவை ஈட்டியினால் குத்தினான். அப்பொழுது இரத்தமும் தண்ணீரும் பீறிட்டுப் பாய்ந்தது. 1 யோவா 5:6சகரி 13:1சகரி 12:101 யோவா 5:8தீத் 3:5-7எசேக் 36:25வெளி 7:14எபே 5:26 அதைக்கண்ட மனிதன் சாட்சி கொடுத்தான். அவனுடைய சாட்சி உண்மையாயிருக்கிறது. தான் சொல்வது உண்மை என்று அவன் அறிவான். நீங்களும்கூட விசுவாசிக்கும்படியாகவே அவன் இதைச் சாட்சியாய்ச் சொல்கிறான். யோவா 21:241 யோவா 1:1-3எபி 2:3-4யோவா 15:271 பேது 5:1அப் 10:39யோவா 20:31ரோம 15:4 “அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிற வேதவசனம் நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்தன. 2 சங் 34:20எண் 9:12யாத் 12:46யோவா 19:28சங் 22:14சங் 35:10மத் 1:22யோவா 19:24 “தாங்கள் ஈட்டியினால் குத்தியவரை அவர்கள் நோக்கிப் பார்ப்பார்கள்” 3 என்று இன்னொரு வேதவசனமும் சொல்லுகிறது. சகரி 12:10வெளி 1:7சங் 22:16-17
இயேசுவின் அடக்கம்
பின்பு அரிமத்தியா பட்டணத்தைச் சேர்ந்த யோசேப்பு, இயேசுவின் உடலைத் தரும்படி பிலாத்துவிடம் கேட்டான். இந்த யோசேப்பு இயேசுவின் சீடனாயிருந்தான். ஆனால் அவன் யூதருக்குப் பயந்ததினால் இரகசியமாகவே அவருக்கு சீடனாயிருந்தான். அவன் பிலாத்துவின் அனுமதியுடன் வந்து இயேசுவின் உடலை எடுத்துச் சென்றான். மாற் 15:42-47மத் 27:57-61நீதி 29:25யோவா 7:13லூக் 23:50-56பிலி 1:14யோவா 12:42யோவா 9:22 அவனுடன் நிக்கொதேமுவும் கூடப்போனான். இவனே முன்னொரு முறை இரவிலே இயேசுவைச் சந்திக்க வந்தவன். நிக்கொதேமு வரும்போது வெள்ளைப்போளமும், சந்தனமும் கலந்த ஒரு கலவையைக் கொண்டுவந்தான். அது கிட்டத்தட்ட முப்பது கிலோ எடை இருந்தது. யோவா 7:50-52யோவா 3:1-21உன்னத 4:142 நாளாக 16:14யோவா 12:7மத் 12:20மத் 19:30மாற் 16:1 அவர்கள் இருவரும் இயேசுவின் உடலை இறக்கி, அந்த நறுமணப் பொருளை மென்பட்டுத் துணிகளில் வைத்து உடலைச் சுற்றிக் கட்டினார்கள். இது யூதரின் அடக்க முறைப்படி செய்யப்பட்டது. யோவா 11:44அப் 5:6யோவா 20:5-7லூக் 24:12மத் 26:12 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. லூக் 23:53மத் 27:60ஏசா 22:16யோவா 20:152இராஜா 23:30மத் 27:64-66 அது யூதருடைய பண்டிகைக்குரிய ஆயத்த நாளாய் இருந்ததாலும், அக்கல்லறை அருகே இருந்ததாலும் அவர்கள் இயேசுவின் உடலை அந்தக் கல்லறையில் வைத்தார்கள். யோவா 19:14யோவா 19:31ஏசா 53:9யோவா 19:411 கொரி 15:4அப் 13:29கொலோ 2:12யோவா 19:20