கூடாரப்பண்டிகை
இவைகளுக்குப்பின், இயேசுவைக் கொலைசெய்வதற்கு யூதத்தலைவர்கள் வழி தேடிக்கொண்டிருந்ததால், அவர் யூதேயாவுக்குப் போக விரும்பாமல் கலிலேயாவிலேயே வெவ்வேறு இடங்களுக்குச் சென்றார். யோவா 5:16-18யோவா 4:3மத் 21:38யோவா 7:19மத் 10:23அப் 10:38லூக் 13:31-33யோவா 1:19 ஆனால் யூதரின் கூடாரப்பண்டிகைச் சமீபித்தபோது, சகரி 14:16-19உபா 16:13-16யாத் 23:16-17லேவி 23:34-43எண் 29:12-381 இராஜா 8:21 இராஜா 8:652 நாளாக 7:9-10 இயேசுவின் சகோதரர் அவரிடம், “நீர் இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு யூதேயாவுக்குச் செல்லும். அப்பொழுதே நீர் செய்யும் கிரியைகளை உமது சீடர்கள் காண்பார்கள். மத் 12:46யோவா 7:51 சாமு 17:28அப் 2:14ஆதி 37:20ஆதி 37:5-11எரே 12:6யோவா 7:10 பிரபலமடைய விரும்புகிற எவனும் இரகசியமாக செயல்படுவதில்லை. நீர் இந்தக் காரியங்களைச் செய்கிறதினால், உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தலாமே” என்றார்கள். யோவா 18:20நீதி 18:1-2லூக் 6:45மத் 23:5மத் 6:5மத் 6:1-21 இராஜா 22:13மத் 4:6 ஏனெனில் இயேசுவின் சொந்தச் சகோதரர்கள்கூட அவரை விசுவாசிக்கவில்லை. மாற் 3:21யோவா 1:11-13யோவா 7:10யோவா 7:3மீகா 7:5-6
எனவே இயேசு அவர்களிடம், “எனது நேரம் இன்னும் வரவில்லை; ஆனால் உங்களுக்கோ எந்த நேரமும் சரியானதே. யோவா 7:8யோவா 2:4யோவா 7:30யோவா 17:1யோவா 13:1யோவா 8:20மத் 26:18அப் 1:7 உலகம் உங்களை வெறுக்க முடியாது. உலகத்தின் செயல்கள் தீமையென்று நான் சாட்சிக் கொடுக்கிறதினால் உலகம் என்னை வெறுக்கிறது. யோவா 15:18-19யோவா 3:19கலா 4:16நீதி 9:7-8யாக் 4:41 யோவா 4:5யோவா 17:141 இராஜா 21:20 இந்தப் பண்டிகைக்கு நீங்கள் போங்கள். நானோ இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை. ஏனெனில் எனக்கேற்ற நேரம் இன்னும் வரவில்லை” என்றார். யோவா 7:6யோவா 8:201 கொரி 2:15-16யோவா 7:30யோவா 11:6-7யோவா 8:30 இதைச் சொல்லிவிட்டு, இயேசு கலிலேயாவிலேயே தங்கியிருந்தார்.
ஆனால் அவருடைய சகோதரர் பண்டிகைக்குப் போனபின் அவரும் வெளிப்படையாக அல்ல, இரகசியமாகவே சென்றார். ஆமோ 5:13மத் 10:16ஏசா 42:2-3கலா 4:4யோவா 11:54யோவா 7:3யோவா 7:5மத் 3:15 அந்தப் பண்டிகையிலே யூதர் இயேசுவைத் தேடிக்கொண்டு, “அவர் எங்கே?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். யோவா 11:56
கூடியிருந்த மக்களுக்கிடையில் இயேசுவைக்குறித்து கருத்து வேறுபாடு இருந்தது. சிலர், “அவர் ஒரு நல்ல மனிதர்” என்றார்கள். யோவா 7:40-43யோவா 9:16அப் 11:24யோவா 7:32யோவா 7:47யோவா 10:19-21யோவா 6:14யோவா 7:52
மற்றவர்களோ, “அப்படியல்ல, அவன் மக்களை ஏமாற்றுகிறான்” என்றார்கள். ஆனால், அவர்கள் யூதருக்குப் பயந்ததினால், ஒருவரும் அவரைப்பற்றி வெளிப்படையாக எதையும் பேசவில்லை. யோவா 9:22யோவா 19:38யோவா 12:42-43யோவா 20:19நீதி 29:25வெளி 2:132 தீமோ 2:9-13கலா 2:12-13
இயேசு பண்டிகையில் போதித்தல்
பண்டிகை நாட்கள் முடிந்தபின்பு இயேசு ஆலய முற்றத்திற்கு போய், அங்கே போதிக்கத் தொடங்கினார். யோவா 7:28லூக் 19:47ஆகா 2:7-9யோவா 18:20யோவா 8:2யோவா 5:14யோவா 7:2யோவா 7:37 யூதர்களோ வியப்படைந்து, “படிக்காமலே இந்த மனிதனுக்கு இவ்வளவு அறிவு எப்படி வந்தது?” என்று கேட்டார்கள். லூக் 4:22மத் 13:54மத் 7:28-29அப் 26:24யோவா 7:46லூக் 2:47மத் 22:22அப் 2:7-13
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “எனது போதனை என்னுடையது அல்ல, அது என்னை அனுப்பின பிதாவிடமிருந்தே வருகிறது. யோவா 14:10யோவா 14:24யோவா 12:49-50யோவா 17:8யோவா 5:23-24யோவா 5:30யோவா 6:38-40யோவா 17:14 இறைவனுடைய சித்தத்தைச் செய்ய விரும்புகிறவன் எவனோ, அவன் எனது போதனை இறைவனிடமிருந்து வருகிறதா, அல்லது நான் என் சுயமாய் சொல்கிறேனா என்று அறிந்துகொள்வான். யோவா 8:31-32யோவா 8:43எரே 31:33-34யோவா 8:47தானி 12:10சங் 25:8-9பிலி 3:15-16அப் 17:11 தனது சுய சிந்தனையில் பேசுகிறவன் தனக்கே மகிமையைத் தேட முயற்சிக்கிறான். ஆனால் தம்மை அனுப்பியவரின் மகிமையைத் தேடுகிறவன் உண்மையுள்ளவனாய் இருக்கிறான்; அவனில் அநீதி எதுவுமில்லை. யோவா 5:41பிலி 2:3-51 கொரி 10:31-33யோவா 13:31-32யோவா 12:28யோவா 8:49-501 தெச 2:6யோவா 17:4-5 மோசே உங்களுக்கு சட்டத்தைக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்கிறதில்லை. நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்ய முயற்சிக்கிறீர்கள்?” என்றார். யோவா 1:17யோவா 7:1யோவா 11:53மத் 12:14உபா 1:17உபா 33:4யாத் 24:2-3கலா 6:13
அப்பொழுது கூடியிருந்த கூட்டம், “நீ பிசாசு பிடித்தவன். யார் உன்னைக் கொலைசெய்ய முயற்சிக்கிறார்கள்?” என்றார்கள். யோவா 10:20யோவா 8:48மாற் 3:21-22யோவா 8:52மாற் 3:30அப் 26:24மத் 10:25மத் 11:18-19
இயேசு அவர்களிடம், “நான் ஒரு கிரியையை செய்தேன். அதனால் நீங்கள் எல்லோரும் வியப்படைந்திருக்கிறீர்கள். யோவா 5:2-11யோவா 7:23 விருத்தசேதனத்தை மோசே உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தான். நீங்கள் ஓய்வுநாளிலும் ஒரு பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்கிறீர்கள். உண்மையிலேயே விருத்தசேதனம் மோசேயினால் ஏற்படுத்தப்படவில்லை. நமது கோத்திரப் பிதாக்களினாலேயே ஏற்படுத்தப்பட்டது. லேவி 12:3ஆதி 17:10-14ரோம 4:9-11கலா 3:17 மோசேயின் சட்டம் மீறப்படாதபடி ஒரு பிள்ளை ஓய்வுநாளில் விருத்தசேதனம் பண்ணப்படலாம் என்கிறீர்கள். அப்படியானால் ஓய்வுநாளிலே ஒருவனை முழுவதும் குணமாக்கிய என்மேல் ஏன் கோபம் கொள்கிறீர்கள்? யோவா 5:14-16மத் 12:2மத் 12:5யோவா 5:8-9 வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பு செய்வதை நிறுத்துங்கள். நீதியாய் தீர்ப்பு செய்யுங்கள்” என்றார். ஏசா 11:3-4யாக் 2:9யோவா 8:15நீதி 17:15நீதி 24:23யாக் 2:1உபா 1:16-17உபா 16:18-19
இயேசுதான் கிறிஸ்துவா?
அப்பொழுது எருசலேமைச் சேர்ந்த மக்களில் சிலர், “இந்த மனிதனையல்லவா அவர்கள் கொலைசெய்ய முயற்சிக்கிறார்கள்? யோவா 7:10-11 இதோ இங்கே இவர் வெளிப்படையாகப் பேசுகிறார். அவர்கள் இவரை எதிர்த்து ஒரு வார்த்தையும் சொல்லாதிருக்கிறார்கள். ஒருவேளை அதிகாரத்தில் உள்ளவர்கள் இவர்தான் கிறிஸ்து என்று உண்மையாகவே அறிந்துகொண்டார்களோ? 2 தீமோ 1:7-8எபே 6:19-20யோவா 7:48அப் 4:13ஏசா 42:4ஏசா 50:7-8யோவா 11:47-53யோவா 9:22 ஆனால் இந்த மனிதன் எங்கிருந்து வந்திருக்கிறான் என்று நமக்குத் தெரியும்; ஆனால் கிறிஸ்து வரும்போது, அவர் எங்கிருந்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாதே” என்று பேசத் தொடங்கினார்கள். மீகா 5:2யோவா 7:41-42யோவா 6:42யோவா 9:29மத் 13:54-57எரே 30:21மாற் 6:3ஏசா 11:1
அப்பொழுது தொடர்ந்து ஆலய முற்றத்தில் போதித்துக்கொண்டிருந்த இயேசு, சத்தமாய் சொன்னதாவது, “ஆம்! நீங்கள் என்னை அறிவீர்கள். நான் எங்கே இருந்து வந்தேன் என்றும் உங்களுக்குத் தெரியும். நான் என் சுயவிருப்பத்தின்படி வரவில்லை. என்னை அனுப்பிய பிதா உண்மையுள்ளவர். நீங்களோ அவரை அறியவில்லை. யோவா 8:42யோவா 8:19எரே 9:6யோவா 12:49யோவா 5:43யோவா 8:14யோவா 8:261 யோவா 2:3-4 நானோ பிதாவை அறிந்திருக்கிறேன். ஏனெனில் நான் அவரிடமிருந்து வந்திருக்கிறேன். அவரே என்னை அனுப்பினவர்” என்றார். யோவா 8:55மத் 11:271 யோவா 4:9யோவா 1:18யோவா 17:18யோவா 17:25-26யோவா 3:16-17யோவா 6:46
அப்பொழுது அவர்கள் இயேசுவைக் கைதுசெய்ய முயன்றார்கள். ஆனால் ஒருவரும் அவர்மேல் கைவைக்கவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை. யோவா 10:39யோவா 7:6யோவா 8:20யோவா 7:32ஏசா 46:10யோவா 11:57யோவா 11:9-10யோவா 7:19 ஆனால் கூடியிருந்த மக்களில் பலர் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்தார்கள். அவர்கள், “கிறிஸ்து வரும்போது, இவர் செய்ததைப் பார்க்கிலும் அதிகமான அடையாளங்களை அவர் செய்வாரோ?” என்றார்கள். யோவா 12:42மத் 12:23அப் 8:13யோவா 10:41-42யோவா 11:45யோவா 8:30-32யாக் 2:26யோவா 12:11
கூடியிருந்த மக்கள் இயேசுவைக்குறித்து இப்படிப்பட்ட காரியங்களை தங்களுக்குள் மெதுவாய் பேசிக்கொண்டதை பரிசேயர் கேட்டார்கள். எனவே தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைதுசெய்யும்படி, ஆலயக்காவலரை அனுப்பினார்கள். அப் 5:26மத் 12:23-24யோவா 11:47-48யோவா 12:19யோவா 18:3யோவா 7:45-53லூக் 22:52-53மத் 23:13
அப்பொழுது இயேசு, “இன்னும் சிறிது காலமே நான் உங்களுடன் இருப்பேன். பின்பு என்னை அனுப்பிய பிதாவிடம் நான் போய்விடுவேன். யோவா 13:33யோவா 16:5யோவா 14:19யோவா 17:11யோவா 17:13மாற் 16:19யோவா 12:35-36யோவா 13:1 நீங்களோ என்னைத் தேடுவீர்கள். ஆனால் என்னைக் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கும் உங்களால் வரமுடியாது” என்றார். யோவா 13:33-36நீதி 1:24-31ஓசி 5:6யோவா 14:3யோவா 14:6யோவா 17:24யோவா 8:21-24லூக் 13:34-35
அப்பொழுது யூதத்தலைவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நாம் கண்டுபிடிக்க முடியாதபடி, இவன் எங்குபோக இருக்கிறான்? யாக் 1:11 பேது 1:1ஏசா 11:12செப்ப 3:10ஏசா 11:10யோவா 12:201 தீமோ 2:72 தீமோ 1:11
“கிரேக்கருக்குள்ளே சிதறடிக்கப்பட்டிருக்கின்ற நம் மக்களிடம்போய், அங்கே கிரேக்கருக்குக் போதிக்க போகிறானா? ‘நீங்களோ என்னைத் தேடுவீர்கள், ஆனால் என்னைக் காணமாட்டீர்கள், நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று சொல்லுகிறானே. இதன் அர்த்தம் என்ன?” என்று பேசிக்கொண்டார்கள். யோவா 3:91 கொரி 2:14யோவா 7:34யோவா 12:34யோவா 16:17-18யோவா 3:4யோவா 6:41யோவா 6:52
பண்டிகையின் கடைசி நாளான அந்தப் பெரிய நாளிலே, இயேசு எழுந்து நின்று சத்தமாய்ச் சொன்னதாவது: “யாராவது தாகமுள்ளவராய் இருந்தால், அவர்கள் என்னிடம் வந்து பானம்பண்ணட்டும். ஏசா 55:1யோவா 4:14யோவா 6:35ஏசா 12:3வெளி 22:17ஏசா 44:3யோவா 4:10சங் 42:2 வேதவசனத்தில் சொல்லியிருக்கிறபடி, என்னை விசுவாசிக்கிறவர்களுடைய உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீர் நதியாய் பெருக்கெடுத்து ஓடும்” என்றார். யோவா 4:14ஏசா 44:3ஏசா 58:11ஏசா 12:3யோவா 4:10நீதி 10:11சகரி 14:8நீதி 18:4 தம்மில் விசுவாசமாய் இருக்கிறவர்கள் பின்னர் பெறப்போகும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்தே அவர் இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமையடையாது இருந்தபடியால், பரிசுத்த ஆவியானவர் இன்னும் கொடுக்கப்படவில்லை. அப் 2:17யோவே 2:28யோவா 14:16-17அப் 2:33ஏசா 32:15யோவா 16:7அப் 2:4ஏசா 44:3
இயேசுவினுடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களில் சிலர், “உண்மையிலேயே இவர் வர இருக்கிற இறைவாக்கினனே” என்றார்கள். மத் 21:11யோவா 1:21யோவா 6:14
வேறுசிலரோ, “இவரே கிறிஸ்து” என்றார்கள். யோவா 7:52யோவா 1:46யோவா 1:49யோவா 1:41யோவா 4:25யோவா 4:29யோவா 4:42யோவா 6:69
ஆனால் இன்னும் சிலர், “கலிலேயாவிலிருந்து எப்படி கிறிஸ்து வருவார்? கிறிஸ்து தாவீதின் குடும்பத்திலிருந்தும், தாவீது வாழ்ந்த பெத்லகேம் பட்டணத்தில் இருந்து வருவார் என்று வேதவசனம் சொல்லுகிறது அல்லவா?” என்றார்கள். மீகா 5:2மத் 2:5எரே 23:5லூக் 2:4ஏசா 11:1லூக் 2:11மத் 1:11 சாமு 16:1 இயேசுவின் நிமித்தம் இவ்விதமாய் மக்கள் கருத்து வேறுபட்டார்கள். யோவா 10:19யோவா 9:16யோவா 7:12லூக் 12:51அப் 14:4அப் 23:7-10மத் 10:35 சிலர் அவரைக் கைதுசெய்ய விரும்பினார்கள். ஆனால் ஒருவரும் அவர்மேல் கைவைக்கவில்லை. அப் 23:11யோவா 7:30யோவா 8:20அப் 18:10அப் 27:23-25யோவா 18:5-6
யூத தலைவர்களின் அவிசுவாசம்
பின்பு ஆலயக்காவலர், தலைமை ஆசாரியர்களிடமும் பரிசேயரிடமும் போனபோது, “நீங்கள் ஏன் அவனைப் பிடித்துக் கொண்டுவரவில்லை?” என்று கேட்டார்கள். யோவா 7:32அப் 5:21-27
காவலர் அதற்கு மறுமொழியாக, “இந்த மனிதன் பேசியதுபோல் ஒருவனும் ஒருக்காலும் பேசியதில்லையே” என்றார்கள். மத் 7:28-29லூக் 4:22யோவா 7:26
அப்பொழுது பரிசேயர் அவர்களிடம், “அவன் உங்களையும் ஏமாற்றி விட்டானா? யோவா 7:122 கொரி 6:82 நாளாக 32:152இராஜா 18:292இராஜா 18:32யோவா 9:27-34மத் 27:63 ஆளுநர்களில், அல்லது பரிசேயரைச் சேர்ந்த எவராவது இயேசுவை விசுவாசிக்கிறார்களா? யோவா 12:421 கொரி 1:201 கொரி 2:8யோவா 7:261 கொரி 1:22-28அப் 6:7எரே 5:4-5யோவா 7:50 இல்லையே! ஆனால் இந்த மக்களோ மோசேயின் சட்டத்தை அறியாதவர்கள். இவர்கள்மேல் சாபம் உண்டு” என்றார்கள். 1 கொரி 1:20-211 கொரி 3:18-20யாக் 3:13-18யோவா 9:34யோவா 9:40ஏசா 28:14ஏசா 29:14-19ஏசா 5:21
முன்பு இயேசுவினிடம் போயிருந்தவனும், பரிசேயரைச் சேர்ந்தவனுமான நிக்கொதேமு அவர்களிடம், யோவா 19:39யோவா 3:1-2 “ஒருவன் என்ன செய்கிறான் என்று அறியும்படி முதலாவது அவனை விசாரிக்காமல், அவனுக்கு நமது மோசேயின் சட்டம் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கிறதா?” என்று கேட்டான். நீதி 18:13உபா 1:17அப் 23:3உபா 19:15-19உபா 17:6உபா 17:8-11
அதற்கு அவர்கள் அவனிடம், “நீயும் கலிலேயாவைச் சேர்ந்தவனா? வேதவசனத்தை ஆராய்ந்து பார். அப்பொழுது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் வருவதில்லை என்பதைக் கண்டுகொள்வாய்” என்றார்கள். யோவா 7:41யோவா 1:46ஏசா 9:1-2மத் 4:15-161 இராஜா 22:24யாத் 2:14ஆதி 19:9யோவா 9:34
பின்பு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டிற்குச் சென்றார்கள். 1 சங் 33:10யோபு 5:12-13சங் 76:10சங் 76:5