யெகோவாவே, எங்களுக்கு நடந்ததை நினைவுகூரும்; சங் 44:13-16சங் 89:50-51ஆப 3:2எரே 15:15புலம் 2:15புலம் 3:19புலம் 3:61நெகே 4:4
எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும்.
எங்கள் உரிமைச்சொத்துக்கள் அந்நியருக்கு கொடுக்கப்பட்டன. ஏசா 1:7செப்ப 1:13உபா 28:30-68சங் 79:1-2எசேக் 7:21எசேக் 7:24ஏசா 5:17ஏசா 63:18
எங்கள் வீடுகள் பிறநாட்டவருக்குக் கொடுக்கப்பட்டன.
நாங்கள் அநாதைகளானோம், தகப்பன் இல்லை. யாத் 22:24எரே 18:21ஓசி 14:3எரே 15:8
எங்கள் தாய்மார்கள் விதவைகளைப் போலிருக்கிறார்கள்.
நாங்கள் குடிக்கும் தண்ணீரை விலைகொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது; ஏசா 3:1உபா 28:48எசேக் 4:9-17
எங்கள் விறகும் பணத்திற்கே வாங்கப்படுகிறது.
எங்களைப் பின்தொடர்கிறவர்கள் எங்கள் காலடியில் நிற்கிறார்கள்; புலம் 1:14நெகே 9:36-37உபா 28:48எரே 27:11-12எரே 27:8எரே 28:14அப் 15:10உபா 28:65-66
நாங்கள் களைத்துப்போனோம். ஆனால் எங்களுக்கு ஓய்வு இல்லை.
நாங்கள் உணவு பெறுதவதற்காக எகிப்திற்குக் கீழும், ஓசி 12:1ஓசி 9:3ஆதி 24:2ஓசி 5:13ஓசி 7:11எரே 2:18எரே 2:362இராஜா 10:15
அசீரியாவுக்குக் கீழும் அடங்கிப்போனோம்.
எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்து, இல்லாமற்போனார்கள்; எரே 16:12எரே 31:29எசேக் 18:2எரே 14:20யாத் 20:5ஆதி 42:36எரே 31:15மத் 23:32-36
நாங்களோ அவர்களுடைய தண்டனைகளைச் சுமக்கிறோம்.
அடிமைகள் எங்களுக்கு மேலாக ஆளுகிறார்கள், நெகே 5:15நீதி 30:22சகரி 11:6சங் 7:2உபா 28:43ஆதி 9:25ஓசி 2:10ஏசா 43:13
அவர்களுடைய கையிலிருந்து எங்களை விடுவிக்க யாருமேயில்லை.
பாலைவனத்தில் இருக்கும் வாளின் நிமித்தம், எசேக் 4:16-17எசேக் 12:18-19எரே 40:9-122 சாமு 23:17நியாயாதி 6:11எரே 41:1-10எரே 41:18எரே 42:14
எங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே, எங்கள் உணவைத் தேடுகிறோம்.
பசியின் கொடுமையினால், புலம் 4:8யோபு 30:30சங் 119:83புலம் 3:4
காய்ச்சல் வந்து எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போயிற்று.
பெண்கள் சீயோனிலும், கன்னிகைகள் யூதா பட்டணத்திலும் ஏசா 13:16சகரி 14:2உபா 28:30
மானபங்கம் செய்யப்படுகிறார்கள்.
இளவரசர்களை அவர்கள் கைகளைக் கட்டி தூக்கிலிட்டார்கள்; புலம் 4:16ஏசா 47:6எரே 39:6-7எரே 52:10-11எரே 52:25-27புலம் 2:10புலம் 2:20
முதியோருக்கு மரியாதை காட்டப்படுவதுமில்லை.
இளைஞர்கள் ஆலைகளில் செக்கு இழுக்க கொண்டுசெல்லப்படுகிறார்கள்; நியாயாதி 16:21மத் 23:4யாத் 1:11யாத் 11:5யாத் 2:11யாத் 23:5ஏசா 47:2ஏசா 58:6
சிறுவர்கள் பாரமான மரங்களைச் சுமந்து தள்ளாடுகிறார்கள்.
முதியோர் பட்டணத்தின் வாசலிலிருந்து போய்விட்டார்கள்; எரே 7:34எசேக் 26:13ஏசா 24:7-11வெளி 18:22உபா 16:18ஏசா 3:2-3எரே 16:9எரே 25:10
வாலிபர் தாங்கள் இசை மீட்பதை நிறுத்திவிட்டார்கள்.
எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி போய்விட்டது; ஆமோ 8:10எரே 25:10ஆமோ 6:4-7யாக் 4:9-10சங் 30:11
எங்கள் நடனம் புலம்பலாக மாறிற்று.
எங்கள் தலையிலிருந்த மகுடம் விழுந்து விட்டது. சங் 89:39ஏசா 3:9-11எரே 13:18யோபு 19:9புலம் 1:1புலம் 4:13எசேக் 21:26எசேக் 22:12-16
நாங்கள் பாவம் செய்தோமே; எங்களுக்கு ஐயோ கேடு!
இதனால் எங்கள் இருதயம் சோர்ந்துபோயிற்று, ஏசா 1:5சங் 6:7யோபு 17:7புலம் 2:11ஏசா 38:14உபா 28:65எசேக் 21:15எசேக் 21:7
இவைகளினால் எங்கள் கண்கள் மங்கிப்போகின்றன;
ஏனெனில், சீயோன் மலை பாழாகிக் கிடக்கிறது; மீகா 3:12எரே 9:111 இராஜா 9:7-8ஏசா 32:13-14எரே 17:3எரே 26:9எரே 52:13புலம் 2:8-9
அங்கே நரிகள் இரைதேடித் திரிகின்றன.
யெகோவாவே, நீரோ என்றென்றும் அரசாளுபவர்; சங் 102:12எபி 1:8-12சங் 45:6சங் 102:25-27சங் 145:131 தீமோ 1:17சங் 9:7வெளி 1:8
உமது சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.
ஏன் எங்களை நீர் தொடர்ந்து மறந்துவிடுகிறீர்? சங் 13:1சங் 44:24எரே 14:19-21ஏசா 64:9-12சங் 74:1சங் 77:7-10சங் 79:5சங் 85:5
ஏன் எங்களை நெடுங்காலமாய் கைவிடுகிறீர்?
யெகோவாவே, எங்களைப் புதுப்பித்து எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும்; சங் 80:3சங் 80:7சங் 85:4எரே 31:18சங் 80:19சகரி 8:3-6எசேக் 36:37எசேக் 11:19-20
எங்கள் நாட்களை முந்திய நாட்களைப்போல் புதிதாக்கும்.
அப்படியில்லாவிட்டால், நீர் எங்களை முற்றிலுமாக புறக்கணித்துவிடுவீரோ? ஓசி 1:6சங் 60:1-2எசேக் 37:11ஏசா 64:9எரே 15:1-5சங் 44:9
எங்கள்மேல் கடுங்கோபம் கொண்டிருக்கிறீரே!