மாற்கு 4

Mark 4

விதைக்கிறவனைப் பற்றிய உவமை

மீண்டும் இயேசு கடற்கரையினில் போதிக்கத் தொடங்கினார். அவரிடத்தில் மக்கள் பெருங்கூட்டமாய் திரண்டிருந்தபடியால், இயேசு கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகில் ஏறி அதில் உட்கார்ந்தார்; மக்களோ கடற்கரை ஓரமாய் நின்றார்கள். லூக் 5:1-3மாற் 2:13லூக் 8:4-10மத் 13:1-15மாற் 3:7 இயேசு பல காரியங்களை, உவமைகள் மூலம் அவர்களுக்கு போதித்தார். அவர் தமது போதனையில் அவர்களுக்கு இதைச் சொன்னார்: மத் 13:34-35மாற் 3:23மாற் 4:11மத் 13:10மத் 13:3சங் 49:4சங் 78:2யோவா 7:16-17 “கேளுங்கள்! ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான். 1 கொரி 3:6-9யாக் 2:5யோவா 4:35-38உபா 4:1லூக் 8:5-8மத் 13:26மாற் 4:26-29அப் 2:14 அவன் விதைகளைத் விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. மத் 13:19மாற் 4:15மத் 13:4லூக் 8:12ஆதி 15:11லூக் 8:5 சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததினால், அது விரைவாக முளைத்தாலும். எசேக் 36:26லூக் 8:6ஆமோ 6:12எசேக் 11:19ஓசி 10:12லூக் 8:13மத் 13:20மத் 13:5-6 வெயில் அதிகமானபோது, பயிர்கள் வாடிப்போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்தும் போயின. யாக் 1:11எரே 17:5-8யோனா 4:82 தெச 2:10கொலோ 2:7எபே 3:17ஏசா 25:4யூதா 1:12 வேறுசில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன; முட்செடி வளர்ந்து, பயிர்களை நெருக்கிப் போட்டது. அதனால், அவைகள் விளைச்சலைக் கொடுக்கவில்லை. எரே 4:3லூக் 8:141 யோவா 2:15-16ஆதி 3:17-181 தீமோ 6:9-10லூக் 12:15லூக் 21:34லூக் 8:7 வேறுசில விதைகளோ நல்ல மண்ணில் விழுந்தன; அவை முளைவிட்டு வளர்ந்து முப்பதும், அறுபதும், நூறு மடங்கானதுமாக விளைச்சலைக் கொடுத்தன.” யோவா 15:5கொலோ 1:6ஆதி 26:12மாற் 4:201 பேது 2:1-3அப் 17:11எரே 23:29மத் 13:8

பின்பு இயேசு அவர்களுக்கு, “கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார். மத் 11:15மாற் 4:23-24வெளி 3:22லூக் 8:18மாற் 7:14-15வெளி 3:13வெளி 3:6மத் 13:9

அவர் தனிமையாய் இருந்தபோது, அந்த பன்னிரண்டு பேரும் அவருடன் இருந்த மற்றவர்களும் அந்த உவமையைப் பற்றிய விளக்கத்தைக் கேட்டார்கள். மத் 13:10-17லூக் 8:9-15மத் 13:36மாற் 4:34மாற் 7:17நீதி 13:20 இயேசு அவர்களிடம், “இறைவனுடைய அரசின் இரகசியம் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது; ஆனால், வெளியில் இருக்கிறவர்களுக்கோ, எல்லா காரியங்களும் உவமைகள் மூலமாகவே சொல்லப்படுகின்றன. மத் 11:25லூக் 8:101 கொரி 5:12-131 யோவா 5:201 தெச 4:12கொலோ 4:5யாக் 1:16-181 தீமோ 3:7 இதனால், ஏசா 6:9-10ஏசா 44:18மத் 13:14-15எரே 5:21உபா 29:4யோவா 12:37-41லூக் 8:102 தீமோ 2:25

“ ‘அவர்கள் எப்பொழுதும் கண்டும், ஒருபோதும் அறிந்துகொள்ளாமலும்,

கேட்டும் ஒருபோதும் விளங்கிக்கொள்ளமாட்டார்கள்;

இல்லாவிட்டால், அவர்கள் மனந்திரும்பி மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்’ ” 1

என்றார்.

மேலும் இயேசு அவர்களிடம், “இந்த உவமை உங்களுக்கு விளங்கவில்லையா? அப்படியானால், மற்ற உவமைகளையெல்லாம் எப்படி விளங்கிக்கொள்வீர்கள்?” என்று கேட்டார். வெளி 3:191 கொரி 3:1-2எபி 5:11-14லூக் 24:25லூக் 8:11-15மத் 13:18-23மத் 13:51-52மத் 15:15-17 “விவசாயி வார்த்தையை விதைக்கிறான். அப் 8:4மத் 13:191 பேது 1:23-25லூக் 8:11மத் 13:37மாற் 2:2மாற் 4:3கொலோ 1:5-6 சிலர் பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதை போன்றவர்கள். இவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன், சாத்தான் வந்து அவர்களில் விதைக்கப்பட்ட வார்த்தைகளை எடுத்துப் போடுகிறான். 1 பேது 5:8மத் 13:192 கொரி 2:112 கொரி 4:3-4லூக் 8:12மாற் 4:4அப் 5:3ஏசா 53:1 மற்றவர்களோ, கற்பாறையான இடங்களில் விதைக்கப்பட்ட விதைக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளுகிறவர்கள். லூக் 8:13மாற் 6:20எசேக் 33:31-32யோவா 5:35மத் 13:20-21அப் 8:13அப் 24:25-26அப் 8:18-21 ஆனால் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே நிலைத்திருக்கிறார்கள். வார்த்தையின் நிமித்தம் கஷ்டங்களும், துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாய் விசுவாசத்திலிருந்து விழுந்து போகிறார்கள். மத் 11:61 தெச 3:3-5யோவா 15:2-7மத் 12:31வெளி 2:101 கொரி 10:12-131 யோவா 2:192 தீமோ 1:15 வேறுசிலரோ, முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டும், எரே 4:3லூக் 8:14மத் 13:22மாற் 4:7 இவ்வாழ்விற்குரிய கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும், இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து, வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் வார்த்தை அவர்களில் பலனற்றுப் போகிறது. 1 யோவா 2:15-171 தீமோ 6:9-101 தீமோ 6:171 பேது 4:2-3மத் 19:23பிலி 4:6யோவா 15:2லூக் 12:29-30 வேறுசிலரோ, நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு சிலர் முப்பதும், அறுபதும், நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுக்கிறார்கள்” என்றார். கொலோ 1:10லூக் 8:15யோவா 15:4-5மத் 13:23மாற் 4:8கலா 5:22-232 பேது 1:8ஆதி 26:12

விளக்குத்தண்டின் மேல் விளக்கு

மேலும் இயேசு அவர்களிடம், “ஒரு விளக்கைக் கொண்டுவருவது, பாத்திரத்தின் கீழோ, கட்டிலின் கீழோ மறைத்துவைக்கிறதற்கா? அதை விளக்குத்தண்டின் மேல் வைக்கிறதற்கு அல்லவா? மத் 5:15லூக் 11:33லூக் 8:16ஏசா 60:1-3எபே 5:3-151 கொரி 12:7பிலி 2:15-16 வெளிப்படாமல் மறைத்திருப்பது ஒன்றுமில்லை, வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. லூக் 8:17பிரச 12:141 கொரி 4:5மத் 10:26-27சங் 78:2-4அப் 20:27அப் 4:20லூக் 12:2-3 கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார். மத் 11:15மாற் 4:9வெளி 2:29வெளி 2:11வெளி 2:17வெளி 2:7

இயேசு தொடர்ந்து: “நீங்கள் கேட்பதைக் கவனமாய் யோசியுங்கள். எந்த அளவையை நீங்கள் உபயோகிக்கிறீர்களோ, அந்த அளவையினாலேயே உங்களுக்கும் அளக்கப்படும். கேட்கிற உங்களுக்கு அதிகமாகவும் கொடுக்கப்படும். எபி 2:1லூக் 8:18மத் 7:22 கொரி 9:6அப் 17:11யோவா 10:27நீதி 19:27லூக் 6:37-38 இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும்; இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார். மத் 13:12லூக் 8:18மத் 25:28-29யோவா 15:2லூக் 16:9-12லூக் 19:24-26

வளரும் விதையின் உவமை

மேலும் இயேசு சொன்னார்: “இறைவனுடைய அரசு ஒருவர் விதைகளை நிலத்தில் விதைக்கிறதற்கு ஒப்பாயிருக்கிறது. மத் 13:241 கொரி 3:6-91 பேது 1:23-25லூக் 8:11ஏசா 32:20யாக் 3:18லூக் 8:5பிரச 11:4 அவன் இரவும் பகலும் தூங்கியும் விழித்தும் இருக்கையில் அந்த விதை முளைவிட்டு வளர்கிறது; அது எப்படியென்று அவனுக்குத் தெரியாது. பிரச 11:52 தெச 1:31 கொரி 15:37-38பிரச 8:172 பேது 3:18யோவா 3:7-8 மண் தானாகவே தானியத்தை, முதலில் பயிரையும் பின்பு கதிரையும் அதற்குப் பின்பு கதிரிலே நிறைந்த தானியத்தையும் அது கொடுக்கிறது. பிலி 1:9-11ஓசி 6:3மாற் 4:31-321 தெச 3:12-13கொலோ 1:10மத் 13:26பிலி 1:6பிரச 3:1 பயிர் விளைந்தவுடனே, அறுவடை வந்துவிட்டதென்று விதைத்தவன் அதன்மேல் அரிவாளை போடுகிறான்” என்றார். யோவே 3:13ஏசா 57:1-2மத் 13:30மத் 13:40-43யோபு 5:26வெளி 14:13-172 தீமோ 4:7-8

கடுகு விதையின் உவமை

மீண்டும் இயேசு, “இறைவனுடைய அரசை, நாம் எதற்கு ஒப்பிட்டுச் சொல்வோம், எந்த உவமையினால் அதை விவரித்துக் கூறுவோம்? மத் 13:31-32லூக் 13:18-21புலம் 2:13மத் 13:24மத் 11:16 அது கடுகுவிதையைப் போன்றது. அது பூமியிலுள்ள எல்லா விதைகளிலும் சிறியதாக இருக்கிறது. அப் 19:20ஆதி 22:17-18லூக் 13:18-19தானி 2:44-45மல்கி 1:11அப் 2:41அப் 21:20அப் 4:4 ஆகிலும் அது விதைக்கப்படும்போது முளைத்து, தோட்டத்திலுள்ள மற்ற எல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்கிறது. ஆகாயத்துப் பறவைகள் அதன் நிழலில் வந்து தங்கக்கூடிய அளவுக்குப் பெரியதான கிளைகளையும் விடுகிறது” என்றார். தானி 4:20-22தானி 4:10-14எசேக் 31:3-10சங் 80:9-11சங் 91:1ஏசா 11:9ஏசா 32:2புலம் 4:20

மக்கள் கேட்டு விளங்கக்கூடிய அளவுக்கு, இயேசு இதேவிதமான பல உவமைகள் மூலம், அவர்களுக்கு வார்த்தையைச் சொல்லிக் கொடுத்தார். மத் 13:34-35யோவா 16:121 கொரி 3:1-2எபி 5:11-14 உவமைகளின் மூலமே அல்லாமல், இயேசு அவர்களுடன் எதையுமே பேசவில்லை. ஆனால் அவர் தம்முடைய சீடர்களுடன் தனித்திருந்தபோது, அவர்களுக்கு எல்லாவற்றையும் தெளிவாக்கினார். யோவா 16:25லூக் 24:27மாற் 4:10மத் 13:36-43மத் 15:15-20லூக் 8:9-10லூக் 24:44-46மாற் 7:17-23

இயேசு புயலை அடக்குதல்

அன்று மாலை வேளையானபோது, இயேசு தம்முடைய சீடர்களிடம், “நாம் மறுகரைக்குப் போவோம்” என்றார். மத் 8:18லூக் 8:25லூக் 8:22மத் 8:23-27மத் 14:22மாற் 8:13யோவா 6:17யோவா 6:1 அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, இயேசுவை அவர் படகில் இருந்த வண்ணமாகவே, தங்களுடன் கூட்டிக்கொண்டு சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. மாற் 3:9மாற் 4:1மாற் 5:2மாற் 5:21 அப்பொழுது பலத்த புயல்காற்று உண்டாகி, அலைகள் படகின்மேல் மோதின; படகு மூழ்கத்தொடங்கியது. மத் 8:23-24யோபு 1:19லூக் 8:22-23யோனா 1:4சங் 107:23-31அப் 27:14-20யோபு 1:122 கொரி 11:25 இயேசுவோ படகின் பின்பகுதியில் ஒரு தலையணை வைத்து தூங்கிக்கொண்டிருந்தார். சீடர்கள் அவரை எழுப்பி அவரிடம், “போதகரே! நாங்கள் மூழ்கப்போவதைப் பற்றி, உமக்குக் கவலையில்லையா!” எனக் கேட்டார்கள். 1 பேது 5:7எபி 4:15ஏசா 54:6-8மத் 8:25லூக் 8:24ஏசா 40:27-28ஏசா 51:9-101 இராஜா 18:27-29

இயேசு விழித்தெழுந்து, காற்றைக் கடிந்துகொண்டார்; அலைகளிடம், “அமைதியாயிரு! இரையாதே” என்றார். அப்பொழுது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டாயிற்று. சங் 107:29சங் 89:9சங் 29:10சங் 65:7எரே 5:22நீதி 8:29யோபு 38:11யாத் 14:22

இயேசு தமது சீடர்களிடம், “நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்றார். லூக் 8:25மத் 14:31மத் 8:26ஏசா 43:2மத் 16:8மத் 6:30சங் 46:1-3யோவா 6:19-20

அவர்கள் பயமடைந்து ஒருவரோடொருவர், “இவர் யார்? காற்றும், அலைகளுங்கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே?” என்று பேசிக்கொண்டார்கள். லூக் 8:251 சாமு 12:18-20யோபு 38:111 சாமு 12:24யோனா 1:15-16யோனா 1:9-10மத் 8:27சங் 89:7