பின்பு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர், இறைவனுடைய அரசு வல்லமையுடன் வருவதைக் காணுமுன், மரணமடைய மாட்டார்கள்” என்றார். லூக் 9:27எபி 2:9மாற் 13:30மத் 16:28யோவா 8:51-52லூக் 2:26லூக் 22:18லூக் 22:30
இயேசு மறுரூபமாகுதல்
ஆறு நாட்களுக்குபின் இயேசு தம்முடன் பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, உயரமான மலைக்கு ஏறிப்போனார். அங்கே அவர்கள் தனிமையாய் இருக்கையில், அவர்களுக்கு முன்பாக இயேசு மறுரூபமடைந்தார். லூக் 9:28-36மத் 17:1-8ஏசா 33:17மாற் 5:37மாற் 14:332 கொரி 13:1யாத் 24:131 இராஜா 18:42 அவருடைய உடைகள் மிகவும் பிரகாசமான வெண்மையாயிருந்தன. அவை இந்தப் பூமியிலுள்ள எவராலும், வெளுக்க முடியாத அளவுக்கு வெண்மையாயிருந்தன. மத் 28:3தானி 7:9ஏசா 1:18மல்கி 3:2-3சங் 104:1-2சங் 51:7சங் 68:14வெளி 7:14 அத்துடன் எலியாவும் மோசேயும் அவர்களுக்குமுன் தோன்றி, இயேசுவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். லூக் 9:30-31அப் 3:21-24யோவா 5:39லூக் 24:44மத் 17:3-4லூக் 24:27லூக் 9:19மத் 11:13
உடனே பேதுரு இயேசுவிடம், “போதகரே, நாம் இங்கே இருப்பது நல்லது. ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக, நாம் மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றான். யோவா 14:21-23யோவா 14:8-9மத் 23:7பிலி 1:23சங் 62:2-3சங் 84:10வெளி 22:3-41 யோவா 3:2 அவர்கள் மிகவும் பயமடைந்திருந்தபடியால், என்ன சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. தானி 10:15-19மாற் 16:5-8வெளி 1:17
அப்பொழுது ஒரு மேகம் தோன்றி, அவர்களை மூடிக்கொண்டது. அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் கேட்டது: “இவர் என் மகன், நான் இவரில் அன்பாயிருக்கிறேன். இவர் கூறுவதைக் கேளுங்கள்.” 2 பேது 1:17மத் 3:17லூக் 9:34-36மாற் 1:11எபி 2:1யாத் 23:21-22யோவா 5:22-25மத் 17:5-7
திடீரென அவர்கள் சுற்றிப் பார்த்தபோது, இயேசுவைத் தவிர தங்களோடு வேறு எவரையும் அவர்கள் காணவில்லை. அப் 10:16அப் 8:39-40லூக் 24:31லூக் 9:36
அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, மானிடமகனாகிய தான் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும் வரைக்கும், அவர்கள் பார்த்ததை வேறு ஒருவருக்கும் சொல்லக்கூடாது, என்று இயேசு அவர்களுக்கு உத்தரவிட்டார். மத் 17:9-13மாற் 5:43மத் 12:40லூக் 24:46மத் 16:21மத் 27:63மாற் 10:32-34மாற் 8:29-31 அவர்கள் இந்தக் காரியத்தைத் தங்களுக்குள்ளேயே வைத்து, “இறந்தோரில் இருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அப் 17:18யோவா 16:17-19யோவா 2:19-22லூக் 18:33-34லூக் 24:25-27லூக் 24:7-8யோவா 12:16யோவா 12:33-34
அவர்கள் இயேசுவிடம், “முதலாவது எலியா வரவேண்டும் என்று மோசேயின் சட்ட ஆசிரியர்கள் சொல்கிறார்களே; அது ஏன்?” என்று கேட்டார்கள். மல்கி 4:5மல்கி 3:1மத் 11:14மத் 17:10-11மாற் 9:4
அதற்கு இயேசு, “உண்மையாக எலியாவே முதலாவதாய் வந்து, எல்லா காரியங்களையும், முந்தைய நிலைக்குக் கொண்டுவருவான். அப்படியானால் மானிடமகனாகிய நான் அதிகமாகத் துன்பப்பட்டு, புறக்கணிக்கப்படவேண்டும் என்று எழுதியிருக்கிறதே அது ஏன்? ஏசா 53:1-12ஏசா 50:6ஏசா 52:14ஏசா 40:3-5லூக் 1:16-17ஏசா 49:7லூக் 23:11மத் 11:2-18 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எலியா வந்துவிட்டான். அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, மக்கள் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள்” என்றார். மத் 14:3-11மத் 11:14மத் 17:12-13அப் 7:52லூக் 1:17லூக் 3:19-20மாற் 6:14-28
தீய ஆவி பிடித்த சிறுவன் சுகமடைதல்
அவர்கள் மற்றச் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமான மக்கள் சூழ்ந்திருப்பதையும், மோசேயின் சட்ட ஆசிரியர்கள் சீடர்களுடன் விவாதித்துக் கொண்டிருப்பதையும் கண்டார்கள். லூக் 9:37-42மத் 17:14-20லூக் 11:53-54மாற் 11:28மாற் 12:14மாற் 2:6எபி 12:3 மக்கள் எல்லோரும் இயேசுவைக் கண்ட உடனே வியப்பு நிறைந்தவர்களாய், ஓடிப்போய் அவரை வாழ்த்தினார்கள். யாத் 34:30மாற் 9:2-3
இயேசு அவர்களிடம், “நீங்கள் எதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். லூக் 5:30-32மாற் 8:11
மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன், “போதகரே, நான் என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அவனை ஒரு தீய ஆவி பிடித்திருப்பதால், அவன் பேசும் ஆற்றலை இழந்துவிட்டான். லூக் 11:14மாற் 9:25லூக் 9:38மாற் 10:13யோவா 4:47மத் 12:22மத் 17:15மாற் 5:23 அது அவனைப் பிடிக்கும் போதெல்லாம், அவனைத் தரையில் வீழ்த்துகிறது. அவன் வாயில் நுரைதள்ளி, பல்லைக்கடித்து நெரிக்கிறான், அவனது உடல் விறைத்துப் போகிறது. நான் அந்தத் தீய ஆவியைத் துரத்தும்படி, உமது சீடர்களிடம் கேட்டேன்; ஆனால் அவர்களால் அதைத் துரத்த முடியவில்லை” என்றான். மாற் 11:23லூக் 9:39-40மத் 17:19-20மாற் 9:28-29மத் 17:16மாற் 9:20மாற் 9:262இராஜா 4:29-31
அப்பொழுது இயேசு, “விசுவாசமில்லாத தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? அந்தச் சிறுவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். எண் 14:11லூக் 9:41மத் 17:17மாற் 16:14எண் 14:27சங் 106:21-25எபி 3:10-12யோவா 20:27
எனவே அவர்கள், அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அந்த தீய ஆவி இயேசுவைக் கண்டவுடனே, சிறுவனை வலிப்புறச் செய்து, அவனைக் கீழே வீழ்த்தியது. அவன் தரையில் விழுந்து புரண்டான். அவன் வாயிலிருந்து நுரை வந்தது. மாற் 1:26லூக் 4:351 பேது 5:8லூக் 9:42யோவா 8:44யோபு 1:10-12யோபு 2:6-8லூக் 8:29
இயேசு அந்தச் சிறுவனுடைய தகப்பனிடம், “இது எவ்வளவு காலமாக இப்படியிருக்கிறது?” என்று கேட்டார். அப் 9:33யோவா 9:20-21அப் 14:8அப் 3:2அப் 4:22யோவா 5:5-6யோவா 9:1யோபு 14:1
அதற்கு அவன், “இவனுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே இப்படி இருக்கிறது” என்றான். “இந்த தீய ஆவி இவனைக் கொல்லும்படி நெருப்புக்குள்ளும், தண்ணீருக்குள்ளும் பலமுறை வீழ்த்தியிருக்கிறது. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால், எங்கள்மேல் இரக்கங்கொண்டு, எங்களுக்கு உதவிசெய்யும்” என்றான். மத் 14:31மத் 15:22-28மத் 20:34மத் 8:2மாற் 1:40-42மாற் 5:19லூக் 7:13மத் 8:8-9
அதற்கு இயேசு, “சாத்தியமா என்று கேட்கிறாயோ? விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியம்” என்றார். யோவா 11:40எபி 11:6மத் 17:20மாற் 11:23மத் 21:21-22லூக் 17:62 நாளாக 20:20யோவா 4:48-50
உடனே அந்தச் சிறுவனின் தகப்பன், “நான் விசுவாசிக்கிறேன்; ஆனால், என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவிசெய்யும்” என்றான். லூக் 17:5எபி 12:2எபே 2:82 தெச 1:112 தெச 1:3சங் 126:5பிலி 1:292 கொரி 2:4
மக்கள் திரண்டு, அவ்விடத்திற்கு ஓடிவருவதை இயேசு கண்டார். அப்போது, அவர் அந்த அசுத்த ஆவியைப் பார்த்து, “செவிடும், ஊமையுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ; இனி ஒருபோதும் இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்றார். அப் 16:18ஏசா 35:5-6லூக் 9:42மத் 17:18மாற் 9:15யூதா 1:9லூக் 11:14லூக் 4:35
அந்தத் தீய ஆவி கூச்சலிட்டு, அவனை அதிகமாய் வலிப்புக்குள்ளாக்கி, அவனைவிட்டு வெளியே வந்தது. பலர் அவனைப் பார்த்து, “இவன் இறந்துவிட்டான்” என்று சொல்லுமளவிற்கு அவன் இறந்தவனைப்போல கிடந்தான். மாற் 9:20மாற் 1:26யாத் 5:23மாற் 9:18வெளி 12:12 ஆனால் இயேசுவோ அவனது கையைப் பிடித்து, அவனைத் தூக்கி நிறுத்தினார். அவன் எழுந்து நின்றான். அப் 3:7மாற் 1:31அப் 9:41ஏசா 41:13மாற் 1:41மாற் 5:41மாற் 8:23
பின்பு இயேசு வீட்டிற்குள் போனபோது, அவருடைய சீடர்கள் தனியாக அவரிடம், “எங்களால் ஏன் அதைத் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள். மத் 17:19-20மத் 13:10மத் 13:36மத் 15:15மாற் 4:10மாற் 4:34மாற் 7:17
அதற்கு இயேசு, “இவ்வகையான தீய ஆவி மன்றாட்டினாலும், உபவாசத்தினாலும் 1 மட்டுமே வெளியேறும்” என்றார். யாக் 5:15தானி 9:3மத் 17:20எபே 6:182 கொரி 12:82 கொரி 11:271 இராஜா 17:20-22லூக் 11:26
இயேசு தமது மரணத்தைப்பற்றி இரண்டாம்முறை முன்னறிவித்தல்
அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயா வழியாகக் கடந்து சென்றார்கள். தாம் எங்கே இருக்கிறோம் என்று, யாரும் அறிவதை இயேசு விரும்பவில்லை. லூக் 9:43-45மத் 17:22-23மாற் 6:31-32மத் 27:22-23 ஏனெனில் இயேசு, தமது சீடருக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் மானிடமகனாகிய என்னைக் கொலைசெய்வார்கள், மூன்று நாட்களுக்குப்பின் நான் உயிருடன் எழுந்திருப்பேன்” என்று சொன்னார். மத் 16:21மாற் 9:12லூக் 24:44-46மத் 20:18-19மாற் 8:31லூக் 24:26மத் 20:28மத் 26:2 ஆனால் அவர்களோ, இயேசு சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை. அவர் சொன்னதைக்குறித்து அவரிடம் கேட்கவும் பயந்தார்கள். யோவா 16:19லூக் 18:34லூக் 2:50லூக் 9:45யோவா 12:16மாற் 9:10யோவா 4:27லூக் 24:45
அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்தார்கள். இயேசு வீட்டில் இருந்தபோது, சீடர்களிடம், “வழியிலே நீங்கள் என்னத்தைப்பற்றி விவாதித்துக்கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டார். மத் 18:1-5எபி 4:13லூக் 9:46-48யோவா 2:25யோவா 21:17மத் 17:24மாற் 2:8சங் 139:1-4 அவர்கள் வழியில், தங்களில் யார் பெரியவன் என்று வாக்குவாதமும் பண்ணிக்கொண்டு வந்தபடியால், மவுனமாய் இருந்தார்கள். மாற் 9:501 பேது 5:33 யோவா 1:9லூக் 22:24-30லூக் 9:46-48பிலி 2:3-7ரோம 12:10மத் 18:1-5
இயேசு உட்கார்ந்து, பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரும்படி கூப்பிட்டு, “யாராவது முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவனே எல்லாரிலும் கடைசியானவனாக இருக்கவேண்டும். அவன் எல்லோருக்கும் வேலைக்காரனாகவும் இருக்கவேண்டும்” என்றார். மத் 20:25-28லூக் 22:26மாற் 10:42-45லூக் 14:10-11மத் 23:11யாக் 4:6லூக் 18:14எரே 45:5
இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, அவர்கள் நடுவில் நிறுத்தி, தமது கைகளால் அணைத்துக்கொண்டு, அவர்களுக்குச் சொன்னதாவது: மாற் 10:16மத் 18:2மத் 19:14-15 “எனது பெயரில், இந்தப் பிள்ளைகளில் ஒருவரை ஏற்றுக்கொள்கிறவன் யாரோ, அவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்” என்றார். மத் 18:3-5லூக் 10:16மத் 10:40-42யோவா 10:30யோவா 12:44-45யோவா 14:21-23லூக் 9:48யோவா 5:23
நமக்கு விரோதமாய் இல்லாதவன், நமக்குச் சாதகமாக இருக்கிறான்
அப்பொழுது யோவான் அவரிடம், “போதகரே, ஒருவன் உமது பெயரினால் பிசாசுகளைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் எங்களில் ஒருவன் அல்லாதபடியினால், நாங்கள் அவனைத் தடை செய்தோம்” என்றான். லூக் 9:49-50எண் 11:26-29லூக் 11:19
இயேசு அவர்களிடம், “அவனைத் தடைசெய்ய வேண்டாம். எனது பெயரினால் அற்புதத்தைச் செய்கிறவன், சீக்கிரமாய் என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசமாட்டான். 1 கொரி 12:31 கொரி 13:1-2பிலி 1:18மத் 13:28-29மத் 7:22-231 கொரி 9:27மாற் 10:13-14அப் 19:13-16 ஏனெனில் நமக்கு விரோதமாய் இல்லாதவன், நமக்குச் சாதகமாகவே இருக்கிறான். மத் 12:30லூக் 11:23 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்ற காரணத்தால், யாராவது என் பெயரில் உங்களுக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுத்தால், அவன் தனக்குரிய வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான்” என்றார். மத் 10:42மத் 25:401 கொரி 15:23கலா 3:29கலா 5:24ரோம 14:15ரோம 8:9யோவா 19:25-27
பாவத்தில் விழப்பண்ணுதல்
யாராவது என்னில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியவரில் ஒருவரைப் பாவத்தில் விழப்பண்ணினால், அவனுடைய கழுத்திலே பெரிய திரிகைக் கல்லொன்றைக் கட்டி, கடலின் ஆழத்தில் அவன் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும். மத் 18:6லூக் 17:1-2மத் 18:102 கொரி 6:32 தெச 1:6-9அப் 26:11-14மத் 25:45-46ரோம 14:13 உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கைகளுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும், ஊனமுள்ளவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது. மத் 5:29-30மத் 18:8-9மத் 25:41எபி 12:1மத் 5:22மத் 3:12கொலோ 3:5கலா 5:24 நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. 2 உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கால்களுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், முடவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது. மத் 18:8மத் 5:22மாற் 9:43 நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. 3 உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எடுத்துவிடு. நீ இரண்டு கண்களுடையவனாய் நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒரு கண்ணுடன் இறைவனின் அரசிற்குள் போவது உனக்குச் சிறந்தது. மத் 18:9மத் 5:22மத் 5:28-29ஆதி 3:6யோபு 31:1மாற் 9:43பிலி 3:7-8சங் 119:37 நரகத்தில், ஏசா 66:24மத் 25:41மாற் 9:43-45
“ ‘அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை,
அங்குள்ள நெருப்பு அணைந்து போவதுமில்லை.’ 4
ஒவ்வொரு பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, ஒவ்வொருவரும் நெருப்பினால் சோதிக்கப்படுவார்கள். லேவி 2:13எசேக் 43:24
“உப்பு நல்லது, ஆனால் அது அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால் மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்? உங்களுக்குள்ளே சாரமுள்ள உறவு உடையவர்களாயிருங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாயும் இருங்கள்” என்றார். கொலோ 4:6மத் 5:13ரோம 12:182 கொரி 13:11எபி 12:14பிலி 1:27எபே 4:29யோபு 6:6