மத்தேயு 22

Matthew 22

திருமண விருந்து பற்றிய உவமை

மீண்டும் இயேசு அவர்களோடு உவமைகள் மூலம் பேசி, பரலோக அரசைப் பற்றிச் சொன்னதாவது: மத் 20:1-16மத் 12:43-45லூக் 14:16லூக் 8:10மத் 13:3-11மத் 21:28-46மத் 9:15-17மாற் 4:33-34 “பரலோக அரசு ஒரு அரசன் தனது மகனின் திருமண விருந்தை ஆயத்தப்படுத்தியதற்கு ஒப்பாயிருக்கிறது. மத் 13:24வெளி 19:7-9எபே 5:24-322 கொரி 11:2சங் 45:10-16யோவா 3:29-30லூக் 14:16-24மத் 13:31-33 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை வரும்படி அழைப்பதற்கு, அவன் தன் வேலைக்காரர்களை அவர்களிடம் அனுப்பினான். அவர்களோ வர மறுத்துவிட்டார்கள். வெளி 22:17யோவா 5:40லூக் 14:15-17ஓசி 11:7மத் 3:2சங் 81:10-12ரோம 10:211 சாமு 9:13

“அவன் இன்னும் சில வேலைக்காரர்களை அனுப்பி, ‘அழைக்கப்பட்டவர்களிடம், நான் என்னுடைய விருந்தை ஆயத்தம் செய்திருக்கிறேன்: சிறப்பான விருந்து 1 உங்களுக்கென்று படைக்கப்பட்டு, எல்லாம் ஆயத்தமாய் இருக்கின்றன. திருமண விருந்துக்கு வாருங்கள் என்று சொல்லுங்கள்’ என்றான். அப் 13:46யோவா 6:50-57மத் 21:361 கொரி 5:7-8அப் 1:8அப் 11:19-20அப் 28:17-31லூக் 10:1-16

“ஆனால் அழைக்கப்பட்டவர்களோ, அதைக் கவனிக்காமல் தங்கள் வேலைகளுக்குச் சென்றார்கள்; ஒருவன் வயலுக்கும் வேறொருவன் தனது வியாபாரத்துக்கும் போனான். எபி 2:3லூக் 14:18-201 யோவா 2:15-161 தீமோ 6:9-102 தீமோ 3:4அப் 2:13அப் 24:25ஆதி 19:14 மற்றவர்களோ, அரசனுடைய வேலைக்காரர்களைப் பிடித்துத் துன்புறுத்தி அவர்களைக் கொன்றார்கள். யோவா 15:19-201 தெச 2:14-15அப் 4:1-3அப் 5:40-41அப் 7:51-57அப் 8:1யோவா 16:2-3மத் 10:12-18 அரசன் கடுங்கோபமடைந்தான். அவன் தனது படைகளை அனுப்பி, அந்தக் கொலைகாரர்களை அழித்து, அவர்களுடைய பட்டணத்தை எரித்தான். லூக் 19:271 பேது 4:17-18யோவே 2:25லூக் 21:241 தெச 2:16தானி 9:26உபா 28:49-68ஏசா 13:2-5

“பின்பு அரசன் தன் வேலைக்காரர்களிடம், ‘திருமண விருந்து ஆயத்தமாயிருக்கிறது. ஆனால் நான் அழைத்தவர்களோ, அதற்குத் தகுதியற்றவர்களாய்ப் போனார்கள். 2 தெச 1:5அப் 13:46வெளி 3:4லூக் 20:35வெளி 22:14லூக் 21:36மத் 10:11-13மத் 10:37-38 இப்பொழுது வீதிகளின் சந்திகளுக்குப் போங்கள், நீங்கள் காண்கிறவர்கள் யாராயிருந்தாலும் விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றான். லூக் 14:21-24மாற் 16:15-16நீதி 1:20-23அப் 13:47எபே 3:8எசேக் 21:21ஏசா 55:1-3ஏசா 55:6-7 எனவே வேலைக்காரர்கள் வெளியே வீதிகளில் போய், நல்லவர்களும் கெட்டவர்களுமான தாங்கள் கண்ட எல்லா மக்களையும் கூட்டிச் சேர்த்தார்கள். திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிரம்பியது. 1 கொரி 6:9-111 யோவா 2:192 கொரி 12:21மத் 13:47-48வெளி 19:6-9வெளி 2:20-23வெளி 7:9மத் 22:11-12

“அரசன் விருந்தினரைப் பார்க்க உள்ளே வந்தபோது, திருமண உடை உடுத்தியிராத ஒருவன் அங்கேயிருப்பதைக் கண்டான். வெளி 19:8வெளி 3:4-5எபி 4:12-13சகரி 3:3-4கொலோ 3:10-11எபே 4:24வெளி 16:15ரோம 13:14 அரசன், ‘நண்பனே, திருமண உடையின்றி, நீ எப்படி இங்கே வந்தாய்?’ என்று கேட்டான். அவன் பேச்சற்று நின்றான். 1 சாமு 2:9யோபு 5:16மத் 20:13அப் 5:2-11எரே 2:23எரே 2:26மத் 26:50சங் 107:42

“அப்பொழுது அரசன் ஏவலாட்களிடம், ‘அவனுடைய கையையும் காலையும் கட்டி, வெளியே இருளில் தள்ளுங்கள், அங்கே பற்கடிப்பும் அழுகையும் இருக்கும்’ என்றான். மத் 8:12மத் 25:302 பேது 2:172 பேது 2:42 தெச 1:9யூதா 1:6லூக் 13:28மத் 13:42

“ஏனெனில் அநேகர் அழைக்கப்படுகிறார்கள், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலர்.” 2 பேது 1:10லூக் 13:23-24வெளி 17:14மத் 7:13-14மத் 20:16மத் 24:22

வரி செலுத்துவதைப்பற்றிய கேள்வி

பின்பு பரிசேயர் போய், இயேசுவின் வார்த்தையிலே அவரைக் குற்றம் கண்டுபிடிப்பதற்குத் திட்டமிட்டார்கள். லூக் 20:20-26மாற் 12:13-17சங் 2:2சங் 56:5-7சங் 59:3எபி 12:3ஏசா 29:21எரே 18:18 பரிசேயர்கள் ஏரோதியர்களுடன் தங்கள் சீடரை இயேசுவினிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் அவரிடம், “போதகரே, நீர் நேர்மையானவரும், இறைவனின் வழியை சத்தியத்தின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். நீர் மனிதருக்கு முகதாட்சண்யம் காட்டாதவராய் இருப்பதால் ஆள்பார்த்து எதையும் செய்யமாட்டீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். மாற் 3:6லூக் 20:21மாற் 12:14மாற் 8:151 யோவா 5:20எரே 9:3-5யோவா 14:6யோவா 18:37 ஆகவே ரோமப் பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியானதா? இல்லையா? உம்முடைய அபிப்பிராயத்தை எங்களுக்குச் சொல்லும்” என்றார்கள். லூக் 2:1ரோம 13:6-7மத் 17:25அப் 28:22அப் 17:7அப் 25:8அப் 5:37உபா 17:14-15

ஆனால் இயேசுவோ, அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்தவராய் அவர்களிடம், “வேஷக்காரர்களே! நீங்கள் ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? யோவா 2:25யோவா 8:6லூக் 5:22அப் 5:9வெளி 2:23லூக் 10:25லூக் 20:23லூக் 9:47 வரியைச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தும் நாணயத்தை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு வெள்ளிக்காசை அவரிடம் கொண்டுவந்தார்கள். மத் 20:2மத் 18:28வெளி 6:6 இயேசு அவர்களிடம் அந்த நாணயத்தைக் காட்டி, “இந்த நாணயத்திலுள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையவை?” என்று கேட்டார். லூக் 20:24

அதற்கு அவர்கள், “ரோமப் பேரரசன் சீசருடையது” என்றார்கள். ரோம 13:7நீதி 24:21அப் 4:191 பேது 2:13-17மல்கி 1:6-8மத் 22:37தானி 6:20-23அப் 5:29

அப்பொழுது இயேசு அவர்களிடம், “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.

அவர்கள் இதைக் கேட்டவுடன் வியப்படைந்து இயேசுவை விட்டுச் சென்றார்கள். மாற் 12:12அப் 6:10கொலோ 4:6லூக் 20:25-26மத் 10:16மத் 22:33மத் 22:46நீதி 26:4-5

உயிர்த்தெழுதலில் திருமணம்

அதே நாளில் உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கிற சதுசேயர் அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கும்படி வந்தார்கள். அப் 4:1அப் 23:6-8லூக் 20:27-40மத் 3:7மாற் 12:18-271 கொரி 15:12-14அப் 5:172 தீமோ 2:18 “போதகரே, ‘ஒருவன் பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் இறந்தவனுடைய மனைவியைத் திருமணம் செய்து, இறந்தவனுக்காகப் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும்’ என்று மோசே எங்களுக்குச் சொல்லியிருக்கிறார். உபா 25:5-10லூக் 20:28மத் 22:16மத் 7:21மாற் 12:19ரூத் 1:11ஆதி 38:11ஆதி 38:8 எங்கள் மத்தியில் ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். மூத்தவன் திருமணம் செய்து, பின் இறந்துபோனான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லாததால், அவன் தனது மனைவியைத் தனது சகோதரனுக்கு விட்டுப்போனான். எபி 9:27லூக் 20:29-33மாற் 12:19-23 அப்படியே இரண்டாம், மூன்றாம் சகோதரருக்கும் முறையே ஏழாவது சகோதரன்வரை எல்லோருக்கும் அவள் மனைவியானாள். கடைசியாக அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.

இயேசு அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் வேதவசனங்களையும் இறைவனுடைய வல்லமையையும் அறியவில்லை. அதனால்தான் நீங்கள் தவறான எண்ணம் கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். யோவா 20:9ரோம 15:4லூக் 1:37தானி 12:2-3எரே 32:17ஏசா 26:19பிலி 3:21சங் 17:15 உயிர்த்தெழுதலில் மக்கள் திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலுள்ள தூதரைப் போல் இருப்பார்கள். லூக் 20:34-36மாற் 12:24-251 கொரி 7:29-31யோவா 5:28-29மத் 24:381 யோவா 3:1-2மத் 13:43சங் 103:20 இறந்தவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்து, இறைவன் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா? மத் 21:16மத் 12:3மத் 12:7மத் 21:42மத் 9:13 ‘நானே ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்’ 2 அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவன்” என்றார். யாத் 3:6மாற் 12:26-27அப் 7:32லூக் 20:37-38யாத் 3:15-16எபி 11:16

மக்கள் கூட்டம் இதைக் கேட்டபோது, அவருடைய போதனைகளைக் குறித்து வியப்படைந்தார்கள். யோவா 7:46லூக் 2:47லூக் 20:39-40லூக் 4:22மத் 22:22மத் 7:28-29மாற் 12:17மாற் 6:2

மிகப்பெரிய கட்டளை

இயேசு சதுசேயர்களை வாயடைத்துப் போகச் செய்தார் என்று கேள்விப்பட்டபோது, பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தார்கள். மாற் 12:28-31மத் 25:3-5ஏசா 41:5-7யோவா 11:47-50மத் 12:14அப் 19:23-28அப் 21:28-30அப் 5:24-28 அவர்களில் மோசேயின் சட்டத்தில் தேறின ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்டு அவரைச் சோதித்தான்: லூக் 7:30லூக் 10:25-37லூக் 11:45-46லூக் 11:52லூக் 14:3மத் 22:18தீத் 3:13மாற் 10:2 “போதகரே, மோசேயின் சட்டத்தில் மிகப்பெரிய கட்டளை எது?” என்றான். மாற் 12:28-33மத் 5:19-20லூக் 11:42மத் 23:23-24ஓசி 8:12மத் 15:6

இயேசு அவனுக்குப் பதிலாக, “உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக. 3 மாற் 12:29-30லூக் 10:27உபா 6:5உபா 10:12மாற் 12:33உபா 30:61 யோவா 5:2-5எபி 10:16-17 இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை. இரண்டாவதும் இதைப் போன்றதே: நீ உன்னில் அன்பாய் இருப்பதுபோல, உன் அயலானிலும் அன்பாய் இரு. 4 மாற் 12:31லூக் 10:27-37லேவி 19:18ரோம 13:9-10கலா 5:14மத் 19:19ரோம 15:2யாக் 2:8 முழு மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் இந்த இரண்டு கட்டளைகளிலும் அடங்கி இருக்கின்றன” என்றார். ரோம 13:9மத் 7:121 யோவா 4:19-21யாக் 2:81 யோவா 4:7-11யோவா 1:171 தீமோ 1:5ரோம 3:19-21

கிறிஸ்து யாருடைய மகன்?

பரிசேயர் ஒன்றுகூடியபோது, இயேசு அவர்களிடம், லூக் 20:41-44மாற் 12:35-37மத் 22:34மத் 22:15 “நீங்கள் கிறிஸ்துவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்டார். எரே 23:5-6ஆமோ 9:11எசேக் 34:23-24யோவா 6:68-69மத் 16:13-17ஏசா 11:1-4ஏசா 7:13-14ஏசா 9:6-7

அதற்கு அவர்கள், “அவர் தாவீதின் மகன்” என்று பதிலளித்தார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், “அப்படியானால் தாவீது பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு பேசுகையில், அவரைக், ‘கர்த்தர்’ என்று அழைத்தது எப்படி?” ஏனெனில் தாவீது, 2 சாமு 23:2வெளி 4:2எபி 3:7மாற் 12:362 பேது 1:21அப் 1:16அப் 2:30-31லூக் 2:26-27

“ ‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது: சங் 110:1எபி 1:13அப் 2:34-351 கொரி 15:25எபி 1:3எபி 10:12-13எபி 12:2ஆதி 3:15

“நான் உமது பகைவரை உமது பாதபடியாக்கும்வரை,

எனது வலதுபக்கத்தில் உட்காரும்” ’

என்று சொல்லியிருக்கிறாரே. 5 தாவீது அவரைக் ‘கர்த்தர்,’ என்று அழைத்தான். அப்படியிருக்க கிறிஸ்து எப்படி அவனுக்கு மகனாய் இருக்கமுடியும்?” என்று கேட்டார். வெளி 22:16ரோம 1:3-4யோவா 8:581 தீமோ 3:16பிலி 2:6-8எபி 2:14ரோம 9:5 அவருக்கு யாராலும், ஒரு வார்த்தையும் பதிலாகச் சொல்ல முடியவில்லை. அன்றிலிருந்து, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை. மாற் 12:34லூக் 20:40லூக் 14:6அப் 4:14ஏசா 50:2-9யோவா 8:7-9யோபு 32:15-16லூக் 13:17