கோடைகாலத்தில் உறைபனியும் நீதி 19:10நீதி 28:161 சாமு 12:17-18எஸ்த 4:6சங் 12:8சங் 15:4பிரச 10:5-7எஸ்த 3:1-15
அறுவடை காலத்தில் மழையும் தகாததுபோல், மூடருக்கு மேன்மை பொருத்தமற்றது.
சிறகடித்துப் பறக்கும் அடைக்கலான் குருவியைப்போலவும் விரைந்து பறக்கும் இரட்டைவால் குருவியைப்போலவும் எண் 23:8நெகே 13:2சங் 109:282 சாமு 16:12உபா 23:4-51 சாமு 17:43நீதி 27:81 சாமு 14:28-29
காரணமின்றி இடப்பட்ட சாபமும் தங்காது.
குதிரைக்கு சவுக்கும், கழுதைக்கு கடிவாளமும், நீதி 10:131 கொரி 4:21சங் 32:92 கொரி 10:62 கொரி 13:2நியாயாதி 8:5-7நீதி 17:10நீதி 19:25
மூடரின் முதுகிற்கு பிரம்பும் ஏற்றது.
மூடர்களுக்கு அவர்களுடைய மூடத்தனத்தின்படி பதில் சொல்லாதே; நீதி 26:51 பேது 3:9யூதா 1:91 இராஜா 12:14நீதி 17:141 இராஜா 12:162 சாமு 19:41-43நியாயாதி 12:1-6
சொன்னால் நீயும் அவர்களைப்போல் இருப்பாய்.
மூடருக்கு அவர்களுடைய மூடத்தனத்திற்கேற்ற பதிலைக் கொடு; ரோம 12:16மத் 16:1-4நீதி 3:7யோவா 8:7யோவா 9:26-33லூக் 12:13-21மத் 21:23-27நீதி 26:12
இல்லாவிட்டால் அவர்கள் தங்களை ஞானமுள்ளவர்கள் என்று எண்ணிக்கொள்வார்கள்.
மூடருடைய கையில் செய்தி கொடுத்து அனுப்புவது, நீதி 10:26நீதி 25:13நீதி 13:17எண் 13:31
தன் காலைத் தானே வெட்டுவதைப் போலவும் கேடு விளைவிப்பது போலவும் இருக்கும்.
மூடரின் வாயிலுள்ள பழமொழி, நீதி 26:9நீதி 17:7சங் 64:8மத் 7:4-5சங் 50:16-21லூக் 4:23
பெலனற்றுத் தொங்கும் முடவரின் கால்கள்போல் இருக்கும்.
மூடருக்குக் கனத்தைக் கொடுப்பது, நீதி 26:1நீதி 30:22நீதி 19:10
கவணிலே கல்லைக் கட்டுவதுபோல் இருக்கும்.
மூடரின் வாயிலுள்ள பழமொழி, நீதி 23:35
குடிகாரனின் கையிலுள்ள முட்செடியைப் போலிருக்கும்.
மூடரையோ வழிப்போக்கரையோ கூலிக்கு அமர்த்துபவன், நீதி 11:31ரோம 2:6
கண்டபடி அம்புகளை எய்து காயப்படுத்தும் வில்வீரனைப் போலிருக்கிறான்.
நாய் தான் கக்கினதை மீண்டும் தேடிப்போகிறது போல, 2 பேது 2:22மத் 12:45யாத் 8:15
மூடரும் தம் மூடத்தனத்திற்குத் திரும்புகிறார்கள்.
தன்னைத்தானே ஞானமுள்ளவனென்று எண்ணுகிறவனைக் காண்கிறாயா? 1 கொரி 3:18-19நீதி 29:20நீதி 26:5நீதி 28:11ரோம 12:16வெளி 3:17லூக் 18:11மத் 21:31
அவனைவிட மூடன் திருந்துவானென்று நம்பலாம்.
“வீதியிலே சிங்கம் நிற்கிறது, நீதி 22:13நீதி 19:15நீதி 15:19
ஒரு பயங்கர சிங்கம் வீதிகளில் நடமாடித் திரிகிறது!” என்று சோம்பேறி சொல்லுகிறான்.
ஒரு கதவு அதின் கீழ்ப்பட்டையில் முன்னும் பின்னும் திரும்புகிறது போல, எபி 6:12நீதி 12:24நீதி 12:27நீதி 24:33நீதி 6:9-10
சோம்பேறியும் தனது படுக்கையில் திரும்பத்திரும்ப புரளுகிறான்.
சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்; நீதி 19:24
அதைத் தங்கள் வாய்க்கு கொண்டுவர முடியாத அளவுக்கு அவர்கள் சோம்பேறியாய் இருக்கிறார்கள்.
விவேகமாய் பதில்சொல்கிற ஏழு மனிதரைவிட, 1 பேது 3:15நீதி 26:12நீதி 12:15
சோம்பேறி தன் பார்வையில் தன்னை ஞானமுள்ளவன் என எண்ணுகிறான்.
வேறு ஒருவரின் வாக்குவாதத்தில் தலையிடுகிறவன், நீதி 20:32 தீமோ 2:23-24நீதி 18:6லூக் 12:14நீதி 17:11
தெருநாயின் காதைப்பிடித்து இழுக்கிறவனைப் போலிருக்கிறான்.
தீப்பந்தங்களையும் கொல்லும் அம்புகளையும் நீதி 25:18ஏசா 50:11நீதி 7:23ஆதி 49:23
எய்கிற பைத்தியக்காரனைப் போலவே,
தன் அயலானை ஏமாற்றிவிட்டு, எபே 5:4நீதி 10:23நீதி 14:9நீதி 15:212 பேது 2:13
“நான் விளையாட்டாகத்தான் செய்தேன்!” எனச் சொல்கிறவன் இருக்கிறான்.
விறகில்லாமல் நெருப்பு அணைந்து போவதுபோல, நீதி 16:28யாக் 3:6நீதி 22:10நீதி 26:22
புறங்கூறுகிறவன் இல்லாவிட்டால் வாக்குவாதங்கள் அடங்கும்.
தணலுக்குக் கரியும், நெருப்புக்கு விறகும் தேவைப்படுவதுபோலவே, நீதி 15:18நீதி 29:222 சாமு 20:11 இராஜா 12:2-31 இராஜா 12:20நீதி 10:12நீதி 30:33சங் 120:4
சச்சரவை மூட்டி விடுவதற்குச் சண்டைக்காரன் தேவை.
புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை; நீதி 18:8நீதி 20:19எசேக் 22:9
அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும்.
தீய இருதயத்தை இனிய பேச்சால் மறைப்பது, லூக் 22:47-48லூக் 11:39நீதி 10:18எசேக் 33:31மத் 23:27நீதி 25:42 சாமு 20:9-10
மண் பாத்திரத்தை வெள்ளிப் பூச்சால் பளபளக்கச் செய்வது போலிருக்கிறது.
தீயநோக்கமுள்ள மனிதன் தன் உதடுகளினால் தன் எண்ணங்களை மறைக்கிறான்; நீதி 12:20நீதி 10:18சங் 41:6நீதி 12:17நீதி 12:5நீதி 14:8நீதி 11:1
ஆனால் தன் இருதயத்திலோ வஞ்சனையை நிறைத்து வைத்திருக்கிறான்.
அவனுடைய பேச்சு கவர்ச்சியாயிருந்தாலும், நீ அவனை நம்பாதே; நீதி 6:16-19எரே 12:6சங் 28:3எரே 9:2-8சங் 12:2மத் 24:23மீகா 7:5
அவனுடைய இருதயம் ஏழு அருவருப்புகளால் நிறைந்திருக்கின்றது.
அவனுடைய பகை ஏமாற்றத்தால் மறைக்கப்பட்டிருந்தாலும், சங் 55:21-231 சாமு 18:171 சாமு 18:212 சாமு 13:22-282 சாமு 3:27-30ஆதி 4:8
அவனுடைய கொடுமையோ மக்கள் மத்தியில் வெளியரங்கமாகும்.
ஒருவன் இன்னொருவனுக்குக் குழி தோண்டினால், அவன் தானே அதற்குள் விழுவான்; நீதி 28:10சங் 9:15சங் 7:15-16சங் 10:2பிரச 10:8சங் 57:6எஸ்த 7:10
ஒருவன் கல்லை மேல்நோக்கி உருட்டிவிட்டால், அந்தக் கல் திரும்பி அவன் மேலேயே உருண்டு விழும்.
பொய்பேசும் நாவு தான் புண்படுத்தியவர்களையே வெறுக்கிறது; யோவா 8:44-49லூக் 20:20-21யோவா 10:32-33நீதி 29:5நீதி 6:24நீதி 7:21-23நீதி 7:5யோவா 15:22-24
முகஸ்துதி பேசும் வாய் அழிவைக் கொண்டுவரும்.