மத்தேயு 3

Matthew 3

யோவான் ஸ்நானகன்

அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் யூதேயாவின் பாலைவனப் பகுதியில் வந்து, ஏசா 40:3-6யோவா 1:6-8லூக் 1:13-17லூக் 1:76லூக் 3:1-20மத் 11:11அப் 19:3-4அப் 13:24-25 “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” எனப் பிரசங்கித்தான். மாற் 1:15மத் 4:172 கொரி 7:10தானி 2:44லூக் 24:47மத் 10:7மத் 6:10அப் 3:19

“ ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், ஏசா 40:3மல்கி 3:1யோவா 1:23ஏசா 57:14-15லூக் 1:76மாற் 1:3லூக் 1:17லூக் 3:3-6

அவருக்காக பாதைகளை நேராக்குங்கள்’

என்று பாலைவனத்தில் ஒரு குரல் கூப்பிடுகிறது,” 1

என்று இறைவாக்கினன் ஏசாயாவின் மூலம் கூறப்பட்டவன் இவனே.

யோவானின் உடைகள் ஒட்டக முடியினால், செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது. 2இராஜா 1:8லேவி 11:22மத் 11:8மாற் 1:6சகரி 13:4லூக் 1:17மல்கி 4:51 சாமு 14:25-27 மக்கள் எருசலேமிலிருந்தும், யூதேயா முழுவதிலிருந்தும், யோர்தான் பகுதி முழுவதிலிருந்தும் அவனிடம் சென்றார்கள். மாற் 1:5யோவா 3:23யோவா 5:35லூக் 16:16லூக் 3:7மத் 11:7-12மத் 4:25 அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்கு பெற்றார்கள். அப் 19:181 யோவா 1:9மத் 3:13-16அப் 2:38-41எசேக் 36:25எபி 9:10யோவா 1:25-28மத் 3:11

அப்பொழுது, அநேக பரிசேயரும் சதுசேயரும் 2 திருமுழுக்கு கொடுக்கும் இடத்திற்கு வருவதை யோவான் கண்டு அவர்களிடம் சொன்னதாவது: “விரியன் பாம்புக் குட்டிகளே! வரப்போகும் கடுங்கோபத்திலிருந்து தப்பியோடும்படி உங்களை எச்சரித்தது யார்? மத் 12:341 தெச 1:10மத் 22:23மத் 23:33ரோம 5:9மத் 16:6மத் 23:13-28ரோம 1:18 நீங்கள் மனந்திரும்பியிருந்தால், அதற்கேற்ற கனியைக் காண்பியுங்கள். லூக் 3:8அப் 26:202 பேது 1:4-8கலா 5:22-23எபே 5:9பிலி 1:11ஏசா 1:16-17எரே 36:3 ‘ஆபிரகாம் எங்களுக்கு தகப்பனாக இருக்கிறார்’ என்று உங்களால் சொல்லமுடியும் என நினைக்கவேண்டாம். இந்தக் கற்களிலிருந்துங்கூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க இறைவனால் முடியும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக் 3:8ரோம 9:7-8கலா 3:27-29யோவா 8:33அப் 13:26கலா 4:22-31ரோம 4:1லூக் 16:24 கோடாரி ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டுள்ளது, நல்ல கனிகொடாத ஒவ்வொரு மரமும் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும். யோவா 15:6லூக் 3:9மத் 7:19யோவா 15:2லூக் 13:6-9எசேக் 15:2-7எரே 17:8மல்கி 3:1-3

“நான் மனந்திரும்புதலுக்கென்று தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். ஆனால் என்னிலும் வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார். அவரது பாதரட்சைகளைச் சுமக்கக்கூட நான் தகுதியற்றவன் 3. அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும் திருமுழுக்கு கொடுப்பார். ஏசா 4:4லூக் 3:16அப் 1:5சகரி 13:9அப் 2:2-4மல்கி 3:2-4மாற் 1:7-8தீத் 3:5 அவர் தமது கரத்தில் தூற்றுக்கூடை ஏந்தி, தமது களத்தைச் சுத்தம் செய்வார். அவர் தன் தானியங்களை களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணைந்து போகாத நெருப்பில் எரித்துப்போடுவார்” என்றான். மல்கி 4:1மத் 13:30லூக் 3:17ஏசா 41:16எரே 51:2மத் 13:41சங் 1:4எரே 7:20

இயேசுவின் திருமுழுக்கு

அப்பொழுது இயேசு, கலிலேயாவிலிருந்து யோவானால் திருமுழுக்கு பெறும்படி யோர்தானுக்கு வந்தார். யோவா 1:32-34மத் 2:22மாற் 1:9-11லூக் 3:21-22 ஆனால் யோவான் அவரிடம், “நான் உம்மிடம் திருமுழுக்கு பெற வேண்டியிருக்க, நீர் என்னிடம் வருகிறீரா?” என்று சொல்லி, அவரைத் தடுக்க முயற்சித்தான். யோவா 3:3-7அப் 1:5-8யோவா 13:6-8எபே 2:3-5கலா 3:22கலா 3:27-29கலா 4:6யோவா 1:16

அதற்கு இயேசு, “இப்பொழுது இடங்கொடு; இவ்விதமாக எல்லா நீதியையும் முழுவதுமாய் நிறைவேற்றுவது நமக்குத் தகுதியாய் இருக்கிறது” எனப் பதிலளித்தார். அப்பொழுது யோவான் அதற்கு ஒப்புக்கொண்டான். யோவா 4:34ஏசா 42:21யோவா 13:15யோவா 15:10லூக் 1:6பிலி 2:7-8சங் 40:7-8யோவா 13:7-9

இயேசு திருமுழுக்கு பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே பரலோகம் திறக்கப்பட்டு, இறைவனின் ஆவியானவர் ஒரு புறாவைப்போன்று இறங்கி, அவர்மேல் அமர்வதைக் கண்டார். ஏசா 11:2லூக் 3:21-22மாற் 1:10ஏசா 42:1யோவா 1:31-34ஏசா 61:1அப் 7:56எசேக் 1:1 அப்பொழுது பரலோகத்திலிருந்து ஒரு குரல், “இவர் என் மகன், நான் இவரில் அன்பாயிருக்கிறேன்; இவரில் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்” என்று உரைத்தது. ஏசா 42:1மத் 17:5சங் 2:7லூக் 9:35மத் 12:18மாற் 9:72 பேது 1:17லூக் 3:22