மனிதனின் திட்டம்
தங்கள் படுக்கைகளிலிருந்து எழும்புவதற்கு முன்பே தீமையான சூழ்ச்சிசெய்து, சங் 36:4ஏசா 32:7சங் 7:14-16ஓசி 7:6-7நாகூ 1:11நீதி 6:12-19நீதி 4:16ரோம 1:30
அநியாயத்தைத் திட்டமிடுகிறவர்களுக்கு ஐயோ கேடு,
அதைச் செய்யத்தக்க பலம் அவர்களில் இருப்பதனால்
விடியற்காலமாகிறபோது அதைச் செயல்படுத்துகிறார்கள்.
வயல்களை ஆசைப்பட்டு, ஏசா 5:8ஆமோ 8:4எரே 22:17எசேக் 18:121 இராஜா 21:2-191 சாமு 12:3-41 தீமோ 6:102இராஜா 9:26
அவற்றைப் பறித்துக்கொள்கிறார்கள்.
வீடுகளையும் அநீதியாய் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஒருவனுடைய வீட்டையும், அவனுடைய சொத்தையும் ஏமாற்றிப் பறிக்கிறார்கள்.
ஆகையால் யெகோவா சொல்கிறதாவது: ஆமோ 5:13ஏசா 2:11-12எரே 8:3எரே 18:11ஆமோ 9:1-4ஏசா 28:14-18யாக் 2:13புலம் 2:17
“இந்த மக்களுக்கு எதிராக ஒரு பேராபத்தைத் திட்டமிட்டிருக்கிறேன்,
அதிலிருந்து நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளமுடியாது.
இனிமேல் நீங்கள் பெருமையாய் நடக்கவும் முடியாது.
ஏனெனில் அது பேரழிவின் காலமாயிருக்கும்.
அந்த நாள் வரும்போது மனிதர் உங்களை இழிவாகப் பேசுவார்கள்; ஆப 2:6உபா 28:29ஏசா 24:3ஏசா 6:11எரே 9:10எரே 9:17-21மீகா 1:15எண் 23:7
அவர்கள் உங்கள்மீது புலம்பல் பாடுவார்கள்.
இந்த விதமாய் நீங்கள் பாடுவதுபோல் பாடி கேலி செய்வார்கள்:
‘நாம் முற்றிலும் பாழானோம்;
நமது மக்களின் உடைமைகள் பிரித்துக்கொடுக்கப்பட்டன.
யெகோவா நம்மிடமிருந்து அதை எடுத்துக்கொள்கிறார்!
நம் வயல்வெளிகளையோ அவர் நமது எதிரிகளுக்குக் கொடுக்கிறார்’ ”
என்று புலம்புவார்கள்.
ஆதலால் நிலத்தைச் சீட்டுப்போட்டு பாகம் பிரித்து உபா 32:8யோசு 18:4யோசு 18:10உபா 23:2உபா 23:8ஓசி 9:3நெகே 7:61சங் 16:6
யெகோவாவின் சபையில் உள்ளவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும்போது,
அதைப் பெற்றுக்கொள்வதற்கு உங்களில் ஒருவனும் இருக்கமாட்டான்.
பொய் தீர்க்கதரிசிகள்
மக்களின் தீர்க்கதரிசிகளே, “நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லாதீர்கள், ஆமோ 2:12ஏசா 30:10அப் 5:40எசேக் 3:261 தெச 2:15-16அப் 4:17அப் 5:28அப் 7:51
இவற்றைக் குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லாதீர்கள்.
அவமானம் எங்கள்மேல் வரமாட்டாது” என்று எனக்குச் சொல்கிறீர்கள்.
மேலும் நீங்கள், யாக்கோபின் வீட்டாரே, சங் 84:11எரே 15:16சங் 15:2ஓசி 14:9ஏசா 50:2நீதி 10:29நீதி 10:9நீதி 28:18
“யெகோவாவின் ஆவியானவர் கோபம் கொண்டுள்ளாரோ?
அவர் இப்படியானவற்றைச் செய்கிறவரோ?”
“நீதியான வழியில் நடக்கிறவனுக்கு
என் வார்த்தைகள் நன்மையைச் செய்யாதோ?
என்று அவர் சொல்கிறார் அல்லவா” என்றும் சொல்கிறீர்கள்.
அதற்கு யெகோவா சொல்கிறதாவது, 2 சாமு 20:19சங் 120:6-72 நாளாக 28:5-8ஏசா 9:21சங் 55:20
அண்மைக்காலமாக நீங்கள் என் மக்களுக்கெதிராக
ஒரு பகைவனைப் போல் எழும்பியிருக்கிறீர்கள்.
நீங்கள் போரிலிருந்து திரும்பி வருகிறவர்களைப்போல் நடந்து,
கவலையின்றி போகிறவனிடமிருந்து,
விலையுயர்ந்த அங்கியை உரிந்து எடுக்கிறீர்கள்.
என் மக்களுள் இருக்கும் பெண்களை, எசேக் 39:21ஆப 2:14லூக் 20:471 சாமு 26:192 கொரி 3:182 கொரி 4:6எரே 10:20யோவே 3:6
அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்த வீடுகளிலிருந்து நீங்கள் துரத்திவிடுகிறீர்கள்.
அவர்களுடைய பிள்ளைகளிடமிருந்தும்,
என் ஆசீர்வாதங்களை என்றென்றுமாய் எடுத்துப் போடுகிறீர்கள்.
எழுந்து போய்விடுங்கள், உபா 12:9சங் 106:382இராஜா 17:6எபி 4:1-91 இராஜா 9:72 நாளாக 7:202இராஜா 15:29உபா 30:18
இது உங்கள் இளைப்பாறுதலின் இடமல்ல,
ஏனெனில் இது உங்கள் பாவங்களால் கறைப்பட்டு
திருத்த முடியாத அளவு பாழாய்ப் போய்விட்டது.
என் மக்களே, பொய்யனும் வஞ்சகனுமான ஒருவன் உங்களிடம் வந்து, எரே 5:312 கொரி 11:13-15ஏசா 30:10-11எரே 23:171 யோவா 4:11 இராஜா 22:62 நாளாக 18:19-222 தெச 2:8-11
“உங்களுக்கு அதிக திராட்சை இரசமும், மதுபானமும் கிடைக்கும்
என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன்”
என்பானாயின்
அவனே உங்களுக்கு ஒரு சரியான தீர்க்கதரிசி.
மீட்பிற்கான வாக்குத்தத்தம்
யாக்கோபே, ஒரு நாளில் உங்கள் எல்லோரையும் மீகா 4:6-7எசேக் 37:21ஓசி 1:11எரே 31:7-10மீகா 5:7எசேக் 36:37ஏசா 11:11எரே 23:3
நிச்சயமாகவே நான் ஒன்றுசேர்ப்பேன்,
இஸ்ரயேலில் எஞ்சியோரை நிச்சயமாகவே நான் ஒன்றுகூட்டுவேன்.
நான் தொழுவத்தின் செம்மறியாடுகளைப் போலவும்,
மேய்ச்சல் நிலத்தின் மந்தைகளைப் போலவும் அவர்களை ஒன்றாய் கொண்டுவருவேன்.
அந்த இடம் மக்களால் நிறைந்திருக்கும்.
அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்துகிறவர் அவர்கள் முன்செல்வார்; ஏசா 52:12ஏசா 45:1-2சகரி 9:14-15எபி 2:14-15யோவா 10:27-30வெளி 7:17எபி 6:20வெளி 17:14
அவர்கள் சிறையிருப்பின் வாசலை உடைத்து வெளியேறுவார்கள்.
அவர்களின் அரசன் அவர்களுக்கு முன்பாகக் கடந்துபோவான்;
யெகோவாவே அவர்களை முன்நின்று வழிநடத்திச் செல்வார்.