நாகூம் 1

Nahum 1

நினிவே பட்டணத்தைக் குறித்த இறைவாக்கு. எல்கோஷ் ஊரைச்சேர்ந்த நாகூமின் தரிசனப் புத்தகம். செப்ப 2:13யோனா 1:2சகரி 9:1ஆதி 10:11ஏசா 13:1நாகூ 2:8எரே 23:33-37ஏசா 14:28

நினிவேக்கு எதிரான யெகோவாவின் கோபம்

யெகோவா தம் மக்கள் தம்மை மட்டுமே வழிபடவேண்டும் என்ற வைராக்கியமுள்ள இறைவன்; யாத் 20:5சகரி 8:2யாத் 34:14சங் 94:1உபா 4:24யோசு 24:19உபா 32:41-43எசேக் 39:25

யெகோவா தம்மை எதிர்க்கிறவர்களை எதிர்க்கிறவரும்,

கடுங்கோபத்தில் பதில் செய்கிறவருமாய் இருக்கிறார்.

யெகோவா தம் எதிரிகளைத் தண்டித்து,

தம் பகைவர்களுக்கு தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

யெகோவா கோபங்கொள்வதில் தாமதிக்கிறவர், அவர் மிகுந்த வல்லமையுமுள்ளவர்; யாத் 34:6-7சங் 147:5நெகே 9:17சங் 103:8சங் 104:3சங் 145:8யாக் 1:19சங் 97:2-5

யெகோவா குற்றவாளிகளை தண்டியாமல் விடமாட்டார்;

அவருடைய வழி சுழல்காற்றிலும், புயல்காற்றிலும் உள்ளது.

மேகங்கள் அவருடைய பாதங்களின் கீழிருக்கும் தூசியாயிருக்கின்றன.

அவர் கடலை அதட்டி வற்றப்பண்ணுகிறார்; ஏசா 33:9சங் 106:9ஏசா 19:5-10ஏசா 44:27ஏசா 50:2-3ஏசா 51:10யோசு 3:13-15சங் 104:7

ஆறுகள் அனைத்தையும் வற்றிப்போகச்செய்கிறார்.

பாசானும், கர்மேலும் வறண்டுபோகின்றன.

லெபனோனின் பூக்கள் வாடுகின்றன.

அவருக்கு முன்பாக மலைகள் அதிரும்; மீகா 1:42 சாமு 22:8எரே 4:24ஆப 3:10ஏசா 64:1-2நியாயாதி 5:5சங் 68:8சங் 97:4-5

குன்றுகள் உருகிப்போகும்.

அவருடைய சமுகத்தில் பூமியும் அதிரும்.

உலகமும், அதன் குடிமக்களும் நடுங்குவார்கள்.

அவருடைய கோபத்தைத் தாங்கி நிற்கக் கூடியவன் யார்? எரே 10:10மல்கி 3:2உபா 32:22-23சங் 76:7நாகூ 1:21 இராஜா 19:11எசேக் 30:16ஏசா 10:16

அவருடைய கடுங்கோபத்தைச் சகிக்கக் கூடியவன் யார்?

அவருடைய கோபம் நெருப்பைப்போல் கொட்டப்படுகிறது;

அவருக்கு முன்பாக கற்பாறைகள் நொறுக்கப்படுகின்றன.

யெகோவா நல்லவர், 2 தீமோ 2:19யோவா 10:27புலம் 3:25யோவா 10:14சங் 91:1-2சங் 100:5சங் 27:5நீதி 18:10

அவர் ஆபத்து வேளைகளில் புகலிடமானவர்.

அவரில் நம்பிக்கையுள்ளவர்களில் அவர் கரிசனையாயிருக்கிறார்.

ஆனாலும் பெருகிவரும் வெள்ளத்தினால் எசேக் 13:13ஏசா 28:17ஏசா 8:22ஆமோ 8:8ஆமோ 9:5-6யோபு 30:15செப்ப 2:132 பேது 3:6-7

நினிவேக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார்;

அவர் தமது எதிரியை இருளுக்குள் துரத்திச் செல்வார்.

அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாக எவ்வித சூழ்ச்சியைச் செய்தாலும் சங் 21:11நீதி 21:30சங் 33:102 கொரி 10:5சங் 2:1-4நாகூ 1:11எசேக் 38:10-11ஏசா 8:9-10

அவர் அதற்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார்;

துன்பம் இரண்டாம் முறையும் வராது.

அவர்கள் முட்களின் நடுவில் சிக்குண்டு, மீகா 7:4ஏசா 5:24மல்கி 4:1நாகூ 3:112 சாமு 23:6-7ஏசா 9:18எரே 51:571 தெச 5:2-3

தங்கள் திராட்சை இரசத்தினால் வெறிகொண்டிருப்பார்கள்.

அவர்கள் உலர்ந்துபோன பயிரின் அடித்தாள்கள் போல் சுட்டெரிக்கப்படுவார்கள்.

நினிவே பட்டணமே, யெகோவாவுக்கு எதிராக தீமையான சூழ்ச்சிசெய்து, நாகூ 1:92 நாளாக 13:71 சாமு 2:122 நாளாக 32:15-192இராஜா 18:13-142இராஜா 18:302இராஜா 19:22-252 சாமு 20:1

கொடுமையானவற்றிற்கு ஆலோசனை கொடுக்கும் ஒருவன்,

உன்னிடமிருந்து புறப்பட்டுள்ளான்.

யெகோவா சொல்வது இதுவே: ஏசா 30:19யோவே 2:19ஏசா 17:14ஏசா 31:8ஏசா 37:36ஏசா 7:20தானி 11:10ஏசா 10:32-34

அசீரியருக்கு அநேக நட்புறவுள்ள நாடுகள் இருந்தன.

“அவர்கள் எண்ணற்றவர்களாக இருந்தாலும் வெட்டப்பட்டு அழிந்துபோவார்கள்.

யூதாவே! நான் உன்னைத் துன்பத்தில் ஒடுக்கியிருந்தாலும்,

இனிமேலும் உன்னை நான் துன்புறுத்ததாதிருப்பேன்.

நான் உன் கழுத்திலிருக்கும், அசீரியர்களுடைய நுகத்தை உடைத்துப்போடுவேன். ஏசா 10:27ஏசா 9:4எரே 2:20ஏசா 14:25சங் 107:14எரே 5:5மீகா 5:5-6

உன் விலங்குகளையும் உடைப்பேன்.”

நினிவேயே! யெகோவா உன்னைக்குறித்து ஒரு கட்டளை கொடுத்திருக்கிறார். சங் 109:13மீகா 5:13ஏசா 46:1-2நீதி 10:72இராஜா 19:37எசேக் 32:22-23சங் 71:31 சாமு 3:13

“உன்னுடைய பெயரைத் தாங்கும் வழித்தோன்றல்கள் உனக்கிருக்க மாட்டார்கள்.

உன் தெய்வங்களின் கோவில்களில் இருக்கிற செதுக்கப்பட்ட உருவச்சிலைகளையும்,

வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களையும் அழிப்பேன்.

நீ வெறுப்புக்குரியவனானபடியால்,

நானே உனக்குப் பிரேதக்குழியை ஆயத்தப்படுத்துவேன்.”

யூதாவே, இதோ சமாதானத்தை அறிவித்து, ஏசா 52:7ரோம 10:15ஏசா 40:9-10அப் 10:36ஏசா 29:7-8லூக் 2:10லூக் 2:14நாகூ 1:11-12

நற்செய்தி கொண்டு வருகிறவனுடைய கால்கள்,

உன் மலைகள்மேல் வருகின்றன.

உன் பண்டிகைகளைக் கொண்டாடு.

உன் நேர்த்திக் கடன்களை நிறைவேற்று.

கொடுமையானவர்கள் இனி உன்மேல் படையெடுத்து வருவதில்லை;

அவர்கள் முழுவதும் அழிக்கப்படுவார்கள்.