யெகோவா ஆட்சி செய்கிறார், பூமி களிகூரட்டும்; சங் 96:10-11சங் 99:1கொலோ 1:13சங் 93:1சங் 98:4-6வெளி 11:17ஏசா 24:14-16ஏசா 49:13
தொலைவில் உள்ள தீவுகள் மகிழட்டும்.
மேகங்களும் காரிருளும் அவரைச் சூழ்கின்றன; சங் 89:14யாத் 19:9நீதி 16:12எபி 1:8-9ஆதி 18:25நாகூ 1:3சங் 99:41 இராஜா 8:10-12
நேர்மையுடனும் நீதியுடனும் அவர் ஆளுகை செய்கிறார்.
நெருப்பு அவருக்கு முன்சென்று, சங் 50:3எபி 12:29சங் 18:82 தெச 1:8மல்கி 4:1தானி 7:10சங் 21:8-9உபா 32:22
சுற்றிலுமுள்ள அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது.
அவருடைய மின்னல் உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கிறது; சங் 77:18வெளி 11:19யாத் 19:16-18எரே 10:10யோபு 9:6சங் 104:32மத் 27:50-51சங் 114:7
பூமி அதைக்கண்டு நடுங்குகிறது.
யெகோவாவுக்கு முன்பாக, பூமியனைத்திற்கும் ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாகவே நாகூ 1:5மீகா 1:3-4ஏசா 24:19-20ஏசா 64:1-2ஆப 3:6சங் 47:2சங் 46:6நியாயாதி 5:4-5
மலைகள் மெழுகுபோல் உருகுகின்றன.
வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கிறது; ஏசா 66:18சங் 19:1சங் 50:62 சாமு 22:47ஏசா 40:5ஏசா 45:6ஏசா 6:3சங் 67:4
எல்லா நாடுகளும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
உருவச்சிலைகளை வணங்குகிற அனைவரும், எரே 10:14எபி 1:6ஏசா 42:17லேவி 26:1வெளி 5:11-14யாத் 20:4ஏசா 41:29ஏசா 44:9-11
விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்கள்;
தெய்வங்களே, நீங்களெல்லோரும் யெகோவாவையே வழிபடுங்கள்.
யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகளினால் சங் 48:11வெளி 18:20சகரி 9:9ஏசா 52:7-10ஏசா 62:11மத் 21:4-9ஏசா 51:3சங் 52:6
சீயோன் கேட்டுக் களிகூருகிறது;
யூதாவின் கிராமங்களும் மகிழ்கின்றன.
யெகோவாவே, நீரோ பூமியெங்கும் மகா உன்னதமானவராய் இருக்கிறீர்; சங் 95:3யாத் 18:11சங் 83:18எரே 10:10பிலி 2:9-11சங் 135:5எபே 1:21சங் 96:4
எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக நீரே உயர்த்தப்பட்டிருக்கிறீர்.
யெகோவாவை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கட்டும்; நீதி 8:13ரோம 12:9எரே 15:21சங் 145:20சங் 34:14தானி 3:282 தெச 3:2ஆமோ 5:15
ஏனெனில் அவர் தமக்கு உண்மையுள்ளோரின் உயிர்களைக் காப்பாற்றி,
கொடியவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறார்.
நீதிமான்கள்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது, யாக் 5:7-11யோவா 12:46நீதி 4:18ஏசா 60:1-2யோபு 22:28சங் 112:4சங் 126:5-6மீகா 7:9
இருதயத்தில் நீதி உள்ளவர்களுக்குக் களிப்புண்டாகிறது.
நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள், சங் 30:4பிலி 4:4சங் 32:11எபி 12:10ஆப 3:17-18சங் 60:6செப்ப 3:14-17ஆப 1:12-13
அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள்.