எண்ணாகமம் 12

Numbers 12

மிரியாமும் ஆரோனும் மோசேயை எதிர்த்தல்

மோசே ஒரு எத்தியோப்பியப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். அந்த எத்தியோப்பியப் பெண்ணின் நிமித்தம் மிரியாமும் ஆரோனும் அவனுக்கு விரோதமாகப் பேசத் தொடங்கினார்கள். யாத் 2:21ஆதி 26:34-35ஆதி 24:37ஆதி 27:46கலா 4:16ஆதி 24:3ஆதி 28:6-9ஆதி 34:14-15 அவர்கள், “யெகோவா மோசே மூலம் மட்டும்தான் பேசியிருக்கிறாரோ? எங்கள் மூலமாகவும் அவர் பேசவில்லையோ?” என்றார்கள். யெகோவா அதைக் கேட்டார். எசேக் 35:12-13எண் 16:3ஏசா 37:4மீகா 6:4பிலி 2:14பிலி 2:32இராஜா 19:4எண் 11:1

மோசே மிகவும் தாழ்மையுள்ளவன். அவன் பூமியிலுள்ள எல்லா மனிதரைப் பார்க்கிலும் தாழ்மையுள்ளவனாயிருந்தான். மத் 11:29யாக் 3:132 கொரி 11:52 கொரி 12:11மத் 5:51 பேது 3:41 தெச 2:7யாக் 3:2-3

உடனே யெகோவா மோசே, ஆரோன், மிரியாம் ஆகியோரிடம், “நீங்கள் மூவரும் வெளியே சபைக் கூடாரத்திற்கு வாருங்கள்” என்றார். மூவரும் வெளியே வந்தார்கள். சங் 76:9எண் 16:16-21 அப்பொழுது யெகோவா மேகத்தூணில் இறங்கிவந்து, சபைக் கூடாரத்தின் வாசலில் நின்றார். அவர் ஆரோனையும், மிரியாமையும் அழைத்தார். அவர்கள் இருவரும் முன்னே வந்தார்கள். எண் 11:25யாத் 34:5யாத் 40:38சங் 99:7 அப்பொழுது யெகோவா அவர்களிடம் சொன்னது: “என் வார்த்தைகளைக் கேளுங்கள்: 1 இராஜா 3:5ஆதி 31:10-11ஆதி 46:2அப் 22:17-18லூக் 1:22தானி 10:8லூக் 1:11எசேக் 1:1

“உங்களுக்குள் இறைவாக்குரைப்பவன் ஒருவன் இருந்தால்,

யெகோவாவாகிய நான் அவனுக்குத் தரிசனங்களில் என்னை வெளிப்படுத்துவேன்,

கனவுகளில் அவனோடு பேசுவேன்.

ஆனால் என் அடியவன் மோசேயுடனோ அப்படியல்ல; எபி 3:2-6யோசு 1:1சங் 105:261 கொரி 4:2மத் 11:111 பேது 2:4-51 தீமோ 3:15அப் 3:22-23

என் முழு வீட்டிலுமே அவன் உண்மையுள்ளவனாயிருக்கிறான்.

ஆகையால் நான் அவனோடு நேரடியாகவே பேசுகிறேன், உபா 34:101 கொரி 13:12யாத் 24:10-11யாத் 33:11யாத் 33:23லூக் 10:162 கொரி 4:4-6யோவா 14:7-10

புரியாதவிதமாக அல்ல தெளிவாகவே பேசுகிறேன்;

அவன் யெகோவாவின் சாயலைக் காண்கிறான்.

அப்படியிருக்க, என் அடியான் மோசேக்கு விரோதமாய்ப் பேசுவதற்கு

நீங்கள் ஏன் பயப்படவில்லை?”

அப்பொழுது யெகோவாவின் கோபம் அவர்களுக்கெதிராக மூண்டது, அவர் அவர்களைவிட்டு விலகிப்போனார். ஆதி 17:22ஓசி 5:15எண் 11:1

அந்த மேகம் கூடாரத்திலிருந்து எழும்பியவுடன் மிரியாம் உறைபனியைப்போல் குஷ்டரோகியாய் நின்றாள். ஆரோன் அவளைத் திரும்பிப் பார்த்தபோது, அவளுக்குக் குஷ்டரோகம் இருப்பதைக் கண்டான். உபா 24:92இராஜா 5:272 நாளாக 26:19-212இராஜா 15:5யாத் 4:6யாத் 33:7-10எசேக் 10:18-19எசேக் 10:4-5 அப்பொழுது ஆரோன் மோசேயிடம், “என் ஆண்டவனே, தயவுசெய்து நாங்கள் மூடத்தனமாய் செய்த பாவத்திற்காக எங்களுக்கு விரோதமாயிராதேயும். 2 சாமு 24:102 சாமு 19:19நீதி 30:321 இராஜா 13:61 சாமு 12:191 சாமு 15:24-251 சாமு 2:302 நாளாக 16:9 தாயின் கருப்பையிலேயே பாதி சதை அழிந்து செத்துப்பிறந்த குழந்தையைப்போல் அவளை இருக்கவிடாதேயும்” என்றான். சங் 88:4-51 கொரி 15:81 தீமோ 5:6எபே 2:1-5யோபு 3:16சங் 58:8கொலோ 2:13

அப்பொழுது மோசே யெகோவாவிடம், “இறைவனே, தயவுசெய்து அவளைக் குணமாக்கும்” என அழுது வேண்டிக்கொண்டான். யாக் 5:15லூக் 6:28ரோம 12:211 சாமு 12:231 சாமு 15:11யாத் 32:10-14ஏசா 30:26எரே 17:14

அப்பொழுது யெகோவா மோசேயிடம், “அவள் தகப்பன் அவள் முகத்தில் காறித் துப்பியிருந்தால் ஏழுநாட்களுக்கேனும் அவள் அவமானத்துடன் இருக்கமாட்டாளோ? எனவே ஏழுநாட்களுக்கு அவளை முகாமுக்கு வெளியே வையுங்கள். அதற்குப்பின் திரும்பவும் அவளைச் சேர்த்துக்கொள்ளலாம்” என்றார். உபா 25:9யோபு 30:10ஏசா 50:6எண் 5:2-3லேவி 13:45-462 நாளாக 26:20-21எபி 12:9யோபு 17:6 அப்படியே மிரியாம் முகாமுக்கு வெளியே ஏழு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டாள். அவள் திரும்பி வரும்வரை மக்கள் அவ்விடம் விட்டு அசையவில்லை. உபா 24:8-9ஆப 3:2புலம் 3:32மீகா 6:4மீகா 7:8-9யாத் 20:12ஆதி 9:21-23

அதன்பின் மக்கள் ஆஸ்ரோத்தை விட்டுப் பிரயாணமாகி, பாரான் பாலைவனத்தில் முகாமிட்டார்கள். எண் 11:35எண் 33:18எண் 10:121 சாமு 25:1ஆதி 21:21ஆப 3:3எண் 13:26எண் 13:3