மகலாத் லேயனோத் என்னும் இசையில் வாசிக்க, எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் கோராகின் மகன்களின் பாட்டாகிய சங்கீதம். பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது.
யெகோவாவே, நீர் என்னைக் காப்பாற்றுகிற இறைவன்; ஏசா 12:2சங் 22:2லூக் 18:7சங் 86:31 இராஜா 4:31ஆதி 49:18சங் 27:9சங் 53:1
இரவும் பகலும் நான் உமக்கு முன்பாகக் கதறுகிறேன்.
என்னுடைய மன்றாட்டு உமக்குமுன் வருவதாக; சங் 31:2சங் 141:1-2புலம் 3:8சங் 79:111 இராஜா 8:31
என் கூப்பிடுதலுக்கு செவிகொடுத்துக் கேளும்.
என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்திருக்கிறது; சங் 107:18புலம் 3:15-19மாற் 14:33-34ஏசா 53:10-11ஏசா 53:3யோபு 33:22யோபு 6:2-4மத் 26:37-39
என் உயிர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
நான் பிரேதக்குழிக்குப் போகிறவர்கள்போல் எண்ணப்படுகிறேன்; சங் 28:12 கொரி 1:9ஏசா 38:17-18சங் 143:7சங் 31:122 கொரி 13:4யோபு 17:1சங் 30:9
நான் பெலனற்ற மனிதனைப்போல் இருக்கிறேன்.
நான் மரித்தவர்களுடன் ஒதுக்கப்பட்டிருக்கிறேன்; ஏசா 53:8சங் 31:22ஏசா 14:9-12சங் 136:23எசேக் 32:18-32ஆதி 19:29ஆதி 8:1ஏசா 38:10-12
நீர் இனி எப்போதும் உம்மால் நினைவுகூரப்படாமல்
உமது கவனத்திலிருந்து அகற்றப்பட்டு,
பாதாளத்தில் அழிக்கப்பட்டவர்கள்போல் ஆனேன்.
நீர் என்னை மிகுந்த இருளில், சங் 69:15சங் 86:13யோவா 12:46புலம் 3:2சங் 143:3சங் 40:2உபா 32:22யூதா 1:13
ஆழம் மிகுந்த படுகுழியில் போட்டுவிட்டீர்.
உமது கோபம் என்மீது மிகவும் பாரமாய் இருக்கிறது; சங் 42:71 பேது 2:24யோபு 6:4ரோம 2:5-9யோவா 3:36யோபு 10:16யோனா 2:3சங் 102:10
உமது அலைகள் எல்லாவற்றினாலும் நீர் என்னை மூடிவிட்டீர்.
என் நெருங்கிய நண்பர்களை நீர் என்னைவிட்டு விலக்கி, சங் 31:11ஏசா 49:7யோபு 30:10ஏசா 63:3எரே 32:2யோவா 15:23-24யோபு 19:13-19புலம் 3:7-9
என்னை அவர்களின் வெறுப்புக்கு உள்ளாக்கினீர்;
நான் அடைபட்டு தப்பமுடியாமல் இருக்கிறேன்.
என் கண்கள் துக்கத்தினால் மயங்கி இருக்கின்றன. யோபு 11:13சங் 38:10சங் 86:3சங் 143:6சங் 42:3எசேக் 17:11யோவா 11:35யோபு 16:20
யெகோவாவே, நான் ஒவ்வொரு நாளும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
உம்மை நோக்கியே என் கைகளை நீட்டுகிறேன்.
இறந்தவர்களுக்கு நீர் உமது அதிசயங்களைக் காட்டுவீரோ? ஏசா 26:19சங் 6:5ஏசா 38:18-19சங் 30:91 கொரி 15:52-57மாற் 5:35-36எசேக் 37:1-14யோபு 14:7-12
இறந்தவர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ?
பிரேதக்குழியில் உமது அன்பும், நீதி 15:112 பேது 2:1யோபு 21:30யோபு 26:6மத் 7:13சங் 55:23சங் 73:18ரோம 9:22
அழிவில் உமது சத்தியமும் அறிவிக்கப்படுகிறதோ?
உமது அதிசயங்கள் இருள் நிறைந்த இடத்திலும், பிரச 9:5மத் 8:12பிரச 2:16பிரச 8:10ஏசா 8:22யோபு 10:21-22யூதா 1:13சங் 143:3
மறதியின் நாட்டில் உமது நீதியான செயல்களும் அறியப்படுமோ?
ஆனாலும் யெகோவாவே, நான் உதவிகேட்டு உம்மை நோக்கிக் கதறுகிறேன்; சங் 5:3மாற் 1:35சங் 30:2சங் 119:147-148
காலையிலே எனது மன்றாட்டு உமக்கு முன்பாக வருகிறது.
யெகோவாவே, நீர் ஏன் என்னைப் புறக்கணிக்கிறீர்? யோபு 13:24சங் 13:1சங் 43:2சங் 44:24மத் 27:46சங் 44:9சங் 69:17சங் 77:7-9
உமது முகத்தை ஏன் எனக்கு மறைக்கிறீர்?
என் இளமையிலிருந்தே நான் துன்புறுத்தப்பட்டு மரணத்திற்குச் சமீபமானேன்; யோபு 6:4லூக் 22:44ஏசா 53:10யோபு 7:11-16சங் 73:14சகரி 13:7ஏசா 53:3யோபு 17:1
நான் உம்மால் வரும் திகிலை அனுபவித்து மனமுடைந்து போயிருக்கிறேன்.
உமது கோபம் என்மேல் வந்து என்னை மூடியது; கலா 3:13வெளி 6:17தானி 9:26ஏசா 53:4-6ஏசா 53:8சங் 102:10சங் 38:1-2சங் 89:46
உமது திகில் என்னைத் தாக்குகிறது.
அவை நாள்தோறும் வெள்ளத்தைப்போல் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன; சங் 22:16சங் 116:3சங் 69:1-2யோபு 16:12-13யோபு 30:14-15புலம் 3:5-7மத் 27:39-44சங் 118:10-12
என்னை அவை முழுமையாய் வளைத்துக்கொண்டன.
நீர் என் கூட்டாளிகளையும் என் அன்புக்குரியவர்களையும் சங் 88:8சங் 38:11யோபு 19:12-15சங் 31:11
என்னைவிட்டு அகற்றினீர்;
இருளே என் நெருங்கிய நண்பனாய் இருக்கிறது.