தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடம் விரைந்து வாரும்; சங் 70:5சங் 40:13சங் 71:12சங் 143:7சங் 69:17-18யோபு 7:21சங் 22:19சங் 143:1
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என் குரலைக் கேளும்.
என் மன்றாட்டு உமக்கு முன்பாகத் தூபத்தைப்போல் ஏற்றுக்கொள்ளப்படட்டும்; வெளி 8:3-4வெளி 5:81 தீமோ 2:8தானி 9:21மல்கி 1:11நீதி 15:8லூக் 1:9-10சங் 63:4
என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும்.
யெகோவாவே, என் வாய்க்குக் காவல் வையும்; யாக் 1:26சங் 39:1மீகா 7:5சங் 34:13யாக் 3:2சங் 71:8சங் 17:3-5
என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
தீமைகளைச் செய்யும் மனிதரோடு சேர்ந்து மத் 6:13சங் 119:361 கொரி 15:332 கொரி 6:17ஏசா 63:171 இராஜா 8:581 கொரி 10:31யாக் 1:13
கொடுமையான செயல்களில் பங்குகொள்ளும்படி
என் இருதயத்தைத் தீமையின் பக்கம் இழுப்புண்டுபோக விடாதேயும்;
அவர்களுடைய ருசியான பண்டங்களை நான் சாப்பிடவும் விடாதேயும்.
நீதிமான் என்னை அடிக்கட்டும், அந்த அடி தயவானது; பிரச 7:5வெளி 3:19கலா 6:1நீதி 27:5-6நீதி 25:12நீதி 19:25நீதி 9:8-9கலா 2:11-14
நீதிமான் என்னைக் கண்டிக்கட்டும், அது என் தலைக்கு எண்ணெயைப்போல் இருக்கும்.
என் தலை அதை புறக்கணிக்காது;
என் மன்றாட்டு எப்பொழுதும் தீயோரின் செய்கைகளுக்கு விரோதமாகவே இருக்கிறது.
அவர்களுடைய ஆளுநர்கள் செங்குத்தான பாறைகளிலிருந்து 2 நாளாக 25:121 நாளாக 10:1-71 நாளாக 11:1-31 நாளாக 12:381 நாளாக 13:21 சாமு 31:1-82 சாமு 1:17-272 சாமு 2:4-6
கீழே தள்ளிவிடப்படுவார்கள்;
அப்பொழுது, என் வார்த்தைகள் உண்மையாக இருந்ததை
கொடியவர்கள் புரிந்துகொள்வார்கள்.
“ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல், சங் 53:5ரோம 8:36சங் 44:22வெளி 11:8-91 சாமு 22:18-192 கொரி 1:9எபி 11:37
எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டன”
என்று அவர்கள் சொல்வார்கள்.
ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, என் கண்கள் உம்மையே நோக்குகின்றன; சங் 123:1-22 நாளாக 20:12ஏசா 41:17சங் 102:17சங் 25:15-17யோவா 14:18சங் 2:12சங் 143:3-4
நான் உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறேன், என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடாதேயும்.
தீயவர் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்தும், லூக் 20:20சங் 119:110சங் 140:5நீதி 13:14சங் 38:12எரே 18:22சங் 142:3
அவர்களால் வைக்கப்பட்ட சுருக்குக் கயிறுகளிலிருந்தும் என்னைக் காத்துக்கொள்ளும்.
நான் அவற்றைப் பாதுகாப்பாய் கடக்க, சங் 35:8சங் 140:9எஸ்த 7:10நீதி 11:8சங் 64:7-8சங் 7:15-16சங் 37:14-15
கொடியவர்கள் தங்கள் வலைகளிலேயே அகப்படட்டும்.