சண்டை நடக்கும் ஒரு வீட்டின் நிறைவான விருந்தைவிட, நீதி 15:17சங் 37:16நீதி 21:19நீதி 21:9நீதி 7:14
சமாதானத்துடன் அமைதியாய் சாப்பிடும் காய்ந்த அப்பத்துண்டே சிறந்தது.
விவேகமுள்ள வேலைக்காரன் அவமானத்தைக் கொண்டுவருகிற மகனை ஆளுவான், நீதி 10:5பிரச 4:13நீதி 14:35நீதி 19:26நீதி 11:29நீதி 29:15ஆதி 24:4-67
பின்பு அந்த வேலைக்காரன் குடும்பத்தில் ஒருவனைப்போல் சகோதரருடைய உரிமைச் சொத்திலும் பங்குபெறுவான்.
வெள்ளியை உலைக்கலமும் தங்கத்தை சூளையும் சோதிக்கும், ஏசா 48:10எரே 17:10சங் 26:2நீதி 27:211 நாளாக 29:171 பேது 1:7சங் 66:10மல்கி 3:2-3
ஆனால் இருதயத்தை சோதிக்கிறவர் யெகோவா.
கொடியவர்கள் தீமையான பேச்சை ஆர்வமாய்க் கேட்கிறார்கள்; 2 தீமோ 4:3-41 யோவா 4:5நீதி 28:4ஏசா 30:10எரே 5:311 இராஜா 22:6-28வெளி 13:3-81 சாமு 22:7-11
பொய்ப் பேசுபவர்கள் அவதூறைப் பேசும் நாவைக் கவனித்துக் கேட்கிறார்கள்.
ஏழைகளை ஏளனம் செய்பவர்கள் அவர்களை படைத்தவரையே அவமதிக்கிறார்கள்; நீதி 14:31யோபு 31:291 யோவா 3:17ஒபதி 1:11-13நீதி 14:21நீதி 16:5நீதி 24:17-18ரோம 12:15
பிறரின் துன்பத்தைக் கண்டு மகிழ்பவர்கள் தண்டனைக்குத் தப்புவதில்லை.
பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்கு மகுடம்; சங் 127:3-5நீதி 16:31நீதி 13:22சங் 128:3-6யாத் 3:14-151 இராஜா 11:121 இராஜா 15:4ஆதி 50:23
பிள்ளைகளுக்குப் பெருமை அவர்களின் பெற்றோர்களே.
சொல்திறமைமிக்க உதடுகள் மூடர்களுக்குப் பொருத்தமற்றது; நீதி 29:12சங் 50:16-172 சாமு 23:3யோபு 34:12மத் 7:5நீதி 12:19நீதி 16:10-13நீதி 26:7
அப்படியானால் பொய்பேசும் உதடுகள் ஆளுநருக்கு எவ்வளவு கேவலமானது!
இலஞ்சத்தைக் கொடுப்பவனுக்கு அது வசியம் போலிருக்கிறது; யாத் 23:8மீகா 7:31 சாமு 25:35ஆமோ 5:12உபா 16:19ஏசா 1:23நீதி 17:23நீதி 21:14
அவன் செல்லும் இடமெல்லாம் வெற்றி என நினைக்கிறான்.
குற்றத்தை மன்னிக்கிறவர்கள் அன்பை தேடுகிறார்கள்; நீதி 10:121 பேது 4:8நீதி 16:28சங் 32:1
ஆனால் குற்றத்தை மீண்டும் நினைப்பூட்டுகிறவர்கள் நெருங்கிய நண்பர்களையும் பிரித்துவிடுகிறார்கள்.
மூடருக்கு நூறு அடி கொடுப்பதைவிட வெளி 3:19நீதி 9:8-9நீதி 13:1நீதி 15:5நீதி 19:25நீதி 27:22சங் 141:5நீதி 29:19
பகுத்தறிகிறவர்களை வார்த்தையினால் கண்டிப்பதே பயனளிக்கும்.
தீமை செய்பவர்கள் கலகத்தையே தேடுகிறார்கள்; 1 இராஜா 2:462 சாமு 16:5-92 சாமு 18:151 இராஜா 2:24-251 இராஜா 2:312 சாமு 20:22லூக் 19:27மத் 21:41
அழிவின் தூதனால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
தன் மூடத்தனத்தில் சிக்கிய முட்டாளைச் சந்திப்பதைவிட, 2 சாமு 17:8ஓசி 13:8நீதி 27:3நீதி 28:152இராஜா 2:24மத் 2:16
தன் குட்டியைப் பறிகொடுத்த கரடியைச் சந்திப்பது சிறந்தது.
ஒருவர் நன்மைக்குப் பதில் தீமை செய்தால், சங் 109:4-131 பேது 3:9சங் 55:12-15ரோம 12:17சங் 35:12சங் 38:202 சாமு 12:101 சாமு 24:17
அவருடைய வீட்டைவிட்டு தீமை ஒருபோதும் விலகாது.
வாக்குவாதத்தைத் தொடங்குவது அணையை உடைத்துவிடுவது போலாகும்; நீதி 20:3நீதி 25:82 தீமோ 2:23-241 தெச 4:11பிரச 7:8-9நீதி 15:1நீதி 16:32நீதி 19:11
எனவே விவாதம் ஏற்படும் முன்பே அதைவிட்டு விலகு.
குற்றவாளியை விடுதலை செய்கிறதும் குற்றமற்றவரை தண்டனைக்கு உள்ளாக்குகிறதுமான யாத் 23:7ஏசா 5:23நீதி 18:5நீதி 24:23-24ஆமோ 6:12ஏசா 55:8-9நீதி 15:8ஆமோ 5:12
இரண்டையும் யெகோவா அருவருக்கிறார்.
மூடர் கையில் பணம் இருந்து என்ன பயன்? நீதி 21:25-26நீதி 23:23அப் 28:26-27உபா 5:29நீதி 18:15நீதி 8:4-52 கொரி 6:1அப் 13:46
ஞானத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு மனமில்லையே.
நண்பன் எக்காலத்திலும் அன்பாயிருக்கிறான்; நீதி 18:24யோவா 15:13-141 சாமு 20:17ரூத் 1:161 சாமு 18:3நீதி 19:7எபி 2:112 சாமு 1:26
இக்கட்டு காலத்தில் உதவி செய்யவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
மதியீனர் கடனுக்காக உத்திரவாதம் கொடுத்து, நீதி 11:15நீதி 6:1-5நீதி 22:26-27நீதி 20:16நீதி 22:16
தன் அயலாரின் கடன்களுக்கான பாதுகாப்பு உறுதியளிக்கிறார்கள்.
வாக்குவாதத்தை விரும்புகிறவர்கள் பாவத்தை விரும்புகிறார்கள்; நீதி 16:18நீதி 18:121 சாமு 25:36-38யாக் 3:14-161 இராஜா 1:52 சாமு 15:1யாக் 1:20நீதி 17:14
வாசலை உயர்த்திக் கட்டுகிறவர்கள் அழிவையே அழைக்கிறார்கள்.
தீமையான இருதயமுள்ளவர்கள் நன்மையைக் காண்பதில்லை; யாக் 3:6-8நீதி 10:31பிரச 10:12நீதி 10:10நீதி 10:14நீதி 18:6-7நீதி 3:32நீதி 6:12-15
பொய் நாவுள்ளவர்கள் துன்பத்தில் வீழ்கிறார்கள்.
முட்டாளைப் பெற்றவருக்கு வருத்தம்; நீதி 10:1நீதி 19:131 சாமு 2:32-35ஆதி 26:34நீதி 15:20நீதி 17:25நீதி 23:15-162 கொரி 2:3
இறைவனற்ற மதியீனரின் பெற்றோருக்கு மகிழ்ச்சியில்லை.
மகிழ்ச்சியான இருதயம் நல்ல மருந்து, நீதி 15:13நீதி 12:25நீதி 18:142 கொரி 7:10பிரச 9:7-9ரோம 5:2-52 கொரி 2:7சங் 102:3-5
ஆனால் நொறுங்கிய ஆவி எலும்புகளை உலரப்பண்ணுகிறது.
கொடியவர்கள் இரகசியமாக இலஞ்சம் வாங்கி, உபா 16:19யாத் 23:8மீகா 7:3நீதி 17:8ஏசா 1:231 சாமு 12:31 சாமு 8:3எசேக் 22:12
நீதியின் வழியைப் புரட்டுகிறார்கள்.
பகுத்தறிவு உள்ளவர்கள் ஞானத்தில் கண்ணோக்கமாய் இருப்பார்கள்; பிரச 2:14பிரச 8:1நீதி 14:6சங் 119:371 யோவா 2:16பிரச 6:9யோவா 7:17நீதி 15:14
ஆனால் மூடரின் கண்களோ பூமியின் கடைசிவரை அலைகிறது.
மதிகெட்ட பிள்ளையால் தன் தந்தைக்குத் துன்பமும், நீதி 10:12 சாமு 13:1-22நீதி 15:20நீதி 19:13பிரச 2:18-19
தன்னைப் பெற்றவளுக்குக் கசப்பும் இருக்கும்.
குற்றமற்றவரைத் தண்டிப்பது நல்லதல்ல, நீதி 17:15நீதி 18:5யோவா 18:22யோபு 34:18-192 சாமு 3:39ஆதி 18:25மீகா 5:12 சாமு 16:7-8
உத்தமமான அதிகாரிகளை தண்டிப்பதும் நல்லதல்ல.
அறிவுள்ளவர்கள் வார்த்தைகளை அடக்குகிறார்கள்; யாக் 3:18யாக் 1:19நீதி 10:19நீதி 14:29நீதி 15:28யாக் 3:2பிரச 9:17நீதி 16:32
புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் சாந்தமாயிருக்கிறார்கள்.
அமைதியாக இருந்தால், மூடரும் ஞானமுள்ளவர் என்று எண்ணப்படுவர்; யோபு 13:5நீதி 15:2பிரச 10:14பிரச 5:3பிரச 10:3
தன் நாவை அடக்கினால் புத்திமான்களாகவும் தோன்றுவார்கள்.