ஞானத்தினால் வரும் நன்மைகள்
என் மகனே, ஞானத்திற்கு உன் செவிசாய்த்து, நீதி 3:1நீதி 1:3யோவா 12:47-48நீதி 4:1உபா 6:6-9நீதி 7:1நீதி 4:20-22நீதி 6:21
புரிந்துகொள்ளுதலில் உன் இருதயத்தைச் செலுத்தி,
நீ என் ஞானத்தை ஏற்றுக்கொண்டு, நீதி 23:12நீதி 18:1மத் 13:9சங் 119:111-112சங் 90:12நீதி 22:17-21அப் 17:11பிரச 7:25
என் கட்டளைகளை உன் உள்ளத்தில் சேர்த்துவை.
உண்மையில், நீ நுண்ணறிவுக்காக வேண்டுதல்செய்து, யாக் 1:5எபே 1:17-18நீதி 3:61 இராஜா 3:9-12சங் 25:4-5சங் 119:125சங் 119:1691 நாளாக 22:12
புரிந்துகொள்ளுதலுக்காக மன்றாடி,
சுத்த வெள்ளியைத் தேடுவதுபோல் தேடி, மத் 13:44மத் 19:29நீதி 16:16யோபு 28:12-20யோபு 3:21நீதி 8:18-19பிரச 4:8லூக் 16:8
புதையலை ஆராய்வதுபோல அதை ஆராய்ந்தால்,
அப்பொழுது நீ யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து விளங்கிக்கொள்வாய்; நீதி 1:7எரே 24:71 யோவா 5:202 நாளாக 1:10-12எரே 32:40-41லூக் 10:22லூக் 11:9-13எரே 9:24
இறைவனைப்பற்றிய அறிவைக் கண்டுகொள்வாய்.
ஏனெனில் யெகோவாவே ஞானத்தைத் தருபவர்; எபே 1:17-18யாக் 1:5லூக் 21:15ஏசா 54:13யோபு 32:8சங் 119:98யோவா 6:451 இராஜா 3:12
அறிவும் விவேகமும் அவருடைய வாயிலிருந்தே வருகின்றன.
அவர் நீதிமான்களுக்கு வெற்றியைக் கொடுத்து, யாக் 3:15-17நீதி 30:5சங் 84:111 கொரி 3:18-191 கொரி 1:192 தீமோ 3:15-171 கொரி 1:30நீதி 28:18
குற்றமற்றவர்களாய் நடப்பவர்களுக்கு அவர் கேடயமாயிருந்து,
அவர் நியாயத்தின் வழியைக் காத்துக்கொள்கிறார்; சங் 23:31 சாமு 2:9யோவா 10:28-29சங் 145:20சங் 66:9சங் 37:23-24யூதா 1:24சங் 37:28
தமக்கு உண்மையாய் இருப்பவர்களின் வழியைப் பாதுகாக்கிறார்.
அப்பொழுது நீ நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றையும் எரே 6:16ஏசா 48:17மத் 7:13-14சங் 143:8-10நீதி 1:2-6யோவா 14:6சங் 119:99சங் 25:8-9
ஒவ்வொரு நல்ல வழியையும் விளங்கிக்கொள்வாய்.
ஞானம் உன் உள்ளத்திற்குள் வரும், எரே 15:16கொலோ 3:16யோபு 23:12நீதி 18:1-2நீதி 24:13-14சங் 104:34சங் 119:162சங் 19:10
அறிவு உன் ஆத்துமாவிற்கு இன்பமாயிருக்கும்.
அறிவுடைமை உன்னைப் பாதுகாக்கும், எபே 5:15நீதி 4:6சங் 25:21பிரச 10:10சங் 119:9-11பிரச 9:15-18நீதி 6:22-24
புரிந்துகொள்ளுதல் உன்னைக் காத்துக்கொள்ளும்.
ஞானம் கொடிய மனிதர்களின் வழிகளிலிருந்தும், 1 கொரி 15:33நீதி 13:20நீதி 8:132 கொரி 6:17ஏசா 59:3-5அப் 20:30நீதி 1:10-19நீதி 16:28-30
வஞ்சகமான வார்த்தைகளைப் பேசும் மனிதர்களிடமிருந்தும் உன்னைக் காப்பாற்றும்.
அவர்கள் நேர்மையான வழியைவிட்டு விலகி, யோவா 3:19-20நீதி 4:191 யோவா 2:192 பேது 2:20-22நீதி 21:161 தெச 5:5-72 தீமோ 4:10எசேக் 18:26
இருளான வழியில் நடக்கிறார்கள்;
அவர்கள் அநியாயம் செய்வதில் மகிழ்ச்சியடைந்து, நீதி 10:23ரோம 1:32எரே 11:151 கொரி 13:6லூக் 22:4-5ஓசி 7:3செப்ப 3:11ஆப 1:15
தீமையின் வஞ்சனையில் சந்தோஷப்படுகிறார்கள்;
அவர்களுடைய செயல்களோ நேர்மையற்றவை, சங் 125:5நீதி 21:8உபா 32:5பிலி 2:15ஏசா 59:8ஏசா 30:8-13
அவர்களுடைய வழிகளோ தவறானவை.
ஞானம் உன்னை விபசாரியிடமிருந்தும் பிரச 7:26நீதி 22:14நீதி 23:27நீதி 6:24நீதி 7:5-23ஆதி 39:3-12நெகே 13:26-27நீதி 29:5
வசப்படுத்தும் வார்த்தைகள் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் காப்பாற்றும்.
தன் இளவயதின் கணவனைக் கைவிட்டு, எசேக் 16:59-60எசேக் 16:8எரே 3:4மல்கி 2:14-16நீதி 5:18
இறைவனுக்கு முன்பாக தான் செய்த திருமண உடன்படிக்கையை புறக்கணித்தவள் அவள்.
அவளுடைய வீடு மரணத்திற்கு உன்னை வழிநடத்துகிறது, 1 கொரி 6:9-11நீதி 9:18எபே 5:5கலா 5:19-21நீதி 5:4-14வெளி 21:8நீதி 6:26-35நீதி 7:22-27
அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடம் கூட்டிச்செல்கிறது.
அவளிடம் செல்பவர்கள் யாரும் திரும்புவதில்லை, பிரச 7:26சங் 81:12ஓசி 4:14மத் 19:24-26எபி 6:18எரே 13:23நீதி 4:18
வாழ்வின் பாதைகளை அடைவதுமில்லை.
இப்படியிருக்க, நீ நல்ல மனிதரின் வழியில் நடப்பாயாக, எபி 6:123 யோவா 1:11எரே 6:16நீதி 13:20சங் 119:115சங் 119:63உன்னத 1:7-8
நீதிமான்களின் பாதைகளையும் கைக்கொள்வாயாக.
ஏனெனில் நீதிமான்கள் நாட்டில் வாழ்வார்கள், சங் 84:11சங் 37:29சங் 37:9நீதி 10:30யோபு 42:12சங் 37:11சங் 37:22சங் 37:3
குற்றமற்றோர் அதில் நிலைத்திருப்பார்கள்.
ஆனால் கொடியவர்கள் நாட்டிலிருந்து அகற்றப்படுவார்கள், சங் 52:5உபா 7:22ஏசா 3:10-11சங் 37:28உபா 28:63-64நீதி 10:30சங் 145:20யோபு 18:16-18
துரோகிகள் அதிலிருந்து எறியப்படுவார்கள்.