தனிப்பட்ட வாழ்த்துகள்
கெங்கிரேயா பட்டணத்திலுள்ள திருச்சபையில் ஊழியம் செய்கின்ற 1 நமது சகோதரி பெபேயாளைக்குறித்து உங்களுக்கு நற்சான்று கொடுக்கிறேன். அப் 18:181 பேது 1:22-231 தீமோ 5:9-101 தீமோ 5:2யாக் 2:15மத் 12:502 கொரி 3:1லூக் 8:3 பரிசுத்தவான்களை ஏற்றுக்கொள்ளுகிற விதமாகவே கர்த்தருக்குள் அவளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். உங்களிடமிருந்து அவளுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், அதை அவளுக்குக் கொடுங்கள். ஏனெனில் அவள் பலருக்கும், எனக்குங்கூட உதவியாய் இருந்தாள். பிலி 2:29பிலி 1:27மத் 10:40-421 தீமோ 2:102 யோவா 1:102 தீமோ 1:18அப் 9:36அப் 9:39
பிரிஸ்கில்லாளுக்கும் ஆக்கில்லாவுக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் என்னுடைய உடன் வேலையாட்கள். அப் 18:261 கொரி 16:192 தீமோ 4:191 கொரி 16:16ரோம 16:9அப் 18:2-17 அவர்கள் எனக்காக உயிர் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்கள். நான் மட்டுமல்ல, யூதரல்லாத மக்களின் திருச்சபைகள் எல்லாமே அவர்களுக்கு நன்றியுள்ளவைகளாய் இருக்கின்றன. 1 யோவா 3:16பிலி 2:301 கொரி 16:11 கொரி 7:171 தெச 2:142 சாமு 22:41அப் 15:41அப் 16:5
அவர்களுடைய வீட்டில் கூடிவருகிற திருச்சபைக்கு எனது வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். கொலோ 4:151 கொரி 16:19பிலே 1:21 கொரி 16:15மத் 18:202 கொரி 9:23 யோவா 1:1அப் 18:12
என் அன்புக்குரியவனான எப்பனெத்துக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். ஆசியா பகுதியில் முதலாவதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவன் அவனே.
மரியாளுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள், அவள் மிகவும் கடுமையாக உங்களுக்காக உழைத்தாள். 1 தீமோ 5:10மத் 27:55ரோம 16:12
எனது உறவினர்களான அன்றோனீக்கைக்கும் யூனியாவுக்கும் எனது வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். இவர்களும் என்னுடன் சிறையில் இருந்தார்கள். அப்போஸ்தலர்களுக்குள்ளே இவர்கள் பெயர்பெற்றவர்கள். இவர்கள் எனக்கு முன்பே கிறிஸ்துவில் இருந்தவர்கள். ரோம 16:11ரோம 16:21கொலோ 4:10பிலே 1:232 கொரி 5:17எபே 2:10கலா 1:221 கொரி 1:30
கர்த்தரில் நான் நேசிக்கிற அம்பிலியாவுக்கும் எனது வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். 1 யோவா 3:14பிலி 4:1ரோம 16:5
கிறிஸ்துவில் என் உடன் ஊழியனாய் இருக்கிற உர்பானுக்கும், என் அன்புக்குரிய நண்பன் ஸ்தாக்கிக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். ரோம 16:2-3ரோம 16:21
பரீட்சிக்கப்பட்டு கிறிஸ்துவில் உண்மையானவன் என நிரூபிக்கப்பட்டிருக்கிற அப்பெல்லேயுவுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். ரோம 14:181 பேது 1:7உபா 8:21 கொரி 11:191 தீமோ 3:102 கொரி 2:92 கொரி 8:22பிலி 2:22
அரிஸ்தொபூலுவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
எனது உறவினன் ஏரோதியோனுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். ரோம 16:21ரோம 16:7
கர்த்தரில் இருக்கிற நர்கீசுவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
கர்த்தரில் கடுமையாக உழைக்கிறவர்களான திரிபேனாளுக்கும். திரிபோசாளுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். 1 தெச 5:12-131 கொரி 15:581 கொரி 16:16எபி 6:10-111 கொரி 15:101 தெச 1:31 தீமோ 4:101 தீமோ 5:17-18
கர்த்தரில் கடுமையாக உழைத்த எனது அன்பான பெர்சியாளுக்குங்கூட என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
ரூபசுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். அவன் கர்த்தரில் தெரிந்துகொள்ளப்பட்டவன். அவனுடைய தாய்க்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள், அவள் எனக்கும் தாயாய் இருந்தாள். 1 தீமோ 5:22 யோவா 1:1மாற் 15:21யோவா 15:162 தெச 2:13எபே 1:4யோவா 19:27மத் 12:49-50
அசிங்கிரீத்துவுக்கும், பிலெகோனுக்கும், எர்மேயாவுக்கும், பத்திரொபாவுக்கும், எர்மாவுக்கும், அவர்களோடிருக்கிற சகோதரருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். 1 பேது 1:22-23கொலோ 1:2எபி 3:1ரோம 8:29
பிலொலோகுக்கும், யூலியாளுக்கும், நேரேக்கும், அவனுடைய சகோதரிக்கும், ஒலிம்பாவுக்கும், அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். ரோம 16:2ரோம 1:71 பேது 1:2எபே 1:1ஏசா 60:21ரோம 16:14
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தமிட்டு வாழ்த்துங்கள். 1 கொரி 16:201 தெச 5:262 கொரி 13:121 பேது 5:14அப் 20:37
கிறிஸ்துவுக்குள்ளான எல்லாத் திருச்சபைகளும் தங்கள் வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
பிரியமானவர்களே, நீங்கள் கற்றுக்கொண்டவற்றிற்கு முரண்பாடான விதத்தில் பிரிவினைகளை உண்டாக்கி, உங்கள் வழியில் இடறல்களை ஏற்படுத்துகிறவர்களைக்குறித்துக் கவனமாய் இருங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன். அவர்களைவிட்டு விலகியிருங்கள். யூதா 1:192 தெச 3:61 தீமோ 6:3-52 தீமோ 3:5கொலோ 2:8தீத் 3:102 யோவா 1:7-112 தெச 3:14-15 ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்துவுக்குப் பணிசெய்கிறவர்கள் அல்ல. ஆனால் தங்கள் வயிற்றுப் பிழைப்பையே பார்த்துக்கொள்கிறார்கள். தங்களுடைய வசப்படுத்தும் பேச்சுக்களினாலும், நயவஞ்சகத்தாலும் கபடற்ற மக்களின் மனங்களை ஏமாற்றுகிறார்கள். கொலோ 2:4மத் 7:151 தீமோ 6:5மீகா 3:52 பேது 2:32 தீமோ 3:2-6பிலி 3:192 தெச 2:10 உங்கள் கீழ்ப்படிதலைப்பற்றி எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். இதனால் நான் உங்களைக்குறித்துப் பெருமகிழ்ச்சியடைகிறேன்; ஆனால் நீங்கள் நன்மை எது என்பதைக்குறித்து ஞானமுள்ளவர்களாய் இருப்பதும், தீமையைப் பொறுத்தவரையில் அதைப்பற்றி ஒன்றும் அறியாதவர்களைப்போல் இருப்பதுமே என் விருப்பம். மத் 10:161 கொரி 14:20யாக் 3:13-18பிலி 2:15ரோம 1:8எபே 5:17எரே 4:22பிலி 1:9
சமாதானத்தின் இறைவன் விரைவில் சாத்தானை உங்கள் கால்களின் கீழேபோட்டு நசுக்கிப்போடுவார். லூக் 10:191 யோவா 3:8ஆதி 3:15மல்கி 4:3சகரி 10:5வெளி 12:10எபி 2:14-15வெளி 22:21
நமது கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்களோடு இருக்கட்டும்.
என் உடன் ஊழியனான தீமோத்தேயு உங்களுக்குத் தனது வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறான். அதுபோலவே எனது உறவினர்களான லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களுக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள். அப் 20:4அப் 13:1அப் 17:5ரோம 16:11ரோம 16:71 தெச 1:11 தெச 3:21 தெச 3:6
இந்தக் கடிதத்தை எழுதிய தெர்தியுவாகிய நானும் கர்த்தரில் என் வாழ்த்துதல்களை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். கலா 6:111 கொரி 16:21ரோம 16:8கொலோ 3:17
காயுவும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறான். அவனுடைய வீட்டிலே நான் தங்கியிருக்கிறேன். இங்குதான் திருச்சபையும் கூடுகிறது. 1 கொரி 1:14அப் 19:222 தீமோ 4:203 யோவா 1:1-6அப் 19:29அப் 20:4
இந்தப் பட்டணத்தின் அரசாங்க அதிபரான எரஸ்துவும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக்கொள்கிறான். நமது சகோதரனான குவர்த்தும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக்கொள்கிறான்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களெல்லாரோடும் இருப்பதாக. ஆமென். 2
கடந்த யுகங்களில் இரகசியமாய் வைக்கப்பட்டு, இப்பொழுது வெளிப்பட்டிருக்கிற உண்மையின்படி இருக்கிற எனது நற்செய்தியின் மூலமாகவும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய செய்தியை அறிவிப்பதன் மூலமாகவும், உங்களை நிலைநிறுத்த ஆற்றல் உடையவராயிருக்கிற இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும். 1 கொரி 2:7கொலோ 1:26-27ரோம 2:16எபே 1:92 தெச 2:142 கொரி 4:3எபே 3:20-21எபே 3:3-5 அந்த இரகசியமான உண்மை, நித்தியமான இறைவனுடைய கட்டளையினாலே, இறைவாக்கினரின் எழுத்துக்களின் மூலமாய் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டும் அறியப்பட்டும் இருக்கிறது. எல்லா மக்களும் விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படியும்படியாகவே இது நடந்தது. ரோம 1:5ரோம 15:18கலா 3:8ஏசா 40:281 தீமோ 1:172 தீமோ 1:10ஆதி 21:33தீத் 1:2-3 ஞானமுள்ள இறைவன் ஒருவருக்கே இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென். 1 தீமோ 1:17ரோம 11:36வெளி 7:10-12வெளி 19:1-6ரோம 11:33-341 பேது 2:5வெளி 1:5-6வெளி 5:9-14