1 நாளாகமம் 15

1 Chronicles 15
அத்தியாயம் 15

உடன்படிக்கைப் பெட்டி எருசலேமிற்கு கொண்டுவரப்படுதல்

அவன் தனக்கு தாவீதின் நகரத்தில் வீடுகளைக் கட்டி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான். 1 நாளாக 16:1சங் 132:51 நாளாக 15:31 நாளாக 17:1-5அப் 7:462 சாமு 13:7-82 சாமு 14:242 சாமு 5:9 பிறகு தாவீது: லேவியர்கள் தவிர வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கக் கூடாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களையே யெகோவா தெரிந்துகொண்டார் என்றான். உபா 10:8உபா 31:9எண் 18:1-8எரே 33:17-22யோசு 3:3எண் 4:19-20எண் 4:2-15எண் 8:13-14 அப்படியே யெகோவாவுடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் இடத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான். 1 நாளாக 13:51 இராஜா 8:11 நாளாக 15:12 சாமு 6:122 சாமு 6:171 நாளாக 15:12 ஆரோனின் சந்ததிகளையும், 1 நாளாக 6:16-301 நாளாக 6:49-501 நாளாக 12:26-28யாத் 6:16-22எண் 3:4 லேவியர்களாகிய கோகாத் சந்ததியில் பிரபுவாகிய ஊரியேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றிருபதுபேரையும், 1 நாளாக 6:22-24 மெராரியின் சந்ததியில் பிரபுவாகிய அசாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூற்றிருபதுபேரையும், 1 நாளாக 6:29-30 கெர்சோன் மகன்களில் பிரபுவாகிய யோவேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றுமுப்பதுபேரையும், 1 நாளாக 15:111 நாளாக 23:8 எலிசாபான் மகன்களில் பிரபுவாகிய செமாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூறுபேரையும், யாத் 6:22 எப்ரோன் சந்ததியில் பிரபுவாகிய ஏலியேலையும், அவனுடைய சகோதரர்களாகிய எண்பதுபேரையும், யாத் 6:181 நாளாக 23:121 நாளாக 23:191 நாளாக 26:231 நாளாக 26:30-311 நாளாக 6:2எண் 26:58 ஊசியேல் சந்ததியில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றுப்பன்னிரெண்டு பேரையும் தாவீது கூடிவரச்செய்தான். 1 நாளாக 23:121 நாளாக 6:181 நாளாக 6:22யாத் 6:18யாத் 6:22 பின்பு தாவீது ஆசாரியர்களாகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியர்களாகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, ஏலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து, 1 நாளாக 12:281 இராஜா 2:351 சாமு 22:20-231 நாளாக 18:161 இராஜா 2:262 சாமு 15:24-292 சாமு 15:352 சாமு 20:25 அவர்களை நோக்கி: லேவியர்களில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர்கள், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்செய்த இடத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்களுடைய சகோதரர்களையும் பரிசுத்தம்செய்துகொள்ளுங்கள். 2 நாளாக 35:61 நாளாக 15:14யாத் 19:14-15ரோம 12:1-22 நாளாக 30:151 நாளாக 15:11 நாளாக 15:31 நாளாக 24:31 முதலில் நீங்கள் அதை சுமக்காததாலும், நாம் நம்முடைய தேவனாகிய யெகோவாவை நியாயமானபடி தேடாமற்போனதாலும், அவர் நமக்குள்ளே அடிவிழச்செய்தார் என்றான். 2 சாமு 6:31 கொரி 14:401 கொரி 11:21 யோவா 1:8-101 நாளாக 13:7-111 நாளாக 15:22 சாமு 6:7-8உபா 31:9 ஆசாரியர்களும் லேவியர்களும் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவரத் தங்களைச் சுத்தம்செய்துகொண்டார்கள். 2 நாளாக 29:152 நாளாக 29:34யோவே 2:16-17லேவி 10:3 பின்பு லேவியர்கள் யெகோவாவுடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்தபடி தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினால் தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள். எண் 4:15எண் 7:91 இராஜா 8:82 நாளாக 5:9யாத் 25:12-15யாத் 37:3-5யாத் 40:20எண் 4:5-6 தாவீது லேவியர்களின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களாகிய பாடகர்களைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான். 1 நாளாக 13:81 நாளாக 16:421 நாளாக 23:52 நாளாக 5:13நெகே 12:361 நாளாக 15:121 நாளாக 15:27-281 நாளாக 25:1-6 அப்படியே லேவியர்கள் யோவேலின் மகனாகிய ஏமானையும், அவனுடைய சகோதரர்களில் பெரகியாவின் மகனாகிய ஆசாப்பையும், மெராரியின் சந்ததியான தங்களுடைய சகோதரர்களில் குஷாயாவின் மகனாகிய ஏத்தானையும், 1 நாளாக 6:331 நாளாக 6:391 நாளாக 6:441 நாளாக 15:191 நாளாக 25:1-51 சாமு 8:2சங் 73:1சங் 83:1 இவர்களோடு இரண்டாவது வரிசையாகத் தங்களுடைய சகோதரர்களாகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளர்களையும் நிறுத்தினார்கள். 1 நாளாக 26:41 நாளாக 13:141 நாளாக 16:381 நாளாக 16:5-61 நாளாக 25:2-61 நாளாக 25:9-311 நாளாக 26:151 நாளாக 26:8 பாடகர்களாகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், வெண்கல தொனியுள்ள கைத்தாளங்களை ஒலிக்கச்செய்து பாடினார்கள். 1 நாளாக 25:61 நாளாக 13:81 நாளாக 15:161 நாளாக 16:421 நாளாக 16:51 நாளாக 25:1சங் 150:5 சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருக்களை வாசித்தார்கள். சங் 46:1-11 மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாக வாசித்தார்கள். 1 நாளாக 15:181 நாளாக 16:51 நாளாக 25:6-71 சாமு 10:5சங் 12:1சங் 150:3சங் 33:2சங் 6:1-10 லேவியர்களுக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாக இருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையை நடத்தினான். 1 நாளாக 15:161 நாளாக 15:271 நாளாக 25:7-8 பெரகியாவும் எல்க்கானாவும் பெட்டிக்கு முன்பாகக் காவல்காத்துவந்தார்கள். 1 நாளாக 9:21-232இராஜா 22:42இராஜா 25:18சங் 84:10 செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர்கள் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத்ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளிகளாக இருந்தார்கள். 1 நாளாக 16:61 நாளாக 15:28எண் 10:81 நாளாக 15:181 நாளாக 15:232 நாளாக 5:12-13யோவே 2:1யோவே 2:15 இப்படி தாவீதும், இஸ்ரவேலின் மூப்பர்களும், ஆயிரம்பேர்களின் தலைவர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடு கொண்டுவரச்செய்தார்கள். 2 சாமு 6:12-231 நாளாக 13:11-142 நாளாக 20:27-28எஸ்றா 6:16மீகா 5:2பிலி 3:3பிலி 4:4சங் 100:1-2 யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களுக்கு தேவன் தயவு செய்ததால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள். எண் 23:291 நாளாக 29:14யோபு 42:8சங் 66:13-151 சாமு 7:122 கொரி 2:162 கொரி 3:52 சாமு 6:13 தாவீதும், பெட்டியை சுமக்கிற எல்லா லேவியர்களும், பாடகர்களும், பாடகர்களின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளை அணிந்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தை அணிந்திருந்தான். 1 சாமு 2:182 சாமு 6:14 அப்படியே இஸ்ரவேலனைத்தும் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் சத்தத்தோடும், தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள். 1 நாளாக 13:81 நாளாக 15:162 நாளாக 5:12-132 சாமு 6:15எஸ்றா 3:10-11சங் 150:3-5சங் 47:1-5சங் 68:25 யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி, தாவீதின் நகரம்வரை வந்தபோது, சவுலின் மகளாகிய மீகாள் பலகணி வழியாகப் பார்த்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன்னுடைய இருதயத்தில் அவமதித்தாள். 2 சாமு 6:20-232 சாமு 6:161 கொரி 2:141 சாமு 18:27-281 சாமு 19:11-171 சாமு 25:441 சாமு 4:32 கொரி 5:13