2 கொரிந்தியர் 13

2 Corinthians 13
அத்தியாயம் 13

பவுலின் இறுதி எச்சரிக்கை

மூன்றாவதுமுறை நான் உங்களிடம் வருகிறேன்; எல்லாக் காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளினாலே உறுதிப்படுத்தப்படும். மத் 18:16உபா 19:15உபா 17:6யோவா 8:17-18எண் 35:302 கொரி 12:141 இராஜா 21:10எபி 10:28-29 நான் இரண்டாம்முறை உங்களோடு இருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரத்தில் இருந்தும் உங்களிடம் இருக்கிறவனாக, நான் மீண்டும் வந்தால் தப்பவிடமாட்டேன் என்று முன்பு பாவம் செய்தவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன். 2 கொரி 1:231 கொரி 5:52 கொரி 10:1-22 கொரி 10:8-112 கொரி 12:20-211 கொரி 4:19-212 கொரி 13:10 கிறிஸ்து என் மூலம் பேசுகிறார் என்பதற்கு ஆதாரம் தேடுகிறீர்களே; அவர் உங்களிடம் பலவீனராக அல்ல, உங்களிடம் வல்லவராக இருக்கிறார். மத் 10:202 கொரி 10:8-102 கொரி 12:12லூக் 21:151 கொரி 9:1-31 கொரி 5:4-52 கொரி 10:42 கொரி 2:10 ஏனென்றால், அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராக இருந்தும், உங்களிடம் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவரோடு பிழைத்திருப்போம். 1 பேது 3:18ரோம 6:42 கொரி 10:3-42 தீமோ 2:11-12ரோம 6:8-111 கொரி 15:431 கொரி 2:3எபி 5:7 நீங்கள் விசுவாசம் உள்ளவர்களோ என்று உங்களை நீங்களே சோதித்துப்பாருங்கள்; உங்களை நீங்களே பரீட்சை செய்துபாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்களாக இருந்தால் தெரியாது. புலம் 3:401 கொரி 11:28சங் 139:23-241 கொரி 9:27வெளி 2:51 கொரி 11:31கலா 6:4எபி 12:15 நாங்களோ பரீட்சைக்கு நிற்காதவர்கள் அல்ல என்பதைத் தெரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். 2 கொரி 12:202 கொரி 13:102 கொரி 13:3-4 மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாமல் இருக்கும்படியாக, தேவனை நோக்கி வேண்டுதல்செய்கிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்கள் என்று தெரிவதற்காக இல்லை, நாங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்கள்போல இருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்படியே வேண்டுதல்செய்கிறேன். யாக் 1:121 தெச 5:231 தீமோ 2:22 கொரி 6:8-92 தீமோ 2:152 தீமோ 4:18பிலி 1:9-11பிலி 4:8 சத்தியத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றும் செய்யமுடியாமல், சத்தியத்திற்கு சாதகமாகவே செய்யமுடியும். நீதி 21:30மாற் 9:39அப் 4:28-30எபி 2:3-4எண் 16:28-351 தீமோ 1:20அப் 5:1-111 கொரி 5:4-5 நாங்கள் பலவீனமுள்ளவர்களும் நீங்கள் பலமுள்ளவர்களாகவும் இருக்கும்போது சந்தோஷப்படுகிறோம்; நீங்கள் பூரணர்களாகும்படி வேண்டுதல்செய்கிறோம். 2 கொரி 13:111 கொரி 4:101 தெச 3:101 பேது 5:102 கொரி 12:5-102 கொரி 11:302 கொரி 13:7-82 கொரி 7:1 ஆகவே, இடித்துப்போடுவதற்கு அல்ல, உறுதியாகக் கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடம் வரும்போது, உங்களைக் கண்டிக்காமல் இருப்பதற்காக, நான் தூரத்தில் இருக்கும்போதே இவைகளை எழுதுகிறேன். 2 கொரி 10:82 கொரி 2:3தீத் 1:131 கொரி 4:212 கொரி 10:22 கொரி 13:82 கொரி 12:20-212 கொரி 13:2

இறுதி வாழ்த்துக்கள்.

கடைசியாக, சகோதரர்களே, சந்தோஷமாக இருங்கள், பூரணராக நாடுங்கள், ஆறுதல் அடையுங்கள்; ஒரே சிந்தையாக இருங்கள், சமாதானமாக இருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்திற்கும் காரணராகிய தேவன் உங்களோடு இருப்பார். எபி 12:14ரோம 12:161 கொரி 1:10ரோம 15:33மாற் 9:50ரோம 12:181 யோவா 4:8-161 பேது 3:11 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். ரோம 16:161 பேது 5:141 தெச 5:261 கொரி 16:20 பரிசுத்தவான்கள் எல்லோரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 1 பேது 5:132 யோவா 1:133 யோவா 1:14எபி 13:24பிலே 1:23-24பிலி 4:21-22ரோம 16:16ரோம 16:21-23 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென். எபே 2:22ரோம 5:51 கொரி 16:23ரோம 16:20யூதா 1:211 கொரி 6:19பிலி 2:12 கொரி 8:9