2 கொரிந்தியர் 5

2 Corinthians 5
அத்தியாயம் 5

பவுலின் பாடுகளுக்கான காரணங்கள்

பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். யோபு 19:25-261 யோவா 3:22 பேது 1:13-142 கொரி 4:7எபி 9:241 கொரி 15:46-48யோவா 14:2-3எபி 11:10 ஏனென்றால், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வீட்டை அணிந்துகொள்ள அதிக ஏக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம்; ரோம 8:231 கொரி 15:53-542 கொரி 5:3-4பிலி 1:23ரோம 7:241 பேது 1:6-7 அணிந்துகொண்டவர்களானால், நிர்வாணிகளாகக் காணப்படமாட்டோம். ஆதி 3:7-11வெளி 16:15வெளி 3:18யாத் 32:25 இந்தக் கூடாரத்தில் இருக்கிற நாம் சுமை சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்து போடவேண்டும் என்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காக போர்வை தரித்தவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். 1 கொரி 15:53-542 கொரி 5:2ஏசா 25:82 பேது 1:13 இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவி என்னும் உத்திரவாதத்தை நமக்குத் தந்தவரும் அவரே. 2 கொரி 1:22எபே 1:13-14ரோம 8:23எபே 4:301 யோவா 3:242 கொரி 4:17எபே 2:10ஏசா 29:23 நாம் காண்பவைகளின்படி நடக்காமல், அவரை விசுவாசித்து நடக்கிறோம். 2 கொரி 5:1பிலி 3:20-21எபி 13:14சங் 39:121 நாளாக 29:152 கொரி 5:8எபி 10:35எபி 11:13 இந்த சரீரத்தில் குடியிருக்கும்போது கர்த்தரிடம் குடியில்லாதவர்களாக இருக்கிறோம் என்று தெரிந்தும், எப்பொழுதும் தைரியமாக இருக்கிறோம். எபி 11:1-272 கொரி 4:18ரோம 8:24-251 பேது 1:8எபி 10:38கலா 2:201 பேது 5:91 கொரி 13:12 நாம் தைரியமாகவே இருந்து, இந்த சரீரத்தைவிட்டுப் போகவும் கர்த்தரிடம் குடியிருக்கவும் அதிகமாக விரும்புகிறோம். பிலி 1:20-242 கொரி 5:6யோவா 14:31 யோவா 3:22 கொரி 12:2-32 கொரி 5:92 தீமோ 4:7-8சங் 16:11 அதினாலேயே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியில்லாமல் போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாக இருக்கவிரும்புகிறோம். கொலோ 1:102 பேது 3:14ரோம 14:181 தெச 4:111 தீமோ 4:10ஆதி 4:71 கொரி 15:581 கொரி 9:26-27 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தகுந்த பலனைப் பெற்றுக்கொள்வதற்காக, நாமெல்லோரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டும். மத் 16:27வெளி 22:12பிரச 12:14எபே 6:8சங் 62:12ரோம 2:5-101 கொரி 4:5சங் 98:9

ஒப்புரவாக்குதலின் ஊழியம்

எனவே, கர்த்தருக்குப் பயப்படவேண்டும் என்று அறிந்து, மனிதர்களுக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்குமுன்பாக வெளிப்படையாக இருக்கிறோம்; உங்களுடைய மனச்சாட்சிக்கும் வெளிப்படையாக இருக்கிறோம் என்று நம்புகிறேன். யூதா 1:23எபி 10:312 தீமோ 2:24-262 கொரி 4:1-2லூக் 12:5வெளி 20:151 தெச 2:3-122 கொரி 6:1 இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மீண்டும் பெருமைப்படுத்திக்கொள்ளாமல், இருதயத்தில் இல்லை, வெளிவேஷத்தில் மேன்மை பாராட்டுகிறவர்களுக்கு எதிரே, எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படி வாய்ப்பை உண்டாக்குகிறோம். 2 கொரி 3:12 கொரி 1:14கலா 6:12-142 கொரி 10:182 கொரி 11:12-162 கொரி 10:122 கொரி 10:82 கொரி 12:1-9 நாங்கள் பைத்தியம் பிடித்தவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கிறோம்; தெளிந்த புத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கிறோம். 2 கொரி 11:16-172 கொரி 12:62 கொரி 11:1ரோம 12:31 கொரி 4:10-13அப் 26:24-252 கொரி 12:112 சாமு 6:21-22 கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை அதிகமாக உற்சாகப்படுத்துகிறது; ஏனென்றால், எல்லோருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லோரும் மரித்தார்கள் என்றும்; கலா 2:20ரோம 14:7-9மத் 10:37-381 பேது 1:8மத் 20:28ரோம 5:15எபே 3:18-19யோவா 14:21-23 வாழ்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று வாழாமல், தங்களுக்காக மரித்து உயிரோடு எழுந்தவருக்கென்று வாழ்வதற்காக, அவர் எல்லோருக்காகவும் மரித்தார் என்றும் நிதானிக்கிறோம். ரோம 14:7-91 பேது 4:2-41 பேது 1:14-15கொலோ 3:1கொலோ 3:17கலா 2:19-201 யோவா 4:9தீத் 2:14 எனவே, இனிமேல், நாங்கள் ஒருவனையும் சரீரத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் சரீரத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை சரீரத்தின்படி அறியோம். கொலோ 3:11பிலி 3:7-8யோவா 6:63யாக் 2:1-4யாக் 3:17கலா 5:6யோவா 15:141 தீமோ 5:21-22 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவிற்குள் இருந்தால் புதுப்படைப்பாக இருக்கிறான்; பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோனது, எல்லாம் புதிதானது. எசேக் 36:26எபே 4:22-24ஏசா 43:18-19யோவா 3:3சங் 51:10எசேக் 11:19கொலோ 3:1-10ரோம 8:1 இவைகளெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மை அவரோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். கொலோ 1:20-21ரோம 5:10-112 கொரி 5:19-20எபே 2:16-171 யோவா 4:10ரோம 5:1ரோம 11:361 யோவா 2:2 அது என்னவென்றால், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவிற்குள் அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடம் ஒப்புவித்தார். ஏசா 43:25ஏசா 44:221 யோவா 2:1-21 யோவா 4:101 தீமோ 3:16சங் 32:1-2ரோம 4:6-8கொலோ 2:9 ஆகவே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருந்து, தேவனோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவினால் உங்களை வேண்டிக்கொள்கிறோம். எபே 6:20லூக் 14:23மல்கி 2:7எசேக் 18:31-32ஏசா 55:6-7யோவா 20:21லூக் 10:162 கொரி 5:11 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாக இருப்பதற்காக, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 1 பேது 2:22-241 பேது 3:18ரோம 5:19கலா 3:131 கொரி 1:301 யோவா 3:5பிலி 3:9ஏசா 53:4-6