2 இராஜாக்கள் 8

2 Kings 8
அத்தியாயம் 8

சூனேமியாளின் நிலம் மீட்கப்படுதல்

எலிசா தான் உயிரோடு எழுப்பின சிறுவனின் தாயை நோக்கி: நீ உன் குடும்பத்தாரோடு எழுந்து புறப்பட்டுப்போய் எங்கேயாவது போய் தங்கியிரு; யெகோவா பஞ்சத்தை வரச்செய்வார்; அது ஏழுவருடங்கள் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான். 2இராஜா 4:31-35ஆகா 1:11சங் 105:16ரூத் 1:12இராஜா 4:18ஆதி 12:101 இராஜா 17:11 இராஜா 18:2 அந்தப் பெண் எழுந்து, தேவனுடைய மனிதன் சொன்ன வார்த்தையின்படியே செய்து, தன் குடும்பத்தாரோடுகூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்திற்குப்போய், ஏழுவருடங்கள் குடியிருந்தாள். 1 தீமோ 5:81 சாமு 27:1-3நியாயாதி 3:3 ஏழுவருடங்கள் சென்றபின்பு, அவள் பெலிஸ்தரின் தேசத்தைவிட்டுத் திரும்பவந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடுவதற்காகப் போனாள். 2இராஜா 4:132இராஜா 6:262இராஜா 8:62 சாமு 14:4எரே 22:16லூக் 18:3-5சங் 82:3-4 அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனிதனின் வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி: எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாகச் சொல் என்றான். 2இராஜா 5:20-272இராஜா 2:142இராஜா 2:20-222இராஜா 2:242இராஜா 3:14-162இராஜா 4:122இராஜா 4:16-172இராஜா 4:3-6 இறந்துபோனவனை உயிரோடு எழுப்பினார் என்பதை அவன் ராஜாவிற்குச் சொல்லுகிறபோது, இதோ, அவன் உயிரோடு எழுப்பின சிறுவனின் தாயாகிய அந்தப் பெண் வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவிடம் முறையிட்டாள்; அப்பொழுது கேயாசி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இவள்தான் அந்த பெண்; எலிசா உயிரோடு எழுப்பின இவளுடைய மகன் இவன்தான் என்றான். 2இராஜா 4:35மத் 10:29-301 சாமு 26:172இராஜா 6:26அப் 8:27-40பிரச 9:11எஸ்த 5:14எஸ்த 6:11-12 ராஜா அந்த பெண்ணைக் கேட்டதற்கு, அவள்: அதை அவனுக்கு விவரமாகச் சொன்னாள்; அப்பொழுது ராஜா அவளுக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவளுக்குரிய எல்லாவற்றையும், அவள் தேசத்தைவிட்டுப் போன நாள்முதல் இதுவரைக்கும் உண்டான அந்த வயலின் வருமானம் அனைத்தையும் அவளுக்குக் கிடைக்கச் செய் என்றான். நீதி 16:7நீதி 21:12 சாமு 9:71 நாளாக 28:12இராஜா 9:32உபா 22:2ஆதி 37:36நியாயாதி 11:13

ஆசகேல் பெனாதாத்தைக் கொலை செய்தல்

சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான்; தேவனுடைய மனிதன் இவ்விடத்திற்கு வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது. 1 இராஜா 11:242இராஜா 6:241 இராஜா 20:11 இராஜா 13:11 இராஜா 15:181 இராஜா 20:342இராஜா 1:9-102இராஜா 2:15 ராஜா ஆசகேலை 1 நோக்கி: நீ உன் கையிலே காணிக்கையை எடுத்துக்கொண்டு, தேவனுடைய மனிதனுக்கு எதிர்கொண்டுபோய், நான் இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று அவனைக் கொண்டு கர்த்தரிடத்தில் விசாரிக்கச் சொன்னான். 1 இராஜா 19:152இராஜா 1:21 சாமு 9:71 இராஜா 14:1-41 இராஜா 19:172இராஜா 1:62இராஜா 3:11-132இராஜா 5:5 ஆசகேல் தமஸ்குவின் சகல உச்சிதங்களிலும் நாற்பது ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு, அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவனுக்கு முன்பாக நின்று, சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் என்னும் உம்முடைய மகன் என்னை உம்மிடத்திற்கு அனுப்பி, இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று கேட்கச்சொன்னார் என்றான். 1 இராஜா 19:151 சாமு 25:82இராஜா 13:142இராஜா 16:72இராஜா 5:132இராஜா 5:52இராஜா 6:21பிலே 1:14 எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி சுகமாகிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் யெகோவா எனக்குக் காண்பித்தார் என்றான். 1 இராஜா 22:152இராஜா 1:162இராஜா 1:42இராஜா 8:13-15ஆமோ 3:7ஆமோ 7:1ஆமோ 7:4ஆமோ 7:7 பின்பு தேவனுடைய மனிதன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகும்வரை அவனைப் பார்த்துக்கொண்டே அழுதான். லூக் 19:41எரே 4:19எரே 9:18சங் 119:136ரோம 9:22இராஜா 2:17அப் 20:19அப் 20:31 அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவனே, ஏன் அழுகிறீர் என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் மக்களுக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியால் அழுகிறேன்; நீ அவர்களுடைய கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்களுடைய வாலிபர்களைப் பட்டயத்தால் கொன்று, அவர்களுடைய குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்களுடைய கர்ப்பவதிகளின் வயிற்றைக் கிழித்துப்போடுவாய் என்றான். ஓசி 13:16நாகூ 3:102இராஜா 15:162இராஜா 12:172இராஜா 13:3ஆமோ 1:13ஏசா 13:162இராஜா 13:7 அப்பொழுது ஆசகேல், இத்தனை பெரிய காரியத்தைச் செய்வதற்கு நாயைப்போல இருக்கிற உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் யெகோவா எனக்குத் தெரிவித்தார் என்றான். 1 சாமு 17:431 இராஜா 19:152 சாமு 9:82இராஜா 8:10மத் 7:6மீகா 2:1சங் 22:16சங் 22:20 இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் எஜமானிடத்திற்கு வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன், நீர் இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி, 2இராஜா 8:102இராஜா 5:25மத் 26:16 மறுநாளிலே ஒரு சமுக்காளத்தை எடுத்து, தண்ணீரிலே தோய்த்து அவனுடைய முகத்தின்மேல் விரித்தான்; அதனால் அவன் இறந்துபோனான்; ஆசகேல் அவனுக்குப் பதிலாக ராஜாவானான். 2இராஜா 8:131 இராஜா 11:26-371 இராஜா 15:281 இராஜா 16:101 இராஜா 16:181 இராஜா 19:151 சாமு 16:12-131 சாமு 24:13

யூதாவின் ராஜாவாகிய யோராம்

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகன் யோராமுடைய ஐந்தாம் வருட ஆட்சியில், யோசபாத் யூதாவிலே இன்னும் ராஜாவாக இருக்கும்போது, யோசபாத்தின் மகனாகிய யோராம் என்னும் யூதாவின் ராஜா ஆட்சிசெய்யத் துவங்கினான். 2இராஜா 1:172இராஜா 3:11 இராஜா 22:502 நாளாக 21:1-20 அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். 2 நாளாக 21:5-10 அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் மகள் அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 2இராஜா 8:261 இராஜா 11:1-51 இராஜா 21:251 இராஜா 22:52-532 நாளாக 18:12 நாளாக 19:22 நாளாக 21:132 நாளாக 21:6 யெகோவா: உன் மகன்களுக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னபடியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் அழிக்கவில்லை. 1 இராஜா 11:362 சாமு 7:12-132 சாமு 7:15ஓசி 11:9ஏசா 37:35லூக் 1:32-331 இராஜா 15:4-52 நாளாக 21:7 அவனுடைய நாட்களில் யூதாவுடைய ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் கலகம்செய்து, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள். 1 இராஜா 22:472இராஜா 3:92இராஜா 3:272இராஜா 8:222 நாளாக 21:8-102 சாமு 8:14ஆதி 27:40 அதனாலே யோராம் சகல இரதங்களோடுங்கூட சாயீருக்குப் புறப்பட்டுப் போனான்; அவன் இரவில் எழுந்திருந்து, தன்னைச் சூழ்ந்துகொண்ட ஏதோமியர்களையும் இரதங்களின் தலைவர்களையும் தாக்கியபோது, மக்கள் தங்களுடைய கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். 2 சாமு 18:17 அப்படியே யூதாவுடைய ஆளுகையின் கீழிருந்த ஏதோமியர்கள், இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல கலகம்செய்தார்கள்; அக்காலத்தில்தானே லிப்னா பட்டணத்தாரும் கலகம்செய்தார்கள். 2இராஜா 19:8யோசு 21:13ஆதி 27:402 நாளாக 21:10 யோராமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த அனைத்தும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 1 இராஜா 11:411 இராஜா 14:291 இராஜா 15:232 நாளாக 21:11-202இராஜா 15:362இராஜா 15:6 யோராம் இறந்து, தாவீதின் நகரத்தில் தன் முன்னோர்களுடன் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுக்குப் பதிலாக அவனுடைய மகனாகிய அகசியா ராஜாவானான். 2 நாளாக 21:12 நாளாக 21:172 நாளாக 22:62 நாளாக 25:231 நாளாக 3:111 இராஜா 11:431 இராஜா 14:201 இராஜா 14:31

யூதாவின் ராஜாவாகிய அகசியா

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகன் யோராமுடைய பன்னிரண்டாம் வருட ஆட்சியிலே, யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா ராஜாவானான். 2இராஜா 9:292 நாளாக 21:202இராஜா 8:16-17 அகசியா ராஜாவாகிறபோது, இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரே ஒரு வருடம் எருசலேமில் அரசாட்சி செய்தான்; இஸ்ரவேலின் ராஜாவாகிய ஒம்ரியின் மகளான அவனுடைய தாயின் பெயர் அத்தாலியாள். 2 நாளாக 22:22 நாளாக 22:5-82இராஜா 11:12இராஜா 11:13-162இராஜா 9:21-27 அவன் ஆகாபுடைய வீட்டாரின் வழியே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போல் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் ஆகாப் வீட்டாரோடே சம்பந்தம் கலந்திருந்தான். 2 நாளாக 22:3-42 கொரி 6:14-172இராஜா 8:18பிரச 7:26 அவன் ஆகாபின் மகனாகிய யோராமோடேகூடக் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு போரிடப்போனான்; சீரியர்கள் யோராமைக் காயப்படுத்தினார்கள். 2 நாளாக 22:51 இராஜா 19:171 இராஜா 22:291 இராஜா 22:3-41 இராஜா 4:132 நாளாக 18:2-32 நாளாக 18:312 நாளாக 19:2 ராஜாவாகிய யோராம் தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு போர்செய்யும்போது, சீரியர்கள் ராமாவிலே தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக்கொள்ள யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான்; ஆகாபின் மகனாகிய யோராம் வியாதியாயிருந்ததால், யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா யெஸ்ரயேலில் இருக்கிற அவனைப் பார்ப்பதற்குப் போனான். 2இராஜா 9:15-161 இராஜா 22:342 நாளாக 22:5-72இராஜா 8:28