உபாகமம் 11

Deuteronomy 11
அத்தியாயம் 11

தேவனுக்குக் கீழ்ப்படிதல்

“நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, அவருடைய பிரமாணங்களையும், கட்டளைகளையும், நியாயங்களையும், கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக. உபா 6:5உபா 10:12லூக் 1:74-75உபா 30:16-20உபா 4:40உபா 6:1லேவி 8:35சகரி 3:7 உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய சிட்சிகளையும், அவருடைய மகத்துவத்தையும், பலத்த கையையும், ஓங்கிய புயத்தையும், அப் 26:22உபா 29:10உபா 4:34உபா 5:24உபா 7:19உபா 8:19உபா 8:2-5உபா 9:26 அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும், அவருடைய செயல்களையும், உபா 7:19உபா 4:34எரே 32:20-21சங் 105:27-45சங் 135:9சங் 78:12-13 எகிப்திய படையும் அவர்களுடைய குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின்தொடர்ந்து வரும்போது, யெகோவா சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை அவர்கள்மேல் புரளச்செய்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செயலையும், யாத் 14:23-31யாத் 15:19யாத் 15:9-10சங் 106:11யாத் 15:4எபி 11:29 நீங்கள் இவ்விடத்திற்கு வரும்வரை அவர் உங்களுக்கு வனாந்திரத்தில் செய்ததையும், சங் 105:39-41சங் 106:12-48சங் 77:20சங் 78:14-72 ரூபன் வம்சத்தைச் சேர்ந்த எலியாபின் மகன்களான தாத்தானையும், அபிராமையும், அவர்களுடைய குடும்பங்களையும், அவர்களுடைய கூடாரங்களையும், இஸ்ரவேலர்கள் எல்லோருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருட்களையும் பூமி தன் வாயைத் திறந்து விழுங்கச்செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்துகொள்ளுங்கள். எண் 26:9-10சங் 106:17எண் 16:1-35எண் 27:3 யெகோவா செய்த மகத்துவமான செயல்களையெல்லாம் உங்களுடைய கண்கள் அல்லவோ கண்டது. சங் 145:12சங் 145:4-6சங் 150:2உபா 5:3உபா 7:19சங் 106:2 “ஆகையால் நீங்கள் பலப்படுவதற்கும், எபே 6:10யோசு 1:6-7எபே 3:16பிலி 4:132 கொரி 12:9-10உபா 31:23உபா 8:10-11சங் 138:3 நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்திற்குள் நுழைந்து அதைச் சொந்தமாக்குவதற்கும், யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழ்வதற்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக. யாத் 3:8உபா 4:40உபா 6:2எசேக் 20:6உபா 5:16உபா 9:5உபா 6:18நீதி 10:27 நீ சொந்தமாக்கப்போகிற தேசம், நீ விட்டுவந்த எகிப்துதேசத்தைப்போல் இருக்காது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய். சகரி 14:18 நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ள தேசம்; அது வானத்தின் மழைத்தண்ணீரைக் குடிக்கும் தேசம்; எபி 6:7உபா 8:7-9சங் 65:12-13ஆதி 27:28ஏசா 28:1எரே 2:7சங் 104:10-13 அது உன் தேவனாகிய யெகோவா விசாரிக்கிற தேசம், வருடத்தின் துவக்கமுதல் வருடத்தின் முடிவுவரை எப்பொழுதும் உன் தேவனாகிய யெகோவாவின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும். எரே 24:61 இராஜா 9:3சங் 33:18சங் 34:15எஸ்றா 5:5 “நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்தி, அவரைப் பணிந்துகொள்ள, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால், உபா 10:12உபா 4:29உபா 11:8உபா 6:17உபா 6:5-6சங் 119:4உபா 11:22 நீ உன்னுடைய தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும் சேர்க்கும்படி, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யச்செய்து, யாக் 5:7லேவி 26:4உபா 28:12எசேக் 34:26யோவே 2:22-23எரே 14:22யோபு 37:11-13யோபு 5:10-11 மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படிச் செய்வேன், நீ சாப்பிட்டுத் திருப்தியடைவாய் என்கிறார். உபா 6:11சங் 104:14யோவே 2:19மல்கி 3:10-11யோவே 2:22உபா 8:10ஆகா 1:6யோவே 1:18 உங்களுடைய இருதயம் ஏமாற்றப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தெய்வங்களைப் பணிந்துகொண்டு, அவைகளை வணங்காமலும் இருக்க எச்சரிக்கையாயிருங்கள். எபி 3:12யோபு 31:27எபி 2:1உபா 29:18யாக் 1:261 யோவா 5:21உபா 30:17உபா 4:23 இல்லாவிட்டால் யெகோவாவுடைய கோபம் உங்கள்மேல் வந்து, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடுக்காமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; யெகோவா உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள். 1 இராஜா 8:352 நாளாக 6:26ஆமோ 4:7உபா 6:151 இராஜா 17:1உபா 4:262 நாளாக 7:13உபா 28:23-24 ஆகையால் யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்த தேசத்தில் உங்களுடைய நாட்களும், உங்களுடைய பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும்வரை நீடித்திருப்பதற்கு, கொலோ 3:16உபா 6:6-9நீதி 3:12 பேது 3:1-2சங் 119:11யாத் 13:9நீதி 6:20-232 பேது 1:12 நீங்கள் என் வார்த்தைகளை உங்களுடைய இருதயத்திலும் உங்களுடைய ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, உபா 6:7உபா 4:9-10ஏசா 38:19சங் 34:11நீதி 2:1நீதி 4:1-27சங் 78:5-6 அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக. உபா 6:9 அவைகளை உங்களுடைய வீட்டு நிலைகளிலும் உங்களுடைய வாசல்களிலும் எழுதுவீர்களாக. நீதி 3:2நீதி 4:10நீதி 9:11உபா 4:40சங் 72:5சங் 89:28-29உபா 5:16உபா 6:2 நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் கவனமாகக் கைக்கொள்வீர்களானால், உபா 11:13உபா 6:17உபா 10:202 கொரி 11:2-32 தீமோ 4:8அப் 11:23உபா 30:20ஆதி 2:24 யெகோவா உங்களுக்கு முன்பாக அந்த மக்களையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் எண்ணிக்கையில் அதிகமும், பலத்ததுமான மக்களை நீங்கள் துரத்துவீர்கள். உபா 4:38உபா 9:1உபா 7:1-2உபா 7:22-23உபா 9:5யாத் 23:27-30யாத் 34:11 உங்களுடைய உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்திரத்தையும் லீபனோனையும் துவங்கி, ஐப்பிராத்து நதியையும் துவங்கி, கடைசி மத்திய தரை சமுத்திரம்வரைக்கும் உங்களுடைய எல்லையாக இருக்கும். யோசு 14:9யாத் 23:31ஆதி 15:18-211 இராஜா 4:212 நாளாக 9:261 இராஜா 4:24யோசு 1:3-4எண் 34:3-15 ஒருவரும் உங்களுக்கு எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் திகிலும் நீங்கள் மிதிக்கும் பூமியின்மேலெல்லாம் வரச்செய்வார். உபா 7:24யாத் 23:27யோசு 1:5உபா 2:25யோசு 5:1யோசு 2:9 “இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். உபா 30:1உபா 30:15-20கலா 3:10கலா 3:13-14 இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும், ஏசா 1:19உபா 28:1-14ஏசா 3:10லூக் 11:28லேவி 26:3-13யோவா 13:17யோவா 14:21-23சங் 19:11 எங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தெய்வங்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும். உபா 28:15-68கலா 3:10ரோம 2:8-9உபா 29:19-28ஏசா 1:20ஏசா 3:11லேவி 26:14-32மத் 25:41 நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை நுழையச்செய்யும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும், ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறவேண்டும். உபா 27:12-26யோசு 8:30-35 அவைகள் யோர்தான் அப்புறத்திலே சூரியன் மறைகிற மேற்குவழியாகக் கானானியர்கள் குடியிருக்கிற பகுதியிலே, கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகில் அல்லவோ இருக்கிறது? ஆதி 12:6நியாயாதி 7:1யோசு 4:19யோசு 5:9 உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கு, நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதிலே குடியிருப்பீர்கள். யோசு 1:11உபா 9:1யோசு 3:13-17 ஆகையால் உங்களுக்கு இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள். உபா 12:32மத் 28:201 தெச 4:1-2உபா 5:32-33யோவா 15:14லூக் 1:6மத் 7:21-27சங் 119:6