ஏபால் மலையின் பலிபீடம்
பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்களுடன் இருக்கும்போது, மக்களை நோக்கி: “நான் இன்று உங்களுக்கு கொடுக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள். யோவா 15:14யாக் 2:10லூக் 11:281 தெச 4:1-2உபா 11:32உபா 26:16உபா 4:1-3 உன் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரிய கற்களை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி, எசேக் 11:19எசேக் 36:26யோசு 4:1யோசு 8:31உபா 11:31உபா 26:1உபா 27:3உபா 6:1 உன் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி உனக்குக் கொடுக்கும் நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திற்குள் நுழையும்படி நீ கடந்துபோனபின்பு, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகள் யாவையும் அவைகளில் எழுதக்கடவாய். யோசு 8:32உபா 26:92 கொரி 3:2-3எபி 10:16எரே 31:31-33யோசு 5:6எண் 13:27எண் 14:8 மேலும் நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தபின்பு, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கற்களை ஏபால் மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி, உபா 11:29-30யோசு 8:30-33 அங்கே இரும்பு ஆயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டுவாயாக. யாத் 20:25யாத் 24:41 இராஜா 18:31-32யோசு 8:30-31 நீ உன் தேவனாகிய யெகோவாவின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய யெகோவாவுக்குச் சர்வாங்கதகனபலிகளையும், எபே 5:2லேவி 1:1-17 சமாதானபலிகளையும் செலுத்தி, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சாப்பிட்டுச் சந்தோஷமாக இருந்து, அப் 10:36உபா 12:7ஆப 3:18எபி 13:20-21ஏசா 12:3லேவி 3:1-17சங் 100:1-22 நாளாக 30:23-27 அந்தக் கற்களில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் மிகத்தெளிவாக எழுதக்கடவாய்” என்று கட்டளையிட்டான். ஆப 2:2யோவா 16:252 கொரி 3:12
ஏபால் மலையிலிருந்து கூறப்பட்ட சாபங்கள்
பின்னும் மோசே, லேவியர்களாகிய ஆசாரியர்களுடன் இருக்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கி: “இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளில் உன் தேவனாகிய யெகோவாவுக்குரிய மக்கள் கூட்டமானாய். 1 பேது 2:10-11உபா 26:16-181 கொரி 6:9-11எபே 5:8-9ரோம 6:17-18ரோம 6:22 ஆகையால் நீ உன் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு கொடுக்கிற அவருடைய கற்பனைகளின்படியும், கட்டளைகளின்படியும் செய்வாயாக” என்று சொன்னான். 1 பேது 1:14-16உபா 11:1உபா 11:7-8மத் 5:48மீகா 6:81 பேது 4:1-3உபா 10:12-13எபே 4:17-24 மேலும் அந்நாளிலே மோசே மக்களை நோக்கி: “நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தபின்பு, மக்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும். நியாயாதி 9:7உபா 11:26-29ஆதி 29:33-35ஆதி 30:18ஆதி 30:24ஆதி 35:18யோசு 8:33-35 சாபத்தைக் கூறுவதற்கு, ஏபால் மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும். உபா 27:4உபா 11:29ஆதி 29:32ஆதி 30:20ஆதி 30:6-13ஆதி 49:3-4யோசு 8:33 அப்பொழுது லேவியர்கள் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரையும் பார்த்து: தானி 9:11உபா 33:9-10யோசு 8:33மல்கி 2:7-9நெகே 8:7-8 யெகோவாவுக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையாக செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான எந்தவொரு விக்கிரகத்தையும் உண்டாக்கி ஒளித்துவைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு மக்களெல்லோரும் மறுமொழியாக ஆமென் என்று சொல்வார்களாக. யாத் 34:17யாத் 20:4உபா 5:8லேவி 19:4லேவி 26:11 கொரி 14:16உபா 4:16-23யாத் 20:23 தன் தகப்பனையும் தன் தாயையும் அவமதிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. லேவி 19:3யாத் 21:17உபா 21:18-21யாத் 20:12எசேக் 22:7லேவி 20:9மத் 15:4-6நீதி 30:11-17 பிறனுடைய எல்லைக்குறியை மாற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. உபா 19:14நீதி 22:28நீதி 23:10-11 குருடனை வழிமாறச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. லேவி 19:14மத் 15:14நீதி 28:10ஏசா 56:10யோபு 29:15வெளி 2:14 அந்நியன், திக்கற்றவன், விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. உபா 10:18உபா 24:17யாத் 22:21-24யாத் 23:2மல்கி 3:5நீதி 17:23சங் 82:2-4யாத் 23:8-9 தன் தகப்பனுடைய மனைவியோடே உறவுகொள்கிறவன், தன் தகப்பனை அவமானப்படுத்தியதால், சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. உபா 22:30லேவி 18:81 கொரி 5:1லேவி 20:111 நாளாக 5:12 சாமு 16:22ஆமோ 2:7எசேக் 22:10 யாதொரு மிருகத்தோடே உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. லேவி 18:23யாத் 22:19லேவி 20:15 தன் தகப்பனுக்காவது தாய்க்காவது மகளாகிய தன் சகோதரியுடன் உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. லேவி 18:9லேவி 20:17எசேக் 22:112 சாமு 13:12 சாமு 13:8-14 தன் மாமியாருடன் உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. லேவி 20:14லேவி 18:17 மறைவிலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. எண் 35:31லேவி 24:172 சாமு 11:15-172 சாமு 12:9-122 சாமு 13:282 சாமு 20:9-102 சாமு 3:27உபா 19:11-12 குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்கு லஞ்சம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. உபா 10:17யாத் 23:7-8சங் 15:5உபா 16:19அப் 1:18எசேக் 22:12-13மத் 26:15மத் 27:3-4 இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடக்காதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. கலா 3:10உபா 28:15-68ரோம 10:5எசேக் 18:24சங் 119:211 கொரி 16:22உபா 27:15எரே 11:3-5