தண்ணீரின்மேல் ஆகாரம்
உன்னுடைய ஆகாரத்தைத் தண்ணீர்கள் 1 மூலமாக அனுப்பு 2; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய். பிரச 11:6நீதி 19:17எபி 6:10மத் 10:422 கொரி 9:6ஏசா 32:20சங் 41:1-2கலா 6:8-10 ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது. 1 தீமோ 6:18-19யோபு 5:19சங் 112:9லூக் 6:30-35நீதி 6:16அப் 11:28-30தானி 4:27எஸ்த 9:19 மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும். 1 யோவா 3:17ஏசா 55:10-11சங் 65:9-13லூக் 13:71 இராஜா 18:45லூக் 16:22-26மத் 3:10 காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களைக் கவனிக்கிறவன் அறுக்கமாட்டான். நீதி 20:4நீதி 3:27நீதி 22:13 ஆவியின் 3 வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாமல் இருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறிந்துகொள்வதில்லை. யோவா 3:8பிரச 8:17சங் 92:5ரோம 11:33ஏசா 40:28சங் 104:24சங் 139:13-16பிரச 7:24 காலையிலே உன்னுடைய விதையை விதை; மாலையிலே உன்னுடைய கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாகப் பயன்படுமோ என்றும் நீ அறியமாட்டாய். 2 கொரி 9:10-11ஏசா 55:10ஆகா 1:6-11ஓசி 10:122 கொரி 9:6சகரி 8:11-12யோவா 4:36-381 கொரி 3:5-7
வாலிபத்திலே உன்னுடைய சுபாவத்தை நினை
வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்கு விருப்பமாகவும் இருக்கும். பிரச 7:11மத் 5:45நீதி 15:30சங் 84:11யோபு 33:30நீதி 29:13பிரச 6:5யோபு 33:28 மனிதன் அநேக வருடங்கள் வாழ்ந்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனுடைய இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாக இருக்கும்; வந்து நடப்பதெல்லாம் மாயையே. யோவா 12:35உபா 32:29பிரச 7:14யோவே 2:2பிரச 12:1-5பிரச 6:11பிரச 8:12பிரச 8:15 வாலிபனே! உன்னுடைய இளமையிலே சந்தோஷப்படு, உன்னுடைய வாலிப நாட்களிலே உன்னுடைய இருதயம் உன்னை மகிழ்ச்சியாக்கட்டும்; உன்னுடைய நெஞ்சின் வழிகளிலும், உன்னுடைய கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றிக்காகவும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறிந்துகொள். பிரச 12:141 யோவா 2:15-16பிரச 12:1பிரச 3:17புலம் 3:272 கொரி 5:10யோபு 31:7எபி 9:27 நீ உன்னுடைய இருதயத்திலிருந்து கோபத்தையும், உன்னுடைய சரீரத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே. 2 கொரி 7:12 தீமோ 2:22பிரச 1:2பிரச 1:14பிரச 12:12 பேது 3:11-14யோபு 20:11சங் 39:5