எல்லாவற்றிற்கும் காலம்
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலம் உண்டு; வானத்தின் கீழ் இருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரம் உண்டு. பிரச 3:17மத் 16:3பிரச 8:5-6பிரச 7:142இராஜா 5:26நீதி 15:232 நாளாக 33:12பிரச 2:3
பிறக்க ஒரு காலம் உண்டு, இறக்க ஒரு காலம் உண்டு; எபி 9:27யோபு 14:5மத் 15:13எரே 18:7-10கலா 4:4ஏசா 38:1யோவா 16:21யோபு 7:1
நட ஒரு காலம் உண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலம் உண்டு;
கொல்ல ஒரு காலம் உண்டு, குணமாக்க ஒரு காலம் உண்டு; ஓசி 6:1-21 சாமு 2:6எரே 45:4எரே 31:28உபா 32:39ஏசா 44:26ஏசா 5:5-61 சாமு 2:25
இடிக்க ஒரு காலம் உண்டு, கட்ட ஒரு காலம் உண்டு;
அழ ஒரு காலம் உண்டு, சிரிக்க ஒரு காலம் உண்டு; சங் 30:5ரோம 12:15யாக் 4:9யோவா 16:20-22சங் 126:1-2சங் 126:5-62 கொரி 7:10யாத் 15:20
புலம்ப ஒரு காலம் உண்டு, நடனமாட ஒரு காலம் உண்டு;
கற்களை எறிந்துவிட ஒரு காலம் உண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலம் உண்டு; 2இராஜா 3:25யோசு 10:27யோசு 4:3-9யோவே 2:161 சாமு 21:4-52 சாமு 18:17-18யாத் 19:15உன்னத 2:6-7
தழுவ ஒரு காலம் உண்டு, தழுவாமல் இருக்க ஒரு காலம் உண்டு;
தேட ஒரு காலம் உண்டு, இழக்க ஒரு காலம் உண்டு; பிலி 3:7-8லூக் 9:24-25மாற் 8:35-37மத் 16:25-262இராஜா 5:26பிரச 11:1எபி 10:34-35மத் 19:29
காப்பாற்ற ஒரு காலம் உண்டு, எறிந்துவிட ஒரு காலம் உண்டு;
கிழிக்க ஒரு காலம் உண்டு, தைக்க ஒரு காலம் உண்டு; ஆமோ 5:13மீகா 7:5எஸ்த 4:13-14புலம் 3:28அப் 4:20நீதி 31:8-9எஸ்த 7:4யோபு 32:4-22
மவுனமாக இருக்க ஒரு காலம் உண்டு, பேச ஒரு காலம் உண்டு;
நேசிக்க ஒரு காலம் உண்டு, பகைக்க ஒரு காலம் உண்டு; எபே 5:25எபே 5:28-29லூக் 14:261 இராஜா 5:42 நாளாக 19:2சங் 139:212 சாமு 10:6-19எபே 3:19
யுத்தம்செய்ய ஒரு காலம் உண்டு, சமாதானப்படுத்த ஒரு காலம் உண்டு.
வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு பிரச 1:3பிரச 5:16நீதி 14:23பிரச 2:11பிரச 2:22-23மத் 16:26
அதினால் பலன் என்ன? மனிதர்கள் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன். பிரச 1:13-14ஆதி 3:19பிரச 2:261 தெச 2:92 தெச 3:8
அவர் அனைத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்களுடைய உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆரம்பம்முதல் முடிவுவரை செய்துவரும் செயல்களை மனிதன் கண்டுபிடிக்கமாட்டான். ரோம 1:19-20ரோம 11:33யோபு 11:7பிரச 8:17யோபு 5:9மாற் 7:37சங் 104:24ஆதி 1:31 மகிழ்ச்சியாக இருப்பதும் உயிரோடிருக்கும்போது நன்மைசெய்வதையும்தவிர, வேறொரு நன்மையும் மனிதனுக்கு இல்லையென்று அறிந்தேன். சங் 37:3பிரச 3:221 தீமோ 6:181 தெச 5:15-16அப் 20:35பிலி 4:4-9ஏசா 64:5லூக் 11:41 அன்றியும் மனிதர்கள் எல்லோரும் சாப்பிட்டுக் குடித்து தங்களுடைய எல்லா பிரயாசத்தின் பலனையும் அனுபவிப்பது தேவனுடைய வெகுமதி. பிரச 2:24பிரச 9:7ஏசா 65:21-23சங் 128:2பிரச 5:18-20உபா 28:30-31உபா 28:47-48பிரச 6:2 தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடு ஒன்றும் கூட்டவும் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவும் கூடாது; மனிதர்கள் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார். யாக் 1:17சங் 33:11ரோம 11:36அப் 5:39நீதி 30:6தீத் 1:2நீதி 21:30தானி 11:2-4 முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்பே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார். பிரச 1:9-10பிரச 6:10 பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நீதிமன்றத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது, நீதிமன்றத்தையும் கண்டேன். அங்கே அநீதி இருந்தது; பிரச 4:1பிரச 5:81 இராஜா 21:9-21அப் 23:3சங் 58:1-2சங் 82:2-5சங் 94:21-22ஏசா 59:14 எல்லா எண்ணங்களையும் எல்லா செயல்களையும் நியாயந்தீர்க்கும்காலம் இனி இருக்கிறபடியால் நீதிமானையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன். 2 கொரி 5:10பிரச 12:14பிரச 3:1மத் 16:272 தெச 1:6-10பிரச 11:9சங் 98:9ரோம 2:5-10 மனிதர்கள் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படி தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனிதர்களுடைய நிலைமையைக்குறித்து என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன். சங் 73:22சங் 49:122 பேது 2:12ஆதி 3:17-19எபி 9:271 பேது 1:24ரோம 9:23யோபு 14:1-4 மனிதர்களுக்கு சம்பவிப்பது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஒரே மாதிரி நடக்கும்; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; உயிர்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைவிட மனிதன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே. சங் 49:12சங் 49:20யோபு 14:10-12பிரச 2:14பிரச 2:20-23சங் 39:5-6சங் 89:47-482 சாமு 14:14 எல்லாம் ஒரே இடத்திற்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணிற்குத் திரும்புகிறது. ஆதி 3:19யோபு 34:15பிரச 12:7பிரச 3:21பிரச 6:6பிரச 9:10யோபு 10:9-10யோபு 7:9 உயர ஏறும் மனிதனுடைய ஆவியையும், தாழ பூமியில் இறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்? பிரச 12:72 கொரி 5:1யோவா 14:3லூக் 16:22-23பிலி 1:232 கொரி 5:8அப் 1:25 இப்படியிருக்கிறபடியால், மனிதன் தன்னுடைய செயல்களில் மகிழ்ச்சியாக இருக்கும் நன்மையைத்தவிர, வேறே நன்மை இல்லையென்று கண்டேன்; இதுவே அவனுடைய பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படி அவனைத் திரும்பிவரச்செய்கிறவன் யார்? பிரச 2:24பிரச 3:11-12பிரச 10:14பிரச 6:12பிரச 8:7பிரச 11:9பிலி 4:4-5பிரச 2:10-11