சொத்தைப் பாதுகாத்தல்
“ஒருவன் ஒரு மாட்டையோ ஒரு ஆட்டையோ திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நான்கு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கவேண்டும். 2 சாமு 12:6லூக் 19:8நீதி 6:31எண் 5:7லேவி 6:1-6நீதி 14:4 திருடன் திருடும்போது கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவனுடைய இரத்தப்பழி அடித்தவனைச் சேராது. மத் 24:43மத் 6:19-20எண் 35:271 தெச 5:2ஓசி 7:1யோபு 24:14யோபு 30:5யோவே 2:9 சூரியன் அவன்மேல் உதித்தபின்பு, அவனுடைய இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவனுடைய கையில் ஒன்றும் இல்லாமல் இருந்தால், தான் செய்த திருட்டுக்காக விற்கப்படுவான். யாத் 21:2ஏசா 50:1நியாயாதி 10:7நியாயாதி 2:14மத் 18:25 அவன் திருடின மாடோ, கழுதையோ, ஆடோ உயிருடன் அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இருமடங்காக அவன் கொடுக்கவேண்டும். யாத் 22:1யாத் 22:7யாத் 21:16யாத் 22:9நீதி 6:31வெளி 18:6எரே 16:18ஏசா 40:2
“ஒருவன் மற்றவனுடைய வயலிலோ திராட்சைத்தோட்டத்திலோ தன்னுடைய மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன்னுடைய சொந்தவயலிலும் திராட்சைத்தோட்டத்திலும் உள்ள பலனில் சிறந்ததை எடுத்து, பதிலுக்குக் கொடுக்கவேண்டும். யாத் 21:34யாத் 22:12யாத் 22:3யோபு 20:18
அக்கினி எழும்பி, முட்களில் பற்றி, தானியப்போரையோ, விளைந்த பயிரையோ, வயலிலுள்ள வேறு எதையாவது எரித்துப்போட்டால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு ஈடு செய்யவேண்டும். யாத் 22:92 சாமு 14:30-31யாத் 21:33-34யாத் 22:12நியாயாதி 15:4-5
ஒருவன் பிறனிடம் பணத்தையோ, பொருட்களையோ பாதுகாப்பிற்காக வைத்திருக்கும்போது, அது அவனுடைய வீட்டிலிருந்து திருட்டுப்போனால், திருடன் அகப்பட்டால், அவன் அதற்கு இருமடங்காக கொடுக்கவேண்டும். யாத் 22:4நீதி 6:30-311 கொரி 6:10எரே 2:26யோவா 12:6 திருடன் அகப்படாவிட்டால், அந்த வீட்டுக்காரன் தான் பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடம் 1 அவனைக் கொண்டுபோகவேண்டும். யாத் 22:28உபா 16:18யாத் 21:61 நாளாக 23:4உபா 17:8-9உபா 19:17-18யாத் 22:9சங் 82:1 காணாமல்போன மாடு, கழுதை, ஆடு, உடை முதலியவைகளில் ஏதாவது ஒன்றை வேறொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றம்சொன்னால், இரண்டு பேர்களுடைய வழக்கும் நியாயாதிபதிகளிடம் 2 வரவேண்டும்; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இருமடங்கு கொடுக்கவேண்டும். உபா 25:1யாத் 22:4யாத் 23:6-8எண் 5:6-71 இராஜா 8:312 நாளாக 19:10லூக் 17:3-4மத் 18:35
ஒருவன் தன்னுடைய கழுதையையோ மாட்டையோ ஆட்டையோ மற்ற ஏதாவதொரு மிருகஜீவனையோ ஒருவனிடம் விட்டிருக்கும்போது, அது செத்தாலும், காயப்பட்டாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும், 2 தீமோ 1:12ஆதி 39:8லூக் 12:48லூக் 16:11 அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று யெகோவாவின் நாமத்தில் ஆணையிட்டால் அவர்கள் இருவருக்கும் அதுவே நியாயம்தீர்க்கட்டும்; உடையவன் அதை அங்கீகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கத்தேவையில்லை. எபி 6:161 இராஜா 2:42-43யாத் 22:8யாத் 23:1லேவி 5:1லேவி 6:3நீதி 30:9 அது அவனிடமிருந்து திருடப்பட்டுப்போனால், அவன் அதனுடைய எஜமானுக்கு அதற்காக ஈடுகொடுக்கவேண்டும். ஆதி 31:39யாத் 22:7 அது வேட்டையாடப்பட்டுப்போனால், அதற்கு சாட்சியை ஒப்புவிக்கவேண்டும். வேட்டையாடப்பட்டதற்காக அவன் ஈடுகொடுக்கத் தேவையில்லை. ஆமோ 3:12எசேக் 4:14மீகா 5:8நாகூ 2:12
ஒருவன் பிறனிடம் எதையாவது இரவலாக வாங்கியிருந்தால், அதற்குரியவன் கூட இல்லாதபோது, அது காயப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு ஈடுசெய்யவேண்டும். உபா 23:19-20உபா 15:2யாத் 21:34லேவி 24:18லூக் 6:35யாத் 22:11மத் 5:42சங் 37:21 அதற்குரியவன் கூட இருந்தால், அவன் ஈடுகொடுக்கத் தேவையில்லை; அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால், அது அவனுடைய வாடகைக்கு வந்த சேதம். சகரி 8:10
சமுதாயக் கடமைகள்
திருமணத்திற்கு நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடு உறவுகொண்டால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளைத் திருமணம்செய்யவேண்டும். உபா 22:28-29ஆதி 34:2-4 அவளுடைய தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிசமுறையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும். ஆதி 34:121 சாமு 18:25உபா 22:29உபா 7:3-4ஆதி 23:16
சூனியக்காரியை உயிரோடு வைக்கவேண்டாம். லேவி 20:27உபா 18:10-111 சாமு 28:3லேவி 20:6லேவி 19:31வெளி 22:15ஏசா 19:3லேவி 19:26
மிருகத்தோடு உறவுவைக்கிற எவனும் கொல்லப்படவேண்டும். உபா 27:21லேவி 18:23லேவி 20:15-16லேவி 18:25
யெகோவா ஒருவரைத்தவிர வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகிறவன் அழிக்கப்படவேண்டும். உபா 17:2-5உபா 18:20எண் 25:7-8உபா 13:1-15எண் 25:2-4யோசு 23:15-16எண் 21:3 அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே. உபா 10:19யாத் 23:9லேவி 19:33சகரி 7:10உபா 23:7யாத் 20:2எரே 7:6லேவி 25:35 விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; உபா 24:17ஏசா 1:17ஏசா 1:23உபா 10:18உபா 27:19எசேக் 22:7ஏசா 10:2யாக் 1:27 அவர்களை அதிகமாக ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாகக் கேட்டு, யோபு 34:28லூக் 18:7சங் 10:17-18சங் 18:6உபா 15:9யாக் 5:4யோபு 35:9சங் 145:19 கோபமடைந்து, உங்களைப் பட்டயத்தால் கொலைசெய்வேன்; உங்களுடைய மனைவிகள் விதவைகளும், உங்களுடைய பிள்ளைகள் திக்கற்றப் பிள்ளைகளுமாவார்கள். சங் 109:9எரே 15:8புலம் 5:3சங் 69:24சங் 76:7சங் 78:63-64சங் 90:11எபி 10:31
உங்களுக்குள் ஏழையாக இருக்கிற என்னுடைய மக்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடம் வட்டி வாங்கவேண்டாம். லேவி 25:35-37சங் 15:5உபா 23:19-20எசேக் 18:8நெகே 5:7நீதி 28:8எசேக் 18:172இராஜா 4:1 பிறனுடைய ஆடையை பதிலாக வாங்கினால், பொழுதுமறையும் முன்பே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக. நீதி 20:16ஆமோ 2:8உபா 24:6உபா 24:10-13உபா 24:17எசேக் 18:16எசேக் 18:7யோபு 24:3 அவன் ஆடை அதுதானே, அதுவே அவன் தன்னுடைய உடலை மூடிக்கொள்ளுகிற துணி; வேறு எதினாலே போர்த்திப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுடைய வார்த்தையைக் கேட்பேன், நான் இரக்கமுள்ளவராக இருக்கிறேன். யாத் 34:62 நாளாக 30:9யாத் 22:23சங் 136:10-11சங் 34:6சங் 72:12சங் 86:15யாத் 2:23-24
தேவனை நிந்திக்காமலும், உன்னுடைய மக்களை ஆளுகிறவர்களைச் சபிக்காமலும் இரு. அப் 23:5பிரச 10:20யூதா 1:8யாத் 21:17யாத் 22:8-91 சாமு 24:101 சாமு 24:61 சாமு 26:9 முதல் முதல் பழுக்கும் உன்னுடைய பழத்தையும், வடியும் உன்னுடைய ஆலையின் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன்னுடைய மகன்களில் முதலில் பிறந்தவனை எனக்குக் கொடுப்பாயாக. யாத் 13:2யாத் 23:16உபா 26:2-10யாத் 23:19யாக் 1:18நீதி 3:9-10ரோம 8:23யாத் 13:12 உன்னுடைய மாடுகளிலும் உன்னுடைய ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாட்கள் தன்னுடைய தாயோடு இருக்கட்டும்; எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக. லேவி 22:27உபா 15:19யாத் 13:12லேவி 12:3 நீங்கள் எனக்குப் பரிசுத்த மனிதர்களாக இருக்கவேண்டும்; வெளியிலே பீறுண்ட இறைச்சியைச் சாப்பிடாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள். எசேக் 4:14லேவி 19:21 பேது 1:15-16அப் 15:20உபா 14:21எசேக் 44:31லேவி 22:8அப் 10:14