யாத்திராகமம் 23

Exodus 23
அத்தியாயம் 23

நீதி மற்றும் இரக்கத்தின் சட்டங்கள்

“அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாதே; கொடுமையுள்ள சாட்சிக்காரனாக இருக்க ஆகாதவனோடு சேராதே. சங் 101:5நீதி 19:5உபா 19:16-21யாத் 20:16மத் 26:59-61உபா 5:20லேவி 19:16சங் 35:11 தீமைசெய்ய அநேகம்பேர்களின் வழியைப் பின்பற்றாதே; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட கூட்டத்தின் பக்கம் சாய்ந்து, தீர்ப்பு சொல்லாதே. நீதி 1:10-11நீதி 1:15லூக் 23:23-24யோபு 31:34மத் 27:24-261 இராஜா 19:10உபா 1:17யாத் 23:6-7 வழக்கிலே தரித்திரனுடைய முகத்தைப் பார்க்காதே. யாக் 3:17லேவி 19:15சங் 82:2-3உபா 1:17

உன்னுடைய எதிரியின் மாடோ அவனுடைய கழுதையோ தப்பிப்போவதைப் பார்த்தால், அதைத் திரும்ப அவனிடம் கொண்டுபோய் விடு. உபா 22:1-41 தெச 5:15மத் 5:44ரோம 12:17-21லூக் 6:27-28நீதி 25:21யோபு 31:29-30நீதி 24:17-18 உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடு விழுந்திருப்பதைப் பார்த்தால், அதற்கு உதவிசெய்யாமல் இருக்கலாமா? அவசியமாக அவனுடன்கூட அதற்கு உதவிசெய்யவேண்டும். உபா 22:4

உன்னிடத்தில் இருக்கிற எளியவனுடைய வழக்கிலே அவனுடைய நியாயத்தைப் புரட்டாதே. மல்கி 3:5உபா 16:19உபா 27:19பிரச 5:8யாத் 23:2-3ஏசா 10:1-2யாக் 2:5-6எரே 5:28 தவறான காரியத்தை விட்டுவிலகு; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாதே; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன். எபே 4:25உபா 27:25யாத் 23:1யாத் 34:7ரோம 1:181 தெச 5:22லேவி 19:11உபா 19:16-21 லஞ்சம் வாங்காதே; லஞ்சம் பார்வையுள்ளவர்களைக் 1 குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும். உபா 16:19நீதி 17:23ஏசா 5:23நீதி 15:271 சாமு 8:3உபா 10:17பிரச 7:7சங் 26:10 அந்நியனை ஒடுக்காதே; எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே. உபா 27:19யாத் 22:21உபா 24:14-18மத் 18:33உபா 10:19யாத் 21:21எசேக் 22:7எபி 2:17-18

ஓய்வுநாளின் கட்டளை

ஆறுவருடங்கள் நீ உன்னுடைய நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள். லேவி 25:3-4 ஏழாம் வருடத்தில் உன்னுடைய மக்களிலுள்ள எளியவர்கள் சாப்பிடவும், மீதியானதை வெளியின் மிருகங்கள் சாப்பிடவும், அந்த நிலம் சும்மாகிடக்க விட்டுவிடு; உன்னுடைய திராட்சைத்தோட்டத்தையும் உன்னுடைய ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்யவேண்டும். லேவி 25:2-7லேவி 25:11-12லேவி 26:34-35லேவி 25:20லேவி 25:22 ஆறுநாட்கள் உன்னுடைய வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன்னுடைய மாடும் உன்னுடைய கழுதையும் இளைப்பாறவும், உன்னுடைய அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திரு. லூக் 13:14யாத் 20:8-11யாத் 31:15-16யாத் 34:21யாத் 35:3உபா 5:13-15ஏசா 58:3 நான் உங்களுக்குச் சொன்னவைகள் எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள். அந்நிய தெய்வங்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன்னுடைய வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம். யோசு 23:7சகரி 13:2உபா 4:91 தீமோ 4:16ஓசி 2:17உபா 12:3எரே 10:11யோசு 22:5

வருடத்தின் மூன்று பண்டிகைகள்

யாத் 34:18-26; உபா 16:9-17

வருடத்தில் மூன்றுமுறை எனக்குப் பண்டிகை அனுசரி. உபா 16:16யாத் 23:17யாத் 34:22-24லேவி 23:16லேவி 23:34லேவி 23:5 புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடி ஆபீப் மாதத்தின் குறித்தகாலத்தில் ஏழுநாட்கள் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என்னுடைய சந்நிதியில் வெறுங்கையுடன் வரவேண்டாம். யாத் 34:20லூக் 22:7உபா 16:16எண் 28:16-25நீதி 3:9-102இராஜா 23:21-23உபா 16:1-8லேவி 23:5-8 நீ வயலில் விதைத்த உன்னுடைய பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருடமுடிவிலே நீ வயலில் உன்னுடைய வேலைகளின் பலனைச் சேர்த்து முடிந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி. யாத் 34:22லேவி 23:9-21யாத் 22:29லேவி 23:34-44அப் 2:1உபா 16:9-15யோவா 7:2யோவா 7:37 வருடத்தில் மூன்றுமுறை உன்னுடைய ஆண்மக்கள் எல்லோரும் யெகோவாவாகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரட்டும். உபா 16:16யாத் 34:23உபா 12:5உபா 31:11யாத் 23:14லூக் 2:42சங் 84:7

எனக்கு பலியிடும் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு பலியிடும் கொழுப்பை அதிகாலைவரைக்கும் வைக்கவும் வேண்டாம். யாத் 34:25லேவி 2:11உபா 16:4யாத் 12:10யாத் 12:8லேவி 7:15யாத் 12:15லேவி 7:12 உன்னுடைய நிலத்தில் முதல் விளைச்சல்களின் முதல் கனியை உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டும்; வெள்ளாட்டுக்குட்டியை அதனுடைய தாயின் பாலோடு சமைக்கவேண்டாம். யாத் 34:26உபா 14:21உபா 26:10யாத் 22:29நெகே 10:35உபா 26:2எண் 18:12-131 கொரி 15:20

வழியை ஆயத்தம் செய்வதற்கான தேவதூதன்

வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்செய்த இடத்திற்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். யாத் 33:14சங் 91:11யாத் 32:34யாத் 14:19யாத் 33:2ஏசா 63:9யோவா 14:3மத் 25:34 அவருடைய சமுகத்தில் எச்சரிக்கையாக இருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்களுடைய துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என்னுடைய பெயர் அவருடைய உள்ளத்தில் 2 இருக்கிறது. சங் 78:56சங் 78:40எபி 12:25யோவா 10:30யோவா 10:38எபே 4:30யாத் 3:14எபி 10:26-29 நீ அவருடைய வாக்கை நன்றாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்தால், நான் உன்னுடைய எதிரிகளுக்கு எதிரியாகவும், உன்னுடைய விரோதிகளுக்கு விரோதியாகவும் இருப்பேன். ஆதி 12:3உபா 30:7சகரி 2:8எரே 30:20அப் 9:4-5எண் 24:9 என்னுடைய தூதனானவர் உனக்கு முன்னேசென்று, எமோரியர்களும், ஏத்தியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், இருக்கிற இடத்திற்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அழித்துப்போடுவேன். யாத் 23:20ஏசா 5:13ஆதி 15:19-21ஆதி 34:2யாத் 3:17யாத் 32:2யோசு 24:8-11 நீ அவர்களுடைய தெய்வங்களைப் பணிந்துகொள்ளாமலும், தொழுதுகொள்ளாமலும், அவர்களுடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களை முழுவதும் அழித்து, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடவேண்டும். யாத் 20:5உபா 12:30-31எண் 33:52உபா 12:3உபா 7:52 நாளாக 33:9யாத் 32:20லேவி 18:3 உங்களுடைய தேவனாகிய யெகோவாவையே ஆராதிக்கவேண்டும்; அவர் உன்னுடைய அப்பத்தையும் உன்னுடைய தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். உபா 7:15யாத் 15:26யோசு 22:5ஏசா 33:24சங் 103:3உபா 7:13உபா 10:12உபா 6:13 கர்ப்பம் களைகிறதும், மலடும் உன்னுடைய தேசத்தில் இருப்பதில்லை; உன்னுடைய ஆயுசு நாட்களை பூரணப்படுத்துவேன். உபா 7:14உபா 28:4யோபு 5:26யோபு 21:10ஏசா 65:20சங் 107:38சங் 144:131 நாளாக 23:1 எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன்பு செல்லும்படிச் செய்வேன். நீ செல்லும் இடமெங்கும் உள்ள மக்கள் எல்லோரையும் கொன்று, உன்னுடைய எதிரிகள் எல்லோரையும் முதுகு காட்டச்செய்வேன். உபா 2:25ஆதி 35:5உபா 11:25உபா 7:23யாத் 15:14-16சங் 18:401 சாமு 14:152 நாளாக 14:14 உன்னுடைய முகத்திற்கு முன்பாக ஏவியர்களையும், கானானியர்களையும், ஏத்தியர்களையும் துரத்திவிட குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன். உபா 7:20யோசு 24:11-12 தேசம் பாழாகப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாகப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஓராண்டிற்குள்ளே உனக்கு முன்பாக துரத்திவிடாமல், உபா 7:22நியாயாதி 3:1-4யோசு 17:12-13யோசு 15:63யோசு 16:10 நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உனக்கு முன்பாக துரத்திவிடுவேன். செங்கடல் துவங்கி பெலிஸ்தர்களின் மத்திய தரைக்கடல்வரைக்கும், வனாந்திரம் துவங்கி நதிவரைக்கும் உன்னுடைய எல்லையாக இருக்கும்படிச் செய்வேன்; நான் அந்த தேசத்தின் குடிகளை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உனக்கு முன்பாக துரத்திவிடுவாய். ஆதி 15:18உபா 11:24யோசு 21:44யோசு 1:4எண் 34:3-151 இராஜா 4:24யோசு 24:181 இராஜா 4:21 அவர்களோடும் அவர்களுடைய தெய்வங்களோடும் நீ உடன்படிக்கை செய்யாதே. உபா 7:2யாத் 34:12யாத் 34:15உபா 7:16சங் 106:352 கொரி 6:15யோசு 9:14-23எண் 25:1-2 உன்னை எனக்கு விரோதமாகப் பாவம் செய்யவைக்காதபடி உன்னுடைய தேசத்திலே அவர்கள் குடியிருக்கவேண்டாம்; நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அது உனக்குக் கண்ணியாக இருக்கும்” என்றார். சங் 106:36உபா 7:16யாத் 34:12நியாயாதி 2:3யோசு 23:13உபா 12:301 இராஜா 14:161 சாமு 18:21