எசேக்கியேல் 22

Ezekiel 22
அத்தியாயம் 22

எருசலேமின் பாவங்கள்

பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: இப்போதும் மனிதகுமாரனே, இரத்தம்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதிருந்தால், நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியப்படுத்தி, எசேக் 24:6எசேக் 24:9அப் 7:52எசேக் 20:4ஓசி 4:2ஏசா 58:1மத் 27:25நாகூ 3:1 அதை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய காலம் வரக்கூடியதாக உன்னுடைய நடுவிலே இரத்தம்சிந்துகிறதும், உன்னைத் தீட்டுப்படுத்தத்தக்கதாக உனக்கே விரோதமாக அசுத்தமான சிலைகளை உண்டாக்கின நகரமே, எசேக் 22:272இராஜா 21:2-92 பேது 2:3எசேக் 12:25எசேக் 22:4எசேக் 22:6எசேக் 23:37எசேக் 23:45 நீ சிந்தின உன்னுடைய இரத்தத்தினால் நீ குற்றம்சுமந்ததாகி நீ உண்டாக்கின உன்னுடைய அசுத்தமான சிலைகளால் நீ தீட்டுப்பட்டு, உன்னுடைய நாட்களை நெருங்கச்செய்து, உன்னுடைய வருடங்களை நிறைவேற்றினாய்; ஆகையால் நான் உன்னைப் அந்நியமக்களுக்கு நிந்தையாகவும், தேசங்களுக்கெல்லாம் பரியாசமாகவும் வைப்பேன். 2இராஜா 21:16எசேக் 16:57எசேக் 22:2எசேக் 5:14-15சங் 44:13-141 இராஜா 9:71 தெச 2:162 நாளாக 7:20 உனக்கு அருகிலும் உனக்குத் தூரமுமான தேசங்களின் மனிதர்கள் நீ பெயர்கெட்டதென்றும், அமளி பெருத்ததென்றும் உன்னைப் பரியாசம்செய்வார்கள். ஏசா 22:2எரே 15:2-3 இதோ, இஸ்ரவேலின் அதிபதிகளில் அவரவர் தங்களுடைய புயபலத்திற்குத் தக்கதாக, உன்னில் இரத்தம் சிந்தினார்கள். எசேக் 22:27ஏசா 1:23தானி 9:8எரே 2:26-27எரே 32:32எரே 5:5மீகா 2:1மீகா 3:1-3 உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாக நினைத்தார்கள்; உன்னுடைய நடுவில் பரதேசிக்கு இடையூறு செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள். உபா 27:16யாத் 22:21-22லேவி 20:9எரே 7:6மல்கி 3:5மத் 15:4-6மாற் 7:10சகரி 7:10 நீ என்னுடைய பரிசுத்த பொருட்களை அசட்டைசெய்து, என்னுடைய ஓய்வு நாட்களை பரிசுத்தக்குலைச்சலாக்கினாய். எசேக் 23:38-39எசேக் 20:13எசேக் 22:26எசேக் 20:21எசேக் 20:24ஆமோ 8:4-6லேவி 19:30மல்கி 1:12 இரத்தம்சிந்தும்படி பொய் பேசுகிறவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; மலைகளின்மேல் சாப்பிடுகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; முறைகேடு செய்கிறவர்கள் உன்னுடைய நடுவில் இருக்கிறார்கள். ஓசி 4:14ஓசி 4:10ஓசி 4:2லேவி 19:161 கொரி 10:18-21யாத் 20:16எசேக் 16:43எசேக் 18:11 தகப்பனை நிர்வாணமாக்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; தீட்டுப்பட்ட பெண்ணை பலவந்தப்படுத்தினவர்கள் உன்னில் இருக்கிறார்கள். லேவி 18:19எசேக் 18:6லேவி 18:7-8லேவி 20:111 நாளாக 5:11 கொரி 5:12 சாமு 16:21-22ஆமோ 2:7 உன்னில் ஒருவன் தன்னுடைய அயலானுடைய மனைவியுடன் அருவருப்பானதைச் செய்கிறான்; வேறொருவன் முறைகேடாகத் தன்னுடைய மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான்; வேறொருவன் தன்னுடைய தகப்பனுக்குப் பிறந்த தன்னுடைய சகோதரியைப் பலவந்தம்செய்கிறான். 2 சாமு 13:14லேவி 18:15லேவி 18:9லேவி 20:17எசேக் 18:11லேவி 18:20லேவி 20:10லேவி 20:12 இரத்தம்சிந்தும்படி லஞ்சம் வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் அதிக வட்டியும் வாங்கி, பொருளாசையினால் உன்னுடைய அயலானுக்கு இடையூறு செய்து, என்னை மறந்துபோனாய் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக் 23:35உபா 27:25மீகா 7:2-3உபா 16:19உபா 23:19எசேக் 18:8எரே 2:32லேவி 25:35-36 இதோ, நீ அநியாயமாகச் சம்பாதித்த பொருளினால், உன்னுடைய நடுவில் நீ சிந்தின இரத்தத்திற்காக நான் கைகொட்டுகிறேன். எசேக் 21:17ஏசா 33:15ஆமோ 2:6-8எசேக் 21:14எசேக் 22:271 தெச 4:6ஆமோ 3:10ஆமோ 8:4-6 நான் உன்னில் நியாயம்செய்யும் நாட்களில் உன்னுடைய இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன்னுடைய கைகள் திடமாக இருக்குமோ? யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன். எசேக் 21:7எசேக் 17:24எசேக் 24:141 கொரி 10:221 சாமு 15:29எசேக் 28:9எபி 10:31ஏசா 31:3 நான் உன்னைப் அந்நியஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, உன்னை தேசங்களிலே தூற்றி, உன்னுடைய அசுத்தத்தை உன்னில் ஒழியச்செய்வேன். நெகே 1:8உபா 4:27எசேக் 22:22சகரி 7:14எசேக் 36:19லேவி 26:331 பேது 4:12உபா 28:25 நீ அந்நியதேசங்களின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தக்குலைச்சலாக இருந்து, நான் யெகோவா என்று அறிந்துகொள்வாய் என்று சொல் என்றார். எசேக் 6:7சங் 83:18எசேக் 7:241 இராஜா 20:131 இராஜா 20:28தானி 4:25தானி 4:32-35யாத் 8:22 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, இஸ்ரவேல் மக்கள் எனக்கு பயனற்று போனார்கள்; அவர்களெல்லோரும் குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாக இருக்கிறார்கள்; அவர்கள் வெள்ளியின் கழிவாகப் போனார்கள். ஏசா 1:22சங் 119:119ஏசா 48:10எரே 6:28-30நீதி 17:3எசேக் 22:20ஏசா 1:25ஏசா 31:9 ஆதலால், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்களெல்லாரும் கழிவாகப் போனபடியினால், இதோ, நான் உங்களை எருசலேமுக்குள் சேர்ப்பேன். எசேக் 11:7எசேக் 24:3-6மத் 13:30மத் 13:40-42மீகா 4:12 வெள்ளியையும், பித்தளையையும், இரும்பையும், ஈயத்தையும், தகரத்தையும் நெருப்பில் ஊதி உருக்குவதற்காகக் குகைக்குள் சேர்க்கிறதுபோல, நான் என்னுடைய கோபத்தினாலும் என்னுடைய கடுங்கோபத்தினாலும் உங்களைச் சேர்த்துவைத்து உருக்குவேன். எசேக் 21:31-32எசேக் 24:13ஏசா 54:16எரே 4:11-12எரே 4:20எசேக் 22:21 நான் உங்களைக் கூட்டி, என்னுடைய கோபமாகிய நெருப்பை உங்கள்மேல் ஊதுவேன்; அதற்குள்ளே நீங்கள் உருகுவீர்கள். 2இராஜா 25:9உபா 29:20உபா 32:22உபா 4:24எசேக் 15:6-7எசேக் 20:47-48எசேக் 22:20-22ஏசா 30:33 குகைக்குள் வெள்ளி உருகுகிறதுபோல, நீங்கள் அதற்குள் உருகுவீர்கள்; அப்பொழுது யெகோவாகிய நான் என்னுடைய கடுங்கோபத்தை உங்கள்மேல் ஊற்றிவிட்டேன் என்று அறிந்து கொள்வீர்கள் என்றார். எசேக் 20:33எசேக் 20:8ஓசி 5:10எசேக் 22:16எசேக் 22:31வெளி 16:1 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, நீ தேசத்தைப்பார்த்து: நீ சுத்தம் செய்யப்படாத தேசம், கோபத்தின் காலத்தில் மழை பெய்யாத தேசம் என்று அதற்குச் சொல்லு. 2 நாளாக 28:222 நாளாக 36:14-16ஏசா 1:5ஏசா 9:13எரே 2:30எசேக் 24:13எரே 44:16-19எரே 5:3 அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு செய்கிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் விழுங்குகிறார்கள்; செல்வத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள். ஓசி 6:9எசேக் 13:19எரே 11:9எரே 2:341 இராஜா 22:11-131 இராஜா 22:232 பேது 2:1-3எசேக் 13:10-16 அதின் ஆசாரியர்கள் என்னுடைய வேதத்திற்கு அநியாயம்செய்து, என்னுடைய பரிசுத்த பொருட்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறார்கள்; பரிசுத்தம் உள்ளதற்கும் பரிசுத்தம் இல்லாததற்கும் வித்தியாசம் உண்டாக்காமலும், அசுத்தம் உள்ளதற்கும் அசுத்தம் இல்லாததற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பிக்காமலும் இருந்து, என்னுடைய ஓய்வுநாட்களுக்குத் தங்களுடைய கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள்; அவர்கள் நடுவிலே நான் அவமதிக்கப்படுகிறேன். லேவி 10:10எசேக் 22:8எசேக் 44:23மல்கி 2:81 சாமு 2:12-17எரே 2:8மீகா 3:11-121 சாமு 2:22 அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாகப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தம் சிந்துகிறார்கள், ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள். எசேக் 22:13எசேக் 22:6ஏசா 1:23எசேக் 19:3-6எசேக் 22:25எசேக் 45:9ஓசி 7:1-7யாக் 2:6-7 அதின் தீர்க்கதரிசிகள் பொய்யானதை பார்த்து, பொய்ச்சாஸ்திரத்தை அவர்களுக்குச் சொல்லி, யெகோவா சொல்லாமலிருந்தும், யெகோவாகிய ஆண்டவர் சொன்னாரென்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள். எசேக் 13:6-7எசேக் 13:10-16எரே 23:25-32ஏசா 30:10எசேக் 13:22-23எசேக் 21:29எசேக் 22:25எரே 23:21 தேசத்தின் மக்கள் இடையூறு செய்து, கொள்ளையடித்து, சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, அந்நியனை அநியாயமாகத் துன்பப்படுத்துகிறார்கள். எசேக் 22:7யாத் 23:9யாத் 22:21ஏசா 5:7எரே 5:31லேவி 19:33சங் 94:6ஆமோ 3:10 நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவும் தகுந்த ஒரு மனிதனைத் தேடினேன், ஒருவனையும் காணவில்லை. ஏசா 59:16எரே 5:1சங் 106:23ஆதி 18:23-32எசேக் 13:5ஏசா 63:5யாத் 32:10-14எரே 15:1 ஆகையால், நான் அவர்கள்மேல் என்னுடைய கோபத்தை ஊற்றி, என்னுடைய கடுங்கோபத்தின் நெருப்பால் அவர்களை அழித்து, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலையின்மேல் சுமத்துவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார். எசேக் 16:43எசேக் 7:8-9எசேக் 9:10எசேக் 7:3ரோம 2:8-9எசேக் 11:21எசேக் 22:21-22