எசேக்கியேலின் காவற்காரன்
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, நீ உன்னுடைய மக்களுடன் பேசி, அவர்களுடன் சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் வாளை வரச்செய்யும்போது தேசத்தின் மக்கள் தங்களுடைய எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு, எசேக் 33:30எசேக் 14:17எசேக் 3:11எசேக் 33:17எசேக் 3:27ஏசா 62:6எரே 15:2-3சகரி 13:7 இவன் தேசத்தின்மேல் வாள் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, மக்களை எச்சரிக்கும்போது, ஓசி 8:1நெகே 4:20ஏசா 58:1எரே 4:5யோவே 2:1நெகே 4:18எசேக் 33:8-9எரே 51:27 எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாக இல்லாமல், வாள் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவனுடைய தலையின்மேல் சுமரும். எசேக் 18:13அப் 18:6எசேக் 33:9எரே 6:172 நாளாக 25:16எசேக் 33:5சகரி 1:2-41 இராஜா 2:37 அவனுடைய எக்காளத்தின் சத்தத்தைக் கேட்டும், எச்சரிக்கையாக இருக்கவில்லை; அவனுடைய இரத்தப்பழி அவன் மேலே சுமரும்; எச்சரிக்கையாக இருக்கிறவனோ தன்னுடைய உயிரைத் தப்புவித்துக்கொள்ளுவான். யாத் 9:19-21எபி 11:7யோவா 8:392இராஜா 6:10அப் 2:37-41எபி 2:1-3ஏசா 51:2சங் 95:7 காவற்காரன் வாள் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் மக்கள் எச்சரிக்கப்படாமலும், வாள் வந்து அவர்களில் யாராவது ஒருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன்னுடைய அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன். எசேக் 3:18-202 சாமு 4:11எசேக் 33:8-9ஆதி 42:22எசேக் 18:20ஆதி 9:5எசேக் 18:24எசேக் 34:10 மனிதகுமாரனே, நான் உன்னை இஸ்ரவேல் மக்களுக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என்னுடைய வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என்னுடைய பெயரினாலே அவர்களை எச்சரிப்பாயாக. எரே 26:2எசேக் 3:17-21எசேக் 2:7-8அப் 5:20எபி 13:17ஏசா 62:6எரே 1:171 தெச 4:1-2 நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாய் என்று சொல்லும்போது, நீ துன்மார்க்கனைத் தன்னுடைய துன்மார்க்கத்தில் இல்லாமலிருக்கும்படி எச்சரிக்காமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன்னுடைய அக்கிரமத்திலே மரணமடைவான்: ஆனாலும் அவனுடைய இரத்தப்பழியை உன்னுடைய கையிலே கேட்பேன். அப் 20:26-27எசேக் 33:6எசேக் 33:14எசேக் 18:4எசேக் 18:20ஆதி 3:4எசேக் 18:18ஏசா 3:11 துன்மார்க்கன் தன்னுடைய வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன்னுடைய வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன்னுடைய அக்கிரமத்திலே மரிப்பான்; நீயோ உன்னுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாய். எசேக் 3:19அப் 20:26எசேக் 3:21நீதி 15:101 தெச 4:3-81 தெச 5:142 கொரி 2:15-17அப் 13:40 மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: எங்களுடைய துரோகங்களும் எங்களுடைய பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, நாங்கள் சோர்ந்துபோகிறோம், நாங்கள் பிழைப்பது எப்படியென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். எசேக் 37:11ஏசா 49:14எசேக் 24:23எசேக் 4:17லேவி 26:39ஏசா 51:20எரே 2:25சங் 130:7 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன்னுடைய வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் மக்களே, உங்களுடைய பொல்லாத வழிகளை விட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் இறக்கவேண்டும் என்கிறார் என்று அவர்களுடன் சொல்லு. 1 தீமோ 2:4எசேக் 18:232 பேது 3:9ஏசா 55:6-7அப் 3:19நீதி 8:36எசேக் 18:30-32எரே 3:22 மனிதகுமாரனே, நீ உன்னுடைய மக்களை நோக்கி: நீதிமான் துரோகம்செய்கிற நாளிலே அவனுடைய நீதி அவனைக் காப்பாற்றுவதில்லை; துன்மார்க்கன் தன்னுடைய துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன்னுடைய அக்கிரமத்தினால் விழுந்து போவதுமில்லை; நீதிமான் பாவம்செய்கிற நாளிலே தன்னுடைய நீதியினால் பிழைப்பதுமில்லை. 2 நாளாக 7:14எசேக் 33:18-19ரோம 3:251 யோவா 2:11 இராஜா 8:48-50எசேக் 18:21எசேக் 18:24-32எசேக் 3:20-21 பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன்னுடைய நீதியை நம்பி, அநியாயம்செய்தால், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை, அவன் செய்த தன்னுடைய அநியாயத்திலே மரிப்பான். எசேக் 18:24எபி 10:38எசேக் 18:4எசேக் 3:20லூக் 18:9-141 யோவா 2:192 பேது 2:20-22பிலி 3:9 பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன்னுடைய பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும்செய்து, எசேக் 18:27எசேக் 33:8ஓசி 14:1ஏசா 55:7எரே 18:7-8மீகா 6:8நீதி 28:13அப் 3:19 துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக் கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான். எசேக் 20:11லூக் 19:8யாத் 22:1-4எசேக் 18:7லேவி 18:5லேவி 6:2-5சங் 119:93ஆமோ 2:8 அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு. எசேக் 18:22ஏசா 43:25மீகா 7:18-19ஏசா 1:18ஏசா 44:22ரோம 5:161 யோவா 2:1-3ரோம 5:21 உன்னுடைய மக்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல. எசேக் 18:25எசேக் 18:29மத் 25:24-26எசேக் 33:20யோபு 35:2யோபு 40:8லூக் 19:21-22 நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டுத்திரும்பி, அநியாயம்செய்தால், அவன் அதினால் மரிப்பான். எசேக் 33:12-132 பேது 2:20-22எபி 10:38எசேக் 18:26-27எசேக் 3:20 துன்மார்க்கன் தன்னுடைய அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான். எசேக் 18:27-28எசேக் 33:14 நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் மக்களே, நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படி நியாயம் தீர்ப்பேன் என்று சொல் என்றார். மத் 16:27எசேக் 18:252 கொரி 5:10பிரச 12:14எசேக் 18:29-30எசேக் 33:17யோவா 5:29நீதி 19:3
எருசலேமின் வீழ்ச்சி விவரிக்கப்படுதல்
எங்களுடைய சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருடம் பத்தாம் மாதம் ஐந்தாம் நாளிலே எருசலேமிலிருந்து தப்பின ஒருவன் என்னிடத்தில் வந்து: நகரம் அழிக்கப்பட்டது என்றான். எசேக் 1:22 நாளாக 36:17-212இராஜா 24:4-72இராஜா 25:102இராஜா 25:4எசேக் 24:26-27எசேக் 32:1எசேக் 40:1 தப்பினவன் வருகிறதற்கு முந்தின மாலைவேளையிலே யெகோவாவுடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வரும்வரை என்னுடைய வாயைத் திறந்திருக்கச்செய்தது; என்னுடைய வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மவுனமாக இருக்கவில்லை. எசேக் 1:3எசேக் 24:26-27எசேக் 3:26-27எசேக் 37:1எசேக் 3:22எசேக் 40:1லூக் 1:64 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, இஸ்ரவேல் தேசத்தின் பாழான இடங்களிலுள்ள குடிகள்: ஆபிரகாம் ஒருவனாக இருந்து, தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டான்; நாங்கள் அநேகராக இருக்கிறோம், எங்களுக்கு இந்த தேசம் சொந்தமாக கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறார்கள். அப் 7:5எசேக் 33:27ஏசா 51:2எசேக் 36:4எரே 40:7லூக் 3:8எரே 39:10மத் 3:9 ஆகையால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் இரத்தத்துடன் கூடியதைத் தின்று, உங்களுடைய அசுத்தமான சிலைகளுக்கு நேராக உங்களுடைய கண்களை ஏறெடுத்து, இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள், நீங்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்களோ? உபா 12:16ஆதி 9:4எரே 7:9-10எசேக் 18:6எசேக் 22:27எசேக் 22:6லேவி 3:171 சாமு 14:32-34 நீங்கள் உங்கள் வாளை நம்பிக்கொண்டு, அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; நீங்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்களோ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு. ஆதி 27:40மீகா 2:1-2செப்ப 3:31 இராஜா 11:5-71 பேது 4:31 சாமு 2:30உபா 29:18-23உபா 4:25-26 நீ அவர்களை நோக்கி: பாழான இடங்களில் இருக்கிறவர்கள் வாளால் விழுவார்கள்; வெளிகளில் இருக்கிறவனை மிருகங்களுக்கு இரையாக ஒப்புக்கொடுப்பேன்; கோட்டைகளிலும் குகைகளிலும் இருக்கிறவர்கள் கொள்ளைநோயால் மரிப்பார்கள். 1 சாமு 13:6எரே 42:22எசேக் 39:41 சாமு 22:11 சாமு 23:141 சாமு 24:3எசேக் 33:24எசேக் 5:12-17 நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அப்பொழுது அதினுடைய பெலத்தின் பெருமை ஒழிந்துபோகும்; அப்பொழுது இஸ்ரவேலின் மலைகள் கடந்துபோவாரில்லாமல் பாழாய்க்கிடக்கும். எசேக் 7:24எசேக் 24:21எசேக் 6:14எரே 44:2எரே 44:22எரே 44:6மீகா 7:132 நாளாக 36:21 அவர்கள் செய்த அவர்களுடைய எல்லா அருவருப்புகளுக்காக நான் தேசத்தைப் பாழாக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள், இதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு. எசேக் 6:72 நாளாக 36:14-172இராஜா 17:9-18யாத் 14:18எசேக் 22:2-15எசேக் 22:25-31எசேக் 23:49எசேக் 25:11 மேலும் மனிதகுமாரனே, உன்னுடைய மக்களின் சுவர் ஓரங்களிலும் வீட்டுவாசல்களிலும் உன்னைக்குறித்துப்பேசி, யெகோவாவிடத்திலிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம் வாருங்கள் என்று ஒருவரோடொருவரும் சகோதரனுடன் சகோதரனும் சொல்லி, ஏசா 29:13ஏசா 58:2எரே 23:35மத் 15:8மத் 22:16-17எரே 11:18-19எரே 18:18எரே 42:1-6 மக்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என்னுடைய மக்களைப்போல் உட்கார்ந்து, உன்னுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்களுடைய வாயினாலே அன்பாய் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது. சங் 78:36-37மத் 13:22யாக் 1:22-24ஏசா 29:13லூக் 11:28யாக் 2:14-16எசேக் 8:1எரே 44:16 இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாக இருக்கிறாய்; அவர்கள் உன்னுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமல்போகிறார்கள். மாற் 6:20யோவா 5:35மாற் 4:16-17 இதோ, அது வருகிறது, அது வரும்போது தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார். எரே 28:91 சாமு 3:19-20எசேக் 2:52இராஜா 5:8எசேக் 33:29லூக் 10:11