ஆதியாகமம் 17

Genesis 17
அத்தியாயம் 17

விருத்தசேதனமாகிய உடன்படிக்கை

ஆபிராம் 99 வயதானபோது, யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து: “நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாக இரு. பிலி 4:13எபே 3:20லூக் 1:6ஆதி 18:14ஆதி 6:9மத் 5:48சங் 116:9ஏசா 38:3 நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாகப் பெருகச்செய்வேன்” என்றார். ஆதி 17:4-6ஆதி 12:2ஆதி 13:16ஆதி 15:18சங் 105:8-11ஆதி 22:17கலா 3:17-18ஆதி 9:9 அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனுடன் பேசி: ஆதி 17:17நியாயாதி 13:201 இராஜா 18:39யோசு 5:14மத் 17:6எண் 16:45வெளி 1:17தானி 10:9 “நான் உன்னுடன் செய்கிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான தேசங்களுக்குத் தகப்பனாவாய். ஆதி 35:11ரோம 4:11-18கலா 3:28-29ஆதி 12:2ஆதி 13:16ஆதி 16:10ஆதி 22:17ஆதி 25:1-18 இனி உன் பெயர் ஆபிராம் 1 எனப்படாமல், நான் உன்னைத் திரளான தேசங்களுக்குத் தகப்பனாக ஏற்படுத்தியதால், உன் பெயர் ஆபிரகாம் எனப்படும். மத் 1:21-23நெகே 9:7ரோம 4:17ஆதி 17:15ஆதி 32:28ஏசா 62:2-4எரே 20:3வெளி 2:17 உன்னை மிகவும் அதிகமாகப் பலுகச்செய்து, உன்னிலே தேசங்களை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். ஆதி 17:4ஆதி 35:11மத் 1:6-17ஆதி 17:16எஸ்றா 4:20ஆதி 17:20ஆதி 36:31-43 உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பதற்காக எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன். ரோம 9:7-9அப் 2:39ஆதி 26:24ஆதி 15:18ஆதி 28:13எபி 8:10லேவி 26:12கலா 3:16-17 நீ பரதேசியாகத் தங்கிவருகிற கானான் தேசம் முழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் சொந்தமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன்” என்றார். லேவி 26:12ஆதி 12:7சங் 105:11யாத் 6:7ஆதி 13:15உபா 14:2உபா 26:18உபா 29:13 பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: “இப்பொழுது நீயும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள். ஏசா 56:4-5சங் 103:18சங் 25:10 எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என்னுடைய உடன்படிக்கை 2 என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் அனைத்து ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்; அப் 7:8கொலோ 2:11-12கலா 5:3-6ரோம 4:9-111 கொரி 7:18-19ஆதி 17:11யோசு 5:2பிலி 3:3 உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்யவேண்டும்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும். ரோம 4:11அப் 7:8உபா 10:161 சாமு 18:25-272 சாமு 3:14யாத் 12:48யாத் 4:25யோசு 5:3 உங்களில் தலை முறை தலை முறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் சந்ததியல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்கு வாங்கப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் செய்யப்படவேண்டும். லேவி 12:3லூக் 2:21யாத் 12:48-49லூக் 1:59பிலி 3:5அப் 7:8ஆதி 17:23ஆதி 21:4 உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்கு வாங்கப்பட்டவனும், விருத்தசேதனம் செய்யப்படவேண்டியது அவசியம்; இப்படி என்னுடைய உடன்படிக்கை உங்கள் சரீரத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கவேண்டும். யாத் 12:44ஆதி 37:36நெகே 5:8யாத் 21:16யாத் 21:2யாத் 21:4ஆதி 14:14ஆதி 15:3 நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையாக இருந்தால், அந்த ஆத்துமா என்னுடைய உடன்படிக்கையை மீறினதால், தன் மக்களுடன் இல்லாதபடி நீக்கப்பட்டுப்போவான் 3” என்றார். யாத் 4:24-26யாத் 12:19எண் 15:30-311 கொரி 11:271 கொரி 11:29யாத் 12:15யாத் 30:33யாத் 30:38

பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: “உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழைக்காதே; சாராள் 4 என்பது அவளுக்குப் பெயராக இருக்கும். 2 சாமு 12:25ஆதி 17:5ஆதி 32:28 நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு மகனையும் தருவேன்; அவள் தேசங்களுக்குத் தாயாகவும், அவளாலே தேசங்களின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார். ஆதி 35:111 பேது 3:6கலா 4:26-31ஆதி 17:6ஆதி 18:10-14ஏசா 49:23ஆதி 1:28ஆதி 12:2 அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து சிரித்து: “100 வயதானவனுக்குக் குழந்தை பிறக்குமோ? 90 வயதான சாராள் குழந்தை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு, ஆதி 18:12ஆதி 21:6ஆதி 17:3யோவா 8:56வெளி 11:16ரோம 4:19-20எசேக் 1:28வெளி 5:8 “இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம்செய்தான். அப் 2:39சங் 4:6சங் 41:12ஆதி 4:12ஆதி 4:14ஏசா 59:2எரே 32:39 அப்பொழுது தேவன்: “உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாக உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடுவாயாக; என்னுடைய உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவனுடைய சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன். ஆதி 18:10-14ஆதி 21:2-3லூக் 1:13-202இராஜா 4:16-17கலா 4:28-31ஆதி 21:6ரோம 9:6-9ஆதி 17:21 இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் செய்வேன்; அவன் பன்னிரண்டு கோத்திரத் தலைவர்களைப் பெறுவான்; அவனைப் பெரிய தேசமாக்குவேன். ஆதி 21:18ஆதி 21:13ஆதி 25:12-18ஆதி 16:10-12 வருகிற வருடத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடு நான் என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்” என்றார். ஆதி 21:2-3ஆதி 26:2-5கலா 3:29ஆதி 18:10ரோம 9:5-6ரோம 9:9அப் 1:7யாத் 2:24 தேவன் ஆபிரகாமோடு பேசிமுடிந்தபின்பு, அவர் அவனைவிட்டுப் போனார். ஆதி 18:33ஆதி 35:9-15உபா 5:4யாத் 20:22ஆதி 17:3நியாயாதி 13:20நியாயாதி 6:21யோவா 1:18 அப்பொழுது ஆபிரகாம் தன் மகனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டில் பிறந்த அனைவரையும், தான் பணத்திற்கு வாங்கிய அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லோரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்த நாளிலேயே விருத்தசேதனம் செய்தான். சங் 119:60ஆதி 17:10-14ஆதி 17:26-27ஆதி 18:19நீதி 27:11 கொரி 7:18-19அப் 16:3பிரச 9:10 ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது, அவன் 99 வயதாக இருந்தான். ரோம 4:11ஆதி 12:4ஆதி 17:1ஆதி 17:17ரோம 4:19-20 அவனுடைய மகனாகிய இஸ்மவேலின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது, அவன் 13 வயதாக இருந்தான். ஒரே நாளில் ஆபிரகாமும் அவனுடைய மகன் இஸ்மவேலும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள். ஆதி 12:4ஆதி 22:3-4சங் 119:60 வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்கு வாங்கப்பட்டவர்களுமாகிய அவனுடைய வீட்டு மனிதர்கள் அனைவரும் அவனோடு விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள். ஆதி 18:19