ஆதியாகமம் 46

Genesis 46
அத்தியாயம் 46

யாக்கோபு எகிப்திற்குச் செல்லுதல்

இஸ்ரவேல் தனக்கு உண்டான எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயெர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான். ஆதி 21:33ஆதி 26:22-25ஆதி 28:10ஆதி 28:13ஆதி 31:42ஆதி 21:31ஆதி 21:141 சாமு 3:20 அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குக் காட்சியளித்து: “யாக்கோபே, யாக்கோபே” என்று கூப்பிட்டார்; அவன் இதோ, “அடியேன்” என்றான். ஆதி 15:1யோபு 33:14-151 சாமு 3:101 சாமு 3:42 நாளாக 26:5அப் 10:3அப் 16:9அப் 9:10 அப்பொழுது அவர்: “நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்திற்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய தேசமாக்குவேன். ஆதி 12:2உபா 26:5அப் 27:24ஏசா 43:1-2ஆதி 26:2-3ஆதி 28:13-14ஆதி 35:11ஏசா 41:10 நான் உன்னுடனே எகிப்திற்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரச்செய்வேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான்” என்று சொன்னார். யாத் 3:8ஆதி 28:15ஆதி 48:21ஆதி 50:1ஆதி 15:14-16ஆதி 50:13ஆதி 50:24-25ஆதி 50:5 அதற்குப்பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து புறப்பட்டான். இஸ்ரவேலின் மகன்கள் தங்களுடைய தகப்பனாகிய யாக்கோபையும், குழந்தைகளையும், மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு, ஆதி 45:19ஆதி 45:21ஆதி 45:27யாத் 10:24யாத் 10:26ஆதி 31:17-18அப் 7:15 தங்கள் ஆடுமாடுகளையும் தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவனுடைய சந்ததியினர் அனைவரும் எகிப்திற்குப் போனார்கள். அப் 7:15ஏசா 52:4யோசு 24:4சங் 105:23உபா 26:51 சாமு 12:8உபா 10:22ஆதி 15:13 அவன் தன் மகன்களையும் தன் மகன்களின் மகன்களையும் தன் மகள்களையும் தன் மகன்களின் மகள்களையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்திற்குத் தன்னுடன் அழைத்துக்கொண்டுபோனான்.

எகிப்திற்கு வந்த இஸ்ரவேலரின் பெயர்களாவன: யாக்கோபும் அவனுடைய மகன்களும்; யாக்கோபுடைய மூத்தமகனான ரூபன். 1 நாளாக 2:1-55உபா 33:6யாத் 1:1-51 நாளாக 8:1-40யாத் 6:14-18ஆதி 29:1-30ஆதி 29:32ஆதி 35:22-23 ரூபனுடைய மகன்கள் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள். சிமியோனுடைய மகன்கள் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய பெண்ணின் மகனாகிய சவுல் என்பவர்கள். யாத் 6:15ஆதி 29:331 நாளாக 2:11 நாளாக 4:24-43ஆதி 28:1ஆதி 34:25ஆதி 34:30ஆதி 49:5-7 லேவியினுடைய மகன்கள் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள். ஆதி 29:341 நாளாக 2:11 நாளாக 2:111 நாளாக 2:161 நாளாக 22:1-191 நாளாக 6:1-31 நாளாக 6:16உபா 33:8-11 யூதாவினுடைய மகன்கள் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய மகன்கள் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள். 1 நாளாக 4:21ஆதி 29:35ஆதி 38:10ஆதி 38:71 நாளாக 2:11 நாளாக 2:3-51 நாளாக 3:11 நாளாக 5:2 இசக்காருடைய மகன்கள் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள். 1 நாளாக 12:321 நாளாக 2:11 நாளாக 7:1-5உபா 33:18ஆதி 30:14-18ஆதி 35:23ஆதி 49:14-15எண் 1:28-30 செபுலோனுடைய மகன்கள் சேரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள். 1 நாளாக 2:1உபா 33:18-19ஆதி 30:19-20ஆதி 49:13எண் 1:30-31எண் 1:9எண் 26:26-27 இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒரு மகளையும் பதான் அராமிலே யாக்கோபுக்குப் பெற்றெடுத்தாள்; அவனுடைய மகன்களும், மகள்களுமாகிய எல்லோரும் முப்பத்துமூன்றுபேர். ஆதி 29:32-35ஆதி 30:17-211 நாளாக 2:1யாத் 1:2-3ஆதி 25:20ஆதி 34:1-31ஆதி 35:23ஆதி 49:3-15 காத்துடைய மகன்கள், சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, ஆரோதி, அரேலி என்பவர்கள். எண் 26:15-17ஆதி 30:111 நாளாக 2:21 நாளாக 5:11-16உபா 33:20-21ஆதி 35:26ஆதி 49:19எண் 1:11 ஆசேருடைய மகன்கள் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி சேராக்கு என்பவள்; பெரீயாவின் மகன்கள் ஏபேர், மல்கியேல் என்பவர்கள். ஆதி 30:13ஆதி 49:201 நாளாக 2:21 நாளாக 7:30-40உபா 33:24ஆதி 35:26எண் 1:13எண் 1:40-41 இவர்கள் லாபான் தன் மகளாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றெடுத்தாள். ஆதி 29:24யாத் 1:4ஆதி 30:9-13ஆதி 35:26 யாக்கோபின் மனைவியாகிய ராகேலுடைய மகன்கள் யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள். ஆதி 44:271 நாளாக 2:2உபா 33:12-17யாத் 1:3யாத் 1:5ஆதி 29:18ஆதி 30:24ஆதி 35:16-18 யோசேப்புக்கு எகிப்துதேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றெடுத்தாள். ஆதி 41:50-52ஆதி 41:451 நாளாக 5:23-261 நாளாக 7:14-29உபா 33:13-17ஆதி 48:13-14ஆதி 48:20ஆதி 48:4-5 பென்யமீனுடைய மகன்கள் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பீம், ஆர்து என்பவர்கள். 1 நாளாக 7:6-121 நாளாக 8:1-7உபா 33:12ஆதி 49:27எண் 1:11எண் 1:36-37எண் 26:38-40 ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற மகன்களாகிய இவர்கள் எல்லோரும் பதினான்குபேர். தாணுடைய மகன் உசீம் என்பவன். 1 நாளாக 12:351 நாளாக 2:21 நாளாக 7:12உபா 33:22ஆதி 30:6ஆதி 35:25ஆதி 49:16-17எண் 1:12 நப்தலியின் மகன்கள் யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள். 1 நாளாக 7:131 நாளாக 12:341 நாளாக 2:22இராஜா 15:29உபா 33:23ஆதி 30:7-8ஆதி 35:25ஆதி 49:21 இவர்கள் லாபான் தன் மகளாகிய ராகேலுக்குக் கொடுத்த பில்காள் யாக்கோபுக்குப் பெற்றவர்கள்; இவர்கள் எல்லோரும் ஏழுபேர். ஆதி 29:29யாத் 1:2ஆதி 30:3-8ஆதி 35:22ஆதி 35:25 யாக்கோபுடைய மகன்களின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்ப்பப்பிறப்பாயிருந்து அவன் மூலமாக எகிப்திற்கு வந்தவர்கள் எல்லோரும் அறுபத்தாறுபேர். யாத் 1:5ஆதி 35:11நியாயாதி 8:30 யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த மகன்கள் இரண்டுபேர்; ஆக எகிப்திற்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர். அப் 7:14உபா 10:22யாத் 1:5யாத் 24:1

கோசேன் நாட்டிலே குடியமர்தல்

கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்திற்கு யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள். ஆதி 45:10ஆதி 31:21ஆதி 43:8ஆதி 44:16-34ஆதி 46:34ஆதி 49:8 யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவனுடைய கழுத்தை விடாமல் அழுதான். லூக் 15:20ஆதி 33:4ஆதி 45:14-15அப் 20:37ஆதி 41:43ஆதி 45:19ஆதி 45:21 அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: “நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும்” என்றான். லூக் 2:29-30ஆதி 45:28 பின்பு, யோசேப்பு தன் சகோதரர்களையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: “நான் பார்வோனிடத்திற்குப் போய், கானான்தேசத்திலிருந்து என் சகோதரர்களும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள். அப் 18:3ஆதி 45:16-20ஆதி 47:1-3எபி 2:11 அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்களுடைய தொழில்; அவர்கள் தங்களுடைய ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன். ஆதி 47:31 இராஜா 18:5-61 இராஜா 9:271 சாமு 17:15யாத் 3:1ஆதி 31:18ஆதி 37:2ஆதி 4:2 பார்வோன் உங்களை அழைத்து, உங்களுடைய தொழில் என்ன என்று கேட்டால், ஆதி 46:32ஆதி 47:2-4யோனா 1:8 நீங்கள், கோசேன் நாட்டிலே குடியிருக்க, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாக இருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லோரும் எகிப்தியருக்கு அருவருப்பாக இருக்கிறார்கள்” என்றான். யாத் 8:26ஆதி 43:32ஆதி 37:12ஆதி 46:32ஆதி 30:35ஆதி 45:10ஆதி 34:5