ஓசியா 7

Hosea 7
அத்தியாயம் 7

நான் என் மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்; அவர்கள் வஞ்சனை செய்கிறார்கள்; திருடன் உள்ளே வருகிறான்; வெளியே கொள்ளைக்காரர்களின் கூட்டத்தார் கொள்ளையிடுகிறார்கள். ஓசி 7:13ஓசி 6:4மீகா 7:3-7ஓசி 4:2எரே 9:2-6லூக் 13:34லூக் 19:42மத் 23:37 அவர்கள் பொல்லாப்பையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சிந்திக்கிறதில்லை; இப்போதும் அவர்களுடைய செயல்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது; அவைகள் என் முகத்திற்கு முன்பாக இருக்கிறது. லூக் 12:2ஆமோ 8:7எரே 14:10எரே 2:19சங் 90:81 கொரி 4:5எபி 4:13ஓசி 9:9 ராஜாவைத் தங்கள் பொல்லாப்பினாலும், அதிபதிகளைத் தங்கள் பொய்களினாலும் சந்தோஷப்படுத்துகிறார்கள். ரோம 1:32மீகா 7:3எரே 28:1-41 யோவா 4:51 இராஜா 22:131 இராஜா 22:6ஆமோ 7:10-13ஓசி 4:2 அவர்கள் எல்லோரும் விபசாரக்கள்ளர்; அப்பம் சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்ததுமுதல் அது புளித்துப்போகும்வரை, நெருப்பை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான். எரே 9:2யாக் 4:4எரே 5:7-8ஓசி 4:12ஓசி 4:2ஓசி 7:6-7 நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சைரச தோல்பைகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; பரிகாசம் செய்கிறவர்களுடன்கூட அவன் தன் கையை நீட்டுகிறான். 1 பேது 4:3-4ஏசா 28:1தானி 5:23எபே 5:18ஆதி 40:20சங் 1:11 இராஜா 13:4தானி 5:1-4 அவர்கள் பதிவிருக்கும்போது, தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல் ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவர்களில் அடுப்புமூட்டுகிறவன் இரவுமுழுவதும் தூங்கினாலும், காலையிலோவென்றால் அது ஜூவாலிக்கிற அக்கினியாக எரியும். மீகா 2:1சங் 10:8-91 சாமு 19:11-152 சாமு 13:28-29ஓசி 7:4ஓசி 7:7நீதி 4:16சங் 21:9 அவர்கள் எல்லோரும் அடுப்பைப்போல சூடாகி, தங்கள் நியாயாதிபதிகளை அழித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லோரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை. 2இராஜா 15:102இராஜா 15:142இராஜா 15:252இராஜா 15:30ஓசி 7:10ஓசி 8:4ஏசா 43:22ஏசா 64:7 எப்பிராயீம் அந்நியமக்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிப்போடாத அப்பம். சங் 106:35எஸ்றா 9:12நெகே 13:23-25எஸ்றா 9:1மல்கி 2:111 இராஜா 18:21ஓசி 5:13ஓசி 5:7 அந்நியர்கள் அவனுடைய பலத்தைத் தின்கிறார்கள்; அவனோ அதை அறியான்; நரைமுடியும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாமல் இருக்கிறான். ஓசி 8:7ஏசா 42:22-252இராஜா 13:222இராஜா 13:3-7ஏசா 1:7நீதி 23:352இராஜா 15:19ஏசா 57:1 இஸ்ரவேலின் பெருமை அவர்கள் முகத்திற்கு முன்பாகச் சாட்சியிட்டாலும், அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பாமலும், இவை எல்லாவற்றிலும் அவரைத் தேடாமலும் இருக்கிறார்கள். ஓசி 5:5ஏசா 9:13ஆமோ 4:6-13சங் 53:2ஓசி 6:1ஓசி 7:7எரே 25:5-7எரே 3:3 எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்திற்கும் போகிறார்கள். ஓசி 12:1ஓசி 5:13ஓசி 11:11ஓசி 4:11எரே 2:18ஓசி 9:3நீதி 6:322இராஜா 15:19 அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் வீசுவேன்; அவர்களை ஆகாயத்துப் பறவைகளைப்போல கீழே விழச்செய்வேன்; அவர்களுடைய சபையில் கேள்விப்பட்டபடியே அவர்களைத் தண்டிப்பேன். எசேக் 12:13உபா 28:15-68உபா 29:22-282இராஜா 17:13-18உபா 31:16-29உபா 32:15-43பிரச 9:12எசேக் 17:20 அவர்கள் என்னைவிட்டு அலைந்து திரிகிறதினால் அவர்களுக்கு ஐயோ, அவர்களுக்குக் அழிவுவரும்; எனக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; நான் அவர்களை மீட்டிருந்தும், அவர்கள் எனக்கு விரோதமாகப் பொய்பேசுகிறார்கள். ஓசி 9:12ஓசி 11:12புலம் 5:16மத் 23:13-291 யோவா 1:101 பேது 1:18-19உபா 15:15எசேக் 16:23 அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சைரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள். யாக் 4:3யோபு 35:9-10எரே 3:10சங் 78:34-37ஆமோ 2:8ஏசா 29:13மீகா 2:11பிலி 3:19 நான் அவர்களைத் தண்டித்தேன்; அவர்களுடைய புயங்கள் திரும்பப் பலப்படவும்செய்தேன்; ஆனாலும் எனக்கு விரோதமாகப் பொல்லாப்பு நினைக்கிறார்கள். நாகூ 1:9சங் 94:122 கொரி 10:52இராஜா 13:232இராஜா 14:25-27அப் 4:25எபி 12:5எரே 17:9 திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமான தேவனிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போல் இருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய கோபத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்து தேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் அவமானம். சங் 78:57ஓசி 9:3எசேக் 23:32சங் 73:9ஓசி 9:6மத் 12:36சங் 12:42 பேது 2:8