கூஷ் தேசத்திற்கு விரோதமான தீர்க்கதரிசனம்
எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் இறக்கைகளுடையதும், செப்ப 3:102இராஜா 19:9எசேக் 30:4-5செப்ப 2:12சங் 63:7எசேக் 30:9ஏசா 20:3-6ஏசா 30:2-3 கடல்வழியாகத் தண்ணீர்களின்மேல் நாணல் படகுகளிலே பிரதிநிதிகளை அனுப்புகிறதுமான தேசத்திற்கு ஐயோ, வேகமான தூதர்களே, அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் உயர்ந்து இருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான மக்களிடத்திற்குப் போங்கள். ஆதி 10:8-9ஏசா 18:72 நாளாக 12:2-42 நாளாக 14:92 நாளாக 16:8யாத் 2:3எசேக் 30:9ஏசா 19:5-7 பூமியில் குடியிருக்கிறவர்களும், தேசத்து மக்களுமாகிய நீங்களெல்லோரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள். ஏசா 5:26ஏசா 26:11மத் 13:16ஆமோ 3:6-8ஏசா 1:2ஏசா 13:2ஏசா 13:4ஏசா 7:18 நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் விழும் சூடான வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து வெப்பத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் இருப்பிடத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று யெகோவா என்னுடனே சொன்னார். ஓசி 5:15ஏசா 26:21ஏசா 18:72 சாமு 23:4ஏசா 12:6ஏசா 14:32சங் 132:13-14ஓசி 14:5 திராட்சைச்செடிகள் அறுப்புக்கு முன்னே பூப்பூத்து முற்றி காய்க்கிற காய்கள் பிஞ்சாக இருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே காய்ப்புக்களை அறுத்துக் கொடிகளை வெட்டி அகற்றிப்போடுவார். ஏசா 17:10-11உன்னத 2:13எசேக் 17:6-10உன்னத 2:15 அவைகள் ஏகமாக மலைகளின் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் விடப்படும்; பறவைகள் அதின்மேல் கோடைக்காலத்திலும், காட்டுமிருகங்களெல்லாம் அதின்மேல் மழைக்காலத்திலும் தங்கும். எரே 7:33எசேக் 32:4-6எசேக் 39:17-20ஏசா 14:19ஏசா 34:1-7ஏசா 56:9எரே 15:3வெளி 19:17-18 அக்காலத்திலே அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான தேசமானது, சேனைகளின் யெகோவாவின் நாமம் தங்கும் இடமாகிய சீயோன் மலையில் சேனைகளின் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும். செப்ப 3:10அப் 8:27-28சகரி 14:16-172 நாளாக 32:23ஏசா 18:4ஏசா 45:14மல்கி 1:11மீகா 4:13