மற்றவர்களுக்கும் இரட்சிப்பு
யெகோவா சொல்கிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது. சங் 85:9ரோம 13:11-14ஏசா 1:16-19மத் 3:2ரோம 1:17சங் 24:4-6ரோம 10:6-10ஏசா 55:7 இப்படிச்செய்கிற மனிதனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி அனுசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான். யாத் 31:13-16ஏசா 58:13எசேக் 20:12சங் 112:1யாத் 20:10எசேக் 20:20எரே 17:21-22லூக் 11:28 யெகோவாவைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: யெகோவா என்னைத் தம்முடைய மக்களைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லாதிருப்பானாக. 1 கொரி 6:17அப் 10:34மத் 19:12-30அப் 10:1-2அப் 17:4தானி 1:3-21எபே 2:22ஏசா 14:1 என் ஓய்வு நாட்களை அனுசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் யெகோவா சொல்கிறது என்னவென்றால்: ஏசா 27:5யோசு 24:15லூக் 10:42சங் 119:1112 சாமு 23:5ஏசா 56:6எபி 6:17ஏசா 55:3 நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் மகன்களுக்கும் மகள்களுக்கு உரிய இடத்தையும் புகழ்ச்சியையும் விட, உத்தம இடத்தையும் புகழ்ச்சியையும் கொடுப்பேன் என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு கொடுப்பேன். வெளி 3:12வெளி 3:51 யோவா 3:11 தீமோ 3:15ஏசா 55:13யோவா 1:12ஏசா 26:1ஏசா 48:19 யெகோவாவைச் சேவிக்கவும், யெகோவாவுடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி அனுசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நிய தேசத்தார் அனைவரையும், எரே 50:5ஏசா 56:2-4ஏசா 58:13கலா 5:6ஏசா 44:5யாக் 2:5அப் 2:41மாற் 12:30-34 நான் என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழச்செய்வேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல மக்களுக்கும் ஜெபவீடு என்னப்படும். மாற் 11:17ஏசா 2:2-3மல்கி 1:11லூக் 19:46மத் 21:13மீகா 4:1-2ரோம 12:1எபே 2:11-13 இஸ்ரவேலில் தள்ளப்பட்டவர்களைச் சேர்க்கிற யெகோவாவாகிய ஆண்டவர்: அவனிடத்தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன் என்கிறார். யோவா 10:16ஏசா 54:7ஏசா 60:3-11எபே 1:10எபே 2:14-16ஆதி 49:10ஏசா 66:18-21எரே 30:17
துன்மார்க்கர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு
வெளியில் வசிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, அழிக்க வாருங்கள். எரே 12:9உபா 28:26எசேக் 29:5எசேக் 39:17ஏசா 18:6வெளி 19:17-18 அவனுடைய காவற்காரர் எல்லோரும் ஒன்றும் அறியாத குருடர்கள்; அவர்களெல்லோரும் குரைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாகப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்கிறவர்கள், தூக்கப் பிரியர்; எசேக் 33:6ஏசா 29:10ஏசா 58:1மத் 15:14பிலி 3:2ஓசி 9:7-8மாற் 13:34-37நாகூ 3:18 திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன்தன் மூலையிலிருந்து தன்தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான். எசேக் 34:2-3எசேக் 13:19யோவா 8:43மீகா 3:11ஏசா 1:3ஏசா 57:17மீகா 3:5-6வெளி 22:15 வாருங்கள், திராட்சைரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள். சங் 10:6லூக் 12:19-20நீதி 27:1ஏசா 5:221 கொரி 15:32ஓசி 4:11லூக் 12:45-46நீதி 23:35