யோபு 16

Job 16
அத்தியாயம் 16

யோபுவின் வார்த்தைகள்

அதற்கு யோபு மறுமொழியாக:

“இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; யோபு 13:4-5யாக் 1:19யோபு 11:2-3யோபு 19:2-3யோபு 26:2-3யோபு 6:25யோபு 6:6பிலி 1:16

நீங்கள் எல்லோரும் வேதனையுண்டாக்குகிற தேற்றரவாளர்.

காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? யோபு 6:26யோபு 15:2யோபு 20:3யோபு 32:3-6யோபு 8:2மத் 22:46தீத் 1:11தீத் 2:8

இப்படி நீ பதில்சொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?

உங்களைப்போல நானும் பேசமுடியும்; சங் 109:25சங் 22:7புலம் 2:152இராஜா 19:21எரே 18:161 கொரி 12:26பிரச 10:14யோபு 11:2

நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால்,

நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து,

உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும்.

ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன், கலா 6:1ஏசா 35:3-4நீதி 27:9யோபு 29:25யோபு 4:3-4யோபு 6:14நீதி 27:17சங் 27:14

என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.

நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; யோபு 10:1சங் 88:15-18சங் 77:1-9

நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்?

இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்; யோபு 7:3யோபு 1:15-19ஏசா 50:4யோபு 10:1யோபு 29:5-25யோபு 3:17யோபு 7:16மீகா 6:13

என் குடும்பத்தையெல்லாம் அழித்தீர்.

நீர் என்னைச் குறுகிப்போகச் செய்தது அதற்குச் சாட்சி; யோபு 10:17யோபு 19:20சங் 109:24ரூத் 1:21எபே 5:27ஏசா 10:16ஏசா 24:16சங் 106:15

என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று,

என் முகத்திற்கு முன்பாக பதில் சொல்லும்.

என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது, யோபு 13:24புலம் 2:16சங் 35:16ஓசி 6:1யோபு 19:11அப் 7:54யோபு 10:16-17யோபு 13:27

என் மேல் கோபப்படுகிறான்;

என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான்.

எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்தார்கள்; சங் 35:15சங் 22:13ஏசா 50:6புலம் 3:30அப் 23:2மீகா 5:1சங் 22:16-171 இராஜா 22:24

இழிவாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்;

என்னைச் சுற்றிலும் கூட்டங்கூடினார்கள்.

தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து, சங் 27:12சங் 31:8சங் 7:141 சாமு 24:182 கொரி 12:7யோவா 19:16யோபு 1:13-19யோபு 2:7

துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார்.

நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்; யோபு 7:20புலம் 3:11-12புலம் 3:4யோபு 9:17சங் 44:19எசேக் 29:7யோபு 15:26யோபு 29:18-19

அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி,

என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார்.

அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; யோபு 20:25யோபு 6:4புலம் 2:11உபா 29:20எசேக் 5:11ஆதி 49:23யோபு 19:27யோபு 6:10

என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்;

என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார்.

நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்; நியாயாதி 15:8யோபு 9:17யோவே 2:7புலம் 3:3-5சங் 42:7

பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார்.

நான் சணல்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; ஆதி 37:34சங் 7:51 இராஜா 21:27ஏசா 22:12சங் 75:51 சாமு 2:10யோபு 30:19சங் 75:10

என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.

அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; புலம் 1:16மாற் 14:34சங் 102:3-5ஏசா 52:14யோபு 17:7யோனா 2:1-10சங் 102:9சங் 31:9

மரண இருள் என் கண் இமைகளின்மேல் உண்டாயிருக்கிறது.

என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும், நீதி 15:8சங் 66:18-19யோபு 27:6-7யோபு 8:5-6ஏசா 59:6யோபு 11:14யோபு 15:20யோபு 15:34

என் ஜெபம் சுத்தமாயிருக்கும்போதும், அப்படியானது.

பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; எசேக் 24:7ஏசா 26:21ஆதி 4:11சங் 66:18-19ஏசா 1:15ஏசா 58:9-10யாக் 4:3-4எரே 22:29

என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.

இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது. ரோம 1:91 தெச 2:10ஆதி 31:501 சாமு 12:51 தெச 2:52 கொரி 1:232 கொரி 11:31யோபு 25:2

எனக்குச் சாட்சி சொல்லுகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.

என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; எபி 5:7சங் 142:2யோபு 12:4-5யோபு 16:4யோபு 17:2லூக் 6:11-12சங் 109:4ஓசி 12:4-5

என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.

ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல, பிரச 6:10ஏசா 45:9ரோம 9:20யோபு 13:22யோபு 13:3யோபு 23:3-7யோபு 31:35யோபு 40:1-5

தேவனுடன் மனிதனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் இருந்தால் நலமாயிருக்கும்.

குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது; யோபு 14:10யோபு 14:14யோபு 14:5யோபு 7:9-10பிரச 12:5

நான் திரும்பிவராதவழியே போவேன்.