நியாயாதிபதிகள் 12

Judges 12
அத்தியாயம் 12

யெப்தாவும் எப்பிராயீமும்

எப்பிராயீம் மனிதர்கள் ஒன்றாகக் கூடி யோர்தான் நதியை கடந்து வடக்கே உள்ள சாபோன் ஊருக்குப் போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடு வரும்படி அழைக்காமல் அம்மோனியர்கள்மேல் யுத்தம்செய்யப்போனதென்ன? உன்னுடைய வீட்டையும் உன்னையும் அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள். நியாயாதி 8:1யாக் 3:16யோவா 10:32யாக் 4:1-2நியாயாதி 14:152 சாமு 19:41-43பிரச 4:4நியாயாதி 15:6 அதற்கு யெப்தா: எனக்கும் என்னுடைய மக்களுக்கும் அம்மோனியர்களோடு பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு விலக்கி காப்பாற்றவில்லை. நியாயாதி 11:12-33 நீங்கள் என்னை காப்பாற்றவில்லை என்று நான் பார்த்தபோது, நான் என்னுடைய ஜீவனை என்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் மக்களுக்கு எதிராகப்போனேன்; யெகோவா அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்செய்ய, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான். 1 சாமு 19:51 சாமு 28:21யோபு 13:14சங் 119:1092 நாளாக 13:12நியாயாதி 11:27நியாயாதி 9:17வெளி 12:11 பின்பு யெப்தா கீலேயாத் மனிதர்களையெல்லாம் கூட்டி, எப்பிராயீமர்களோடு யுத்தம்செய்தான்; எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே குடியிருக்கிற கீலேயாத்தியர்களான நீங்கள் எப்பிராயீமைவிட்டு ஓடிப்போனவர்கள் என்று எப்பிராயீமர்கள் சொன்னபடியினால், கீலேயாத் மனிதர்கள் அவர்களை முறியடித்தார்கள். 1 சாமு 25:10நீதி 12:13உபா 3:12-17நியாயாதி 11:10நெகே 4:4எண் 32:39-40நீதி 15:1சங் 78:9 கீலேயாத்தியர்கள் எப்பிராயீமர்களை முந்தி யோர்தானின் துறைமுகங்களைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமர்களிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனிதர்கள்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால், நியாயாதி 3:28யோசு 22:11நியாயாதி 7:24யோசு 2:7 நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்க முடியாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறைமுகத்திலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் 42,000 பேர் இறந்தார்கள். பிரச 10:12மத் 12:25கலா 5:15ஏசா 27:12மத் 26:73மாற் 14:70நீதி 17:14நீதி 18:19 யெப்தா இஸ்ரவேலை ஆறு வருடங்கள் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா இறந்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.

நியாயாதிபதியாகிய இப்சான்

அவனுக்குப்பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். 1 சாமு 16:1ஆதி 15:19மத் 2:1மீகா 5:2 அவனுக்கு 30 மகன்களும் 30 மகள்களும் இருந்தார்கள்; 30 மகள்களையும் வேறு இனத்திலே திருமணம் செய்துகொடுத்து, தன்னுடைய மகன்களுக்கு 30 பெண்களை வேறு இனத்திலிருந்து எடுத்தான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருடங்கள் நியாயம் விசாரித்தான். நியாயாதி 10:4நியாயாதி 12:14 பின்பு இப்சான் இறந்து, பெத்லெகேமிலே அடக்கம் செய்யப்பட்டான்.

நியாயாதிபதியாகிய ஏலோன்

அவனுக்குப் பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இறந்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம் செய்யப்பட்டான். 1 நாளாக 6:691 நாளாக 8:13யோசு 19:42

நியாயாதிபதியாகிய அப்தோன்

அவனுக்குப்பின்பு இல்லேலின் மகனான பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். அவனுக்கு 40 மகன்களும் 30 பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் 70 கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருடங்கள் நியாயம் விசாரித்தான். நியாயாதி 5:10நியாயாதி 10:4 பின்பு பிரத்தோனியனான இல்லேலின் மகனான அப்தோன் இறந்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம் செய்யப்பட்டான். 1 சாமு 15:7நியாயாதி 5:142 சாமு 23:30யாத் 17:8ஆதி 14:7நியாயாதி 3:13நியாயாதி 3:27