நேர்மையற்ற நிர்வாகி
பின்னும் அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: செல்வந்தனாகிய ஒரு மனிதனுக்கு நிர்வாகி ஒருவன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய சொத்துக்களை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது. 1 பேது 4:10மத் 25:14-301 கொரி 4:1-2யாக் 4:3லூக் 12:42தீத் 1:7லூக் 15:13லூக் 15:30 அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் நிர்வாகத்தின் கணக்கைக் கொடு, இனி நீ நிர்வாகியாக இருக்கக்கூடாது என்றான். 1 பேது 4:51 சாமு 2:23-241 தீமோ 5:242 கொரி 5:10பிரச 11:9-10பிரச 12:14வெளி 20:121 கொரி 1:11 அப்பொழுது அந்த நிர்வாகி: நான் என்ன செய்வேன், என் எஜமான் நிர்வாக பொறுப்பிலிருந்து என்னை நீக்கிப்போடுகிறானே நிலத்தை பண்படுத்துவதற்கும்; எனக்குப் பெலனில்லை, பிச்சையெடுக்கவும் வெட்கப்படுகிறேன். 2 தெச 3:11அப் 3:2எஸ்த 6:6ஓசி 9:5ஏசா 10:3எரே 5:31யோவா 9:8லூக் 12:17 நிர்வாகப் பொறுப்பைவிட்டு நான் நீக்கப்படும்போது, என்னைத் தங்களுடைய வீடுகளில் ஏற்றுக்கொள்ளுவார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு; யாக் 3:15எரே 4:22நீதி 30:9 தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான். லூக் 7:41-42மத் 18:24 அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது நிர்வாகி அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாக எழுது என்றான். லூக் 16:12தீத் 2:10லூக் 16:9 பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு மூட்டை கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான். லூக் 20:12லூக் 20:9உன்னத 8:11-12 அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். 1 தெச 5:5எபே 5:8யோவா 12:36லூக் 16:10நீதி 6:6-8யாத் 1:101 கொரி 3:181 யோவா 3:10 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். மத் 19:211 தீமோ 6:17-19தானி 4:27மத் 6:24நீதி 19:17லூக் 14:14லூக் 16:111 தீமோ 6:9-10 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாக இருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாக இருக்கிறான். லூக் 16:11-12மத் 25:21லூக் 19:17மத் 25:23எபி 3:2யோவா 12:6யோவா 13:27யோவா 13:2 அநீதியான உலகப்பொருளில் நீங்கள் உண்மையாக இல்லாவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடம் நேர்மையான சொத்தை ஒப்புவிப்பார்கள்? லூக் 12:33யாக் 2:5நீதி 8:18-19எபே 3:8லூக் 16:9லூக் 18:22வெளி 3:18 வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டால், உங்களுக்கு ஏதாவதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? லூக் 19:13-26யோபு 1:21மத் 25:14-291 நாளாக 29:14-161 பேது 1:4-5எசேக் 16:16-21கொலோ 3:3-4ஓசி 2:8 எந்த வேலைக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு பணிவிடை செய்யமுடியாது; ஒருவனைப் பகைத்து மற்றவனை நேசிப்பான், அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களாலே கூடாது என்றார். 1 யோவா 2:15-16மத் 6:24யாக் 4:4ரோம 8:5-8யோசு 24:15லூக் 14:26லூக் 11:23மத் 4:10 இவைகளையெல்லாம் பொருளாசைக்காரர்களாகிய பரிசேயர்களும் கேட்டு, அவரைப் பரிகாசம்பண்ணினார்கள். லூக் 23:35லூக் 12:15லூக் 20:47ஏசா 56:11எரே 6:13எரே 8:10மத் 23:132 தீமோ 3:2 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனிதர்கள் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்களுடைய இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனிதர்களுக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்குமுன்பாக அருவருப்பாக இருக்கிறது. 1 சாமு 16:7நீதி 21:21 கொரி 4:5எரே 17:10நீதி 16:5அப் 15:81 பேது 3:4லூக் 11:39
போதனைகள்
நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் இருந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் நற்செய்தியாக அறிவிக்கப்பட்டுவருகிறது, அனைவரும் பலவந்தமாக அதில் பிரவேசிக்கிறார்கள். மத் 11:9-14மத் 21:32அப் 3:24-25மத் 3:2யோவா 1:45லூக் 16:31லூக் 7:26-29அப் 3:18 வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு ஒழிந்துபோவதைவிட, வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும். மத் 5:18லூக் 21:331 பேது 1:25ஏசா 40:8ரோம 3:31ஏசா 51:6சங் 102:25-27வெளி 20:11 தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறவன் விபசாரம் செய்கிறான், கணவனாலே விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறான். மத் 19:9மாற் 10:11-12மத் 5:31-321 கொரி 7:10-121 கொரி 7:4
செல்வந்தனும் லாசருவும்
செல்வந்தனாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையுயர்ந்த உடையும் அணிந்து, அநுதினமும் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்தான். எசேக் 16:49லூக் 18:24-25ஆமோ 6:4-6எசேக் 27:7யாக் 5:1-5எசேக் 16:13நியாயாதி 8:26யோபு 21:11-15 லாசரு என்னும் பெயர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் சரீர முழுவதும் கொப்பளங்கள் நிறைந்தவனாக, அந்த செல்வந்தனுடைய வாசலின் அருகே தங்கி, அப் 3:2யாக் 2:5யோபு 2:71 சாமு 2:8ஏசா 1:6யாக் 1:9லூக் 16:21சங் 34:19 அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாக இருந்தான்; நாய்கள் வந்து அவன் கொப்பளங்களை நக்கிற்று. மத் 15:27யோவா 6:12மாற் 7:281 கொரி 4:112 கொரி 11:27 பின்பு அந்த தரித்திரன் மரித்து, தேவதூதர்களால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; செல்வந்தனும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். 1 பேது 2:24சங் 49:16-19வெளி 14:13யாக் 1:11பிரச 8:10மத் 18:10நீதி 14:32சங் 49:6-12 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். 2 பேது 2:4லூக் 16:28மத் 18:9மத் 23:33சங் 9:17வெளி 14:10-11ஏசா 14:15ஏசா 14:9 அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாக்கைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினியில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். வெளி 22:1யோவா 4:10யோவா 4:14வெளி 7:16-17மத் 25:41யாக் 3:6ஏசா 66:24லூக் 16:30 அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடு இருக்கும் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். லூக் 6:241 யோவா 2:15சங் 17:14மாற் 9:45பிலி 3:19ரோம 8:7எபி 11:25சங் 37:35-36 அதுவுமல்லாமல், இந்த இடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அந்த இடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளவு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். யோவா 3:36சங் 49:14சங் 50:22மல்கி 3:182 தெச 1:4-10யாக் 1:11-12யாக் 5:1-7மத் 25:46 அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரர்கள் உண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்திற்கு வராதபடி, அவன்போய் அவர்களுக்கு சாட்சியாக அறிவிக்கும்படியாக, நீர் அவனை என் தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். அப் 2:40சங் 49:12-131 தெச 4:6அப் 20:23 ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். அப் 15:21லூக் 16:16லூக் 24:272 பேது 1:19-212 தீமோ 3:15-17அப் 17:11-12ஏசா 34:16யோவா 5:39-47 அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப்போனால் மனந்திரும்புவார்கள் என்றான். லூக் 16:24வெளி 16:9-11லூக் 3:8லூக் 13:5லூக் 13:3 அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார். 2 கொரி 4:3அப் 28:23யோவா 11:43-532 கொரி 5:11அப் 19:8அப் 26:28யோவா 12:10-11ஆதி 9:27